Results 1 to 10 of 10

Thread: வாழ்க்கை எனும் நதி .....சிறுகதை

  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் rema's Avatar
    Join Date
    12 May 2011
    Location
    salem
    Posts
    167
    Post Thanks / Like
    iCash Credits
    27,204
    Downloads
    0
    Uploads
    0

    வாழ்க்கை எனும் நதி .....சிறுகதை

    ஐம்பது வயது வரை தன் வாழ்க்கைத் துணைவியாக இருந்து உயிர்நீத்த மனைவியை விசுவநாதனால் மறக்க முடியவில்லை. இறந்தபின் அவளுடைய ஆத்மா என்ன ஆயிற்று , மறுபடியும் எங்கு பிறந்திருப்பாள் என்பது போன்ற பல சந்தேகங்கள் அவன் மனத்தில் முளைத்தன. அவன் பல சாஸ்திரங்களைப் படித்துப் பார்த்தான். ஆனால் எதைப் படித்தாலும் அவனுக்குத் தெளிவு பிறக்கவில்லை.

    அந்த சமயம் அவனுடைய ஊருக்கு ஞானானந்தர் என்ற மகான் வந்தார். அவர் ஓய்வாக இருந்த சமயத்தில் அவரிடம் சென்று தன் சந்தேகத்திற்கு விளக்கம் கேட்டான்.

    அதற்கு அவர் , " அப்பா ! உன் ஊரில் ஓடும் நதியைப் பார் எங்கிருந்தோ மலையில் தோன்றி பல ஊர்களின் வழியாகத் தவழ்ந்து செல்கிறது. செல்லுமிடம் எல்லாம் மக்களின் தாகத்தைத் தணித்து , பயிர்களை விளைவித்துப் பின்னர் கடலில் போய் சேருகிறது.. கடலில் கலந்தபின் அதன் தனித்தன்மை மறைந்து கடலுடன் ஐக்கியமாகி விடுகிறது. அது போல் தான் மனித வாழ்க்கையும் ! உன் குடும்பத்திற்கும் , உன் சமூகத்திற்கும் உன்னுடைய கடமையை நிறைவேற்றுவதும் , பிறருக்கு உதவி செய்வதும் தான் உன்னுடைய பிறவிப்பயனாகும். உன் வாழ்வு முடிந்ததும் பரம்பொருளுடன் ஐக்கியமாகி விடுகிறாய்.
    ஒருவன் உயிரோடு வாழும் போது அவன் பிறருக்கு என்ன நன்மை செய்கிறான் என்பதுதான் முக்கியமே தவிர , இறந்த பிறகு என்ன ஆவான் என்று அறிய முயல்வது வீண் முயற்சி ! அதனால் எந்தப் பயனுமில்லை " என்று அறிவுரைப் பகன்றார்.

    அவர் சொன்னதைக் கேட்டு தெளிவு பெற்ற விசுவநாதன் அன்று முதல் தன் ஆராய்ச்சியை நிறுத்தி விட்டு , பிறருக்கு உபகாரம் செய்யலானான்.

    நன்றி.. அம்புலிமாமா.

    LIVE WHEN YOU ARE ALIVE !

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    சிறிய கதையாய் இருந்தாலும் பெரிய கருத்தைக் கொண்டுள்ளது. வாழும்போது நம் வாழ்க்கை எப்படி இருக்கிறதென்று சுய அலசல் செய்யவேண்டுமே தவிர பிறப்புக்கு முன் நடந்தது என்ன, இறப்புக்குப் பின் நடப்பது என்ன என்றெல்லாம் எண்ணிக் கலங்குவது வீணே... நல்லதொரு கதைப்பகிர்வுக்கு நன்றி ரேமா...

    சிறுகதைகள் பகுதியில் சொந்தப் படைப்புகளுக்கு மட்டுமே இடம் என்பதால் இந்தக்கதையைப் படித்ததில் பிடித்தது பகுதிக்கு நகர்த்தியுள்ளேன்.

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    என் பிரியமான அம்புலிமாமா கதை கூறும் கதையின் கருத்து அருமை.
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  4. #4
    புதியவர்
    Join Date
    29 May 2013
    Posts
    6
    Post Thanks / Like
    iCash Credits
    21,287
    Downloads
    1
    Uploads
    0
    Sir,
    Is it possible to tell me who is this Gnananandar referred to herein? Is HE Gnanananda giri swamigal of Thapovanam. Thanks and regrds sir,

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    அம்புலிமாமா என்றதுமே சிறு வயதில் பொது நூலகத்திற்கு சென்று போட்டி போட்டுக்கொண்டு படித்த நாட்கள் நினைவில் வருகிறது.
    மிக எளிமையாக சிறுவர்களுக்கும் புரியும் படி கருத்துக்களை கதைகள் மூலமாக சொல்வதில் முன்னோடி அல்லவா அம்புலிமாமா !

  6. #6
    புதியவர்
    Join Date
    29 May 2013
    Posts
    6
    Post Thanks / Like
    iCash Credits
    21,287
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by rema View Post
    ஐம்பது வயது வரை தன் வாழ்க்கைத் துணைவியாக இருந்து உயிர்நீத்த மனைவியை விசுவநாதனால் மறக்க முடியவில்லை. இறந்தபின் அவளுடைய ஆத்மா என்ன ஆயிற்று , மறுபடியும் எங்கு பிறந்திருப்பாள் என்பது போன்ற பல சந்தேகங்கள் அவன் மனத்தில் முளைத்தன. அவன் பல சாஸ்திரங்களைப் படித்துப் பார்த்தான். ஆனால் எதைப் படித்தாலும் அவனுக்குத் தெளிவு பிறக்கவில்லை.

    அந்த சமயம் அவனுடைய ஊருக்கு ஞானானந்தர் என்ற மகான் வந்தார். அவர் ஓய்வாக இருந்த சமயத்தில் அவரிடம் சென்று தன் சந்தேகத்திற்கு விளக்கம் கேட்டான்.

    அதற்கு அவர் , " அப்பா ! உன் ஊரில் ஓடும் நதியைப் பார் எங்கிருந்தோ மலையில் தோன்றி பல ஊர்களின் வழியாகத் தவழ்ந்து செல்கிறது. செல்லுமிடம் எல்லாம் மக்களின் தாகத்தைத் தணித்து , பயிர்களை விளைவித்துப் பின்னர் கடலில் போய் சேருகிறது.. கடலில் கலந்தபின் அதன் தனித்தன்மை மறைந்து கடலுடன் ஐக்கியமாகி விடுகிறது. அது போல் தான் மனித வாழ்க்கையும் ! உன் குடும்பத்திற்கும் , உன் சமூகத்திற்கும் உன்னுடைய கடமையை நிறைவேற்றுவதும் , பிறருக்கு உதவி செய்வதும் தான் உன்னுடைய பிறவிப்பயனாகும். உன் வாழ்வு முடிந்ததும் பரம்பொருளுடன் ஐக்கியமாகி விடுகிறாய்.
    ஒருவன் உயிரோடு வாழும் போது அவன் பிறருக்கு என்ன நன்மை செய்கிறான் என்பதுதான் முக்கியமே தவிர , இறந்த பிறகு என்ன ஆவான் என்று அறிய முயல்வது வீண் முயற்சி ! அதனால் எந்தப் பயனுமில்லை " என்று அறிவுரைப் பகன்றார்.

    அவர் சொன்னதைக் கேட்டு தெளிவு பெற்ற விசுவநாதன் அன்று முதல் தன் ஆராய்ச்சியை நிறுத்தி விட்டு , பிறருக்கு உபகாரம் செய்யலானான்.

    நன்றி.. அம்புலிமாமா.

    Sir, Please let me know who is this Gnananandar you are referring to. Is he Gnananandagir swamigal of Thapovnam?. If so when and where this incident took place.
    Thanks. N.R.Ranganathan (9380288980)

  7. #7
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by N.R.Ranganathan View Post
    Sir,
    Is it possible to tell me who is this Gnananandar referred to herein? Is HE Gnanananda giri swamigal of Thapovanam. Thanks and regrds sir,
    Quote Originally Posted by N.R.Ranganathan View Post
    Sir, Please let me know who is this Gnananandar you are referring to. Is he Gnananandagir swamigal of Thapovnam?. If so when and where this incident took place.
    Thanks. N.R.Ranganathan (9380288980)
    நண்பரே, இக்கதையில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஞானானந்தர் என்னும் மகானைப் பற்றியறிய மிகவும் ஆவலுடன் உள்ளீர்கள் என்று தெரிகிறது. இதை இங்கு பதிந்தவர் அம்புலிமாமாவிலிருந்து எடுத்துப் பதிந்திருப்பதை அறிவீர்கள். இது கதையா? உண்மைச்சம்பவமா? உண்மைச் சம்பவமெனில் எப்போது நடந்தது? இவைபோன்ற கேள்விகளுக்கு இக்கதையை எழுதியவர் எவரோ அவரே பதில் தர இயலும் என்பதை அறிக.

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர் rema's Avatar
    Join Date
    12 May 2011
    Location
    salem
    Posts
    167
    Post Thanks / Like
    iCash Credits
    27,204
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    நண்பரே, இக்கதையில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஞானானந்தர் என்னும் மகானைப் பற்றியறிய மிகவும் ஆவலுடன் உள்ளீர்கள் என்று தெரிகிறது. இதை இங்கு பதிந்தவர் அம்புலிமாமாவிலிருந்து எடுத்துப் பதிந்திருப்பதை அறிவீர்கள். இது கதையா? உண்மைச்சம்பவமா? உண்மைச் சம்பவமெனில் எப்போது நடந்தது? இவைபோன்ற கேள்விகளுக்கு இக்கதையை எழுதியவர் எவரோ அவரே பதில் தர இயலும் என்பதை அறிக.
    ஆம் ரங்கநாதன் கீதம் அவர்கள் கூறியது போல்...கற்பனையான பெயராகவோ அல்லது உண்மை பெயராகவோ இருக்கலாம்...நன்றி...
    பொறுப்புடனும் ,பாங்குடனும் பதிலுரைத்த கீதம் அவர்களுக்கு நன்றி !!
    LIVE WHEN YOU ARE ALIVE !

  9. Likes கீதம் liked this post
  10. #9
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    63,143
    Downloads
    25
    Uploads
    0
    இறந்தபின் அவளுடைய ஆத்மா என்ன ஆயிற்று , மறுபடியும் எங்கு பிறந்திருப்பாள் என்பது போன்ற பல சந்தேகங்கள் அவன் மனத்தில் முளைத்தன. அவன் பல சாஸ்திரங்களைப் படித்துப் பார்த்தான். ஆனால் எதைப் படித்தாலும் அவனுக்குத் தெளிவு பிறக்கவில்லை.
    நல்ல கருத்துள்ள கதை ரிமா. எல்லோரும் கேட்கும், விடை தெரியாத கேள்வி.

    இறந்தபின் இந்த ஆத்மா என்ன ஆகும் ? இந்த கதை கருத்தை, பகவத் கீதை இப்படி சொல்கிறது.

    1. ஆஸ்²சர்யவத்பஸ்²யதி கஸ்²சிதே³நமாஸ்²சர்யவத்³வத³தி ததை²வ சாந்ய:|
    ஆஸ்²சர்யவச்சைநமந்ய: ஸ்²ருணோதி ஸ்²ருத்வாऽப்யேநம் வேத³ ந சைவ கஸ்²சித் ||2-29||

    “வியப்பென ஒருவன் காண்கிறான், வியப்பென ஒருவன் சொல்லுகிறான், வியப்பென ஒருவன் கேட்கிறான், கேட்கினும், இதனை அறிவான் எவனுமிலன்.”

    2. ஆத்மாவுக்கு இவ்வுடலில் எங்ஙனம் பிள்ளைப் பிராயமும் இளமையும், மூப்பும் தோன்றுகின்றனவோ அங்ஙனமே மற்றொரு சரீரப் பிறப்புந் தோன்றுகிறது. தீரன் அதில் கலங்கமாட்டான்.2-13

    3.ஆத்மா, எக்காலத்திலும் இறப்பதுமில்லை. இவன் ஒரு முறையிருந்து பின்னர் இல்லாது போவதுமில்லை. இவன் பிறப்பற்றான்; அனவரதன். இவன் சாசுவதன்; பழையோன்; உடம்பு கொல்லப்படுகையில் இவன் கொல்லப்படான்.||2-20|

    4. அவனுக்கு இவ்வுலகிலும், மேலுலகத்திலும் அழிவில்லை; நன்மை செய்வோன் எவனும் கெட்ட கதியடைய மாட்டான்.

    "பார்த² நைவேஹ நாமுத்ர விநாஸ²ஸ்தஸ்ய வித்³யதே|
    ந ஹி கல்யாணக்ருத்கஸ்²சித்³து³ர்க³திம் தாத க³ச்ச²தி ||6-40||

    மிக அழகான கருத்து. பதிவிற்கு நன்றி ரேமா ...

    நன்றி கூகிள் : http://www.sangatham.com/bhagavad_gita
    Last edited by முரளி; 05-10-2013 at 06:33 AM.

  11. #10
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by முரளி View Post
    நல்ல கருத்துள்ள கதை ரிமா. எல்லோரும் கேட்கும், விடை தெரியாத கேள்வி.

    இறந்தபின் இந்த ஆத்மா என்ன ஆகும் ? இந்த கதை கருத்தை, பகவத் கீதை இப்படி சொல்கிறது.

    1. ஆஸ்²சர்யவத்பஸ்²யதி கஸ்²சிதே³நமாஸ்²சர்யவத்³வத³தி ததை²வ சாந்ய:|
    ஆஸ்²சர்யவச்சைநமந்ய: ஸ்²ருணோதி ஸ்²ருத்வாऽப்யேநம் வேத³ ந சைவ கஸ்²சித் ||2-29||

    “வியப்பென ஒருவன் காண்கிறான், வியப்பென ஒருவன் சொல்லுகிறான், வியப்பென ஒருவன் கேட்கிறான், கேட்கினும், இதனை அறிவான் எவனுமிலன்.”

    2. ஆத்மாவுக்கு இவ்வுடலில் எங்ஙனம் பிள்ளைப் பிராயமும் இளமையும், மூப்பும் தோன்றுகின்றனவோ அங்ஙனமே மற்றொரு சரீரப் பிறப்புந் தோன்றுகிறது. தீரன் அதில் கலங்கமாட்டான்.2-13

    3.ஆத்மா, எக்காலத்திலும் இறப்பதுமில்லை. இவன் ஒரு முறையிருந்து பின்னர் இல்லாது போவதுமில்லை. இவன் பிறப்பற்றான்; அனவரதன். இவன் சாசுவதன்; பழையோன்; உடம்பு கொல்லப்படுகையில் இவன் கொல்லப்படான்.||2-20|

    4. அவனுக்கு இவ்வுலகிலும், மேலுலகத்திலும் அழிவில்லை; நன்மை செய்வோன் எவனும் கெட்ட கதியடைய மாட்டான்.

    "பார்த² நைவேஹ நாமுத்ர விநாஸ²ஸ்தஸ்ய வித்³யதே|
    ந ஹி கல்யாணக்ருத்கஸ்²சித்³து³ர்க³திம் தாத க³ச்ச²தி ||6-40||

    மிக அழகான கருத்து. பதிவிற்கு நன்றி ரேமா ...

    நன்றி கூகிள் : http://www.sangatham.com/bhagavad_gita
    பகவத் கீதை மூலம் தெளிவான விளக்கம் அளித்ததற்கு நன்றி, முரளி.
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •