Results 1 to 4 of 4

Thread: திங்களின் தீண்டல்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Jul 2012
    Location
    லியோன்
    Age
    45
    Posts
    487
    Post Thanks / Like
    iCash Credits
    18,254
    Downloads
    0
    Uploads
    0

    திங்களின் தீண்டல்

    நாளும் பிறையாய்
    வானில் வளர்ந்து
    ஆபரண பேரழகாய்
    தங்க தாமரையாய்
    மலர்ந்து விண்ணில் விரிந்து
    பொன்னொளி வீசும் முழுமதி
    கண்கள் விரிந்து கண்டிருக்க - என்
    கருவிழிக்குள் விழாகோலம்
    இந்த இரவு சூரியனின்
    குளிர் தென்றல் அவனியில்
    பவனிவர என் மேனி
    என்ன தவம் செய்ததோ
    தித்திக்கும் திங்களே
    அன்பு வெண்மதி அழகு வெண்ணிலா
    பூமிக்கு வந்து ஒருமுறை
    என்னை தீண்டிச் செல்வாயா
    உன் தீண்டல் ஒன்றே
    என் வாழ்வின் வேண்டலாகும்

    - ஆ. தைனிஸ்

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    குறும்புக் குழந்தையொன்று நிலாப்பந்து வேண்டுமென்று கேட்டுக் கெஞ்சியதைப் போல் உள்ளது. அழகான கவிதை. வாழ்த்துக்கள்.

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    20,623
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by A Thainis View Post
    நாளும் பிறையாய்
    வானில் வளர்ந்து
    ஆபரண பேரழகாய்
    தங்க தாமரையாய்
    மலர்ந்து விண்ணில் விரிந்து
    பொன்னொளி வீசும் முழுமதி
    கண்கள் விரிந்து கண்டிருக்க - என்
    கருவிழிக்குள் விழாகோலம்
    இந்த இரவு சூரியனின்
    குளிர் தென்றல் அவனியில்
    பவனிவர என் மேனி
    என்ன தவம் செய்ததோ
    தித்திக்கும் திங்களே
    அன்பு வெண்மதி அழகு வெண்ணிலா
    பூமிக்கு வந்து ஒருமுறை
    என்னை தீண்டிச் செல்வாயா
    உன் தீண்டல் ஒன்றே
    என் வாழ்வின் வேண்டலாகும்

    - ஆ. தைனிஸ்
    வேண்டவே வேண்டாம்ம். அப்பறம் நாம யாரும் உயிரோட இருக்க முடியாது.
    ஏற்கனவே கதைகள்ல நிலவை உடைக்கிற விண்வெளிக்காரர்களெல்லாம் படிச்சு பயமாயிபோச்சு.
    அதெல்லாம் நமக்குத் தேவையா
    நிலாவ பாத்தமா, சாப்பாடு சாப்பிட்டமான்னு இல்லாம அதை மண்ணுக்கு வரவெச்சு தீண்டி, முத்தம்கொடுத்து,

    கவிதை நல்லா இருக்கு.

  4. Likes ஜானகி liked this post
  5. #4
    இளம் புயல் பண்பட்டவர் kulakkottan's Avatar
    Join Date
    11 Jul 2012
    Location
    திருகோணமலை ,ஈழம்
    Posts
    133
    Post Thanks / Like
    iCash Credits
    30,304
    Downloads
    2
    Uploads
    0
    வாங்களேன் தைனிஸ் நிலவை பிடித்து வருவோம் !
    நிலவு இங்கு வேறு ஏதும் ஆகு பெயராய் பயன்படுத்துகிறீர்களோ!நேரடியாய் சொல்ல முடியாமல் !

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •