Results 1 to 8 of 8

Thread: புது கவிஞன்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jul 2010
    Location
    விழுப்புரம்
    Age
    35
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    18,028
    Downloads
    4
    Uploads
    0

    புது கவிஞன்

    தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
    நான் கோபாலன்(கோபாலகிருஷ்ணன்).
    நானும் கவிதை எழுதும் முயற்சியில் நெடு நாட்களாக முயன்று வருகின்றேன். என்னைப் பற்றி கூறுவதென்றால் ,

    நான் ஒரு பெரிய பேச்சாளன் அல்லன்
    ஆனால், பிழையில்லாமல் பேசுவேன் ?
    நான் ஒரு நல்ல கவிஞன் அல்லன்
    ஆனால், நல்ல கவிதை எழுதவேண்டுமென்று நெடுநேரம் யோசிப்பவன்?!.

    பிழையிருந்தால், திருத்தவும்.

    சிறு வயதினில் அம்மாவை பிரிந்து பெரியம்மா வீட்டில் தங்கி படித்தபோது , அம்மாவின் அன்புக்காக ஏங்கியதின் எழுத்து வடிவம்தான் இது.

    தாயின் பிரிவு

    சிறுவயதினில் , நேரம் சரியில்லை என்று
    சேராமல் பிரித்தார்கள்
    உன்னையும் என்னையும்

    நல்ல சாப்பாடு உகந்த உபசரிப்பு
    எல்லாம் கிடைத்தும் இறங்கவில்லை
    உன்முகம் இதயத்தினின்று

    நள்ளிரவில் உன் ஞாபகம்
    யார்யாரையோ நீயென்று கண்டு
    பிதற்றியிருக்கிறேன் நீதானென்று

    ஏதொரு நாளில் நீ வருவாய்
    ஏனென்று கேட்டு இதம் படைப்பாய்
    உறங்கிப்போவேன் உன்மடியில்

    இதுபோல் தொடராத என நினைக்கையில்
    மறுநாள் சென்றிருப்பாய் ஊருக்கு
    உன் நினைவில் நானிருப்பேன் பாரமாய் பாருக்கு

    கோடை விடுமுறையில் கொண்டாட்டம்தான்
    தம்பியும் தங்கையும் உடனிருப்பதில்
    உறங்கித்தான் போவேன் உற்சாகமாய்

    ஆனால் அவர்களுடைய விடுமுறைக்கு
    என்னைவிட்டு வேறூர் செல்வதில்
    மருங்கித்தான் சாவேன் கொடும்சோகமாய்

    விடுமுறை முடிந்து திரும்ப வேண்டும் ஊருக்கு
    மீண்டும் வருவேன் சீக்கிரமென்று
    மகிழ்ச்சியில் செல்வேன் பேருக்கு

    அம்மா ,
    உன்னுடனே எப்போதும் இருக்கமாட்டேனா?

    என்னுடைய கவிதை முயற்சிகள்

    1. நட்பிலக்கணம்..

    2. நட்பு..

    3. பிரிவு..

    4. உயிரினில் மெல்ல..

    5. குறுங்கவிதைகள்..

    6. நண்பனின் பிரிவு..

    7. செய்வினை..

    8. நீர்க்குமிழி..

    9. இறைவன்.

    10. தோழி..

    11. யார் நீ..

    12. கல்கியின் காதல்..

    13. காலச்சக்கரம்..
    Last edited by கோபாலன்; 22-10-2012 at 11:07 AM.
    தமிழுக்கும் அமுதென்று பேர்! -
    அந்தத் தமிழ் இன்பத் தமிழ்
    எங்கள் உயிருக்கு நேர்!

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    புதுக்கவிஞனின் அறிமுகமும் தாய்வணக்கமும் அருமை..

    கோபாலன்..

    மன்றத்தில் நீங்கள் பதிந்த கவிதைகளின் சுட்டிகளை இங்கே இணைத்தால், உங்கள் கவிதைகளைத் தேடிப்படிப்பவர்களுக்கு இலகுவாக இருக்கும். அதற்காகவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டிருக்கிறது. உங்களுடைய சுட்டிகளின் படியல் நீண்டு செல்ல என் வாழ்த்து.

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Jul 2012
    Location
    லியோன்
    Age
    45
    Posts
    487
    Post Thanks / Like
    iCash Credits
    18,254
    Downloads
    0
    Uploads
    0
    புது கவிஞனின் புது பதிவு அருமை, வாழ்த்துக்கள் தொடருங்கள் கோபாலன்.
    தோழமையுடன்
    ஆ. தைனிஸ்

    உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
    உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    புது கவிஞருக்கு எமது வாழ்த்துக்களும் வரவேற்புகளும்..!!

    சிறுபிராயத்தில் பெற்றோரை பிரிந்து விடுதியிலோ அல்லது உறவினர் வீட்டிலோ தங்கநேரும் குழந்தைகளின் ஏக்கத்தை, இத்தனை காலம் கழித்தும் முழுமையாய் அந்த உணர்வின் ஆழத்தை எழுத்தில் வெளிக்கொணர்ந்த விதத்திலேயே உங்களின் ஆர்வமும் முயற்சியும் அப்பட்டமாய் வெளிபட்டிருக்கிறது..!! தொடர்ந்து எழுதுங்கள் கோபாலரே..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jul 2010
    Location
    விழுப்புரம்
    Age
    35
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    18,028
    Downloads
    4
    Uploads
    0
    தங்களுடைய ஊக்கத்திற்கு நன்றி.. பிழையிருந்தால் சுட்டிக்காட்டி திருத்தவும்..
    தமிழுக்கும் அமுதென்று பேர்! -
    அந்தத் தமிழ் இன்பத் தமிழ்
    எங்கள் உயிருக்கு நேர்!

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    கவிஞர் கோபாலருக்கு வணக்கம். தங்களின் படைப்புகளை நான் இதுவரை பார்வையிடவில்லை. விரைவில் அனைத்தையும் வாசித்து எனது கருத்துகளைப் பகிர்கிறேன், தங்கள் படைப்புகளைத் தொடர்ந்து தாருங்கள்.

  7. #7
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    அறியா வயதில் அன்னையைப் பிரிந்த வலியை உணர்த்தும் வரிகள். இருந்தும் இல்லாமல் போன தாய்மைக்கான பரிதவிப்பை அதே உணர்வுடன் வெளிப்படுத்தும் கவிதைக்குப் பாராட்டுகள். விரைவில் தங்களது மற்றப் படைப்புகளையும் படித்துக் கருத்திடுவேன். மன்றத்தில் தங்கள் பங்களிப்பைத் தொடர்ந்து வழங்க வாழ்த்துக்கள்.

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    பிரிவின் வலியினை உணர்ந்து வடிக்கும் கண்ணீர் துளி..தொடருங்கள் தோழரெ..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •