Results 1 to 10 of 10

Thread: ஆபீஸ் பார்ட்டி

                  
   
   
  1. #1
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    30 Oct 2012
    Posts
    25
    Post Thanks / Like
    iCash Credits
    15,641
    Downloads
    5
    Uploads
    0

    ஆபீஸ் பார்ட்டி

    ப்ரிகடியர் ரோடின் எட்டாவது அவேனுய்வில் அடர்த்தியான போகவில்ல மரங்கள் நிழல் மறைத்த அந்த உப சாலையில் சன் வில்ல்வை கண்டுபிடிப்பது அவ்வளவு சிரமமாக இல்லை.

    ராகவின் மாருதி 800 யை செண்டிரி தடுத்து நிறுத்தி, கம்பனி ஐடி கார்டை ஒரு முறை சரி பார்த்து விட்டு, " சார் யு மே கோ " என்றான்.

    பார்கிங்கில் சில போர்டு இய்காங்களும், இன்னோவாகளும் படுத்திருந்தன. ராகவ் பார்கிங்கில் வண்டியை நிறுத்தி விட்டு, பார்ட்டி ஹாலுக்கு செல்வதற்கு முன் அவனை பற்றிய முன் கதை சுருக்கம்.

    ராகவ்....இளைஞன். நெய்வேலி லிக்னைடில் அவன் அப்பா தேசிக்கசாரி கிளெர்க் ஆக இருந்து, சீனியர் கிளெர்க் ஆகி, ரிடையர் ஆகும் முன் சுபெரிண்டேன்ட் ஆகி இருந்தார். ராகவ் ஒரே பிள்ளை. ஆனாலும், கண்டிப்பாகதான் வளர்த்தார். இயல்பாகவே ராகவிடம் மதேமடிக்ஸ் திறமைகள் ஒளிநிதிருபதை, ஸ்கூல் வாத்தியார் கண்டு கொள்ள, டென்த் தில் ஸ்கூல் பர்ஸ்ட். பிளஸ் டூ வில் ஸ்டேட் செகண்ட் என்று "என்நோற்றான் கொல் " என்று வளர.....ஐ ஐ டி அவனை அரவணைத்து கொண்டது. எம் எஸ் ஐ டி படித்தான். படித்தவுடன் மைக்ரோசொப்ட் அழைத்து கொண்டது. ச்டடேசில் சில நாள் ப்ரோக்ராமினான். பிசாவும், பர்கரும் அலுக்க சென்னையில் மெகா சாப்ட் என்ற குட்டி கம்பனிக்கு ஆர்கிடெக்ட் ஆக இடம் பெயர்ந்தான்.
    திருவான்ம்யுரில் பிளட் எடுத்து தங்கினான். சில நாள் கழித்து திருச்சி தில்லை நகரில் இருந்த பாகிரதையை ( பி காம்...எஸ் ஆர் சி ....வுமன்ஸ் காலேஜ்) சுபயோக சுப தினத்தில் கல்யாணம் செய்து கொண்டான்.

    ராகவ் வண்டியை நிறுத்தி விட்டு, குரோட்டன்ஸ்களுக்கு மத்தியில் இருந்த பாதையில் நடந்தான். பாதையில் முடிவில் இருபுறமும் பராமரிக்கப்பட்ட புல்வெளி. அதன் முடிவில் இருந்த கட்டிடத்தின் முகப்பிலிருந்த போர்டில் மெகா சாப்ட் செகண்ட் ப்ளோர் என்று அம்புக்குறி கான்பிருத்திருந்தார்கள்.

    லிப்டில் மண்டலின் இசை. பதினேழாவது செகண்டில் செகண்ட் ப்ளோர் வந்தது.

    மெகா சாப்ட் பாமிலி வெல்கம்ஸ் யு என்று துணி பேனர் வரவேற்றது.

    தூரத்தில் மக்சி கை இல்லாத ஜார்ஜெட் புடவையில் "ஹாய்" என்றாள். அவள் உடம்பில் வேண்டாத இடங்கள் லேசாக திறந்து சிதறி இருந்தது.

    உள்ளே பார்ட்டி ஹாலில் நாற்காலிகளை ஒருவன் வரிசை ஆக வைத்து கொண்டிருந்தான். ஸ்பீக்கர் "தூம். தூம்" என்று மேற்கத்திய ராப்பை வாரி இறைத்து கொண்டிருந்தது.

    "ச்சே....சீக்கிரம் வந்து விட்டோமா" என்று மொபைலில் மெசேஜ் பார்த்தான். ஹெச் ஆரிடமிருந்து வந்த எஸ் எம் எஸ் தெளிவாக " PARTY STARTS AT 7 PM AT SUN VILLA...." என்றது.

    மணி ஏழரைக்கு இவன்தான் முதல் ஆள். இந்த மாதிரி பார்டிகள் லேட்டாகத்தான் ஆரம்பிக்கும் என்று தெரிந்தாலும் இன்று ராகவ் சீக்கிரம் கிளம்பி விட தீர்மானித்திருந்தான். அவன் குழந்தைக்கு உடம்பு சரி இல்லை. கிளம்பும் பொழுதே, பாகிரதி கேட்டது ஞாபத்திற்கு வந்தது...(லேட் ஆகுமா?)...அதன் பொருள்- இன்று குடித்து விட்டு வருவாயா?
    'எப்படியாவது சீக்கிரம் கிளம்பி விட வேண்டும்...'
    தோளில் யாரோ கை வைத்தார்கள். திரும்பினால் ஜார்ஜ். ஹெச் ஆர் மேனேஜர். ரிம்லெஸ் கிளாசிலும், பிரெஞ்சு பியர்டிலும் வயதை குறைக்கும் உத்தேசம் தெரிந்தது.

    "என்ன ராகவ்...இன்னும் பார்ட்டி ஸ்டார்ட் ஆகலையா...."
    "இன்னும் இல்லை போல் இருக்கு..."
    "அப்ப நாமே ஏன் ஸ்டார்ட் பண்ண கூடாது..." என்று ஹாலில் ஓரத்தில் தலை கவசங்களோடு, வெள்ளை உடுப்பில் இருந்த சர்வீஸ் அசிச்ட்டேன்களிடம் அழைத்து சென்றான்.
    அவர்கள் முன் இருந்த மேஜையில் வால்ட் டாச்க்களும், பீட்டர் ஹென்ற்ய்களும் ஐஸ் குபெகளும், கவிழ்து வைக்கபட்டிருந்த கண்ணாடி குடுவைகளும் தெரிந்தன.

    "ராகவ்..என்ன சாபிடுறீங்க...ஹாட் ஆர் கோல்ட்..."

    ஒரு முறை பாகிரதியும், குழந்தையும் ஞாபகத்திற்கு வந்தார்கள்.

    "கோல்ட்"
    உடனே ஜார்ஜ் பேரரிடம் உத்யோக தோரணையில் " சீப்...டூ பியர்ஸ்..." என்றான்.

    பியர் கண்ணாடிகள் குளிருக்கு வியர்த்திருந்தன. இதற்குள் மக்சியும் அங்கு வந்து சேர்ந்தாள். அவளை கிட்டத்தில் பார்க்கும் பொழுது, இந்த மேக் அப்பிற்கு குறைந்தது இரண்டு மணி நேரம் செலவழிந்திருக்கும என்று நினைத்து கொண்டான். அவள் அணிந்திருந்த புடவையும், தொப்புள் சுழியும், மாரும் என்னை பார் பார் என்றது.
    "நான் இல்லாமல் பார்ட்டி எப்படி தொடங்கலாம்" என்று கூறி அவளும் ஒரு பீர் வாங்கி கொண்டால். ஜார்ஜ் மக்சியின் தோளில் கை வைத்து வருவதை எல்லாம் ராகவ் கண்டு கொள்ளவில்லை.

    மூவரும் நாற்காலிகளை தேர்ந்தெடுத்து வட்டமாய் உட்கார்ந்து கொண்டார்கள்.

    அதற்க்கு அப்புறம் அவர்கள் பேசி கொண்டது எல்லாம் பெரும்பாலும் சிக் ஜோக்குகள்..

    "ஆஸ்திரேலியாவில் ஜார்ஜ் ஒரு முறை ஹோட்டலில் பெண்ணை வர வழைத்து, ஆரம்பிபதற்கு முன்..."
    "கொல்" என்று சிரித்தார்கள். ராகவும் ஒப்புக்கு சிரித்தான்....அவனுக்கு சீக்கிரம் பார்ட்டி முடிந்தால் தேவலை என்று தோன்றியது..

    ஒரு வழியாய் சேர்மன் வந்து சேர்ந்து, மைக் டெஸ்டிங் களேபரங்கள் முடிந்து, சேலஸ் அறிக்கைகள் படித்து, அடுத்த வருஷதிர்க்கான KPA வரையறுத்து விட்டு, பார்ட்டி தொடங்கும் பொழுது ஒன்பது மணி.


    நிறைய கேம் ஷோக்கள் வைத்து இருந்தார்கள். ஸ்பூனினால் எலுமிச்சம் பழம் நகர்த்துதல், அதிக வடை சாப்பிடுதல், துப்பாக்கி சுடுதல், யாரோ ஒரு பைஜாமா கரோகியில் சுருதி விலகி "வுய் திஸ் கொல வெறி பாடிக்கொண்டிருதான்.

    ராகவுக்கு எரிச்சாலக இருந்தது ஏற்கனவே சாப்பிட்ட பீர் வயிற்ரை சங்கடம் பண்ணியது. டைனிங் ஹாலில் இன்னும் சாப்பாடு தயார் ஆக வில்லை.

    சேர்மன் வைபோடு வந்து பழைய ஹிந்தி சினிமா பாடலை பாட கூட்டம் சிறிது கொண்டிருந்தது..

    "நெக்ஸ்ட், ராகவ்ஜி வில் கம் அண்ட் சிங் பார் அஸ்..." என்று மைக்கில் அலறினார்கள்...

    ராகவ் சமாளித்து கொண்டு நாற்காலியை விட்டு எழுந்து, லேசாக தள்ளாடி, மேடை ஏறி, " ஏய்ய் ஆத்தா ஆத்தோரமா" என்று ஹை டெசிபலில் பாட கூட்டம் அவனுள் இருந்த போதையை கவனிக்க வில்லை.

    ராகவ் மேடையை விட்டு இறங்கியதும் சேர்மன் கட்டி அணைத்து, " பெண்ட்டச்டிக் பர்போர்ம்ன்ஸ்..இவருக்கு ஒரு ஒ போடுங்கோ...." (டெல்லி தமிழர்)...என்று அலற..கூட்டம் ஓஹோ என்றது....க்ரிடிகலான சமயத்தில் மூன்று நாள் வீட்டிற்கு போகாமல் ராகவ் வேலை பார்த்தது அநேகமாய் சேர்மனுக்கு ஞாபகம் வந்து இருக்க வேண்டும்..
    "கம் ஆன் மை பாய் " என்று உரிமையோடு தோளில் கை வைத்து பேரரிடம் அழைத்து சென்று " இவர் பீர் கேட்டால் குடுக்காதீங்க....ஹி இஸ் மை ஸ்பெஷல் கெஸ்ட்.......ஒன்லி ஹாட் ட்ரிங்க்ஸ் மட்டும் குடுங்கோ....இப்போதைக்கு ஜின்" என்றார்...

    ராகவ் மறுப்பதுர்க்குள் திணித்து விட்டார்கள்...இப்பொழுது ஸ்பீக்கர் நாக்கு மூக்கென்று அலறியது. ஜார்ஜும் மக்சியும் டூயட் பாட்டிற்கு ஸ்டெப் மாற்றி ஆடினார்கள்.
    ராகவ் லேசாக புன்னகைதான். வயிற்றில் பிரளயம். மதியம் சாப்பிட்ட தயிர் சாதம் கரைந்து போயிருந்தது.
    இப்போது பார்டியின் க்ளைமாக்ஸ் நடனம். ஸ்பிகரில் " வாடி வெத்தலை பாக்கு " என்று உள்ளூர் டப்பங்குத்து அதிர்ந்தது....
    அந்த ஹாலில் நிரம்பி இருந்த மெகா சாப்ட் குடும்பத்தின் அங்கத்தினர்கள் அனைவரும் உச்ச கட்டத்தில் ஆடி கொண்டிருந்தார்கள். ராகவ் ஆட முயற்சித்தும் கால்கள் ஒத்துழைப்பு தர வில்லை. லேசாக தலை சுற்றியது...

    ராகவ் கூட்டத்தில் இருந்து விலகி, ஹால் முடிவில் இருந்த தள்ளு கதவை திறந்து வெளி ஏறினான். எதிர்ப்பட்ட பேரரிடம் " ரெஸ்ட் ரூம்?" என்றான்...
    அவன் காட்டிய திசையில் நடந்தான்..
    ஆளுயர் கண்ணாடியும், வாஷ் பேசினும், வெஸ்டர்ன் யுரினாலும் பரிபூரண சுத்தத்தில் தெரிந்தன...ஆடோ மடிக் கதவு சாத்தி கொண்டதில் இரைச்சல் குறைந்திருந்தது.

    ராகவ் கண்ணாடியில் முகம் பார்த்தான். லேசாக வியர்த்திருந்தது...கண்ணாடியில் அவன் உருவம் லேசாக ஆடுவது போல் இருந்தது..
    டக் இன் பண்ணிய சர்ட்டை வெளியே எடுத்து விட்டு, வாஷ் பேசின் முன் குனிந்து, பின் கழுத்தில் லேசாக அழுத்தி கொண்டு, "உவ்வே." என்று வாந்தி எடுத்தான். வயிற்றில் இருந்த அத்தனை செல்களும் உயிர் பெற்று, திடீர் விடுதலையில், சாப்பிட்ட அத்தனனயும் வாஷ் பேசனில் நிரம்பியது. ஆயாசமாக கண்களை மூடி கொண்டான்.

    பார்டிக்கள் பயனுள்ளவை...

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    சரளமாக எழுதுறீங்க விசி. உங்க பெயர் சொன்னா கூப்பிட வசதியாயிருக்கும். இன்றைய ஐடி கம்பெனிக்களின் பார்ட்டி பற்றி சொல்லியிருக்கீங்க. எந்த விதத்தில் பார்ட்டி பயனுள்ளதுன்னு சொல்லல. சில சந்தேகங்கள் கதையின் முடிவு என்ன? இதில் மனைவி மற்றும் குழந்தையை பற்றிய நினைப்பு. என்னாச்சு அவங்களுக்கு? இப்படி சிந்தனைகள் வருவதை தவிர்க்க முடியவில்லை. இறுதியில் வாஷ்பேசினில் முடிவதாய் இருந்தால் மனைவி குழந்தை தேவையில்லா இடைச்சொருகலோ என்று தோன்றுகிறது. இதற்கு அடுத்த பாகம் வேறு உள்ளதா?

    முல்லைமன்றத்தில் உங்களைப் பற்றி அறிமுகம் தரலாமே.. நன்கு சரளமாக எழுதுகிறீர்கள்.

  3. #3
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    30 Oct 2012
    Posts
    25
    Post Thanks / Like
    iCash Credits
    15,641
    Downloads
    5
    Uploads
    0

    வைஷாலி

    திரு மதி,
    ஒரு வாறு கதை முடிந்த பின், அதன் முடிவை விளக்குவதே எழுத்தின் தோல்வி என்று தோன்றுகிறது. பார்டிக்கள் பயனுள்ளயவையா, பயனற்றவையா என்பதை ராகவின் கோணத்திலிருந்து எழுதிருக்கிறேன். என்னை பொறுத்தவரை இந்த மாதிரியான பார்டிக்கள் ஏதோ ஒரு விதத்தில் தனி மனிதனை பாதிக்கின்றன; நிச்சயம் பயனற்றவை என்று தோன்றுகிறது. அந்த கடைசி வரி, "பார்டிக்கள் பயனுள்ளவை" என்பதன் அர்த்தம் அதற்கு நேர் மாறானது. மீண்டும் படித்து பாருங்கள். இந்த மாதிரியான மின் அஞ்சல்கள், நான் தொடர்ந்து எழுத நம்பிக்கையும், ஊக்கமும் அளிக்கிறது என்பதில் மிகை இல்லை. என்னை வைஷாலி என்று அழையுங்கள்.

    வைஷாலி
    சேலம்

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    எழுத்தின் தோல்வி என்று சொல்லாதீர் வைஷாலி. கதையில் ஏதோ சொல்ல வந்து சொல்லாமல் விட்டதைப்போன்றதொரு உணர்வு. நிறைய எழுதுங்கள். வாழ்த்துகள்.

  5. #5
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மிக சரளமான எழுத்து....சில பிழைகளுடன். பிழை களைந்து வாசிக்க நிச்சயம் மேலும் சிறப்பாய் இருக்கும். பதினேழாவது செகண்டில் செகண்ட் ஃப்ளோர் வந்தது, பியருக்கு வியர்த்திருந்தது, கார்கள் படுத்திருந்தது என வித்தியாசம் காட்டும் எழுத்துக்கள் சுவாரசியமளிக்கிறது. எழுதிவிட்டு வாசித்துப்பாருங்கள். பிழை களைந்து பதிந்தால் கண்ணுக்கும் மூளைக்கும் உறுத்தலாய் இருக்காது.

    நன்றாக, சுவாரசியமாக எழுதுகிறீர்கள் விஷாலி. பாராட்டுக்கள்+வாழ்த்துக்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    மன்றத்திற்கு அன்பான வரவேற்புக்கள் வைஷாலி.

    கதை/சம்பவம் சுவராஸியமாக இருந்தது...!!!
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    17 Mar 2008
    Posts
    1,037
    Post Thanks / Like
    iCash Credits
    25,717
    Downloads
    39
    Uploads
    0
    அருமையான வர்ணணைகள்.
    அலுவலக பார்ட்டிகளை கண் முன்னே பார்ப்பது போல் இருந்தது.

    கீழை நாடான்

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    கண் முன் நிகழும் கார்பரேட் உலகின் மாய நிகழ்வு...கதை நடை இயல்பாக ..வாழ்த்துக்கள் வைக்ஷாலி அவர்களே...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் arun's Avatar
    Join Date
    20 Oct 2005
    Location
    சென்னை
    Posts
    1,217
    Post Thanks / Like
    iCash Credits
    11,978
    Downloads
    3
    Uploads
    0
    தங்களது கதையை படிக்கும்போது சுவாரஸ்யமாக இருந்தது ஆனால் முடிவு என்ன என்பதில் சற்று தெளிவு இல்லாத நிலையை போல உள்ளது, எனக்கு மட்டுமா என தெரியவில்லை

    கதைக்கு பாராட்டுக்கள்

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    இயல்பான எழுத்துநடையில் நிகழ்வுகளை காட்சிபடுத்திக்கொண்டு ஆங்காங்கே மனிதர்களின் சுபாவங்களையும் சுட்டிகாட்டியபடி நகரும் கதையோட்டம் நன்றாக உள்ளது... வாழ்த்துக்கள் வைஷாலி..!!

    பார்டிக்கள் பயனுள்ளவை...
    பலனற்றவர்களுக்கும்.. பயமற்றவர்களுக்கும்..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •