Results 1 to 10 of 10

Thread: ஆடி வெள்ளி...

                  
   
   
 1. #1
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  05 Jun 2012
  Location
  Chennai
  Posts
  269
  Post Thanks / Like
  iCash Credits
  11,198
  Downloads
  0
  Uploads
  0

  ஆடி வெள்ளி...  குடிக்காத பாம்புக்கு

  குடம் குடமாய்

  பால்

  பசியில் அழுகிறது

  தெருவோரக்

  குழந்தை..


 2. #2
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
  Join Date
  23 Dec 2008
  Location
  ஆஸ்திரேலியா
  Age
  49
  Posts
  7,283
  Post Thanks / Like
  iCash Credits
  97,876
  Downloads
  21
  Uploads
  1
  உறியும் திராணியில்லாத பாம்புக்கு வார்க்கப்படும்.

  உடலை எரித்த இடத்திலும் மறுநாள் ஊற்றப்படும்.

  கல்லிலும் ஊற்றப்படும், புற்று மண்ணிலும் ஊற்றப்படும்.

  கதறியழும் ஒரு குழந்தைக்கு ஊட்டமட்டும் உடன்படாது மனம்.

  ஒரு பச்சிளங்கொடி தழைக்கத் துளிமழை தாரா வானம்,

  பாலையில் பொழியும் கனமழைக்கு நிகராம் யாவும்.

  மனம் தொட்ட கருவும் கவியும். பாராட்டுகள் ஹேமா.

 3. #3
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  08 Sep 2010
  Location
  Karappakkam,Cennai-97
  Age
  72
  Posts
  4,215
  Post Thanks / Like
  iCash Credits
  71,621
  Downloads
  16
  Uploads
  0
  சிந்திக்க வைத்த ஹேமா பாலாஜிக்கு நன்றி!
  இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
  விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

 4. #4
  Banned
  Join Date
  28 Jan 2012
  Posts
  652
  Post Thanks / Like
  iCash Credits
  12,879
  Downloads
  0
  Uploads
  0

  அதுசரி,
  பாம்பு குடிகச்லைனா என்ன
  உள்ளிருக்கும் கரையான்களும்
  பூச்சிகளும் பருகும்ல ?
  அதை உண்டு பாம்பு பொழைச்சு போகட்டும்.
  போனாபோகுது விடுங்க , பாவம் !

  நல்ல வரிகள் !!
  வாழ்த்துக்கள் !!

 5. #5
  இளம் புயல் பண்பட்டவர் kulakkottan's Avatar
  Join Date
  11 Jul 2012
  Location
  திருகோணமலை ,ஈழம்
  Posts
  133
  Post Thanks / Like
  iCash Credits
  26,394
  Downloads
  2
  Uploads
  0
  தெருவோர குழந்தைன் பசி அனல் சுட்டு இந்த கவிதையை கோர்திருகிரீர்கள்!
  ஆனாலும் பாம்புக்கு ஊத்தும் பாலில் சில மறை தத்துவம் இருக்கலாம்!

  பெரியார் கருத்துகள் -ஒட்டுமொத்த இந்த சமய -அறிவியலை முடமாக்க கூடாது !
  பாம்பு குடிகச்லைனா என்ன
  உள்ளிருக்கும் கரையான்களும்
  பூச்சிகளும் பருகும்ல ?
  aasaiajiith-உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன்
  கீதம்-
  கல்லுக்கு ஊத்தும் பாலில் அறிய வேண்டிய ஆராய வேண்டி தத்துவம் உள்ளது!அந்த கல் கடவுளுக்கு காட்ட படும் உருவம் மட்டுமல்ல!அது அறிவியல் wave reeciever and reflector அதன் திறனை இந்த பால் கூட்டலாம் -ஆனாலும் இன்னும் ஆராய வேண்டியுள்ளது !
  இந்த இடத்தில் இன்னொரு விடயம் கூறலாம் என்று நினைக்கிறன் !கோகுல கண்ணன் புல்லங்குழல் பாட பசுக்கள் சந்தோசமாய் மேய்ந்ததை கதை கூறுகிறது!
  அது கதையாகவே இருக்கட்டும் .பசுக்களின் பால் சுரப்பை அதிகரிப்பதை ஆய்வு முடிவு கூறிகிறது!அதை செய்தவன் வெறும் 2000கால வரலாறு கொண்ட ஐரோபியன் செய்ததால் நம்புவாங்க எல்லோரும் !ரோபியன் செய்ததால் நம்புவாங்க எல்லோரும் !

 6. #6
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  24 Jan 2012
  Location
  Bangalore
  Age
  57
  Posts
  2,259
  Post Thanks / Like
  iCash Credits
  43,938
  Downloads
  7
  Uploads
  0
  மொத்தத்தில் பாழாகியது...பால்...
  ஜெயந்த்.

  யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
  இனிதாவ தெங்குங் காணோம்…

 7. #7
  Banned
  Join Date
  28 Jan 2012
  Posts
  652
  Post Thanks / Like
  iCash Credits
  12,879
  Downloads
  0
  Uploads
  0
  ஆதரவிற்க்கு நன்றி ..!!

 8. #8
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
  Join Date
  23 Jun 2007
  Posts
  3,869
  Post Thanks / Like
  iCash Credits
  162,896
  Downloads
  69
  Uploads
  1
  “பச்சிளங் குழந்தையொன்று
  பசியால் பரிதவித்து அழுகின்றது
  உலகச் சாதனையோ
  உற்சாகமாய் தொடர்கின்றது”


  இக்கவிதை கிட்டதட்ட எட்டுவருடங்களுக்கு முன் நான் வடமாநிலத்தில் பணிபுரிந்த சமயம் ஈரோட்டிலிருந்து நவீன் என்ற பெயரில் எனக்கொரு பேனா நண்பன் எழுதி அனுப்பியது... அப்போதெல்லாம் வாரத்தில் குறைந்தது நான்கைந்து ‘போஸ்ட் கார்ட்”டில் அவனது கவிதைகள் தவறாமல் எனக்கு வந்து சேர்ந்துவிடும்... காலவெளியில் முகமறியா அந்நட்பு எங்கோ கரைந்து போய்விட்டது... ஆனாலும் அவனது எழுத்துகள் இன்னமும் என்னுள் ஆழமாக பதிந்து கிடக்கின்றன.!! அவற்றை நினைவூட்டி மெலெழுப்ப உதவிய இக்கவிதைக்கும் ஹேமாவுக்கும் எமது வாழ்த்துகளும் நன்றிகளும்... தொடருங்கள்...!!
  ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
  வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
  உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
  பழுதுண்டு வேறோர் பணிக்கு.
  -நல்வழி

 9. #9
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  16 Feb 2007
  Location
  சுவாசம்
  Age
  39
  Posts
  21,007
  Post Thanks / Like
  iCash Credits
  282,120
  Downloads
  151
  Uploads
  9
  என்னதான் சமாதானம் சொன்னாலும், ஆய்வுகள் அறிவார்த்தமாக நிறுவினாலும் இந்தச் செய்கை ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்றுதான்..

  கவிதையின் தலைக்கும் உடலுக்கும் இடையில் இடப்பட்டிருக்கும் முடிச்சை அவிழ்க்கும் போது கவிதையின் முழுப் பரிமாணம் புலப்படும்..

  ஆடி வெள்ளியில் செய்யப்படும் இந்த பாலூற்றல் என்ன நோக்கத்துக்காகச் செய்யப்படுகிறது? அதன் பலா பலன் என்ன? பசித்தழும் குழந்தைக்குப் பாலூட்டுவதைக் காட்டிலும் இது எவ்வகையில் உயர்ந்தது? பலன் தருவது?

  சரியான சாட்டையடி ஹேமா..

  குழந்தைக்குப் பால் ஊட்டுகிறோம்.
  பாம்புக்கு (புற்றுக்குப்) பால் ஊற்றுகிறோம். ஊட்டுவதில்லை.
  ஊட்டுவது சிறந்ததா? ஊற்றுவது சிறந்ததா?
  ஊட்டுவதுதான் சிறந்தது..

 10. #10
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  08 Sep 2010
  Location
  Karappakkam,Cennai-97
  Age
  72
  Posts
  4,215
  Post Thanks / Like
  iCash Credits
  71,621
  Downloads
  16
  Uploads
  0
  பாம்பைப் பற்றி மக்களிடயே பல மூட நம்பிக்கைகள் உள்ளன. அதிலே " பாம்பு பால் குடிக்கும் " என்பதும் ஒன்று.
  இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
  விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •