Results 1 to 11 of 11

Thread: இதை மாற்றலாமே

  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3

    இதை மாற்றலாமே

    சிலகாலங்களாக மன்றத்தில் உலவும் போது என்னுள் எழுந்த தோன்றிய எண்ணங்களின் தொகுப்பினை இங்கே பதிக்கிறேன் தவறெனில் மன்னிக்க

    ௧.செவ்வந்தி மன்றத்தில் கவிதைகள் ,பாடல்கள் தொகுப்பில் இருக்கும் ஒவ்வொரு பிரிவிலும் மன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு மிக அதிகமாக இருக்கிறது இதன் காரணமாக மன்ற உறுப்பினர் களின் கவிதைகள் கவனிக்க படாமல் பின் தங்கி விடுகின்றன.மேலும் காதல் களஞ்சியம் மற்றும் காதல் கவிதைகள் இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றினை ஒரு தனிபிரிவாக்கி இந்த தொகுப்புகள் ஒவ்வொன்றினையும் தனிதொகுப்பாக மாற்றலாமே ....

    ௨.இன்று மன்றத்தில் சொந்த படைப்புகளை விட நகலெடுக்கும் பதிப்புகள் அதிகம் உலவுவதாக எண்ண தோன்றுகிறது ..ஒவ்வொரு பிரிவிலும் சொந்த பதிப்புகள் மற்றும் நகல் பதிப்புகள் இரண்டிற்கும் தனித்தனியே ஒரு பிரிவினை உருவாக்குவது நல்லது என தோன்றுகிறது ...இந்த மாற்றம் மன்ற உறவுகளின் சொந்த படைப்புகளை ஊக்குவிப்பது போல் இருக்கும் .. இது நடைமுறையில் சாத்திய படுவது மிகவும் சிரமம் இருப்பினும் இதை தவிர்க்க விதியில் கூறிய படி தொகுப்புகள் பெறப்படும் தளத்திற்கு மற்றும் புத்தகங்களுக்கு நன்றி தெரிவிக்க படவேண்டும் இதனை சரிவர பின்பற்றாமல் தன சொந்த பதிப்புகள் போல் பதிவிடுவது கண்டறியபட்டால் அவ்வாறு பதிவிட படும் பதிவுகளை எச்சரித்து நீக்கலாமே ..

    ௩.இன்று பதிவுகள் வெளியிடுவது எளிது அதேநேரம் பதிவுகளை ஊக்குவிக்கும் பின்னூட்டங்கள் எங்கோ தொலைதூரத்தில் இருந்து கைதட்டுவது நின்று கைதட்டிவிட்டு காணாமல் செல்லும் நிலையினை கொஞ்சம் மாற்றலாமே .சொந்த படைப்புகளுக்கு இந்த ஊக்கமூட்டும் வார்த்தைகள் மூலம் ஊக்கமூட்டலாமே ...இதற்க்கேனும் இம்மாத மன்ற சுடர் என்று ஏதேனும் பட்டம் கொடுக்கலாம்..இதன் மூலம் ஊக்குவிப்பவர்கள் எண்ணிக்கை பெருகும் ..

    ௪.ஒவ்வொரு படைப்பிலும் விருப்ப தேர்வினை(like this post ) தவிர்த்து பின்னூட்டங்களின் மூலம் ஊக்குவிக்கலாமே...சொந்த பதிவுகள் வெளியிட படும் போது கவிதைகளோ கதைகளோ கட்டுரைகளோ படித்து பிடிக்க வில்லை என்றாலும் எதனால் பிடிக்கவில்லை என்ன தவறு என்று தவறினை திருத்தி தம்முள் மாற்ற ஒருவனாக நினைக்கும் எண்ணம் மாறி வருகிறது இதை மாற்றி பின்னூட்டங்கள் மூலம் தவறினை சுட்டி காட்டலாமே ...

    ௫.பணிப்பளுவில் இருந்து மீண்டு வந்து பதிவிடும் ஒரு சில உறவுகளை தவிர பல மன்ற முன்னோடிகளின் பின்னூட்டம் மூலம் அளிக்க படும் பின்னூட்ட பங்களிப்பு புதியவர்களின் படைப்புகளுக்கு கிடைப்பதில்லை இதனை மாற்றலாமே ..

    ௬..மனங்கவர் பதிவருக்கான ஒட்டெடுப்பினை அவர்களின் சொந்த படைப்புகளின் அடிப்படையில் தரப்படுத்தி மறைமுக ஓட்டெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கலாமே ..இதன் மூலம் மன்ற உறவுகளின் பகைப்பினை தவிர்க்கலாமே ...
    Last edited by நாஞ்சில் த.க.ஜெய்; 14-09-2012 at 05:50 AM.
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  2. Likes kulakkottan liked this post
  3. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    இது குறித்து நிர்வாகத்தில் பேசுகிறோம்....
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  4. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    இதெல்லாம் நல்லா பேசுவ........ நம் மன்ற சந்திப்ப பத்தி எழுதறேன் சொல்லிட்டு சும்மா இருக்கியே நீயெல்லாம் மன்ற நிர்வாக உதவியாளரா டாடாடாடாடாடாடாடாட....
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  5. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Jul 2012
    Location
    லியோன்
    Age
    45
    Posts
    487
    Post Thanks / Like
    iCash Credits
    18,254
    Downloads
    0
    Uploads
    0
    பலருடைய எண்ணத்தில் உதித்ததை கருத்தாக பதிவு செய்திருக்கிறார் திரு நாஞ்சில் தா.க. விஜய் அவர்கள். சிறப்பான சிந்தனையில் உதித்த கருத்துகள், இவற்றை செயல்படுத்தினால், புதிய படைப்புக்கள் பல படைக்க பல வாய்ப்புக்கள் உண்டு. புதியவர்களும் தங்கள் பங்களிப்பில் மகிழ்ச்சியும், எழுத்தில் ஏற்றமும் காண்பர்.
    தோழமையுடன்
    ஆ. தைனிஸ்

    உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
    உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.

  6. #5
    புதியவர்
    Join Date
    28 Aug 2012
    Posts
    9
    Post Thanks / Like
    iCash Credits
    9,199
    Downloads
    0
    Uploads
    0
    நல்ல கருத்துக்கள். செயல்படுத்தலாமே.

  7. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    எனது எண்ணமும் இதுவே...!!!
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  8. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    சொல்லப்பட்டுள்ள அனைத்து கருத்துகளுமே அருமையானவை. சொந்தப்படைப்புகளுக்கு சரியான ஊக்கம் தரப்படுவதில்லை என்பது எனது ஐந்துவருடகால வருத்தம். நான் இங்கு சேர்ந்த புதிதில் இருந்து ஏன் இன்று வரை எனது 90 சதவீத பதிவுகள் எனது சொந்தப்பதிவுகளே. தவிர பிரதிப்பதிப்புகள் கூட ( அப்புசாமி கதைகள்/ தலைப்பில்லா பதிவுகள் ஆகிய இரண்டு மட்டுமே ) மிகச்சிறந்த கருத்தினை உள்ளடக்கமாகக்கொண்டதாகவோ பொழுதுபோக்கின் அம்சமாகவோ சிலரது வேண்டுகோளின் விடைகளாகவோ தான் அமைந்திருக்கும்.

    ஆயினும் எனது சொந்தப்படைப்புகளை அனைத்தையும் எடுத்து நான் சமீபத்தில் தொகுத்தபோது மீண்டும் கவனித்து வேதனையுற்றேன். காரணம் : அதில் கருத்து சொல்ல எந்த தகுதியும் பெறாதவண்ணமா அமைந்திருந்தன என்றும் சரி அப்படியே எனது படைப்புகள் பிடிக்கவில்லை என்றாலும் ஏன் பிடிக்கவில்லை என்பதையாவது குறிப்பதால் எனது குறைகளை நானே அறிந்துகொள்ள ஏதுவாய் இருக்குமே..

    நான் இந்த பதிவு மூலம் வருந்துவது எனக்கு உரியபாராட்டுகள் கிடைக்கவில்லை என்பதற்காக அல்ல. ஏனெனில் அவை எனக்கு ஒரு மாற்றத்தை விளைவிக்காது. ஆனால் என் படைப்புகளில் இருக்கும் குறைகளை நான் அறிய விழைகிறேன். அது நடப்பதில்லை.

    நான் எந்த கவிதையாயினும் எனது கண்களில் பட்ட கவிதைகளில் நல்ல அம்சங்களைப் பாராட்டுவதுடன் பிடிக்காத மனதுக்கு ஏற்பில்லாத கருத்துடைய படைப்புகளை தெளிவாகக் குறிப்பிட்டே சென்றிருக்கிறேன். இதற்காக கவிஞர்கள் வருந்துவார்கள் என நான் நினைக்கவில்லை. நல்ல கவிஞன் வருந்தவே மாட்டான். மாறாக அகமகிழ்வான்.

    ஆதனின் படைப்புகள் அனைத்தும் அருமையானவை. அன் சேலஞ்ச்ட் என்பார்களே அதுபோன்றவை, அப்படியும் அவரது சில கவிதைகளுக்கு நான் துணிவுடன் எனக்கு கருத்துமாற்றமுள்ள ஒவ்வாத கவிதைகளைத் துல்லியமாகத் தெரிவித்தே சென்றிருக்கிறேன் என்பதை அவர் அறிவார்.

    ஒருசிலர் கவிதைகளை மிக நல்லமுயற்சி என்றளவோடு விட்டிருப்பேன். ஏனெனில் கவிதையில் தளிர் நடையிடுபவரை மொத்தமாக மட்டம் தட்டலாகாது என்பதால்.

    ஒருசிலர் கவிதைகளை நான் ஏறெடுத்துப்பாராமலும் இருந்திருக்கிறேன். அதற்குக் காரணம் அவர்கள் ஒரு விஷயத்தை உணரவேண்டும் என்பதற்காக. தம் படைப்புகளை இங்கே பதிவிட்டுவிட்டு அதில் வரும் பின்னூட்டங்களுக்கு பதில் அளித்துவிட்டு அடுத்த கவிதையைப் பதிக்கச் சென்றுவிடுகிறார்கள். தம் படைப்பை எல்லோரும் விமரிசிக்க வேண்டும் எனவிழையும் அதே நேரம் பிறரது படைப்புகளையும் கண்ணுற்று கருத்து அளித்தல் வேண்டும் என்னும் நல்லெண்ணம் இல்லாமைதான். அந்த எண்ணம் அவர்களுக்கு வரவேண்டும். இங்கே யாரும் அடிமைகள் அல்லர். தாம் பதியும் கவிதைகளை அனைவரும் படிக்கவேண்டும் பாராட்டவேண்டும். பிறரது கவிதைகளை ஏறிட்டும் நோக்கலாகாது என்னும் மேலாண்மைத்தனம் நீக்கவேண்டும்.

    இதுபோல சிறுசிறு குறைகள் இருப்பினும் பெரும்பாலான உறுப்பினர்கள் எவரையும் தரம்பிரிக்காது அனைவரையும் சமமாக வைத்துப் பாராட்டியே செல்கிறார்கள். அந்த வகையில் தமிழ்மன்றம் தமிழ்க்களங்களின் மேலோங்கி நிற்கிறது என்னும் பேருண்மை அனைவரும் அறியவேண்டும்.

    சிந்திக்க வைத்த பதிவுக்கு மிக்க நன்றி ஜெய்..!

  9. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    Quote Originally Posted by chettai View Post
    நல்ல கருத்துக்கள். செயல்படுத்தலாமே.
    Quote Originally Posted by jayanth View Post
    எனது எண்ணமும் இதுவே...!!!

    Quote Originally Posted by A Thainis View Post
    பலருடைய எண்ணத்தில் உதித்ததை கருத்தாக பதிவு செய்திருக்கிறார் திரு நாஞ்சில் தா.க. விஜய் அவர்கள். சிறப்பான சிந்தனையில் உதித்த கருத்துகள், இவற்றை செயல்படுத்தினால், புதிய படைப்புக்கள் பல படைக்க பல வாய்ப்புக்கள் உண்டு. புதியவர்களும் தங்கள் பங்களிப்பில் மகிழ்ச்சியும், எழுத்தில் ஏற்றமும் காண்பர்.
    எண்ணங்கள் பகிர பட வேண்டும் அப்பொதுதான் பிணக்குகள் தீரும் ..ஆகையால் இந்த பதிவு..
    தைனிஸ் அண்ணே என் பேரு த.க.ஜெய் ..பேர தப்பா எழுதுறது தப்பில்ல ஆனா இன்சியல தப்பா எழுதாதிங்க புண்ணியமா போகும் ..
    Last edited by நாஞ்சில் த.க.ஜெய்; 15-09-2012 at 04:17 AM.
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  10. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    Quote Originally Posted by கலைவேந்தன் View Post
    சொல்லப்பட்டுள்ள அனைத்து கருத்துகளுமே அருமையானவை. சொந்தப்படைப்புகளுக்கு சரியான ஊக்கம் தரப்படுவதில்லை என்பது எனது ஐந்துவருடகால வருத்தம். நான் இங்கு சேர்ந்த புதிதில் இருந்து ஏன் இன்று வரை எனது 90 சதவீத பதிவுகள் எனது சொந்தப்பதிவுகளே. தவிர பிரதிப்பதிப்புகள் கூட ( அப்புசாமி கதைகள்/ தலைப்பில்லா பதிவுகள் ஆகிய இரண்டு மட்டுமே ) மிகச்சிறந்த கருத்தினை உள்ளடக்கமாகக்கொண்டதாகவோ பொழுதுபோக்கின் அம்சமாகவோ சிலரது வேண்டுகோளின் விடைகளாகவோ தான் அமைந்திருக்கும்.

    ஆயினும் எனது சொந்தப்படைப்புகளை அனைத்தையும் எடுத்து நான் சமீபத்தில் தொகுத்தபோது மீண்டும் கவனித்து வேதனையுற்றேன். காரணம் : அதில் கருத்து சொல்ல எந்த தகுதியும் பெறாதவண்ணமா அமைந்திருந்தன என்றும் சரி அப்படியே எனது படைப்புகள் பிடிக்கவில்லை என்றாலும் ஏன் பிடிக்கவில்லை என்பதையாவது குறிப்பதால் எனது குறைகளை நானே அறிந்துகொள்ள ஏதுவாய் இருக்குமே..

    நான் இந்த பதிவு மூலம் வருந்துவது எனக்கு உரியபாராட்டுகள் கிடைக்கவில்லை என்பதற்காக அல்ல. ஏனெனில் அவை எனக்கு ஒரு மாற்றத்தை விளைவிக்காது. ஆனால் என் படைப்புகளில் இருக்கும் குறைகளை நான் அறிய விழைகிறேன். அது நடப்பதில்லை.

    நான் எந்த கவிதையாயினும் எனது கண்களில் பட்ட கவிதைகளில் நல்ல அம்சங்களைப் பாராட்டுவதுடன் பிடிக்காத மனதுக்கு ஏற்பில்லாத கருத்துடைய படைப்புகளை தெளிவாகக் குறிப்பிட்டே சென்றிருக்கிறேன். இதற்காக கவிஞர்கள் வருந்துவார்கள் என நான் நினைக்கவில்லை. நல்ல கவிஞன் வருந்தவே மாட்டான். மாறாக அகமகிழ்வான்.

    ஆதனின் படைப்புகள் அனைத்தும் அருமையானவை. அன் சேலஞ்ச்ட் என்பார்களே அதுபோன்றவை, அப்படியும் அவரது சில கவிதைகளுக்கு நான் துணிவுடன் எனக்கு கருத்துமாற்றமுள்ள ஒவ்வாத கவிதைகளைத் துல்லியமாகத் தெரிவித்தே சென்றிருக்கிறேன் என்பதை அவர் அறிவார்.

    ஒருசிலர் கவிதைகளை மிக நல்லமுயற்சி என்றளவோடு விட்டிருப்பேன். ஏனெனில் கவிதையில் தளிர் நடையிடுபவரை மொத்தமாக மட்டம் தட்டலாகாது என்பதால்.

    ஒருசிலர் கவிதைகளை நான் ஏறெடுத்துப்பாராமலும் இருந்திருக்கிறேன். அதற்குக் காரணம் அவர்கள் ஒரு விஷயத்தை உணரவேண்டும் என்பதற்காக. தம் படைப்புகளை இங்கே பதிவிட்டுவிட்டு அதில் வரும் பின்னூட்டங்களுக்கு பதில் அளித்துவிட்டு அடுத்த கவிதையைப் பதிக்கச் சென்றுவிடுகிறார்கள். தம் படைப்பை எல்லோரும் விமரிசிக்க வேண்டும் எனவிழையும் அதே நேரம் பிறரது படைப்புகளையும் கண்ணுற்று கருத்து அளித்தல் வேண்டும் என்னும் நல்லெண்ணம் இல்லாமைதான். அந்த எண்ணம் அவர்களுக்கு வரவேண்டும். இங்கே யாரும் அடிமைகள் அல்லர். தாம் பதியும் கவிதைகளை அனைவரும் படிக்கவேண்டும் பாராட்டவேண்டும். பிறரது கவிதைகளை ஏறிட்டும் நோக்கலாகாது என்னும் மேலாண்மைத்தனம் நீக்கவேண்டும்.

    இதுபோல சிறுசிறு குறைகள் இருப்பினும் பெரும்பாலான உறுப்பினர்கள் எவரையும் தரம்பிரிக்காது அனைவரையும் சமமாக வைத்துப் பாராட்டியே செல்கிறார்கள். அந்த வகையில் தமிழ்மன்றம் தமிழ்க்களங்களின் மேலோங்கி நிற்கிறது என்னும் பேருண்மை அனைவரும் அறியவேண்டும்.

    சிந்திக்க வைத்த பதிவுக்கு மிக்க நன்றி ஜெய்..!
    இது போன்றதொரு மாற்றம் அவசியம் தேவை .....என் எண்ணக்கிடக்கைகளை இங்கே பதிவு செய்திருக்கிறீர் கலைவேந்தன் அவர்களே..
    Last edited by நாஞ்சில் த.க.ஜெய்; 15-09-2012 at 04:23 AM.
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  11. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by கலைவேந்தன் View Post
    சொல்லப்பட்டுள்ள அனைத்து கருத்துகளுமே அருமையானவை. சொந்தப்படைப்புகளுக்கு சரியான ஊக்கம் தரப்படுவதில்லை என்பது எனது ஐந்துவருடகால வருத்தம். நான் இங்கு சேர்ந்த புதிதில் இருந்து ஏன் இன்று வரை எனது 90 சதவீத பதிவுகள் எனது சொந்தப்பதிவுகளே. தவிர பிரதிப்பதிப்புகள் கூட ( அப்புசாமி கதைகள்/ தலைப்பில்லா பதிவுகள் ஆகிய இரண்டு மட்டுமே ) மிகச்சிறந்த கருத்தினை உள்ளடக்கமாகக்கொண்டதாகவோ பொழுதுபோக்கின் அம்சமாகவோ சிலரது வேண்டுகோளின் விடைகளாகவோ தான் அமைந்திருக்கும்.

    ஆயினும் எனது சொந்தப்படைப்புகளை அனைத்தையும் எடுத்து நான் சமீபத்தில் தொகுத்தபோது மீண்டும் கவனித்து வேதனையுற்றேன். காரணம் : அதில் கருத்து சொல்ல எந்த தகுதியும் பெறாதவண்ணமா அமைந்திருந்தன என்றும் சரி அப்படியே எனது படைப்புகள் பிடிக்கவில்லை என்றாலும் ஏன் பிடிக்கவில்லை என்பதையாவது குறிப்பதால் எனது குறைகளை நானே அறிந்துகொள்ள ஏதுவாய் இருக்குமே..

    நான் இந்த பதிவு மூலம் வருந்துவது எனக்கு உரியபாராட்டுகள் கிடைக்கவில்லை என்பதற்காக அல்ல. ஏனெனில் அவை எனக்கு ஒரு மாற்றத்தை விளைவிக்காது. ஆனால் என் படைப்புகளில் இருக்கும் குறைகளை நான் அறிய விழைகிறேன். அது நடப்பதில்லை.

    நான் எந்த கவிதையாயினும் எனது கண்களில் பட்ட கவிதைகளில் நல்ல அம்சங்களைப் பாராட்டுவதுடன் பிடிக்காத மனதுக்கு ஏற்பில்லாத கருத்துடைய படைப்புகளை தெளிவாகக் குறிப்பிட்டே சென்றிருக்கிறேன். இதற்காக கவிஞர்கள் வருந்துவார்கள் என நான் நினைக்கவில்லை. நல்ல கவிஞன் வருந்தவே மாட்டான். மாறாக அகமகிழ்வான்.

    ஆதனின் படைப்புகள் அனைத்தும் அருமையானவை. அன் சேலஞ்ச்ட் என்பார்களே அதுபோன்றவை, அப்படியும் அவரது சில கவிதைகளுக்கு நான் துணிவுடன் எனக்கு கருத்துமாற்றமுள்ள ஒவ்வாத கவிதைகளைத் துல்லியமாகத் தெரிவித்தே சென்றிருக்கிறேன் என்பதை அவர் அறிவார்.

    ஒருசிலர் கவிதைகளை மிக நல்லமுயற்சி என்றளவோடு விட்டிருப்பேன். ஏனெனில் கவிதையில் தளிர் நடையிடுபவரை மொத்தமாக மட்டம் தட்டலாகாது என்பதால்.

    ஒருசிலர் கவிதைகளை நான் ஏறெடுத்துப்பாராமலும் இருந்திருக்கிறேன். அதற்குக் காரணம் அவர்கள் ஒரு விஷயத்தை உணரவேண்டும் என்பதற்காக. தம் படைப்புகளை இங்கே பதிவிட்டுவிட்டு அதில் வரும் பின்னூட்டங்களுக்கு பதில் அளித்துவிட்டு அடுத்த கவிதையைப் பதிக்கச் சென்றுவிடுகிறார்கள். தம் படைப்பை எல்லோரும் விமரிசிக்க வேண்டும் எனவிழையும் அதே நேரம் பிறரது படைப்புகளையும் கண்ணுற்று கருத்து அளித்தல் வேண்டும் என்னும் நல்லெண்ணம் இல்லாமைதான். அந்த எண்ணம் அவர்களுக்கு வரவேண்டும். இங்கே யாரும் அடிமைகள் அல்லர். தாம் பதியும் கவிதைகளை அனைவரும் படிக்கவேண்டும் பாராட்டவேண்டும். பிறரது கவிதைகளை ஏறிட்டும் நோக்கலாகாது என்னும் மேலாண்மைத்தனம் நீக்கவேண்டும்.

    இதுபோல சிறுசிறு குறைகள் இருப்பினும் பெரும்பாலான உறுப்பினர்கள் எவரையும் தரம்பிரிக்காது அனைவரையும் சமமாக வைத்துப் பாராட்டியே செல்கிறார்கள். அந்த வகையில் தமிழ்மன்றம் தமிழ்க்களங்களின் மேலோங்கி நிற்கிறது என்னும் பேருண்மை அனைவரும் அறியவேண்டும்.

    சிந்திக்க வைத்த பதிவுக்கு மிக்க நன்றி ஜெய்..!

    நானும் ஆதனும் பேசும்பொழுது உங்களைப் பற்றி பேசுவோம். நல்ல எழுத்து வளமிக்கவர் ஆனால் யாரும் கண்டுகொள்வதில்லை (நாங்களே கூட) என்று.. நிறைய படிக்கிறோம். டைப்படிக்க நேரமில்லாமல் போகிறது.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  12. #11
    இளம் புயல் பண்பட்டவர் kulakkottan's Avatar
    Join Date
    11 Jul 2012
    Location
    திருகோணமலை ,ஈழம்
    Posts
    133
    Post Thanks / Like
    iCash Credits
    30,304
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by கலைவேந்தன் View Post
    இதற்காக கவிஞர்கள் வருந்துவார்கள் என நான் நினைக்கவில்லை. நல்ல கவிஞன் வருந்தவே மாட்டான். மாறாக அகமகிழ்வான்.

    !
    உண்மைதான் கலைவேந்தன் அவர்களே ,பாராட்டுகள் முயற்சியின் அயர்வை போக்கின்றது ,
    விமர்சனங்கள் படைப்பின் சறுக்கல்களை சரி செய்கிறது !

    எந்த கலைஞனும் தன் அடுத்த படிப்பில் வழுக்களை சரி செய்யவே நினைப்பான்!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •