Results 1 to 10 of 10

Thread: சிரிப்பு ..!

                  
   
   

Hybrid View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    24 Jun 2011
    Location
    A, A
    Posts
    334
    Post Thanks / Like
    iCash Credits
    20,697
    Downloads
    0
    Uploads
    0

    சிரிப்பு ..!

    உதடுகளின் விரிப்பு !
    உள்ளக் கதவுகள்
    மெல்லத் திறப்பு !
    உண்மையான நகையின்
    மென்மையானப் பிறப்பு !

    நரம்புகளின் லேசான தளர்வு !
    மனதை லேசாக்கும் -ஒரு
    நேச உணர்வு !

    மனித இனத்துக்கு மட்டுமே
    இறைவன் தந்தது !
    மருந்துக்கு கூட -பலர்
    பயன்படுத்த மறுப்பது !

    காசில்லாமல் வருவது !
    கல்மனதையும் தகர்ப்பது !

    உதடுகளை பிரித்து பிரித்து
    உள்ளத்தில் இருந்து
    சிரித்து சிரித்து
    மனபாரத்தை இறக்கிவைப்போம் !
    மரணத்தை துரத்தி வைப்போம் !
    வசிகரன்

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    சிரிப்பின் பெருமைகள் அருமை வசிகரன்.

    நரம்புகளின் லேசான தளர்வு !
    மனதை லேசாக்கும் -ஒரு
    நேச உணர்வு !
    இவ்வரிகளை மிகவும் ரசித்தேன். பாராட்டுகள் வசிகரன்.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    மத்தாப்பூவாக மலர்ந்து, பிறரையும் தொற்றிக்கொள்ளும் அருமருந்தான சிரிப்பிற்குக் கூறுவோம் பலத்த வரவேற்பு...

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    பூப்போல மலர்ந்திருக்கும் புன்னகை கவிதை கண்டு ரசித்தேன்... ருசித்தேன்... சிரித்தேன்..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  5. #5
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    பிறந்து பதினேழாம் நாளிலேயே குழந்தை சத்தமாய் சிரிக்கத்துவங்கிவிடுகிறதாம். பிறவிக்குருடு, பிறவிச்செவிடு குறைபாடுள்ள குழந்தைகளும் விதிவிலக்கல்லவாம். ஒருநாளைக்கு குழந்தைகள் சராசரியாக முந்நூறு தடவைகள் சிரிக்கிறார்கள் என்றால் பெரியவர்கள் வெறும் இருபது தடவைதான் சிரிக்கிறார்களாம்...

    சிரிக்கத்தூண்டும் கருத்துக்களோடு அழகிய கவிதை படைத்து எங்களை ரசிக்கத்தூண்டிய உங்களுக்குப் பாராட்டுகள் வசீகரன்.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    சிரிப்பு***சிறப்பு...!!!
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    சிரிப்பு மனதையும், உடலையும் வலிமைப்படுத்தி புத்துணர்வுடன் வைத்திருக்கும் என மருத்துவர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
    சிரிக்கும் போது உடலில் 300 தசைகள் அசைகின்றன. உடலிலும், மனதிலும் உள்ள அழுத்தங்களும், கவலைகளும் வெளியேறுகின்றன.
    அரைமணி நேரம் சிரிப்பது எப்படி என யோசிப்பவர்களுக்கு, அரைமணி நேரம் சிரிப்பது ஒன்றும் கடினமான காரியம் அல்ல.
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jun 2012
    Location
    Chennai
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    15,508
    Downloads
    0
    Uploads
    0
    சொன்னதெல்லாம் ரொம்ப உண்மைதாங்க வசிகரன். மனிதர்களுக்கு மட்டுமே சாத்தியமான சிரிப்பை மனிதன் மட்டும் தான் அவ்வப்போது கூட செய்வதில்லை. நல்ல கவிதை. பாராட்டுகள். சிரிப்பைப் பற்றிய வைரமுத்துவின் வரிகளையும் நினைவு படுத்துகிறது.

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    24 Jun 2011
    Location
    A, A
    Posts
    334
    Post Thanks / Like
    iCash Credits
    20,697
    Downloads
    0
    Uploads
    0
    சிரிப்பு பற்றிய என்கவிதைக்கு கருத்து புனைந்த அனைவருக்கும் மிக்க நன்றி.
    வசிகரன்

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    சிரிக்க மறந்தவர்களுக்கு
    சிறந்த மருந்து இக் கவி,,

    கவியை ரசித்தேன்
    இழையோடும் சிறு புன்னகையோடு,,

    வாழ்த்துக்கள் வசீகரன்..!
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •