Page 1 of 6 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 69

Thread: நீங்கள் கேட்டவை - முடிவுக்குப் பின்

                  
   
   
 1. #1
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
  Join Date
  10 Aug 2005
  Location
  சென்னை
  Posts
  8,263
  Post Thanks / Like
  iCash Credits
  46,419
  Downloads
  78
  Uploads
  2

  நீங்கள் கேட்டவை - முடிவுக்குப் பின்

  பரபரப்பாக கணினி முன் வந்தமர்ந்தான் அவன். கணினியில் சாட் விண்டோ ஒளிர்ந்தது. 'வந்துவிட்டாள் என்னவள்'. மனம் பரபரத்தது. இரண்டு மாதமாக இப்படித் தான். அவளுடன் சாட் செய்வதே அவன் பொழுதுபோக்கு. வேலை நேரத்திலும் சரி, வீட்டுக்கு வந்தாலும் சரி. எந்நேரமும் அவளுடன் சாட்டிங் தான்.

  இரண்டு மாதத்திற்கு முன் ஒரு நாள் அவனுக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. 'எங்கே இருக்கிறாய்? இன்னும் கோவமா?'. ஒரு பெண்ணின் பெயர். யாரென்று தெரியவில்லை. ஆவல் உந்த பதிலனுப்பினான். 'நீங்க யார்?". நிமிஷத்தில் பதில் வந்தது. 'மன்னிக்கவும் எழுத்துப்பிழை. என் தோழிக்கு அனுப்புவதற்கு பதிலாக உங்களுக்கு வந்துவிட்டது'. பரவாயில்லை என்று விட்டுவிட்டான். இரண்டு நாள் கழித்து நேரம் ஒழியா ஒரு வேளையில் மடலனுப்பினான்.

  'தோழியின் கோவம் தீர்ந்ததா?'.

  இரண்டு மணிநேரத்தில் பதில் வந்தது. 'ஓ. தீர்ந்தது. எங்களுக்குள் சின்ன பிரச்சனை. இப்போது சரியாகிவிட்டது'. அத்துடன் சிரிக்கும் ஒரு ஸ்மைலியும் அனுப்பினாள். உள்ளுக்குள்குள் ஆவல்.

  'யாராயிருக்கும் அவள்'. மெயிலுடன் இணைந்த சாட்டில் தேடினான். செய்தியும் அனுப்பினான். பதில் வந்தது. அன்று முதல் ஆரம்பித்தது அவளுடன் இந்த நட்பு. இணைய நட்பு.

  ஆரம்பம் முதலே சின்ன சந்தேகம் இருந்தது. இது பெண் தானா? அவள் வார்த்தைகள் பெண் பேசுவதைப்போலவே இருந்தது. ஆயினும் நம்பமுடியவில்லை. புகைப்படத்தை அனுப்ப சொன்னான். அவள் மறுத்துவிட்டாள்.

  'தெரியாதவரிடம் புகைப்படம் தரவியலாதென்றாள்'.

  நாளாக நாளாக நட்பு இறுகியது. அன்றாடம் நடந்த நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள தொடங்கினான். அவளும் அதே போல். கல்லூரியில் படித்தது, ஆசிரியர்களுடன் பேசியது, சினிமாவிற்கு சென்றது என. அவளின் சொந்த விவரங்களைத் தவிர அனைத்தையும் பகிர்ந்துகொண்டாள். சிறிது நாள் கழித்து கேட்டான்.

  'உன்னுடன் வாய்ஸ் சாட்டிங்காவது செய்யலாமா?' மறுப்பேதும் இல்லை. அன்று இரவு பேச முடிவுசெய்தனர். குரல் கம்மிவிடக்கூடாது என்று பனங்கல்கண்டு பாலெல்லாம் குடித்தான். இரவுவேளையும் வந்தது. வாய்ஸ் சாட்டுக்கு முன் மைக் சரியாக வேலை செய்கிறதா என்று சோதனை செய்தான். படபடக்கும் இதயத்துடன் புது நபரின் குரலைக்கேட்கப்போகும் ஆவல். நடுங்கும் விரலுடன் மைக்கை ஆன் செய்தான். மறுமுனையில் சிறிதே பதட்டமான ஒரு இனிய பெண்குரல்.

  "ஹலோ.."

  வெண்ணெய் போல வழுக்கிச் சென்ற குரலில் இவனும் விழுந்தான். ஆயிரம் முறை பயிற்சி செய்திருந்த வார்த்தைகள் வரவில்லை.

  "ஹலோ". குரல் நடுக்கம் நன்றாக உணர முடிந்தது. சிறிது சிறிதாக படபடப்பு குறைந்து பேச ஆரம்பித்தான். அன்றிரவே அந்த குரல் மீது காதல் கொண்டான்.

  காதல் வந்தாலே காகம் கூட குயில் போல பாட முயலும் போது இவன் மட்டும் விதிவிலக்கா என்ன?

  அதனால் அந்த விபரீதமும் வந்தது...
  Last edited by மதி; 05-09-2012 at 10:53 AM.

 2. #2
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
  Join Date
  23 Dec 2008
  Location
  ஆஸ்திரேலியா
  Age
  49
  Posts
  7,283
  Post Thanks / Like
  iCash Credits
  97,876
  Downloads
  21
  Uploads
  1
  விபரீத விளையாட்டுதான் போலும். தொடரும் விபரீதம் என்னவென்று அறியும் ஆவலில் காத்திருக்கிறேன்.

 3. #3
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
  Join Date
  10 Aug 2005
  Location
  சென்னை
  Posts
  8,263
  Post Thanks / Like
  iCash Credits
  46,419
  Downloads
  78
  Uploads
  2
  தொடரும் விபரீதங்கள் என்னவென்று எனக்கே தெரியல..

 4. Likes ஆதி, கீதம் liked this post
 5. #4
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  30 Jul 2012
  Location
  லியோன்
  Age
  41
  Posts
  487
  Post Thanks / Like
  iCash Credits
  13,784
  Downloads
  0
  Uploads
  0
  "காதல் வந்தாலே காகம் கூட குயில் போல பாட முயலும் போது இவன் மட்டும் விதிவிலக்கா என்ன?"

  அழகு அழகு வர்ணனை, வாழ்த்துக்கள் மதி, காத்திருக்கிறோம் ஆவலுடன் என்ன அந்த விபரீதம்.
  தோழமையுடன்
  ஆ. தைனிஸ்

  உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
  உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.

 6. #5
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
  Join Date
  10 Aug 2005
  Location
  சென்னை
  Posts
  8,263
  Post Thanks / Like
  iCash Credits
  46,419
  Downloads
  78
  Uploads
  2
  நன்றி தைனிஸ்.

 7. #6
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
  Join Date
  24 Apr 2007
  Location
  கோவை
  Posts
  1,033
  Post Thanks / Like
  iCash Credits
  16,713
  Downloads
  1
  Uploads
  0
  தலைப்பே பல அர்த்தம் சொல்லும் போலிருக்கே...

  நல்லாயிருக்குங்க மதி. வழக்கமான காதல் கதை என்றாலும் இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்குது. ட்விஸ்ட் வைக்க்றீங்க.
  விபரீதம் என்னன்னு தெரின்ச்ஜுக்க ஆவலா இருக்கேன்.

  தீபா.

 8. #7
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
  Join Date
  10 Aug 2005
  Location
  சென்னை
  Posts
  8,263
  Post Thanks / Like
  iCash Credits
  46,419
  Downloads
  78
  Uploads
  2
  நன்றி தீபா. தொடருங்கள். வித்தியாசமான கதையானு எனக்கு தெரியாது.

 9. #8
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
  Join Date
  10 Aug 2005
  Location
  சென்னை
  Posts
  8,263
  Post Thanks / Like
  iCash Credits
  46,419
  Downloads
  78
  Uploads
  2
  பாகம் 2:

  நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அவர்கள் சாட்டிங் தொடர்ந்தது. அவளுக்கும் தன் மீது விருப்பு இருப்பதை அறிந்து கொண்டான். தன் காதலை என்றேனும் வெளிப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்காதா என ஏங்கினான். அவனுக்கேற்றார் போல் விதியும் தன் இஷ்டம் போல் சதி செய்தது. நாள் முழுக்க அந்த குரல் நினைவிலேயே காலம் தள்ளலானான்.

  அவனுக்கு சரியாக தெரியவில்லை. அது சித்ராவின் குரலா, சுசீலாவின் குரலா அல்லது ஜானகியின் குரலா என்று. எல்லாம் கலந்த கலவைப் போன்றிருந்தது அக்குரல். நாளடைவில் குரலுக்காக மனம் ஏங்கியது. முதல் முறை பேசியபின் அவள் பேசவில்லை. மறுபடி வாய்ஸ் சாட்டிங்கு வற்புறுத்தலானான். அவளும் சிறிது சிணுங்கலுக்குப்பின் ஒத்துக் கொண்டாள்.

  நேரமும் வந்தது. இம்முறை அவனுக்கு தைரியமும் அதிகமாயிற்று.

  "ஹலோ.." வழமையான வெண்ணெய் குரல். தன் நா உலர்ந்து போவதையுணர்ந்தான்.

  "ஹலோ.. எப்படி இருக்கீங்க?" மறுமுனையும் சின்னதாய் சிரிப்பு. கேட்கும் போதே அவ்வளவு அழகாய் தோன்றியது. 'நேரில் அவள் சிரிப்பதை பார்க்க வேண்டும். முத்துப்பற்கள் தெரிய சிரிப்பாளா.. இல்லை அவை பொக்கிஷங்களென யாவருக்கும் காணக்கிடைக்காமல் நகைப்பாளா?'. பார்க்க வேண்டும் என்ற ஆவல் இன்னும் உந்தியது.

  "ஏன் சிரிக்கறீங்க?"

  "ஹலோ சொல்லி பதில் சொல்ல இவ்ளோ நேரமா?". நெருக்கமாய் உணர்ந்தான்.

  "அப்படி இல்லே. உங்க குரல கேட்டுக்கிட்டே இருக்கணும் போலிருந்தது அதான்."

  "அப்போ என் குரல ரெக்கார்ட் பண்ணி அனுப்பறேன். கேட்டுக்கிட்டே இருங்க." அவள் கேலி புரிந்தது. மனம் கூண்டில் சிக்கிய கிளி போல சின்னாபின்னப்பட்டது. 'பேச்சிலேயே கொல்கிறாளே'

  "அது வந்து..."

  "ஏங்க. டைப் பண்ணும் போது மட்டும் சகஜமா பேசறீங்க. இப்போ பேசும் போது அநியாயத்துக்கும் கூச்சப்படுறீங்க". தன்னிலை உணர்ந்தான். வியர்த்துக் கொட்டியது.

  "அதுவா. நான் பெண்கள்கிட்ட அதிகமா பேசியது கிடையாது. அதுவும் முகம் தெரியாத பொண்ணுக்கிட்ட முதல் தடவையா உங்ககிட்ட தான்."

  "ஓ.. நான் யாருன்னே தெரியாமல் நிறைய பேர்கிட்ட பேசிருக்கேன்."

  அந்த மற்றவர்கள் மீது அவனுக்கு கொலைவெறி வந்தது. ஆனாலும் என்ன செய்ய.

  "அப்படி எத்தன பேர தெரியும்?"

  "சும்மா.. ஹாய் பை.. அவ்ளோ தான். அதிகபட்சமா ஒரு தடவை ரெண்டு தடவ பேசிருப்பேன். நல்லா வழிவானுங்க. டாட்டா காமிச்சிடுவேன்"

  'அப்போ நான்னு'. கேட்கத் தோன்றியது.

  "என்னை பத்தி என்ன நினைக்கறீங்க?"

  "நான் சாட் பண்ணினதிலேயே நீங்க ரொம்ப ஸ்வீட். கண்ணியமா பேசறீங்க. எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு."

  வானத்துல மேல மேல பறந்து போற மாதிரி தோன்றிற்று. முடிவேயில்லா வானவெளியில் பறந்துகொண்டே இருந்தான். ஆகாயபிம்பங்கள் கரைய கரைய முடிவிலியாய் இருக்கும் வானின் முடிவு தேடி பறந்து கொண்டே இருந்தான். அவளின் குரல் மறுபடியும் அவனை நினைவுக்கு கொண்டு வந்தது.

  "இருக்கீங்களா..?"

  "இருக்கேன்.. இருக்கேன்.."

  அப்புறம் தொடர்ந்தது சம்பாஷணை. முடிக்கும் போது அதிகாலை மணி மூன்று. மூன்று மணி நேரமே தூக்கம். ஆயினும் எழுந்த
  போது புத்தம் புதிதாய் பூத்த ரோஜா பூவிதழ் மாதிரி மனமும் உடலும் புத்துணர்ச்சியோடிருந்தது. அவளின் மீதான காதல் முன்னிலும் அதிகமானதாய் தோன்றியது. பார்க்கும் எதுவுமே அழகாய் தோன்றுகிறது. காதல் பற்றி கவிஞர்கள் பாடியது உண்மை தான் போலும்.

  அன்றைய நாள் முடிவில் முடிவெடுத்திருந்தான். அடுத்த முறை பேசும் போது தன் காதலை தெரிவிப்பதென்று. அதற்கு நாளும் குறித்தான்.

  அந்த நாளில்....

 10. #9
  இளம் புயல் பண்பட்டவர் kulakkottan's Avatar
  Join Date
  11 Jul 2012
  Location
  திருகோணமலை ,ஈழம்
  Posts
  133
  Post Thanks / Like
  iCash Credits
  26,394
  Downloads
  2
  Uploads
  0
  பரபரப்பாய் இருக்குது !அடுத்த பகுதியை எதிர்பாக்கிறேன் !

 11. #10
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
  Join Date
  10 Aug 2005
  Location
  சென்னை
  Posts
  8,263
  Post Thanks / Like
  iCash Credits
  46,419
  Downloads
  78
  Uploads
  2
  நன்றி குளக்கோட்டன்.

 12. #11
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  30 Jul 2012
  Location
  லியோன்
  Age
  41
  Posts
  487
  Post Thanks / Like
  iCash Credits
  13,784
  Downloads
  0
  Uploads
  0
  நீங்கள் கேட்டவை பாகம் 2 , பரவசம், அழகு வார்த்தைககளை அள்ளி தெளித்து சாட்டிங்கை சாப்டாக்கி இருக்கிறார் மதி, தொடரட்டும் நீங்கள் கேட்டவை நாங்களும் கேட்கிறோம்.
  தோழமையுடன்
  ஆ. தைனிஸ்

  உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
  உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.

 13. Likes மதி liked this post
 14. #12
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
  Join Date
  10 Aug 2005
  Location
  சென்னை
  Posts
  8,263
  Post Thanks / Like
  iCash Credits
  46,419
  Downloads
  78
  Uploads
  2
  தன்னை நன்றாக தயார்படுத்திக்கொண்டிருந்தான் அவன். கண்ணாடிமுன் பல தடவை நின்று பேசிப்பார்த்தான். தன் குரலை பதிவு செய்து திரும்ப திரும்ப கேட்டுப்பார்த்தான். எந்நெந்த இடத்தில் இன்னும் மென்மை சேர்க்கணுமோ அதையும் சேர்த்தான்.

  அன்றிரவு அவள் வந்தாள். வழக்கமான ஹலோக்கள்.

  இதயம் படபடக்க காதல் சொல்ல நேரம் பார்த்திருந்தான்.

  "ஹே.. இவ்வளவு தூரம் பேசி புரிஞ்சப்பின்னும் இன்னும் முக காட்டவில்லையே?" துணிந்து கேட்டுவிட்டான்.

  "என்னை முழுமையா புரிந்தவரா நீங்கள்?" ஒரு எள்ளல் தெரிந்தது அவள் தொனியில். உண்மையில் பெண்மையை முழுவும் அறிந்தவர் யாருலர்.

  "அப்படி இல்லே. இவ்ளோ நெருங்கிட்டோம். இன்னும் முகத்த காட்டாமலேயே ஏன்?"

  "சில சமயங்கள் முகம்கூட தடையாயிடும் நல்ல் நட்புக்கு"

  "அப்படி இல்லே. முகம் ஒரு அடையாளம். குரலுக்கு ஒரு உருவம் பொருத்திப் பார்க்கறது. உன் குரலுக்கு எத்தனையோ ஹீரோயின்களின் முகம் ஒட்டிப்பார்க்கிறேன். எதுவுமே ஒட்டவில்லை."

  "அடடே. கவித்துவமால்லாம் பேச ஆரம்பிச்சிட்டீர்."

  நேரம் நெருங்கிவிட்டது.

  "மனசுக்கு பிடித்தவர்களுடன் பேசினால் அதெல்லாம் தானா வருது. அப்படி தான் நீயும்."

  "என்ன பேச்சு மாறுது போல" சந்தேகம் நிறைந்தது அவள் தொனியில். இருந்தாலும் பைத்தியமாய் இருப்பதைக்காட்டிலும் கேட்டுவிடலாம்.

  "உண்மை தான். பித்தன் போலாகிறேன் உன்குரலில். ஏனோ தெரியல. நாம பகிர்ந்துக்கிட்ட விஷயங்கள், எல்லாமே எதையோ நோக்கி செலுத்தற மாதிரி இருக்கு. ஒரு வேளை இது காதல் தானானு தெரியல. உனக்கு ஏதாச்சும் இந்த மாதிரி தோணுதா?"

  சப்பைக்கட்டுகட்டி காதலை தெரிவித்துவிட்டமாதிரி உணர்ந்தான். தயார் செய்தது என்னவோ நடந்தது என்னவோ.

  மறுமுனையில் மவுனம். சற்றுநேரம் கழித்து செருமும் சத்தம்.

  "உங்களுக்கு ஏன் இப்படி தோன்றியதுனு தெரியல. ஆனா நான் நீங்க நினைக்கற மாதிரியில்ல"

  "வேற எந்த மாதிரி?" கொஞ்சம் கொஞ்சமாய் சுயசிந்தனைகளை இழக்க ஆரம்பித்தான்.

  "நான் பேசறது மாதிரி இல்லே. கொஞ்சம் அடாவடி பொண்ணு."

  "எங்கேயும் எப்போதும் அஞ்சலி மாதிரியா?"

  "இல்லே மை சாஸி கேர்ள் கதாநாயகி மாதிரி. நினைச்சா நினைச்சது கிடைக்கணும். அதுவுமில்லாம எனக்குனு சில கனவுகள் இருக்கு என் காதலைப் பத்தி. அதெல்லாம் பூர்த்தி ஆகுமானு தெரியல"

  அவளுக்காக இமயமலை உச்சிக்கு தலைகீழாகவே நடந்து செல்ல தயாராய் இருந்தான். மனசுக்குள் பதட்டம் அதிகமானது. வேறு யாரையும் காதலிக்கிறாளோ.

  "எதுவானாலும் பரவாயில்ல. சொல். செய்கிறேன்."

  "அதுக்கு முன்னாடி. எனக்கு ஏற்கனவெ இரண்டு காதலர்கள் இருந்தனர். ஆனாலும் அந்த உறவு நீடிக்கல. அவர்களாவே பிரிஞ்சு போயினர். அதான் காதல் என்றாலே வேப்பங்காய் போல இருக்கு."

  "கடைசிவரை இப்படியேவா இருக்கப் போகிறாய். எப்படிப்பட்ட காதலன் வேண்டுமென்று எதிர்பார்க்கிறாய். இருக்க முயல்கிறேன்".

  அவள் முகம் பார்க்கும் எண்ணம் மீறி தன் காதலை அவள் ஏற்றுக்கொள்ளணும் என்று பைத்தியக்கார எண்ணம் விசுவரூபமெடுத்தது. பெருமூச்சுவிட்டபடி அவள் தொடர்ந்தாள்.

  "எனக்கு தமிழ்ன்னா ரொம்ப பிடிக்கும். அதிலும் கவிதைன்னா ரொம்பவே பிடிக்கும். என் காதலர் கவிதை எழுத தெரிந்தவரா இருக்கணும். கவிதை தெரிந்தவர் காதல் தெரிந்தவர்". மனம் திக்கென்றது.

  "அப்புறம்.?"

  "ரொம்ப பொறுமைசாலியா இருக்கணும். எனக்கு முன்கோபம் அதிகம். அதையெல்லாம் தாங்கும் மனத்திடம் வேண்டும். ஏதாவது சந்தர்ப்பத்தில் என்ன நடந்தாலும் பொறுமையா இருக்கணும். உங்களுக்கு பொறுமை அதிகமென்று எனக்குத் தெரியணும்".

  ரொம்பவும் குழப்புகிறாளே.

  "அதனால நீங்கள் கவிதை எழுதணும். அதுவும் எனக்கான கவிதை ஊர் முழுக்க படிக்கப்படணும். ஏன் உலகம் முழுக்க. இணையத்துல எழுதணும். காதலிக்காக என்னவெல்லாம் செய்கிறாய் பார்னு எல்லோரும் சொல்லணும். இதுக்கு இடையில் என்ன நடந்தாலும் கோபப்படக்கூடாது. எங்கெல்லாம் எழுதறீங்கன்னு சொல்லுங்க அங்கெல்லாம் வந்து படிப்பேன். என் மனதின் அடி ஆழத்தைத் தொடற மாதிரி என்று கவிதை எழுதறீங்களோ, அன்று உங்க காதலை ஏற்கிறேன். புகைப்படம் என்ன நேரிலேயே வருகிறேன்"

  மனம் ஆனந்தக்கூத்தாடியது. காதலில் ஜெயிக்கவும் வழி சொல்லிவிட்டாள். ஆனாலும் நெருடல். கவிதை. அது மட்டும் இடித்தது.

  தமிழ் படித்துள்ளானன்றி கவிதைகள் பரிட்சயமில்லை. இவளோ நிறைடய படித்திருக்கிறாள் போலும் திருடவும் முடியாது. காதல் அவனை அந்த விபரீத முடிவு எடுக்க வைத்தது. கவிதை எழுத ஆரம்பித்தான்.

  விபரீதங்கள் ஆரம்பம்.

Page 1 of 6 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •