Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 21 of 21

Thread: ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சி குறித்த விமர்சனங்கள்

                  
   
   
  1. #13
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    அன்பின் உறவுகளே, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, இந்த சிறப்பு நிகழ்ச்சி இனியே நடந்ததற்கு நம்முடைய ஒவ்வொரு உறவின் ஒத்துழைப்பே காரணம்

    வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ள முன் வந்ததில் இருந்து ஒவ்வொன்றிலும் மிக ஆர்வமாய் ஒத்துழைத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்

    அடுத்து இந்த நிகழ்ச்சி இவ்வளவு பேரின் மனங்களை கொள்ளையடித்ததற்கு ஒரே காரணம் நம் கீதம் அக்கா, இந்த வெற்றியின் எல்லா புகழும் அவங்க ஒருத்தரையே சாரும், அவ்வளவு உழைப்பு, அக்காவோட அந்த ஈடுபாட்டுக்கும் வேகத்துக்கும் ஈடு கொடுப்பது மிகக் கடினம், எல்லா புகழும் அக்காவுக்கே

    அப்புறம் உறவுகளே, அக்காவுக்கு ஒரு ரசிகர் மன்றம் உறுவாக்கினா அதில் என் பெயரை நிச்சயமா சேர்த்துடுங்க, அக்காவின் முதல் ரசிகன் நான் தான், இப்பவே துண்டு போட்டுடேன்

    வாழ்த்துக்களை குரல் மூலம் அனுப்பி வைத்த நாஞ்சில் த க ஜெய், கோபாலம், கோவிந்த், கலையரசி அக்கா, இன்பக்கவி, ஜெகதீசன் ஐயா, ஆதவா, அமரன் மற்றும் வாழ்த்து திரியில் பதிவு செய்த கும்பகோணத்து பிள்ளை, ஜெயந்த், மதி, தைனிஸ், ஜானகி அம்மா, முரளி ரசிகன், ஹேமா மற்றும் ஆர்வமாய் பண்பலை நிகழ்ச்சிகளை கேட்டு கருத்திட்ட மனோஜி அண்ணா, கலை ஐயா, அகத்தியன், கமலக்கண்ணன், இன்பக்கவி மற்றும் நம்முடைய* உறவுகளுக்கும் அனைவருக்கும் உளப்பூர்வமான நன்றிகள்

    உறவுகளின் உற்சாகத்தை பார்க்கை மனதில் தெம்பும், பாரதி சொன்னது போல் ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே, தீபாவளியில் ஒலிக்க இருக்கும் பண்பலை நிகழ்ச்சிகள் பட்டாசு சத்தத்தைவிட சத்தமாக இருக்க வேண்டும் மக்கா, அது உங்க ஒவ்வொருத்தருடைய பொறுப்பும்

    இது நமது பண்பலை, நாமே முன் நடத்திச் செல்வோம்
    Last edited by ஆதி; 23-10-2012 at 06:09 PM.
    அன்புடன் ஆதி



  2. #14
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    பொதுப் போக்குவரத்தில் அமர்ந்து கேட்கத் துவங்கிய நேரம் அதிசயம் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.. தொடர்ந்து கேட்டேன்.. பாரதி சொன்ன தேன் வந்து பாய்ந்தது காதினிலே..

    சில கலையகங்களில் ஒலிவாங்கிக்கும் வாய்க்கும் இடையில் ஃபில்டர் இருக்கும். துல்லியமான ஒலிப்பதிவுக்கு இது உதவும். இன்னும் கொஞ்சம் நவீன கலையங்களில் ஒலிப்பதிவு/ஒலிபரப்பு சாதனத்தில் ஃபில்டர் இருக்க, சாதாரண ஹெட்செட் போன்று ஆனால் நவீன ஒலிவாங்கியைக் கொண்ட ஹெட்செட் இருக்கும். ஒலிவீச்சை ஒரே அளவில் பேணும் தொழில்நுடபம் இருக்கும். இவை எதுவும் இல்லாமல் இந்தளவு சிறப்பாக ஒலிபரப்பு அமைந்தது உறவுகளின் ஈடுபாட்டினால் மட்டுமே.. தொகுத்தளித்த கீதாக்காவை பாராட்ட வார்த்தைகள் என்னிடம் இல்லை. தெரிந்தவர்களிடம் இரவல் வாங்கலாம் என்றால் அவர்களிடமும் இல்லை.. தொழில்நுட்ப விடயங்களைக் கவனித்த ஆதியும் அவ்வாறே. மனமார்ந்த பாராட்டும் வாழ்த்தும் நண்பர்களே..!!

    தீபாவளி ஒலிபரப்பு இப்பவே எதிர்பார்ப்பைத் தூண்டுது.

  3. #15
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    பண்பலையின் முதல் நிகழ்ச்சி இத்தனை பேருடைய பாராட்டையும் பெற்றது மிகுந்த மகிழ்வையும் மனநிறைவையும் தருகிறது. இதன் பின்னணியில் உழைத்த நம் மன்ற நிர்வாக மற்றும் பண்பலைக்குழுவினரின் உழைப்பு சொல்லில் அடங்காதது. முக்கியமாய் ஆதி, மதி, இராசகுமாரன் அவர்கள், அன்புரசிகன், அமரன், பாரதி அவர்கள், இன்பக்கவி.... அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியும் பாராட்டும். பண்டிகைக்கான வாழ்த்துக்களை ஒலியாகவும், எழுத்தாகவும் வழங்கிய மன்ற உறவுகள் அனைவருக்கும் என் அன்பு நன்றிகள். உங்களுடைய ஒத்துழைப்பின்றி அந்த நிகழ்ச்சியை அப்படி வடிவமைத்திருக்க இயலாது என்பதை நீங்களும் அறிவீர்கள். தொடர்ந்து உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பும் ஈடுபாடும் இருக்குமானால் நம் மன்றமும் பண்பலையும் உச்சத்தை எட்டும். என்னைப் பாராட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. அத்தனைப் பாராட்டையும் பண்பலையின் ஒவ்வொரு அங்கத்தவர்க்கும் உரியதாக்கி மகிழ்கிறேன். நன்றி அன்புள்ளங்களே...

  4. #16
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by அமரன் View Post
    பொதுப் போக்குவரத்தில் அமர்ந்து கேட்கத் துவங்கிய நேரம் அதிசயம் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.. தொடர்ந்து கேட்டேன்.. பாரதி சொன்ன தேன் வந்து பாய்ந்தது காதினிலே..

    சில கலையகங்களில் ஒலிவாங்கிக்கும் வாய்க்கும் இடையில் ஃபில்டர் இருக்கும். துல்லியமான ஒலிப்பதிவுக்கு இது உதவும். இன்னும் கொஞ்சம் நவீன கலையங்களில் ஒலிப்பதிவு/ஒலிபரப்பு சாதனத்தில் ஃபில்டர் இருக்க, சாதாரண ஹெட்செட் போன்று ஆனால் நவீன ஒலிவாங்கியைக் கொண்ட ஹெட்செட் இருக்கும். ஒலிவீச்சை ஒரே அளவில் பேணும் தொழில்நுடபம் இருக்கும். இவை எதுவும் இல்லாமல் இந்தளவு சிறப்பாக ஒலிபரப்பு அமைந்தது உறவுகளின் ஈடுபாட்டினால் மட்டுமே.. தொகுத்தளித்த கீதாக்காவை பாராட்ட வார்த்தைகள் என்னிடம் இல்லை. தெரிந்தவர்களிடம் இரவல் வாங்கலாம் என்றால் அவர்களிடமும் இல்லை.. தொழில்நுட்ப விடயங்களைக் கவனித்த ஆதியும் அவ்வாறே. மனமார்ந்த பாராட்டும் வாழ்த்தும் நண்பர்களே..!!

    தீபாவளி ஒலிபரப்பு இப்பவே எதிர்பார்ப்பைத் தூண்டுது.

    உங்கள் அன்பான பாராட்டுக்கு நன்றி அமரன். வாழ்த்திய எல்லோரும் அவரவர் விருப்பப் பாடலைக் கேட்டிருந்தார்கள். நீங்கள் எதுவும் குறிப்பிடவில்லை. உங்களிடம் கேட்டு இணைக்க நேரம் போதவில்லை.அதனால் நானே உங்களுக்காக அதிசயம் பாடலைத் தேர்ந்தெடுத்து இணைத்துவிட்டேன். உங்களுக்குப் பிடித்திருந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

  5. #17
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் govindh's Avatar
    Join Date
    04 Mar 2010
    Location
    Kottaram
    Posts
    1,907
    Post Thanks / Like
    iCash Credits
    38,869
    Downloads
    0
    Uploads
    0
    மன்றப் பண்பலையின்...
    ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சி....
    அற்புத நிகழ்ச்சியாக அமைந்திருந்தது...!

    தொகுத்தளித்த கீதம் அவர்களுக்கு...
    பன்மடங்கு பாராட்டுக்கள்...!
    தொகுத்தளித்த விதம்....மிக அருமை..!

    முகமறியா மன்ற உறவுகளின்...
    குரலறிந்து....அவர்களின் விருப்பமறிந்து....
    படைக்கப்பட்ட...இனிய நிகழ்ச்சி....
    திகட்டாத ஓர் இசை விருந்து...!

    தமிழ் மன்றப் பண்பலைக் குழுவினருக்கு...
    மனமார்ந்த வாழ்த்துக்கள்...!

  6. #18
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    உறவுகளுக்கு வணக்கம், நேற்று நிகழ்ச்சியை கேட்க தவறியவர்கள் இன்று கேட்க விரும்பினால் இந்த திரியில் சொல்லவும், இந்திய நேரப்படி எப்பொழுது ஒலிபரப்பினால் உங்களுக்கு வசதியாக இருக்கும் என்று சொல்லுங்கள், ஒலிபரப்பி விடலாம்

    பண்பலையில் தற்போது இளையாராஜா பாடல்கள் ஒலிபரப்பாகிறது கேட்க விரும்புகிறவர்கள் கேட்கலாம்
    அன்புடன் ஆதி



  7. #19
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0

    சிறப்போ சிறப்பு

    பண்பலைக் குழு உறவுகளுக்கு முதற்கண் என் வாழ்த்துக்கள்.
    வாழ்த்துத் திரியிலேயே கருத்தைப் பதிவு செய்ததால் இத்திரியை கவனிக்கவில்லை.
    நேற்று மாலை இருமுறையும் நிகழ்ச்சியை கேட்டேன்.
    ஒரு தேர்ந்த அறிவிப்பாளர் போல நிகழ்ச்சியை தொகுத்துக் கொடுத்த தங்கை கீதத்தின் குரலில் நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது.
    தங்கைக்கு விசேஷமான பாராட்டுக்கள். அனைவருக்கும் தனிமடல் எழுதி அனைத்து உறவுகளையும் பங்குகொள்ள ஊக்குவித்த எனதருமைத் தம்பி ஆதிக்கும் என்னுடைய விசேஷமான பாராட்டுக்கள்.
    திரை முன்னும் மறைவிலும் உழைத்த பண்பலைக் குழு உறவுகளுக்கு மற்றுமொருமுறை என்மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  8. #20
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jul 2010
    Location
    விழுப்புரம்
    Age
    35
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    18,028
    Downloads
    4
    Uploads
    0
    என்னால் பண்பலை ஒலிபரப்பை முழுமையாக கேட்க முடியவில்லை. அதேவேளை என்னுடைய வாழ்த்துக்கள் ஒலித்ததையும் தவறவிட்டுவிட்டேன். கேட்டவரை அருமையாக இருந்தது. பிறகு பதிவுசெய்யப்பட்ட ஒலிக் கோப்புகளிலிருந்து முழுவதையும் கேட்டு காதுகளித்தேன். அனைவரின் பாடல் தெரிவும் அவர்களின் உள்ளங்களைப்போலவே அருமையாக இருந்தது. பண்பலைக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் பதிவு செய்து கொள்கிறேன். மென்மேலும் தொடருங்கள்.
    Last edited by கோபாலன்; 25-10-2012 at 07:51 PM.
    தமிழுக்கும் அமுதென்று பேர்! -
    அந்தத் தமிழ் இன்பத் தமிழ்
    எங்கள் உயிருக்கு நேர்!

  9. Likes ஆதி liked this post
  10. #21
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    நானும் கொஞ்ச நேரம் கேட்டேன்...கேட்ட வரை அருமை...
    மென்மேலும் தொடருங்கள்
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •