Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 18

Thread: கண்கள் பனிக்க விடைபெற்ற சாதனை நாயகன் - ஸ்டீவ் வாஹ்!!!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0

    கண்கள் பனிக்க விடைபெற்ற சாதனை நாயகன் - ஸ்டீவ் வாஹ்!!!

    நாம் இப்போது பார்க்கப்போவது...மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல... மிகச்சிறந்த மனிதரும்கூட......


    1985-ஆம் ஆண்டு தனது 20-வது வயதில்...மெல்லிய தேகத்தோடு
    சிட்னி அரங்கில் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில்
    அறிமுகம்..

    அன்று ஜாம்பாவான்கள் மத்தியில் அஞ்சா நெஞ்சனாய் நெஞ்சை
    நிமிர்த்தியவர்..

    இன்று எல்லோர் நெஞ்சிலும் இடம் பிடித்து இமயமாய் உயர்ந்தவர்..


    செல்லமாய் "ஸ்டீவ்" என அழைக்கப்படும் "ஸ்டீவன் வாஹ்.."

    ஆஸி அணியின் புகழ் இன்று உச்சத்தில் நிற்பதற்கு ஏணிப்படிகளாய் நின்றவர்...

    மூன்றாம்தர வீரராய் உள்ளே வந்தவர்...1999-ஆம் ஆண்டு முதல்தர
    வீரராய்...தலைமைப் பதவியை ஏற்றார்...

    அதே ஆண்டில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் தனி நபராய்
    போராடி ஆஸியை இறுதிக்கு இட்டுச்சென்று கோப்பையை தட்டிவந்த தங்கம்...

    அதுமுதலாய் தொடர்ந்து 16 டெஸ்ட் போட்டிகளில் வென்று சாதனை
    படைத்த சிங்கம்..

    முதல் டெஸ்டில் இருந்த வேகமும் விவேகமும்... 168-வது போட்டியான இறுதி டெஸ்டிலும் இருந்ததை எவராலும் மறுக்க முடியாது...

    சத்தான பல சாதனைகளை படைத்த சரித்தர நாயகன்...

    தலைமையேற்ற 57 டெஸ்ட் போட்டிகளில் 41 வெற்றிகளை படைத்து
    வரலாற்று ஏடுகளில் வாசம் செய்பவர் (9-தோல்வி, 7-டிரா)

    இவர் எல்லோரது ஆசிகளுக்கும் சொந்தக்காரர்...அதிக சதங்கள்
    எடுத்த ஆஸிக்காரர்... (32-சதங்கள்)

    அதிசய வீரர் ஆலன் பார்டருக்கு அடுத்ததாய் அதிக ரன்கள் அள்ளிய துள்ளல் வீரர்..(10,927)

    ஒருதினப் போட்டியிலும் உயர்ந்து நின்றவர்... (325 போட்டிகளில் 7,569 ரன்கள்..)

    ஒரு தொடரில் அடைந்த தோல்வியால் துரத்தப்பட்டு .. ஏராள ரசிகர்கள் துயரப்பட்டு.... வேதனையில் மூழ்க..
    ரணங்கள்.. சாதாரணங்களென... சாதனைகளை கிடைத்த களத்தில்... (டெஸ்ட் போட்டிகளில்) தளராமல் தொடர்ந்த தன்னம்பிக்கை மனிதர்...

    இந்தியாவிற்கு எதிராய் தொடங்கிய இவரது கிரிக்கெட் சகாப்தம்...
    இந்தியாவிற்கு எதிராகவே முடிந்தது...

    இன்று விடைசொல்ல..., களத்தில் வலம்வந்த இவரை தரையில்
    கால்படவிடாமல் மற்ற வீரர்கள் மாறிமாறி தோள்களில்
    சுமந்துசென்றதை கண்டு கண்கள் பனித்தன....



    அந்த நாட்டின் பிரதமர் ஜான் ஹோவார்ட் முதல்... மைதானத்தில்
    மழைத்தண்ணீர் பிழியும் தொழிலாளிவரை அரங்கில் எழுந்து நின்று
    கரகோஷத்தோடு விழி நனைத்து வழியனுப்பிவைத்த விதம்.....அடடா..

    மனைவி-மகள்கள்-மகன்... இவர்களை வாரியணைத்து வாஞ்சையாய்
    முத்தமிட்டு மார்போடு அணைத்தபடி அரங்கைவிட்டு வெளியேறிய
    காட்சி நெஞ்சத்திரையில் நெகிழ்ச்சியாய் நிற்கிறது...



    இவரைக்கண்டு நெஞ்சுருக இன்னொரு காரணமுண்டு.....

    இந்தியரால் அதிகம் நேசிக்கப்படும் ஒரே ஆஸிக்காரரான
    இவர்...மனிதநேயத்தில் மாணிக்கம்...

    கோல்கட்டாவின் புறநகர் பகுதியில் "உதயன்" என்ற அமைப்பை
    ஆதவற்ற பெண் குழந்தைகளுக்கு நடத்திவரும் உன்னத மனிதர்...இவர்....

    தனது வருமானத்தில் பெரும்பகுதியை இதற்காக செலவிடும் இவரின்
    எதிர்கால ஆசை..

    "இந்தியாவில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக மிகப்பெரிய
    பள்ளியொன்றை தொடங்க வேண்டும்" என்பதே!!!...
    Last edited by பூமகள்; 30-07-2008 at 10:44 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    இவரின் மனித நேய முகம் தான் எனக்குப் பிடித்திருக்கிறது...... கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இந்திய நட்சத்திரங்கள், தொடர்ந்து பணம் தரும் தொழில்களிலே குறியாக முதலீடு செய்து, மேலும் பணபுழக்கத்தை அதிகப்படுத்திக் கொள்ள முனைந்து, தங்கள் கவனம் சிதறும் பொழுது, இந்த நல்லெண்ண மனிதரைப் பிடிக்காதவர் யாரிருக்க முடியும்?

    பூவிற்கு நன்றி....... நல்லதொரு பதிப்பை வெளியிட்டதற்கு......
    Last edited by பூமகள்; 30-07-2008 at 10:44 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    அருமையான் பதிவு பூ அவர்களே. நீங்கள் எழுதிய ஒவ்வொரு வார்த்தையும் முத்தானது.
    Last edited by பூமகள்; 30-07-2008 at 10:45 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்

  4. #4
    மன்றத்தின் தூண்
    Join Date
    15 Apr 2003
    Posts
    2,369
    Post Thanks / Like
    iCash Credits
    9,050
    Downloads
    0
    Uploads
    0
    அருமையான பதிப்பு!
    சாதனை மனிதரின் மனம் அறியப்பெற்றிருந்தாலும் சாதனையோடு கேட்கும் போது நம் மனங்களில் அவரின் மதிப்பு கூடிக்கொண்டே போவது உண்மை!

    நன்றி பூ!
    Last edited by பூமகள்; 30-07-2008 at 10:46 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    மிக நல்ல பதிவு பூ... ஒவ்வொரு மனிதரிடத்திலும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஒன்றாவது இருக்கும். அதில் வாஹ்..வும் விலக்கல்ல...
    Last edited by பூமகள்; 30-07-2008 at 10:46 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    பூ ..

    கோல்கட்டாவின் புறநகர் பகுதியில் "உதயன்" என்ற அமைப்பை
    ஆதவற்ற பெண் குழந்தைகளுக்கு நடத்திவரும் உன்னத மனிதர்...இவர்....
    அருமையான பதிப்பு பூ ....

    இதே மாதிரி சென்னையிலும் , மும்பையிலும் ஒரு அனாதை இல்லத்தை நடத்திகிறாராமே உண்மையா??
    Last edited by பூமகள்; 30-07-2008 at 10:47 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Posts
    3,716
    Post Thanks / Like
    iCash Credits
    8,962
    Downloads
    0
    Uploads
    0
    உண்மை இல்லை மன்மதன்....
    Last edited by பூமகள்; 30-07-2008 at 11:00 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்

  8. #8
    மன்றத்தின் தூண்
    Join Date
    19 Apr 2003
    Posts
    3,394
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    0
    Uploads
    0
    ஸ்டீவ் வாஹ் - க்கு இப்படி இன்னொரு பக்கமா .. ?
    அடடா .. இன்றைக்குத்தான் தெரிய வந்தது ..
    நன்றி பூ ...
    Last edited by பூமகள்; 30-07-2008 at 11:01 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்

  9. #9
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    வியாபார தலைநகரம&
    Posts
    920
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    பூ நல்ல பதிப்பு. இதில் உங்கள் உழைப்பு தெரிகிறது. ஆஸ்தேரேலியா ஒரு நல்ல காப்டன் + ஒரு நல்ல batsmanஐ இழந்துள்ளது.
    Last edited by பூமகள்; 30-07-2008 at 11:01 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்

  10. #10
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    09 Oct 2003
    Posts
    792
    Post Thanks / Like
    iCash Credits
    8,974
    Downloads
    0
    Uploads
    0
    பூ...அருமையான தகவல்கள். மறக்க முடியாத ஜெண்டில் மேன் ஸ்டீவ் என்பது உண்மைதான்..

    அன்பு

    அலை...
    Last edited by பூமகள்; 30-07-2008 at 11:02 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Posts
    3,716
    Post Thanks / Like
    iCash Credits
    8,962
    Downloads
    0
    Uploads
    0
    அவருடைய மறுபக்கம் வேண்டுமானால் ஜெண்டில் மேன் என்று ஒத்துகொள்வேன் அலை..ஆனால் கிரிக்கெட்டில் கண்டிப்பாக இல்லை அலை....
    Last edited by பூமகள்; 30-07-2008 at 11:02 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    17,905
    Downloads
    4
    Uploads
    0
    பூ , நானும் இவரை மிக உயர்வாகத்தான் மதித்து இருந்தேன். ஆனால் கொஞ்ச மாததிற்கு முன் சச்சின் பால் டேம்பரிங் கேஸில் அனாவசியமாக தலையை நுழைத்து தேவையில்லாத ஒரு கமெண்ட்டை அடித்ததிலிருந்து என் எண்ணத்தில் கொஞ்சம் குறைவாகத்தான் மதிப்பிடப்படுகிறார்
    அன்புடன்
    மணியா.
    Last edited by பூமகள்; 30-07-2008 at 11:03 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •