Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 46

Thread: சுடச் சுடச் செய்திகள்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0

    சுடச் சுடச் செய்திகள்

    பனாஜி, செப். 16-

    கொல்கத்தாவில் மேலும் 3 சிலிண்டர்: கோவாவில் மானிய விலையில் கூடுதலாக 6 சிலிண்டர்கள்- மத்திய அரசு உத்தரவுக்கு பதிலடி



    மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு எதிராக கோவாவில் மானிய விலையில் கூடுதலாக 6 கியாஸ் சிலிண்டர்கள் வழங்க கோவா அரசும், 3 சிலிண்டர்கள் கொடுக்க மேற்குவங்காள அரசும் தீர்மானித்துள்ளன. குடும்பங்களுக்கு மானிய விலையில் அளவில்லாமல் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வந்தன.

    இந்நிலையில் மானிய விலையில் அளிக்கப்படும் சிலிண்டர்களுக்கு, மத்திய அரசு தற்போது கட்டுப்பாடு கொண்டு வந்துள்ளது. அதாவது ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்க முடியும். கூடுதலாக வேண்டுமானால் அதற்கு சந்தை விலை வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு 3 நாட்களுக்கு முன்பு திடீரென அறிவித்தது.

    இந்த அறிவிப்புக்கு பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் கடுமையான எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். சிலிண்டர் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். ஆனால் கோவா மற்றும் மேற்கு வங்காள மாநில அரசுகள் மத்திய அரசின் உத்தரவை பின்பற்றுவதில்லை என முடிவு செய்துள்ளன. இதுபற்றி கோவா பாரதீய ஜனதா அரசின் பொது விநியோக துறை மந்திரி தயானந்த மண்ட்ரேகர் கூறியதாவது:-

    முதல் - மந்திரி மனோகர் பரிக்கர் சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில், குடும்ப பயன்பாட்டுக்கான நுகர்வில் எந்தவித கட்டுப்பாடும் அனுமதிக்கப்பட மாட்டாது என்று உறுதி அளித்திருந்தார். அதன்படி, சமையல் கியாஸ் சிலிண்டரும் தேவைக்கு ஏற்ப குடும்பங்களுக்கு வழங்கப்படும். அதாவது மத்திய அரசு அறிவித்துள்ள 6 மானிய சிலிண்டர்கள் போதாது என்று கருதுபவர்களுக்கு, மானிய விலையிலேயே கூடுதாக 6 சிலிண்டர்கள் அளிக்கப்படும். இதற்காக கூப்பன் முறை கொண்டுவரப்படும் 5 ஆண்டுகளுக்கு இந்த திட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதேபோல மேற்குவங்காள மாநிலத்தில் கொல்கத்தாவில் மட்டும் கூடுதலாக 3 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்க மம்தா பானர்ஜி அரசு முடிவு செய்துள்ளது. ஏப்ரல் மாதத்துடன் தொடங்கிய நிதி ஆண்டு முதல், ஒவ்வொரு குடும்பமும் எவ்வளவு சிலிண்டர்கள் பயன்படுத்தி வருகின்றனவோ, அந்த அளவுடன் கூடுதலாக 3 சிலிண்டர்கள் வழங்கப்பட உள்ளது. மானியம் இல்லாத சிலிண்டர்களின் விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.


    நன்றி : மாலை மலர்.
    .
    .
    .
    .
    .
    (பி.கு) : நம்ம ஊரிலும் குடுத்தா நல்லாருக்குமே...!!!

    ஹி...ஹி...ஹி...






    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  2. Likes seabird liked this post
  3. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    இப்படி மக்களை எமாத்துறதெல்லாம் இவங்களுக்கு சாதாரண விடயம்..காரணம் மக்கள் மீது உண்மையான அங்கம் வகிக்கும் கட்சியாக இருந்தால் மத்தியில் ஆதரவை திரும்ப பெறட்டும் ..கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசையென்றால் அதற்கான பலாபலனை நிச்சயம் அனுபவிக்கவேண்டும் ..அதேநேரம் மக்களும் கொஞ்சம் நினைவோடு இருந்து எந்த கட்சிக்கும் சாராமல் நடுநிலையோடு தீர்ப்பினை எழுதவேண்டும் ..இப்ப இருக்குற நிலையில் இது நம்ம மாநிலத்திற்க்கும் வரும் எனில் நடுத்தர மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்...
    தொடருங்கள் சித்தப்பு..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  4. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0

    பெட்ரோல் விலை குறைகிறது: எண்ணை நிறுவனங்கள் முடிவு

    மும்பை, செப். 24-

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை கடந்த சில தினங்களாக குறைந்து வருகிறது. கடந்த வாரம் வியாழக்கிழமை ஒரு பேரல் கச்சா எண்ணை 116 டாலராக இருந்தது. இன்று அது 106 டாலராக குறைந்தது. கடந்த 5 நாட்களுக்குள் ஒரு பேரல் கச்சா எண்ணை விலையில் 10 டாலர் வரை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

    இந்த விலை வீழ்ச்சி மேலும் தொடரும் என்று தெரிகிறது. இந்த நிலையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் மத்திய அரசின் சீர் திருத்த நடவடிக்கைகள் காரணமாக திருப்தி தரும் வகையில் உள்ளது. எனவே பெட்ரோல் விலையை குறைக்க எண்ணை நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

    பொதுவாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை ஒரு டாலர் குறைந்ததால், இந்தியாவில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 33 பைசா குறைக்க முடியும். பெட்ரோல் விற்பனையை பொறுத்த வரை இந்திய எண்ணை நிறுவனங்கள் லாபமும் இல்லை. நஷ்டமும் இல்லை என்ற நிலையில்தான் பெட்ரோலை வினியோகம் செய்து வருகின்றன.

    எனவே தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை கணிசமாக குறைந்துள்ளதால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3.25 வரை குறைக்க முடியும். இது தொடர்பாக இந்திய எண்ணை நிறுவனங்கள் ஆலோசனை நடத்தி வருகின்றன. விரைவில் பெட்ரோல் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லிட்டருக்கு ரூ.2 வரை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே பெட்ரோலுக்கு விலை நிர்ணயம் செய்வதில் வெளிநாடுகளில் கடை பிடிக்கும் முறையை அமல்படுத்த இந்திய எண்ணை நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன. அமெரிக்காவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை எப்படி உள்ளதோ? அதற்கு ஏற்ப தினமும் பிற்பகல் 3 மணிக்கு பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சில நாடுகளில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை பெட்ரோல் விலையை மாற்றி அமைக்கிறார்கள். இத்தகைய முறைகளில் ஏதாவது ஒன்றை அமல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.




    நன்றி : மாலை மலர்
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  5. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    அடுத்த ஆண்டு முதல் ரோமிங் கட்டணம் ரத்து செய்யப்படும்: கபில் சிபல்

    New Delhi திங்கட்கிழமை, செப்டம்பர் 24, 3:36 PM IST

    புதுடெல்லி,செப். 24-

    அடுத்த ஆண்டு முதல் செல்போன் உபயோகிப்பாளர்கள் ரோமிங் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை மந்திரி கபில் சிபல் கூறினார். டெல்லியில் நடைபெற்ற இணையதள பயன்பாடு தொடர்பான மாநாட்டில் பங்கேற்ற மத்திய மந்திரி கபில் சிபல் நிருபர்களிடையே பேசியதாவது:-

    2013ம் ஆணடு முதல் நாட்டில் ரோமிங் கட்டணங்கள் ரத்து செய்யப்படும். இச்செய்தி அடிக்கடி வெளியூர் பயணங்கள் மேற்கொள்பவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும்.

    கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட தொலைத்தொடர்பு கொள்கை அறிக்கையில் சந்தாதாரர்கள் ஒரே எண்ணை தக்கவைக்கும் முறைக்கும், ரோமிங் கட்டணத்தை ரத்து செய்யவும் அனுமதி அளித்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.


    நன்றி : மாலை மலர்
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  6. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0

    பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைகிறது

    புதுடெல்லி, சனிக்கிழமை, செப்டம்பர் 29, 6:01 AM IST


    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப, பெட்ரோல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இறங்குமுகமாக உள்ளது.

    அதைத் தொடர்ந்து இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் வரை குறைகிறது. இதற்கான அறிவிப்பை ஓரிரு நாட்களில் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நன்றி : மாலை மலர்
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  7. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Jul 2012
    Location
    லியோன்
    Age
    45
    Posts
    487
    Post Thanks / Like
    iCash Credits
    18,254
    Downloads
    0
    Uploads
    0
    மக்களை ஏமாற்றும் வேலையை ஆளும் அரசும், எண்ணெய் நிறுவனங்களும் செய்கின்றன இதனால் பாதிக்கப்படுவது மக்களே. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு ஏற்பட மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும், ஏனெனில் மக்களே இந்நாட்டு மன்னர்கள்.
    தோழமையுடன்
    ஆ. தைனிஸ்

    உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
    உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.

  8. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0

    ..சென்னையில் பழைமையான 2 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது: 2 பேர் பலி- பலர் சிக்கியுள்ளதாக தகவல்

    தினமலர் – 2 மணிநேரம் 34 நிமிடங்கள் முன்


    சென்னை: சென்னை அருகே2 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் கட்டடஇடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.சென்னை நகரின் மையப்பகுதியான திரு*வல்லிக்கேணியின், சுங்குவார் தெரு உள்ளது.

    இப்பகுதியைச் சேர்ந்ததியாகராஜூ என்பவருக்கு சொந்தமான இரு மாடி கட்டடம் உள்ளது. இங்கு 8 குடும்பத்தினர் வசித்து வந்தனர்.
    இன்று காலை 7 மணியளவில் இக்கட்டம் திடீரென இடிந்து விழுந்தது. திடீரென கட்டடம்இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அலறி அடித்து வெளி*யே வந்தனர். அப்போது கட்டடம் இடிந்து விழுந்த வேகத்தில் பலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதில் பெண் உள்பட இருவர் பலியானது தெரியவந்துள்ளது.

    பலியானவர் அரசுஊழியர் ஒருவரின் மனைவி பாரதி என தெரியவந்துள்ளது. உடனடியாக ஒருவரின் உடல் மீட்கப்பட்டன. சம்பவத்தினை அடுத்து அப்பகுதியின் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் தீயணைப்பு மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். கட்டட இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால் இடிபாடுகளை அகற்றஜே.பி.சி. இயந்திரம் வரவழைக்கப்பட்டது. ஆனால் சம்பவம் நிகழ்ந்த இடம் குறுகிய தெரு என்பதால் ஜே.சி.பி. வாகனம்உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால் மீட்புப்பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இதனால் கை இயந்திரங்கள் கொண்டு இடிபாடுகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கையாக சிக்கியவர்களை இடம் காண மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸூம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.






    நன்றி : தினமலர்
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  9. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    அந்த திருவல்லிக்கேணியில் உள்ள பழமை நிறைந்த வீடுகள் பல நானும் கண்டிருக்கிறேன் ..ஆனால் இது போன்ற நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பது உண்மையில் வருந்ததக்கது..மேலும் நிகழாமல் இருப்பது நன்று...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  10. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0

    சமையல் காஸ் விலை உயர்ந்தது ; புதிய போராட்டத்திற்கு நாடு தயாராகுது

    சமையல் காஸ் விலை உயர்ந்தது ; புதிய போராட்டத்திற்கு நாடு தயாராகுது
    தினமலர் – 2 மணிநேரம் 11 நிமிடங்கள் முன்

    புதுடில்லி; சமீபத்திய அந்நிய முதலீட்டு விவகாரம், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளால் எதிர்க்கட்சியினர் போராட்டம் முடித்து சற்று தணிந்துள்ள இந்ந*ேரத்தில் மக்களை நேரடியாக பாதிக்கும் வகையில் சமையல் காஸ் விலையை மத்திய அரசு இன்று (6ம் தேதி ) உயர்த்தியுள்ளது. ஏற்கனவே சமையல் காஸ்சுக்கு, ரேசன்(6 சிலிண்டர் குறைப்பு) கொண்டு வந்ததை அடுத்து இன்றைய விலை உயர்வு இல்லத்தரசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

    கடந்த மாதம் அந்நிய முதலீட்டு அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர் பந்த் நடத்தினர். டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வர்த்தக நிறுவன அமைப்பினர் அனைவரும் இந்த போராட்டத்தில் குதித்தனர். சில மாநிலங்களில் பாதிப்பும், இயல்பு நிலையும் நிலவியது. டீசல், பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட விஷயங்களால் அதிருப்தி அடைந்த மம்தா கட்சி மத்திய அரசில் இருந்து விலகியது. ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சாவும் விலகியது.


    இந்நிலையில் வீட்டு உபயோகத்திற்கு முக்கிய பொருளான சமையல் காஸ் சிலிண்டருக்கு ரூ. 11. 42 உயர்த்தப்பட்டுள்ளது. சிலிண்டர் டீலர்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்த வேண்டியிருப்பதால் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக மத்திய அரசு வட்டாரம் தெரிவிக்கிறது.
    ஒரு சிலிண்டர் விலை ரூ. 410.42 பைசா: கமிஷன் தொகையில் சிலிண்டருக்கு ரூ. 25.83 பைசாவில் இருந்து ரூ.37.25 பைசாவாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசலுக்கான கமிஷன் தொகையும் முறைப்படி லிட்டருக்கு 23 பைசாவும், 10 பைசாவும் உயர்த்தப்படலாம். இதன் எதிரொலியாக இந்த இரண்டுக்கும் மீண்டும் விலை உயர்த்தப்படும் என்று டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது. ஏற்கனவே காஸ் சிலிண்டர்ஆண்டுக்கு 6-ஆக குறைத்ததற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ள நிலையில் தற்போது காஸ் சிலிண்டர் ரூ. 399 லிருந்து 410. 42 பைசா ( டில்லியில்) உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ரூ. 399 ஆகும். இது மக்கள் மத்தியிலும், எதிர்க்கட்சியினர் மத்தியிலும் ஒரு போராட்டத்தை நடத்த வழிவகுத்துள்ளது.


    நன்றி : தினமலர்















    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  11. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0

    5 ஆண்டுகளில் அனைத்து வீடுகளுக்கும் தடையில்லா மின்சாரம்: பிரதமர் மன்மோகன்சிங் உறுதி

    புதுடெல்லி, செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 09, 5:24 PM IST

    டெல்லியில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:-

    நாட்டு மக்கள் அனைவருக்கும் மலிவு விலையில் மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து வீடுகளுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். இப்போது நாட்டில் சில ஆயிரம் கிராமங்களில் மட்டுமே மின்வசதி இல்லை. 10 லட்சம் வீடுகளில் சூரியஒளி மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    ஊரக பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சமையல் எரிவாயு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புறநகர்ப் பகுதி மக்கள் சமையல் எரிவாயுவை பயன்படுத்தி வருகின்றனர். கிராமப்பகுதிகளிலும் எரிவாயுவை பயன்படுத்தவேண்டும் என முயற்சி செய்து வருகிறோம்.

    மொத்தம் உள்ள 19 கோடி கிராமப்புற மக்களில் 12 சதவீதம் பேர் இப்போது சமையல் எரிவாயுவை பயன்படுத்துகின்றனர். தற்போது ஒரு ஆண்டுக்கு 6 சிலிண்டர் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதால், கிராமப்புறங்களுக்கு கூடுதலாக எரிவாயு இணைப்பு கிடைக்கும்.

    மேலும் விறகுகளைப் பயன்படுத்தி அடுப்பு எரிக்கும் பெண்களின் சுமையும் குறைக்கப்படும். தற்போது 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயோ கேஸ் பயன்படுத்தி வருகின்றனர். எனவே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு பற்றிய ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.


    நன்றி : மாலை மலர்

    .
    .
    .
    (பி.கு) :- நாட்டு நடப்புக்களால் பிரதமருக்கு பித்தம் அதிகமாகிவிட்டது போல...!!!
    Last edited by jayanth; 09-10-2012 at 02:27 PM.
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  12. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    நல்லா அசை போடுது..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  13. #12
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Jul 2012
    Location
    லியோன்
    Age
    45
    Posts
    487
    Post Thanks / Like
    iCash Credits
    18,254
    Downloads
    0
    Uploads
    0
    மக்களை ஏமாற்றி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் போடும் நயவஞ்சக தூண்டில், ஆனால் மக்கள் இந்த முறை ஆளும் கட்சியிடம் ஏமாரபோவதில்லை என்பது மட்டும் உண்மை.
    தோழமையுடன்
    ஆ. தைனிஸ்

    உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
    உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •