Results 1 to 5 of 5

Thread: இடித்துவா ஏழைத்தோழா

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் kulakkottan's Avatar
    Join Date
    11 Jul 2012
    Location
    திருகோணமலை ,ஈழம்
    Posts
    133
    Post Thanks / Like
    iCash Credits
    30,304
    Downloads
    2
    Uploads
    0

    இடித்துவா ஏழைத்தோழா


    மாடிக்கும் மனிதருக்கும் உயரம் கூடிப்போச்சு
    மானிடம் மனிதருள் உயிரழந்து மிருகமாச்சு

    பணம் குவிந்த குவியலிலேயே குவியுது
    பசி பட்ட வயிற்றிலயே புசிக்குது மழலை உயிரையும்

    தப்பு எங்கு இருக்கு என்று புரியவில்லையே
    தப்ப வைக்கும் வழியும் தெரியவில்லையே

    தீர்க்க வரும் கரங்கள் கூட வறண்டு
    திராணியற்று வெதும்பும் மனிதருடையதே

    கற்க துடிக்கும் கண்ணீர் நனைக்க கல்வியில்லையே
    கலகலக்கும் தோள்களில் மூடிக்கிடக்குது புத்தகம்

    நீதி கூட நிதியின் பிடியிலேயிங்கு
    நீயும் நானும் ஏதும் செய்யலாம் என்றால்

    வழி வரைய நான் தயார் - உணர்ந்தவர்
    வழித்துணையாய் வருவார் நம்முடன்

    இருந்தபடி இருந்தால் இருளும் உன்னை கவ்வும்
    இடித்துவா ஏழைத்தோழா குட்டுபவனையும்

    யாசகம் வேண்டாமே யாரிடமும் -புதிய மார்க்கம்
    யாமும் படைப்போமே உழைப்பாலே

    சிந்தித்தால் சிகரமும் சுமக்கலாமே - நீ
    சிந்துகிற வியர்வையால் சிதறுமே சில்லறைகள்

    தருவதற்கு மாடியும் ஆட்சியும் -கற்பக தருவல்ல
    தானே தானே வளருது பனைகூட உயரத்துக்கு


    குடிமூழ்கி கிடக்கையில் வேண்டுமோ -குடி
    குடிசைகள் குதுகலித்த பின் குடிக்கலாமே -நல்ல தண்ணி

    ஏழையோடு மனிதனாய் பிறந்தது குற்றமன்று -குடிசை மைந்தா
    ஏதுமின்றி இருந்து விடாதே இருந்த இடத்திலேயே

  2. Likes தீபா liked this post
  3. #2
    இளம் புயல் பண்பட்டவர் seguwera's Avatar
    Join Date
    05 Jan 2011
    Location
    Kumbakonam
    Age
    47
    Posts
    196
    Post Thanks / Like
    iCash Credits
    15,484
    Downloads
    16
    Uploads
    0
    சிந்தித்தால் சிகரமும் சுமக்கலாமே - நீ
    சிந்துகிற வியர்வையால் சிதறுமே சில்லறைகள்

    தருவதற்கு மாடியும் ஆட்சியும் -கற்பக தருவல்ல
    தானே தானே வளருது பனைகூட உயரத்துக்கு
    அருமை
    சேகுவேரா
    கொடுங்கூற்றுக்கிரையெனப் பின்மாயும் பல
    வேடிக்கை மனிதரைப்போல் நான்
    வீழ்வேன் என்று நினைத்தாயோ? ---(பாரதி)


  4. Likes kulakkottan liked this post
  5. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  6. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    தாழ்வு மனப்பான்மை போக்கி, நெஞ்சில் உரமேற்றும் வைர வரிகள்.

    அற்புதமானதொரு கவிதைக்குப் பாராட்டுகள் குளக்கோட்டன்.

  7. Likes kulakkottan liked this post
  8. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    புதியதோர் உலகம் செய்ய அழைப்புவிடுக்கும் கவிதைக்கு வாழ்த்துக்கள் குளக்கோட்டரே..!!

    உழைப்பவன் வாழ்வே வீதியிலே
    உறங்குவதோ நடை பாதையிலே
    இரக்கம் காட்டத்தான் நாதியில்லே
    ------
    ------
    உயர்ந்தவர் தாழ்ந்திட தேவையில்லை

    உள்ளதை இழந்திட சொல்லவில்லை
    உழைப்பவர் உயர்ந்தால் போதுமையா
    ------
    -----
    என்ற மருதகாசியாரின் பாடல் வரிகள் நினைவில்..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •