Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 23

Thread: கவிதைப்போட்டி 23 முடிவுகள்.

                  
   
   

Hybrid View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9

    கவிதைப்போட்டி 23 முடிவுகள்.

    இனியவர்களே!

    மன்றத்தின் பத்தாவது ஆண்டு நிறைவை ஒட்டி,
    மன்ற மறவர்களுக்காக நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியின் முடிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

    எதிர்பார்த்த அளவை விட அதிகமாகக் கவிதைகள் வந்தன.
    எதிர்பார்த்த அளவில் வாக்காளர்கள் இல்லை.
    கவிஞர்களே வாக்களிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
    அடுத்த கவிதைபோட்டியில்,
    வாக்களிக்கத் தவறிய போட்டிக் கவிஞரின் கவிதையை போட்டியிலிருந்து நீக்குவதைப் போட்டி ஒழுங்கில் சேர்க்கலாம் போல..

    போட்டியில் சகல விதத்திலும் பங்குபற்றியவர்களின் கரங்களை மன்றம் நன்றியுடன் பற்றிக்கொள்கிறது..

    போட்டி ஒழுங்கின் படி, ஒருவர் மூன்று வாக்குகளைச் செலுத்த வேண்டும் என்று கேட்டிருந்தோம். செலுத்தாத பட்சத்தில் அவருடைய வாக்கு செல்லாத வாக்காகக் கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் கவிதை எண் - 6 பெற்ற 19 மொத்த வாக்குகளில் இரண்டு வாக்குகள் செல்லாத வாக்குகள்.. எனவே அக்கவிதை பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 17 ஆகும்.

    அதே போல கவிதை எண் - 1 உம் ஒரு செல்லாத வாக்கினைப் பெற்றிருக்கிறது. எனவே அது பெற்ற வாக்குகளும் 2 ஆகக் குறைகின்றது..

    வாக்குகளின் அடிப்படையில்,

    புதுவை பிரபா அவர்களின் கவிதை அதிக வாக்குகளைப் பெற்று, அவருக்கு முதலிடத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.

    கலைவேந்தன் அவர்களின் கவிதை அடுத்தபடியாக அதிகப்படியான வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுக்கொடுத்திருக்கிறது.

    வெ.செந்தில்குமார் அவர்களின் கவிதை அடுத்தபடியாக அதிகப்படியான வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது..

    மூவரையும் வாழ்த்தி மகிழும் மன்றம் பங்குபற்றிய ஏனைய கவிஞர்களைப் பாராட்டுகிறது.

    நன்றி.

    கவிதைபோட்டி அறிவிப்பு இங்கே..
    http://www.tamilmantram.com/vb/showt...9F%E0%AE%BF-23

    வாக்கு விபரங்களை முழுமையாக அறிய
    http://www.tamilmantram.com/vb/showt...AE%AA%E0%AF%81

  2. #2
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    27 May 2009
    Posts
    75
    Post Thanks / Like
    iCash Credits
    18,413
    Downloads
    2
    Uploads
    0
    மன்றத்தின் பத்தாவது ஆண்டு நிறைவை ஒட்டி நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் முதல் பரிசு பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த மன்ற நிர்வாகிகளுக்கும் வாக்களித்து வெற்றிபெறச்செய்த நல்உள்ளங்களுக்கும் நன்றி நன்றி...

    இரண்டாம இடத்தைப் பிடித்த கலைவேந்தன் அவர்களுக்கும் மூன்றாம் பரிசு பெற்றிருக்கும் நண்பர் வெ.செந்தில் குமார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  3. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    கவிதைப்போட்டியில் உற்சாகத்துடன் பங்கெடுத்துக்கொண்ட அனைத்துக் கவிஞர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள். கவிஞர்களின் முயற்சியைப் பாராட்டும் விதத்தில், போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் தலா 200 இ பணம் அளித்து கௌரவிக்கிறேன்.

    கவிதைப்போட்டியில் முதலிடம் பெற்ற புதுவை பிரபாவுக்கும், இரண்டாமிடம் பெற்ற கலைவேந்தனுக்கும், மூன்றாமிடம் பெற்ற வெ.செந்தில் குமார் அவர்களுக்கும் சிறப்பு பாராட்டுகள்.

    வாழ்த்துக்கள் கவிஞர்களே.... தொடர்ந்து உங்கள் பங்களிப்பை மன்றத்துக்கு வழங்கிக் கொண்டே இருங்கள்.

    வாக்களித்து பங்கு பெற்றோரை உற்சாகப்படுத்திய மன்ற உறவுகள் அனைவருக்கும் அன்பான நன்றி. தொடர்ந்து வரும் அனைத்துப் போட்டிகளிலும் பங்களித்தும் வாக்களித்தும் உங்கள் ஒத்துழைப்பை நல்கி மன்றத்தை சிறப்பியுங்கள்!

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    பங்குபெற்ற, பரிசில் பெற்ற அனைத்து கவிஞர்களையும் நெஞ்சார பாராட்டுகிறேன்.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    வெற்றிவாகை சூடியவர்களுக்குப் பாராட்டுக்கள் !
    பங்குகொண்டவர்களுக்கு வாழ்த்துக்கள் !

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    முதலிடமும் மூன்றாமிடமும் பெற்ற புதுவைப் பிரபாவுக்கும் செந்தில்குமாருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள். ஓர் அதிசயம் இவ்வாக்கு முடிவில். அது என்ன என்றால் என் தரவரிசைப்படி கவிதை எண் 6 ( புதுவை பிரபா ) எனது கவிதை மற்றும் செந்திலின் கவிதையை இதே வரிசையில் நான் தேர்வு செய்தேன். நம்பும்படி இல்லை என்றாலும் உண்மை அதுதான்.

    கலந்துகொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள். வாக்களித்தோருக்கு மனமுவந்த நன்றிகள்.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0



    புதுவை பிரபா, கலைவேந்தன் மற்றும் வெ.செந்தில்குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  8. #8
    புதியவர்
    Join Date
    09 Apr 2010
    Posts
    16
    Post Thanks / Like
    iCash Credits
    10,284
    Downloads
    0
    Uploads
    0
    கவிதைப்போட்டியில் முதல் பரிசு பெற்ற அருமைத்தோழர் புதுவைப்பிரபாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. அடுத்த இடம் பெற்ற கவிஞர் கலைவேந்தன் அவர்களுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுகளும். மேலும் போட்டியில் பங்குபெற்ற அனைத்து கவிஞர்களும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..
    என் கவிதையையும் அந்த வரிசையில் நிற்க வைத்த அனைவருக்கும் உளமார்ந்த நன்றி நன்றி...

  9. #9
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    போட்டியில் பங்கு பெற்ற அனைத்து கவிஞர்களுக்கும் வென்ற புதுவை பிரபா, கலைவேந்தன் மற்றும் செந்தில்குமார் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். வாக்களித்து பங்கு கொண்ட உறவுகளுக்கும் நன்றிகள்.

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Jul 2012
    Location
    லியோன்
    Age
    44
    Posts
    487
    Post Thanks / Like
    iCash Credits
    18,114
    Downloads
    0
    Uploads
    0
    வெற்றிபெற்ற கவிஞர்களுக்கு என் சிறப்பு வாழ்த்துக்கள், வாழ்க! வளர்க! தொடர்க தமிழ் பணி.
    தோழமையுடன்
    ஆ. தைனிஸ்

    உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
    உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    கவிதைபோட்டியில்..
    வாகைசூடிய கவிஞர்கள் பிரபா, கலையண்ணா மற்றும் செந்தில்குமார் ஆகியோருக்கு எமது வாழ்த்துக்கள்..!!
    போட்டியில் பங்கெடுத்த கவிஞர்களுக்கு எமது பாராட்டுக்கள்..!!
    வாக்கெடுப்பில் கலந்துகொண்ட வாக்காள பெருமக்களுக்கு எமது நன்றிகள்..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  12. #12
    புதியவர்
    Join Date
    29 Jul 2012
    Posts
    9
    Post Thanks / Like
    iCash Credits
    9,711
    Downloads
    0
    Uploads
    0
    வெற்றிவாகை சூடியவர்களுக்குப் பாராட்டுக்கள் !
    பங்குகொண்டவர்களுக்கு வாழ்த்துக்கள் !

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •