Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 21

Thread: ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சி குறித்த விமர்சனங்கள்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0

    ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சி குறித்த விமர்சனங்கள்

    வணக்கம் உறவுகளே,

    இன்று(23/10/12) இந்திய நேரப்படி மாலை 6:00 மணி அளவில் பண்பலையில் ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும் மீண்டும் இரவு 8:30 மணிக்கும், அதன் பிறகு 11:30 மணிக்கும் அதன் பிறகு 3:00 மணிக்கும் ஒலிபரப்பாகும், உறவுகள் அனைவரும் கேட்டு மகிழவும்

    அத்தோடு நிகழ்ச்சி குறித்த தங்களின் விமர்சனங்களை இங்கே பகிர்ந்து கொள்ளவும், முக்கியமாக குறைகள் எது இருந்தாலும் சொல்லவும், அப்போதுதான் தீபாவளி அன்று அடுத்த அடியை இன்னும் நேர்த்தியாக எடுத்து வைக்க இயலும், உறவுகளின் ஆலோசனைகளையும், ஆதரவையும், பங்களிப்பையும் எதிர்ப்பார்த்து

    தமிழ்மன்ற பண்பலை குழு
    இது நமது பண்பலை நாமே முன்னடத்தில் செல்வோம்
    Last edited by ஆதி; 23-10-2012 at 08:31 AM.
    அன்புடன் ஆதி



  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    65
    Posts
    2,495
    Post Thanks / Like
    iCash Credits
    28,718
    Downloads
    92
    Uploads
    0
    மன்ற வரலாற்றில் ஒரு மைல்கல் இந்த
    பண்பலை சரஸ்வதி பூஜை வாழ்த்து செய்தியும்
    சிறப்பு நிகழ்ச்சியும்.

    வாழ்த்துக்கள் உறவுகளே
    இந்திய நேரம் மாலை ஆறு மணி
    எங்களுக்கு இரவு 8.30 மணி
    காத்திருக்கிரேன் நிகழ்ச்சியை கேட்க
    முகம் காணா உறவுகளின் குரல் கேட்க
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

  3. Likes ஆதி liked this post
  4. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    வாங்க அண்ணா,

    எப்படி இருக்கீங்க ?

    தீபாவளியில் இருந்து நமது பண்பலை முழு வீச்சில் செயல்படும், அப்படியே தீபாவளி வாழ்த்தை அனுப்பி வச்சுடுங்க அண்ணா, அன்று உங்கள் குரல் நிச்சயம் பண்பலையில் ஒலிக்க வேண்டும், இது என் அன்பு கட்டளை
    அன்புடன் ஆதி



  5. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    65
    Posts
    2,495
    Post Thanks / Like
    iCash Credits
    28,718
    Downloads
    92
    Uploads
    0
    எனது அன்பான மன்ற உறவுகளே,
    உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்,
    எனது இல்லத்தில் திடீரென இணைய தொடர்ப்புக்கு தொல்லை, ஆயுத பூசை நிகழ்ச்சியை கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சீக்கிரம் வீடுவந்தும் இப்படியாகிவிட்டதே என சற்று மனசோர்வு, என்ன செய்யலாம் என யோசிக்கையில் ஆப்பிள் ஐபோன் கைகொடுத்தது. ஒரு மணி நேரம்இருபது நிமிடங்கள் தங்கை கீதம் வழிநடத்தி அறிவிப்பு செய்த நிகழ்ச்சி தொழில் முறை அறிவிப்பாளர்களை மிஞ்சும் படி இருந்தது, தொகுக்கப்பட்ட பாடல்கள் அருமையோ அருமை, வாழ்த்துக்கள் கூறிய உறவுகளுக்கும் ,உழைத்த உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்

    ஐபோன் செல்லினம் மூலம் தட்டச்சு செய்த பதிப்பு இது
    Last edited by Mano.G.; 24-10-2012 at 05:39 AM.
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

  6. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    ஒலி பரப்பை முழுவதும் கேட்டேன். கீதத்தின் தொகுப்பு மிகவும் நன்றாக இருந்தது. மன்ற உறவுகளின் குரலைக் கேட்டதில் மிகவும் மகிழ்ச்சி. முதல் நிகழ்ச்சியே குறையேதுமின்றி இருந்தது ஆச்சரியத்தை அளித்தது.
    ஆனால் ஒன்றரை மணி நேரம் தொடர்ச்சியாக கேட்க பொறுமையில்லை என்பதை நான் இங்குக் குறிப்பிட்டே ஆக வேண்டும். எனவே இதை இரண்டாகப் பிரித்து இடைவெளி விட்டு ஒலி பரப்பியிருக்கலோமோ என்று தோன்றியது. தம்பி அமரனின் குரல் மட்டும் ஒலிக்குறைவாக இருந்தது போலிருந்தது.
    மற்றபடி ஓ.கே.
    இதற்காக உழைத்த மன்ற உறவுகள் அனைவருக்கும் நன்றி.
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  7. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    அடுத்த முறை இதனை கவனத்தில் வைத்து செய்துடலாம் அக்கா

    மற்றவர்களும் தங்கள் மனதில் பட்டக் குறைகளை சொல்லவும்
    அன்புடன் ஆதி



  8. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    இப்போது நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன். கீதமின் தொகுப்பும் குரல்வளமும் மிக அருமை. அமரன் வாழ்த்து கேட்டேன். அடுத்து அதிசயம் பாடலைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். இனி தொடர்ந்து ஒலிபரப்பு நேரங்களில் கேட்பேன்.

  9. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    கீதம் அவர்களின் குரல்வளம், தேர்ந்த ஒரு வானொலி அறிவிப்பாளரின் குரல்போல இருந்தது. தொகுத்து அளித்தவிதமும் மிகவும் அருமை! பன்முகக் கலைஞருக்கு என் வாழ்த்துக்கள் ! கலையரசி அவர்கள் சொன்னது போல நிகழ்ச்சிக்கு இடையே சிறிது இடைவெளி இருந்திருப்பின் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும். நிகழ்ச்சியைக் கேட்கும் நேரத்தில் மின்தடை இல்லாமல் போனது அதிர்ஷ்டம் என்றே சொல்லவேண்டும். தீபாவளி நிகழ்ச்சி இன்னும் சிறப்பாக அமையும் என்றே எண்ணுகிறேன். வாழ்த்துக்கள்!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  10. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியின் போது இடை இடையில் பட்டாசுகள் வெடிக்கும் சத்தத்தைக் கேட்கச்செய்யுங்கள். நான் எங்கள் இல்லத்தில் பட்டாசுகளுக்குத் தடா போட்டுவிட்டதால் இங்காவது கேட்கலாமே என்றுதான்.

  11. #10
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Jul 2012
    Location
    லியோன்
    Age
    44
    Posts
    487
    Post Thanks / Like
    iCash Credits
    18,114
    Downloads
    0
    Uploads
    0
    இனிய தமிழ் மன்ற சொந்தங்களே! ஆயத பூசை முன்னிட்டு மன்றம் வழங்கிய சிறப்பு நிகழ்ச்சி கேட்டு மகிழ்ந்தேன். இந்நிகழ்ச்சி மிகவும் அழகாக சிறந்த கோர்வையுடன் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது, தொகுத்து வழங்கிய கீதம் அவர்களின் குரல் இனிய கீதமாக ஒலித்தது அவர்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் தெளிவாகவும், சிறப்புடனும் இருந்தது, வாழ்த்துக்கள் கீதம் அவர்களே. இந்நிகழ்ச்சியை தயாரித்து மிகச்சிறப்புடன் நம் அனைவருக்கும் வழங்கிய மன்ற நிர்வாகிகளை மனமாற பாராட்டி மகிழ்வதில் நானும் இம்மன்றத்தில் உறுப்பினர் என்ற முறையில் பெருமைபடுகிறேன். மன்றத்தார் கேட்டுயிருந்த அனைத்து பாடல்களும் மிகவும் இனிமை, நேரம்போனது தெரியவில்லை, மேலும் மன்றத்தின் அன்பர்கள் சிலரின் குரல்களையும் கேட்டு மகிழ்ந்தேன். என்னை அற்புத கவிஞர் என்று அழைத்து என் தமிழ் பணிக்கு உற்சாகம் தந்த கீதம் அவர்களுக்கு நன்றி. பண்பலை சிறக்கட்டும், திக்கட்டும் அதன் குரல் இனிக்கட்டும்.
    தோழமையுடன்
    ஆ. தைனிஸ்

    உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
    உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.

  12. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    இதுவரை காணாத மன்ற உறவுகளின் குரலினை முழுவதும் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி .. கீதம் அக்கா அவர்களின் தொகுப்பு அருமை அதெநேரம் கலைஅரசி அவர்களின் குரலும் அமரன் அவர்களின் குரலும் வாசிப்பும் நன்றாக இருந்தது .இடையிடையே இணைய தடை மின் தடை வேறு இந்த தடையிலும் கேட்கும் வாய்ப்பு அமைந்தது இருப்பினும் முன்னவர்கள் சிலர் குரலை கேடக்க இயலவில்லை..அனைத்து உறவுகளின் வாழ்த்தினை கேட்டுகொண்டு பாட்டையும் ரசித்ததில் நேரம் போனதே தெரியவில்லை இன்னும் கொஞ்ச நேரம் இன்னும் கொஞ்ச நேரம் என கேட்க்கும் ஆசை அதிகரித்ததெ தவிர குறையவில்லை சில நேரஙக்ளில் வாழ்த்துகள் கூறும் குரல்களின் ஒலிக்கும் ஒலிகள் குறைவாக ஒலித்தன..மொத்ததில் நான் அறிந்த வகையில் குறையேதும் இல்லை ..வாழ்த்துக்கள் பண்பலை உறவுகளே..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  13. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    இறை அருளாலும், எல்லோருடைய உழைப்பினாலும், பண்பலை நிகழ்ச்சி மிகவும் அற்புதமாகவும் நேர்த்தியாகவும் இருந்தது. பாடல்கள் அனைத்துமே இதமாக இருந்தன.

    கீதம் அவர்கள் மிகவும் பழக்கப்பட்டவர் போல அநாயசமாகத் தொகுத்தளித்தார் !

    இரண்டு பாகங்களாக ஒலிபரப்பலாமோ என்று தோன்றியது.

    மேன்மேலும் மெருகேற வாழ்த்துக்கள் !

    என்னுடைய வாழ்த்துக்களை ஒலிமாற்றம் செய்த கீதத்திற்கு நன்றிகள்.

    கொலு பற்றிய கவிதை சிறுபிராய நினைவுகளைக் கொணர்ந்தது.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •