Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 15

Thread: ரெளத்திரன் பேசுகிறேன்!

                  
   
   
  1. #1
    Awaiting பண்பட்டவர்
    Join Date
    14 Jul 2012
    Location
    VELLORE
    Age
    36
    Posts
    89
    Post Thanks / Like
    iCash Credits
    11,722
    Downloads
    12
    Uploads
    0

    ரெளத்திரன் பேசுகிறேன்!

    அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய
    அனைத்துத் தோழர் தோழியருக்கும்
    ரெளத்திரனின் அறிமுக வணக்கங்கள்!

    என்னைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டிய
    அவசியம் இல்லை. காரணம், சொல்லிக்கொள்ளும் அளவிற்கு
    எதுவும் இல்லை என்பதுதான் எதார்த்தம்!

    என்னைப் பற்றியும் எனது எழுத்தைப் பற்றியும்
    சுறுக்கமாகவும் சிறப்பாகவும்
    எனது இந்தக் கவிதை வரிகளை விட
    என்னால் சொல்லிவிட முடியாது.

    "உற்றதோர் குருவும் இல்லை!
    ------உயர்தமிழ் இலக்க ணங்கள்
    கற்றவ னில்லை; தாயின்
    ------கருவிலே இறைவ னூட்டப்
    பெற்றதோர் அறிவு அன்றி
    ------பல்கலைப் படிப்பு மில்லை!

    தேறாத மானி டத்தின்
    ------தடத்தினைக் கண்டு நித்தம்
    கூறாத தத்து வங்கள்
    ------கூறிட வந்தேன்; என்றும்
    மாறாத மாண்பி னுள்ளே
    ------மணித்தமிழ் தன்னை யேற்றி
    மீறாத வேத மாயோர்
    ------மென்தமிழ் நூற்ச மைப்பேன்!"



    எனது முதனூல் "கண்ணதாசன் துதி" என்பதாகும்.
    இது "எனது குருநாதன் கவியரசு கண்ணதாசனின்" புகழ்பாடும் நூல்.
    இது கண்ணதாசனின் மகனாரான திரு.காந்தி கண்ணதாசன் அவர்களால்
    "கண்ணதாசன் பதிப்பக வெளியீ"டாக 2012 ஜனவரியில் வெளியானது.


    சென்னையின் பல புத்தகக் கடைகளிலும்
    எனது இப்படைப்பை நீங்கள் காண முடியும்!


    "அந்தக் கதவுகள் திறக்கட்டும்"

    "ஈழ ரத்தம்"

    "திருவோடு"

    "பெளர்ணமி அலைகள்"

    "ருத்ர தாண்டவம்"

    "குற்ற நெஞ்சம்" ---ஆகியன அடியேன் எழுதியுள்ள
    இன்னும் அச்சுக்கு வராத கவிதை நூல்கள்!

    இவற்றில் "குற்ற நெஞ்சம்" மட்டும் "காவியம்" ஆகும்!

    விரைவில் ஒவ்வொன்றாக வெளிவரும்!



    இதற்கும் மேலாக என்னைப் பற்றிச் சொல்ல வேண்டியது எதுவுமில்லை.

    முழு நேர இலக்கியவாதியாய் உலா வந்துகொண்டிருக்கிறேன்.

    படித்தது இஞ்ஜினியரிங்.

    திரைத்துறையில் பாடல் எழுதவும் முயன்றுகொண்டிருக்கிறேன்.
    வாய்ப்புகள் கனியும் நிலையில்!

    வழக்கம் போல உண்மைக்கும் நேர்மைக்கும் நல்லனவற்றிற்கும்
    என்றும் இவ்வுலகத்தினிடையே மதிப்பிருக்கும்
    என்ற நம்பிக்கையோடு எனது எழுத்துகளை உங்கள் பார்வைக்கு
    விருந்தாக வைக்க வந்திருக்கிறேன்.

    எனது விருந்து அறுசுவை விருந்து!

    ஆம்! அறுசுவையும் இருக்கும். சில நேரம் ஏதேனும் ஒரு சுவை மட்டும்
    மிகுதியாய் சேர்ப்பது என் இயல்பு.

    பெரும்பாலும் காரமும்(கோபம்) கரிப்பும்(கண்ணீர்) மாறி மாறி முகம் காட்டும்.

    ஜீரணிப்பது உங்கள் குடலின் சக்தியைப் பொருத்த விஷயம்!



    தமிழ்மன்றத்திற்கு நான் புதியவன்!

    மற்ற சில இணையதளங்களுக்குப் பழகியவன்!


    "செல்லும் இடமெல்லாம் சிறப்பு"க்கு மட்டுமல்ல சர்ச்சைக்கும் சொந்தக்காரன்!



    என் மனம் ஆகாயம்!
    என் தமிழ் மழை!

    மழை பெரும்பாலும் இடிகளோடுதான் வரும்.

    இடிகள் சில நேரம் சிலர் தலையிலும் விழலாம்.

    அதற்கு ஆகாயத்தின் மீதோ மழையின் மீதோ
    ஆத்திரமும் ஆதங்கமும் கொள்வதில் அர்த்தமில்லை.

    இடிகளுக்காக மழையை வேண்டாம் என்று மறுதலித்துவிட மாட்டீர்
    என்றும் நம்புகிறேன்.............



    -------------ரெளத்திரன்

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    51
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    101,126
    Downloads
    21
    Uploads
    1
    அன்பு வரவேற்புகள் நண்பரே. அருந்தமிழ் மன்றத்துக்கு ஓர் அற்புதமானப் படைப்பாளியின் வருகை கண்டு மனம் உவகை கொள்கிறது.

    தமிழோடும் உணர்வோடும் பிணைந்த உங்கள் கவிதைகள் மன்றத்தில் என்றென்றும் தொடரட்டும்.

    நூல்வெளியீடுகளுக்குப் பாராட்டுகளும், திரையிசையில் கால் பதிக்க வாழ்த்துக்களும்.

  3. #3
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    137,261
    Downloads
    161
    Uploads
    13
    நேற்றுத்தான் இணைந்துள்ளீர்கள். ஏதோ பார்த்து பேசி பழகியது போல் ஒரு உணர்வு...

    எதிர்கால சிறப்புக்கு வாழ்த்துக்கள் தோழரே...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    75
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    80,866
    Downloads
    16
    Uploads
    0
    எங்கிருந்தீர் அன்பரே இத்தனை நாளும் ?
    தங்கு தடையின்றி சண்டமா ருதம்போல்
    பொங்குகவி தருகின்ற கவிஞரே உந்தனுக்கு
    எங்கள் தமிழ் மன்றத்து மக்களின் சார்பிலே
    வாழ்த்துக்கள் கூறியே வரவேற்று மகிழ்கிறேன் !
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    60
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    21,582
    Downloads
    10
    Uploads
    0
    இந்த அரும்நல் முத்தினை வேறோர் இடத்தில் நான் கண்டுகொண்டேன். இன்றும் நம் தமிழ்மன்றத்திலும் உலா வர இருக்கும் இந்த கவிதைச்சுனாமியை அன்புடன் வரவேற்கிறேன்.

    இவரது கவிதைகளை விடாமல் வாசித்து வருகிறேன். சுமார் 14 கவிதைகள் வாசித்து விட்டேன். நேரமிருக்கும் போதெல்லாம் மீதியையும் வாசித்து விடவேண்டும்.

    இதுவரை இவரது கவிதைகளை வாசித்ததில் இவரிடம் சிறு பொறி அல்ல பெரும் நெருப்பே பொதிந்துள்ளதைக் கண்டுகொண்டேன். விரைவில் நீங்கள் விழைந்ததெல்லாம் நிறைவேற இறைவனை இறைஞ்சுகிறேன் இளவலே..!!

    வாருங்கள்..!

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    60
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    47,328
    Downloads
    7
    Uploads
    0
    அன்பு வரவேற்புக்கள் ரெளத்திரக் கவிஞரே ...!!!
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    40,542
    Downloads
    183
    Uploads
    12
    வாருங்கள் ரௌத்திரன்..

    உங்களின் தமிழ் பற்றும் புலமையும் போற்றுதற்குரியன.

    உப்பும் உறைப்புமான உங்கள் படைப்புகள் இருக்கும் என நீங்கள் சொல்வது நிஜமெனவே உங்கள் கவிதைகள் சொல்லுகின்றன.

    நூடுல்ஸூம், பிட்ஸா பர்கரும் எதாவது ஒரு நாள் மகிழ்ச்சிக்கு சுவைக்கலாம். ஆனால் அன்னை செய்யும் வற்றல் குழம்பும், மிளகு ரசமும் குடலுக்கும் உடலுக்கும் மிக நன்மையானவை. உண்ணத் தெவிட்டாதவை.

    அதை போல் நமக்கே உரிய உரிப்பொருள், களம், மொழி, பாவகை கொண்டு எழுதினால் உண்ண உண்ண திகட்டாது.

    வாருங்கள்.. உங்கள் வரவு நல்வரவாகுக,
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  8. #8
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    176,696
    Downloads
    39
    Uploads
    0
    உணர்வுள்ள வரிகளால் கவிதைக் கணல் மூட்டும் கவிஞர் ரௌத்திரனுக்கு வரவேற்புடன் வாழ்த்துக்கள். என்றும் இணைந்திருங்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர் பால்ராஜ்'s Avatar
    Join Date
    13 Apr 2009
    Location
    Logam
    Posts
    417
    Post Thanks / Like
    iCash Credits
    26,635
    Downloads
    8
    Uploads
    0
    வருக வருக ரௌத்திரன் ...
    பா.ரா.

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    42
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    361,154
    Downloads
    151
    Uploads
    9
    வாருங்கள் ரௌத்திரன்.

    பழகலாம்.

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    50,848
    Downloads
    1
    Uploads
    0
    வருக வருக ரெளத்திரன் அவர்களே! உங்கள் வரவு மன்றத்தில் நல்ல கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  12. #12
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    58
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    59,381
    Downloads
    2
    Uploads
    0
    சிறந்ததோர் எழுத்தாளர் மன்றம் வந்ததில் மகிழ்கிறேன் ..வருக வருக

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •