Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 13

Thread: இருக்கலாம்...

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jun 2012
    Location
    Chennai
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    15,508
    Downloads
    0
    Uploads
    0

    இருக்கலாம்...




    இதுவரை உனக்கென
    எழுதிக்கொண்டிருந்த என் விரல்களின்
    கடைசி கடிதமாகவோ அல்லது
    கடைசி கவிதையாகவோ இது இருக்கலாம்..

    தற்காலிகத் தண்டனையாக
    பூட்டப் பட்டிருக்கும்
    உன் இதயத்தில் என் வாசம்
    மனமுவந்து ஏதொ ஒரு நாள்
    நீ திறக்கும் நேரம்...

    உனை ஆச்சரியமூட்டும் பெயர்
    அறியாததொரு அழகிய பூ
    வாசத்துடனோ...

    அல்லது அதிர்ச்சியூட்டும் அழுகிய
    பிண நாற்றத்துடனோ இருக்கலாம்...

    புரிந்து கொள்ள முடியாத அல்லது
    புரிந்து கொள்ளப்படாத எனதன்பு
    கீறல்கள் விழுந்து தன் பிரியத்தின்
    ரத்தங்களைச் சொட்டிக் கொண்டிருக்கலாம்...

    கூட்டுப் புழுவெனத் தோன்றி
    சிறகுகள் முளைக்க
    வண்ணத்துப் பூச்சியென்று நினைக்கையிலேயே
    ஒரு மரங்கொத்தியாகிப் பறந்துவிட்டிருந்தது
    என் கூட்டின் ஒற்றைப் பறவை...

    இப்படித்தான் தோற்றுவித்திருந்தாய்
    உன் வரவையும் இருத்தலையும்
    சற்று நேரம் முன் இதயம் கொத்திச்
    சென்றுவிட்டிருந்த உன் பிரிதலையும்...

    வெகு இயல்பாகவே நடத்திவைத்தாய்
    சந்திப்பையும் துண்டிப்பையும்...

    இயல்பாகவே ஏற்றுக்கொள்ளப்
    பழக்கியும் வைத்தாய்
    எதிர்ப்பின்றி வெட்டுப்படும்
    மரத்தைப் போல...

    எப்படி?!...
    எப்படிப் புரியவைக்கத் தவறினேன்
    என் கவிதைப் பொருளல்ல
    நீ
    உயிர்க் கரு என்று...

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    \\தற்காலிகத் தண்டனையாக
    பூட்டப் பட்டிருக்கும்
    உன் இதயத்தில் என் வாசம்
    மனமுவந்து ஏதொ ஒரு நாள்
    நீ திறக்கும் நேரம்...

    உனை ஆச்சரியமூட்டும் பெயர்
    அறியாததொரு அழகிய பூ
    வாசத்துடனோ...

    அல்லது அதிர்ச்சியூட்டும் அழுகிய
    பிண நாற்றத்துடனோ இருக்கலாம்...\\

    தற்காலிகத் தண்டனையாக பூட்டப்பட்டிருக்கும் உள்ளத்தில் இருப்பது அழகிய பூவாகவே இருந்தாலும் காலந்தாழ்த்தித் திறந்தால் அதுவும் அழுகி நாற்றமெடுக்கும். மனத்தை இளகவைத்த வரிகள் அனைத்தும் ரசிக்கவும் வைத்தன.


    \\வெகு இயல்பாகவே நடத்திவைத்தாய்
    சந்திப்பையும் துண்டிப்பையும்...

    இயல்பாகவே ஏற்றுக்கொள்ளப்
    பழக்கியும் வைத்தாய்
    எதிர்ப்பின்றி வெட்டுப்படும்
    மரத்தைப் போல\\

    மிகவும் ரசித்த வரிகள் இவை ஹேமா. வாழ்க்கையை அதன் போக்கிலேயே அனுபவிப்பதுதான் ஜென் தத்துவமாம். (நன்றி ஆதி)

    இங்கே நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வரிகளும் அதையே உரைக்கின்றன. கவிதைகள் முடிவின்றித் தொடரட்டும் பலவாய்...

    பாராட்டுகள் ஹேமா.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    ஏதோ உண்மை நிகழ்வை வெளிப்படுத்தியதைப் போல் இருக்கிறது.

    பாராட்டு.
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jun 2012
    Location
    Chennai
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    15,508
    Downloads
    0
    Uploads
    0
    விரிவான பாராட்டுகளுக்கு நன்றி கீதம்... எப்படி இருக்கீங்க?

    வருகைக்கும் வார்த்தைகளுக்கும் மிக நன்றி குணமதி அவர்களே...

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    நல்ல கவி...
    தொடர்க..
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  6. #6
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    Quote Originally Posted by HEMA BALAJI View Post



    இதுவரை உனக்கென
    எழுதிக்கொண்டிருந்த என் விரல்களின்
    கடைசி கடிதமாகவோ அல்லது
    கடைசி கவிதையாகவோ இது இருக்கலாம்..

    தற்காலிகத் தண்டனையாக
    பூட்டப் பட்டிருக்கும்
    உன் இதயத்தில் என் வாசம்
    மனமுவந்து ஏதொ ஒரு நாள்
    நீ திறக்கும் நேரம்...

    உனை ஆச்சரியமூட்டும் பெயர்
    அறியாததொரு அழகிய பூ
    வாசத்துடனோ...

    அல்லது அதிர்ச்சியூட்டும் அழுகிய
    பிண நாற்றத்துடனோ இருக்கலாம்...

    புரிந்து கொள்ள முடியாத அல்லது
    புரிந்து கொள்ளப்படாத எனதன்பு
    கீறல்கள் விழுந்து தன் பிரியத்தின்
    ரத்தங்களைச் சொட்டிக் கொண்டிருக்கலாம்...

    கூட்டுப் புழுவெனத் தோன்றி
    சிறகுகள் முளைக்க
    வண்ணத்துப் பூச்சியென்று நினைக்கையிலேயே
    ஒரு மரங்கொத்தியாகிப் பறந்துவிட்டிருந்தது
    என் கூட்டின் ஒற்றைப் பறவை...

    இப்படித்தான் தோற்றுவித்திருந்தாய்
    உன் வரவையும் இருத்தலையும்
    சற்று நேரம் முன் இதயம் கொத்திச்
    சென்றுவிட்டிருந்த உன் பிரிதலையும்...

    வெகு இயல்பாகவே நடத்திவைத்தாய்
    சந்திப்பையும் துண்டிப்பையும்...

    இயல்பாகவே ஏற்றுக்கொள்ளப்
    பழக்கியும் வைத்தாய்
    எதிர்ப்பின்றி வெட்டுப்படும்
    மரத்தைப் போல...

    எப்படி?!...
    எப்படிப் புரியவைக்கத் தவறினேன்
    என் கவிதைப் பொருளல்ல
    நீ
    உயிர்க் கரு என்று...
    மனதைக்கீறிய வரிகளாய்...
    அதன் ரணங்கள் சொல்லும் வலியாய்...
    தன் நேசம் புரியவைக்கும் போராட்டமாய்....

    அசத்தல் ஹேமா.... வரிகள் மனதை தாக்கிவிட்டதுப்பா...
    எப்படி தான் இப்படி இத்தனை க்யூட்டா எழுதுறியோப்பா....

    அன்பு வாழ்த்துகள் ஹேமா....
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  7. #7
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jul 2010
    Location
    விழுப்புரம்
    Age
    35
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    18,028
    Downloads
    4
    Uploads
    0
    அனுபவங்கள் தான் எவ்வளவு பேசுகின்றன ....
    தமிழுக்கும் அமுதென்று பேர்! -
    அந்தத் தமிழ் இன்பத் தமிழ்
    எங்கள் உயிருக்கு நேர்!

  8. #8
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    Quote Originally Posted by HEMA BALAJI View Post


    இதுவரை உனக்கென
    எழுதிக்கொண்டிருந்த என் விரல்களின்
    கடைசி கடிதமாகவோ அல்லது
    கடைசி கவிதையாகவோ இது இருக்கலாம்..

    தற்காலிகத் தண்டனையாக
    பூட்டப் பட்டிருக்கும்
    உன் இதயத்தில் என் வாசம்
    மனமுவந்து ஏதொ ஒரு நாள்
    நீ திறக்கும் நேரம்...

    உனை ஆச்சரியமூட்டும் பெயர்
    அறியாததொரு அழகிய பூ
    வாசத்துடனோ...
    இந்த தற்காலிக தண்டனை காதல்வாசனை கமழ்கிறது


    Quote Originally Posted by HEMA BALAJI View Post
    அல்லது அதிர்ச்சியூட்டும் அழுகிய
    பிண நாற்றத்துடனோ இருக்கலாம்...
    என அடுத்த உங்கள் வரி திடுமென இருக்கிறது
    ஏனோ ரசிக்கமுடியவில்லை.

    சிலபூக்கள் தண்ணீர்பட்டு
    குழைந்தே போகலாம் வாசமில்லாமல்
    ஓரே நாளில்!

    காதல்பூக்கள் கண்ணீர்பட்டு
    குமைந்தே போனாலும் வாசம்வீசும்
    எந்நாளும்!
    என்றென்றும் நட்புடன்!

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jun 2012
    Location
    Chennai
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    15,508
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by அச்சலா View Post
    நல்ல கவி...
    தொடர்க..
    நன்றி அச்சலா...

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jun 2012
    Location
    Chennai
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    15,508
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by மஞ்சுபாஷிணி View Post
    மனதைக்கீறிய வரிகளாய்...
    அதன் ரணங்கள் சொல்லும் வலியாய்...
    தன் நேசம் புரியவைக்கும் போராட்டமாய்....

    அசத்தல் ஹேமா.... வரிகள் மனதை தாக்கிவிட்டதுப்பா...
    எப்படி தான் இப்படி இத்தனை க்யூட்டா எழுதுறியோப்பா....

    அன்பு வாழ்த்துகள் ஹேமா....
    எல்லாம் உங்க ஊக்கத்தாலும் உற்சாகத்தாலும் தானக்கா. அன்பார்ந்த நன்றிகளும் அக்கா...

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jun 2012
    Location
    Chennai
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    15,508
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by கோபாலன் View Post
    அனுபவங்கள் தான் எவ்வளவு பேசுகின்றன ....

  12. #12
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jun 2012
    Location
    Chennai
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    15,508
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by Kumbakonathupillai View Post
    இந்த தற்காலிக தண்டனை காதல்வாசனை கமழ்கிறது




    என அடுத்த உங்கள் வரி திடுமென இருக்கிறது
    ஏனோ ரசிக்கமுடியவில்லை.

    சிலபூக்கள் தண்ணீர்பட்டு
    குழைந்தே போகலாம் வாசமில்லாமல்
    ஓரே நாளில்!

    காதல்பூக்கள் கண்ணீர்பட்டு
    குமைந்தே போனாலும் வாசம்வீசும்
    எந்நாளும்!
    உங்களின் பாஸிட்டிவான எண்ணங்களுக்கு நன்றி. இதில் நான் பூவை குறியிட்டுச் சொல்லவில்லை (மணத்தலும் அழுகலும் இங்கு பூவைக் குறிப்பதில்லை).

    //தற்காலிகத் தண்டனையாக
    பூட்டப் பட்டிருக்கும்
    உன் இதயத்தில் என் வாசம்
    மனமுவந்து ஏதொ ஒரு நாள்
    நீ திறக்கும் நேரம்...//

    அவன்/அவளின் மனதில் இருக்கும் அவனின்/அவளின் வாசத்தை (வசிப்பை) குறித்துச் சொல்லப் பட்டது. தண்டனை முடிந்து திறக்கும் நேரம், வாசமா நாற்றமா என்பது அவரவரின் காதல் தன்மையை மன நிலையைப் பொருத்த விஷயம் இல்லையா.

    கருத்திற்கு நன்றி கும்பகோனத்துப்பிள்ளை...

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •