Results 1 to 11 of 11

Thread: கணப்பொழுதில் ஒரு குழப்பம்

                  
   
   
 1. #1
  இளம் புயல் பண்பட்டவர் kulakkottan's Avatar
  Join Date
  11 Jul 2012
  Location
  திருகோணமலை ,ஈழம்
  Posts
  133
  Post Thanks / Like
  iCash Credits
  29,364
  Downloads
  2
  Uploads
  0

  Post கணப்பொழுதில் ஒரு குழப்பம்


  சுமை என்னை சுருக்கும் போதெலாம் -உன் வார்த்தைகள்
  சுக்கு சுக்காய் என் துயர் தொலைததடி

  உன்னோடு வரும் தருணங்கள் -ரணமுற்ற
  உள்ளம் உயிர் கொள்கிறதடி சகியே

  என் பாத சுவடு அருகில் நீ வருகின்றாய் -ஆனாலும்
  என் பாதையின் சுளியல்களை சரி செய்கிறாய்

  சில நேரம் உன் சொற்கள் தீயாய் சுட்டாலும்
  சிலநொடிகளில் - என்வலியை சொல்லாமல் நீ உணர்கிறாயே

  கணப்பொழுதில் ஒரு குழப்பம் -அவ்வப்போது
  கண்னசைகையில் ஒரு பதில் -உனக்கு நான் யாரென்று

 2. #2
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
  Join Date
  23 Dec 2008
  Location
  ஆஸ்திரேலியா
  Age
  52
  Posts
  7,283
  Post Thanks / Like
  iCash Credits
  101,266
  Downloads
  21
  Uploads
  1
  நட்பா? காதலா? என்னும் தவிப்பில் நாளைக்கடத்தும் மனத்தின் குழப்பம் கவிதையாய்.

  நூலிழை வித்தியாசத்தில் மாறுபடும் நுட்ப உறவைப் பின்னும் கவியிழைகளுக்குப் பாராட்டுகள்.

  உங்கள் பெயரை தமிழில் எப்படிக் குறிப்பிடுவது?

 3. #3
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
  Join Date
  10 Aug 2005
  Location
  சென்னை
  Posts
  8,263
  Post Thanks / Like
  iCash Credits
  76,804
  Downloads
  78
  Uploads
  2
  குழப்பம் விரைவாகவே தெளியட்டும்..!!

  கணப்பொழுதில் மட்டும் இக்குழப்பமா
  இல்லை மனம்
  கனக்கின்ற பொழுதெல்லாம் குழப்பமா?

 4. Likes செல்வா liked this post
 5. #4
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
  Join Date
  03 Jun 2007
  Location
  புதுதில்லி
  Age
  60
  Posts
  2,017
  Post Thanks / Like
  iCash Credits
  21,582
  Downloads
  10
  Uploads
  0
  ஆண் பெண் நட்பினில் அனைவருக்கும் வருகின்ற குழப்பம் இது. எத்தனை தெளிவாய் இருப்பினும் நூலிழையில் தவறிடும் உறவு ஆண்பெண் நட்பு என்பது கசந்திடும் உண்மை. இதில் தெளிவாக இருக்கிறோம் என்று தொடர்புடைய இருவரும் பகர்ந்துகொண்டாலும் சிலநேரம் மயக்கம் விளைவிக்கும் குழப்பம் இது.

  நல்லவை கூறி அல்லவை திருத்தும் போது அழகான நட்பு சுடர்விடும். நட்பின் வலியினை தானும் உணர்ந்து துடிக்கின்ற தருணத்தில் காதல் வெளிப்படும். நூலிழையில் வேறுபடும் இத்தகு உறவை புறமனதால் போர்வையிட்டு பதவிசான சொற்களால் புடம்போட்டு கரையேறத்துடித்தாலும் மனதின் ஒருபகுதி ஏக்கத்துடன் வெளிக்காட்டிக்கொண்டிருக்கும் ஓர் அற்புத தருணங்கள். உரைத்திட வல்லார் யாருளர் .. ?

  சிந்திக்கவைத்த கவிதைக்கு பாராட்டுகள் நண்பரே..!

 6. #5
  இளம் புயல் பண்பட்டவர் kulakkottan's Avatar
  Join Date
  11 Jul 2012
  Location
  திருகோணமலை ,ஈழம்
  Posts
  133
  Post Thanks / Like
  iCash Credits
  29,364
  Downloads
  2
  Uploads
  0
  நன்றி கீதம் -இது எனது பெயர் அல்ல -நான் இலங்கையின் திருகோணமலையை சேர்ந்தவன் -என் நகரை வைத்து இலங்கையை ஆண்ட ஒரு மன்னனின் பெயர் தான் குளக்கோட்டன் .அதை பலர் மறந்தும் சிலர் மறைத்தும் வருகின்றனர் .அதனாலே தான் ஒரு அடையாளமாய் அப்பெயரை பயன் படுத்துகிறேன் .
  என் நிஜ பெயர் தர்சாந்த்
  நன்றி மதி அவர்கள் ,
  கணப்பொழுதில் மட்டும் இக்குழப்பமா
  இல்லை மனம்
  கனக்கின்ற பொழுதெல்லாம் குழப்பமா?
  குழப்பத்தால் தான் கனக்கிறது மனமே !
  (இது கற்பனை கவி தான் )
  நன்றி கலை வேந்தன் ஐயா!
  காதலும் நட்பும் நூலிழையால் தான் வேறுபாடும் என தெளிவை உரைத்தீர்கள் .உண்மைதான் .
  அதனைத் நூலிழை எல்லை தாண்டா அழகான கோர்வை அந்த உறவு !காதலி காதலியாய் நண்பி நண்பியாய் இறுதி மூச்சு வரை வந்தான் அதை விட பெரிய வரம் இல்லை

 7. #6
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  30 Jul 2012
  Location
  லியோன்
  Age
  44
  Posts
  487
  Post Thanks / Like
  iCash Credits
  17,174
  Downloads
  0
  Uploads
  0
  சுமை என்னை சுருக்கும் போதெலாம் -உன் வார்த்தைகள்
  சுக்கு சுக்காய் என் துயர் தொலைததடி என்ற வரிகளில் உண்மை அன்பும் நம்பிக்கையும் வெளிப்பட்டது, அருமை அருமையிலும் அருமை.

 8. #7
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
  Join Date
  23 Dec 2008
  Location
  ஆஸ்திரேலியா
  Age
  52
  Posts
  7,283
  Post Thanks / Like
  iCash Credits
  101,266
  Downloads
  21
  Uploads
  1
  Quote Originally Posted by kulakkottan View Post
  நன்றி கீதம் -இது எனது பெயர் அல்ல -நான் இலங்கையின் திருகோணமலையை சேர்ந்தவன் -என் நகரை வைத்து இலங்கையை ஆண்ட ஒரு மன்னனின் பெயர் தான் குளக்கோட்டன் .அதை பலர் மறந்தும் சிலர் மறைத்தும் வருகின்றனர் .அதனாலே தான் ஒரு அடையாளமாய் அப்பெயரை பயன் படுத்துகிறேன் .
  என் நிஜ பெயர் தர்சாந்த்
  தங்கள் பெயர் விளக்கத்துக்கு நன்றி. பயனர் பெயராக இருப்பதால் தங்களை குளக்கோட்டன் என்றே குறிப்பிடலாம் அல்லவா? பண்டைய நாளில் அரசாண்ட மன்னனை இன்றும் நினைவில் நிறுத்தும் முயற்சிக்கும், அவரை அறியாத எங்களுக்கு அறிமுகப்படுத்தியமைக்கும் நன்றியும் பாராட்டும் குளக்கோட்டன்.

 9. Likes kulakkottan liked this post
 10. #8
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
  Join Date
  23 Jun 2007
  Posts
  3,869
  Post Thanks / Like
  iCash Credits
  236,355
  Downloads
  69
  Uploads
  1
  கொஞ்சம் குழைந்தாலே கூடவரும் நாய்குட்டி...
  இத்தனை நேசத்திற்க்கு பின்னும் நெகிழாதிருப்பானா மனிதன்..?!

  நெகிழ்சியில் ஏற்பட்ட நெருடலை நிலைப்படுத்திய கவிதைக்கு.. வாழ்த்துக்கள் குளக்கோட்டன்..
  ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
  வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
  உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
  பழுதுண்டு வேறோர் பணிக்கு.
  -நல்வழி

 11. Likes kulakkottan liked this post
 12. #9
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  15 Nov 2007
  Location
  பாலைவனம்
  Posts
  2,785
  Post Thanks / Like
  iCash Credits
  54,611
  Downloads
  114
  Uploads
  0
  அருமையான வார்த்தை தெரிவுகள்
  ஆரம்ப வரிகளே கட்டிப் போட்டுவிடுகிறது.

  இறுதிவரியில் இருக்கும் பிழை களைந்தால் இன்னும் சிறப்புறும்.

  வாழ்த்துக்கள் நண்பரே..!
  அன்புடன்...
  செல்வா

  பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

 13. Likes kulakkottan liked this post
 14. #10
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  05 Feb 2012
  Posts
  191
  Post Thanks / Like
  iCash Credits
  15,902
  Downloads
  0
  Uploads
  0
  ...சுக்கு சுக்காய்..... அழகிய தமிழ் சொற் தொடர் அதில்தான் எவ்வளவு அர்த்தம்......நன்றி......

 15. #11
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  08 Nov 2010
  Location
  நாகர்கோயில்
  Posts
  1,859
  Post Thanks / Like
  iCash Credits
  39,455
  Downloads
  146
  Uploads
  3
  கணநேரத்தில் கிடைக்கும் எதிபாரா உதவி நட்பு.. கணபொழுதில் ஏற்படும் ஈர்ப்பு நட்பிலிருந்து காதல் ..செந்தமிழின் இனிய கானத்தில் ஓர் கவிதை...வாழ்த்துக்கள் குளகோட்டன் அவர்களே...
  என்றும் அன்புடன்
  நாஞ்சில் த.க.ஜெய்

  ..................................................................................
  வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
  சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
  ...................................................................................

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •