Results 1 to 12 of 12

Thread: தேநீர் கோப்பைகள்...

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jun 2012
    Location
    Chennai
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    15,508
    Downloads
    0
    Uploads
    0

    தேநீர் கோப்பைகள்...




    நம் இருவருக்கும்
    இடையே ஆன
    தேநீர் கோப்பைகளில்

    என் கோப்பையை நான்
    அருந்த அருந்த

    உன் கோப்பை
    நிரம்பிக்கொண்டே இருந்தது

    மூன்றாம் கோப்பை
    எப்போதும் போல்
    காலியாகவே..

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jul 2010
    Location
    விழுப்புரம்
    Age
    35
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    18,028
    Downloads
    4
    Uploads
    0
    இருவருக்கும் இரண்டு கோப்பை போதுமே ? மூன்றாவது கோப்பை யாருடையது ?
    தமிழுக்கும் அமுதென்று பேர்! -
    அந்தத் தமிழ் இன்பத் தமிழ்
    எங்கள் உயிருக்கு நேர்!

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jun 2012
    Location
    Chennai
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    15,508
    Downloads
    0
    Uploads
    0
    இதற்கான விளக்கத்தை இதோ இந்த சுட்டியில் சென்று பார்த்தீர்களானால் மிக அழகாக புரியவைத்திருப்பார்கள் கோபாலன். சென்று பாருங்கள். http://www.tamilmantram.com/vb/showthread.php/29416-

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    இந்தக் கவிதைக்கு இத்தனை விளக்கங்களா?

    வாழ்த்துக்கள்...!
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    கோப்பை நிரம்பினால் நல்லதா.... காலியாக இருப்பதால் நல்லதா...?
    வெற்றிடமாக இருப்பது லாபமா.......நிரப்பப்படுவது நஷ்டமா...?
    ஏதோ புரிகிறது....ஆனால் முழுதும் புரியவில்லை !

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by HEMA BALAJI View Post



    நம் இருவருக்கும்
    இடையே ஆன
    தேநீர் கோப்பைகளில்

    என் கோப்பையை நான்
    அருந்த அருந்த

    உன் கோப்பை
    நிரம்பிக்கொண்டே இருந்தது

    மூன்றாம் கோப்பை
    எப்போதும் போல்
    காலியாகவே..
    தத்துவம் நிறைந்த இக்கவிதையின் பொருளை
    எத்துணை முயன்றும் புரியா நிலையில்
    ஏதோ எனக்குத் தெரிந்த பொருளை
    மாதே! உரைப்பேன் ! கேட்பீர் சற்று.

    அன்பால் தன்னை ஈர்த்த கணவனிடம்
    பெண்பால் மனைவி மெல்ல மெல்ல
    தன்னை இழந்தாள் என்பதைக் காட்ட
    முன்னே அவளது கோப்பை குறைந்தது.
    வேலிபோல் இருந்து காக்கும் கணவனின்
    காலியான இதயம் மெல்ல மெல்ல
    காதலி காட்டும் அன்பால் நிறைந்ததைக்
    காட்டும் முகத்தான் அவனது கோப்பை
    நிறைந்ததைக் குறித்தார் கவிஞர் ஆங்கே!

    வரம்பு மீறிய அன்பு காட்டியும்
    நிரம்பா நிலையில் அவளது கருப்பை
    இருப்பதைக் காட்ட மூன்றாம் கோப்பை
    வெறுமனே இருப்பதைக் கவிஞர் உரைத்தார்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    என்னுள் தோன்றியதும் ஜெகதீசன் ஐயா கூறியதன் கருத்தினாற்போல் தான்..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jun 2012
    Location
    Chennai
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    15,508
    Downloads
    0
    Uploads
    0
    பின்னூட்டிய நட்புகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். புரியவில்லை எனில் இதோ இங்கு கொடுத்துள்ள சுட்டியில் சென்று பார்க்கவும், மிகத்தெளிவான விளக்கங்களை ஆதியும், தாமரை அவர்களும் கொடுத்துள்ளனர். அவர்க்ளுக்கும் என் நன்றிகள் பல.... http://www.tamilmantram.com/vb/showthread.php/29416-

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் arun's Avatar
    Join Date
    20 Oct 2005
    Location
    சென்னை
    Posts
    1,217
    Post Thanks / Like
    iCash Credits
    11,978
    Downloads
    3
    Uploads
    0
    திரியை பார்த்து தெளிவு பெற்றேன் கவிதை நன்று பாராட்டுக்கள்

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jun 2012
    Location
    Chennai
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    15,508
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by arun View Post
    திரியை பார்த்து தெளிவு பெற்றேன் கவிதை நன்று பாராட்டுக்கள்
    நன்றி அருண்..

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    Quote Originally Posted by HEMA BALAJI View Post
    பின்னூட்டிய நட்புகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். புரியவில்லை எனில் இதோ இங்கு கொடுத்துள்ள சுட்டியில் சென்று பார்க்கவும், மிகத்தெளிவான விளக்கங்களை ஆதியும், தாமரை அவர்களும் கொடுத்துள்ளனர். அவர்க்ளுக்கும் என் நன்றிகள் பல.... http://www.tamilmantram.com/vb/showthread.php/29416-
    புரியவில்லை என்றில்லை ஹெமாபாலாஜி அவர்களே ஆதி மற்றும் தாமரை அவர்களின் கோணங்கள் போலல்லாமல் மற்றொரு கோணத்தில் பார்த்தால் இந்த கவிதைக்கு இப்படியும் அர்த்தம் கொள்ளலாம் ஜெகதீசன் ஐயா கூறுவது போல் மீண்டும் அந்த கவிதையினை படித்து பார்த்தால் புரிந்து கொள்ளலாம் ..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  12. #12
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jun 2012
    Location
    Chennai
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    15,508
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by நாஞ்சில் த.க.ஜெய் View Post
    புரியவில்லை என்றில்லை ஹெமாபாலாஜி அவர்களே ஆதி மற்றும் தாமரை அவர்களின் கோணங்கள் போலல்லாமல் மற்றொரு கோணத்தில் பார்த்தால் இந்த கவிதைக்கு இப்படியும் அர்த்தம் கொள்ளலாம் ஜெகதீசன் ஐயா கூறுவது போல் மீண்டும் அந்த கவிதையினை படித்து பார்த்தால் புரிந்து கொள்ளலாம் ..
    மிகச் சரிதான் ஜெய் அவர்களே. அவரவர் கோணத்தில் கவிதை ஒவ்வொரு வெளியை உண்டாக்கிவிடுகிறது. தாமரை மற்றும் ஆதியின் விளக்கங்கள் நான் நினைத்து எழுதிய கருத்தை ஒட்டி வந்திருந்தது (அதைவிட பன்மடங்கு விசாலமான சிந்தனைச் செறிவும் கொண்டிருந்தது..) எனக்கே மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது. நாம் சின்ன கருவைத்தான் வரிகளாக்கியிருந்தோம், அதற்கு இத்தனை விஸ்தீரணமான வெளியா என. ஜெகதீசன் ஐயா அவர்களின் கோணமும் முற்றிலும் மாறுபட்டு அழகானதொரு வெளியைத் தந்த்திருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பதிலிடாமல் மொத்தமாக நன்றி நவின்று ப்தில் பதிவு போட்டதால் இக் குழப்பமோ என எண்ணுகிறேன். நான் ஜானகி அவர்களின் பதிவில் அவர் குறிப்பிட்டிருந்த "ஏதோ புரிகிறது ஆனால் முழுவதும் புரியவில்லை" என்ற வரிகளுக்காக இந்த சுட்டியைப் பார்க்கவும் என கொடுத்திருந்தேன்.அவ்வளவே. என்னுடைய அப்பதிவு யாருக்கேனும் மனம் வருத்தம் உண்டாக்கியிருப்பின் மன்னிக்கவும்.

    பி.கு: ஹேமா அவர்களே எல்லாம் வேண்டாமே. ஹேமா என்றே அழையுங்கள்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •