Results 1 to 8 of 8

Thread: நாம் இழந்த மஞ்சள்...இனியும் தாமதிக்கலாமா

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் kulakkottan's Avatar
    Join Date
    11 Jul 2012
    Location
    திருகோணமலை ,ஈழம்
    Posts
    133
    Post Thanks / Like
    iCash Credits
    30,304
    Downloads
    2
    Uploads
    0

    நாம் இழந்த மஞ்சள்...இனியும் தாமதிக்கலாமா

    நாம் இழந்த மஞ்சள்...இனியும் தாமதிக்கலாமா ???????????????????????????
    பிரித்தானியாவின் Leicester பலகலைகழகத்தில் பேராசிரியர் Will steward தலைமையில் நடந்த................
    ஆராட்சியாளர்கள் கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்தார்கள் .தனியே மஞ்சளை பயன் படுத்துவதோடு நின்று விடாமல்.............................................
    இன்னொரு விஷயத்தை கவனிக்க வேண்டும் மஞ்சள் புற்று நோயினை குணப்படுத்தும் என்று மேலை தேசம் அறிந்ததும் நாம் உசார் ஆகி இருக்க வேண்டும் .
    Last edited by அன்புரசிகன்; 15-07-2012 at 04:36 AM.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    எதோ ஒன்று சொல்ல விழைந்திருக்கிறீர்கள்.. அதனை முழுமையாய்ச் சொல்லவியலாமல் தடுத்தது எது..? தமிழ்நடையா..?

    நாம் இழந்துவிட்ட மஞ்சளின் காப்புரிமையைச் சொல்கின்றீர்களா..? மனிதகுலத்துக்குப் பயன்படும் எனில் அதை எவர் கண்டுபிடித்தால் என்ன..?

    நாம் சோம்பேறிகளாய் இழந்தபின் அதைக்கூறி வருந்தி என்ன பயன்..?

    இந்திய பாரம்பரிய மற்றும் தமிழின் சித்தர்கள் பலரும் தெள்ளிய அறிவோடு வியக்கத்தக்க சக்திகளையும் கொண்டிருந்தார்கள்.. என்ன பயன்..?

    எனக்கு ஒரு சிறிய விடயம் நினைவுக்கு வருகிறது.

    எனக்கு சிறு வயதில் ஒற்றைத்தலைவலி படும்பாடு படுத்தியது. என்ன என்னவோ வைத்தியம் பார்த்தும் சரியாகாத நிலையில் என் நண்பனின் தந்தை சில நாட்கள் என்னை அவர் இல்லம் தொடர்ந்து வரச்சொல்லி மூக்கில் சில துளிகள் எதோ மருந்தினை விட்டார்.

    நாலைந்து நாளில் குணம் ஆகியது.

    அவரிடம் அது என்ன மருந்து சொல்லுங்கள் இன்னும் யாருக்கேனும் இந்த அவத்தையில் இருப்போருக்கு நான் உதவுவேனே என்று கேட்டேன்.

    இல்லை அதைச் சொன்னால் பலிக்காது என்று மறுத்துவிட்டார்.

    பின்னர் நான் தில்லிக்கும் வந்துவிட்டேன்.

    சில வருடங்களில் அவர் இறந்துவிட்டார். அவரது மகனிடம் (என் நண்பனிடம்) அது என்ன மருந்து அத்தனை விரைவில் ஒற்றைத்தலைவலி சரியாக்கியதே எனக்கேட்டேன்.

    நீ யாரிடமும் சொல்லாதே. அது ஒன்றுமில்லை சிறிது உப்புகலந்த நீர் தான். அதை மூக்கினுள் விட்டால் விரைவில் ஒற்றைத்தலைவலி சரியாகும் என ஏதோ ராணுவரகசியத்தைச் சொன்னாற்போல கூறினான்.

    இப்போது அந்த ஒற்றைத்தலைவலியில் அவத்தையுறும் பலருக்கு நான் வெளிப்படையாகவே ஐந்து நாட்களுக்கு மூக்கினுள் தினம் ஒருமுறை உப்பு நீர் சில துளிகள் விட்டுவாருங்கள் சரியாகும் என அறிவுறுத்தி வருகிறேன்.


    இதுபோல பல அரிய மருத்துவங்கள் வெளியில் பகரப்படாமலேயே மறைந்துவிட்டன..

    இப்போது சொல்லுங்கள்.. குற்றம் வெளிநாட்டாரிடமா..? நம்மிடமா..?

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் kulakkottan's Avatar
    Join Date
    11 Jul 2012
    Location
    திருகோணமலை ,ஈழம்
    Posts
    133
    Post Thanks / Like
    iCash Credits
    30,304
    Downloads
    2
    Uploads
    0
    நண்பரே முழுமையான விடயம் viyukam.blogspot.com என்ற என் பதிவு தளத்தில் எழுதியுள்ளேன்

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    நண்பரே.. அந்த முழுமையான விடயத்தை இங்கே பகிருங்கள்..

    பொதுவாக நாம் அனைவருமே நமக்கென தளம் வைத்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆயினும் நம் கருத்தை இங்கே முழுமையாய்ப் பதிவதே சிறந்தது. அங்கே பாருங்கள் இங்கே பாருங்கள் என்று திசை திருப்புதல் சரியல்ல..

    இங்கே அவற்றை நீங்கள் பதிந்தால் வாசிக்கிறேன்.

    நன்றி.

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் kulakkottan's Avatar
    Join Date
    11 Jul 2012
    Location
    திருகோணமலை ,ஈழம்
    Posts
    133
    Post Thanks / Like
    iCash Credits
    30,304
    Downloads
    2
    Uploads
    0
    "மஞ்சளே விளையாத நாட்டுகாரன் அதற்கு உரிமம் வேண்டி விட்டான்" ஏழாம் அறிவில் சூர்யா என கூறுகிறார் .

    இந்த ஏழாம் அறிவு வணிக அறிவாய் இருக்கலாம் .ஆனால் அது மஞ்சள் பாவனையாளர்களிடம் ஒரு பெருமிதத்தை ஏட்படுதியதே தவிர ஒரு சிலரிடம் தான் இதை பற்றி நம் முன்னோர் எங்காவது கூறியிருகின்றனரா என தேட தோன்றியது .

    அண்மையில் வெயிலில் காயவைக்க பட்டிருந்த மஞ்சளை பார்த்தேன் .இது தொடர்பை தேடிய பொது சில ஆய்வு முடிவுகளை இனத்தில் அறிந்து கொண்டேன் .

    இந்த பதிவு மஞ்சளும் புற்று நோயும் பற்றியது .பிடித்துகொண்டால் தொடர்ந்து பற்றி செல்லுங்கள் இந்த பதிவை .

    curcuma Longa- மஞ்சளின்தாவரவியல் பெயர்

    மஞ்சளில் curcumin என்ற ஒரு வேதி பொருள் உள்ளது. இது தான்

    புற்று நோயின் எதிரி !!!!!இந்த வேதி பொருளை தனியே பிரித்து எடுத்தால் கடும் சிவப்பு சாயல் கொண்ட செம்மஞ்சளாய் இருக்கும் .இந்த பொருள் தான் மஞ்சளில் மஞ்சள் நிறத்திற்கும் காரணம் .மஞ்சளை சுத்த படுத்தும் பொது அதன் வெளி தோலின் அடி பகுத்து கடு செம்மஞ்சள் நிறத்தில் தான் இருக்கும் .

    இந்த வேதி பொருள் புற்று நோயினை குணபடுத்தும் என்பது பல ஆய்வுகளில் நிருபனமாயுள்ளது .அதிலும் குறிப்பாய் குடல் புற்று நோயை குணா படுத்தும் என்பது தெள்ள தெளிவாய் நிருபிக்க பட்டுள்ளது .பிரித்தானியாவின் Leicester பலகலைகழகத்தில் பேராசிரியர் Will steward தலைமையில் நடந்த ஆய்வில் இது நிருபிக்கபட்டுள்ளது .

    புற்று நோய் - உடல் கலங்கள் அசாதாரண வளர்சி அடைவதே புற்று நோய்.

    இதற்கு தீர்வாய் அந்த கலங்களை X_ray கதிரை கொண்டு அழிப்பார்கள் .இந்த சிகிச்சை யை அடிக்கடி நோயாளர்கள் மீது மேட்கொள்ள முடியாது .இது புற்று நோயை விட பாரதூரமான விளைவுகளை ஏட்படுத்தி விடும் .சில வேளை இக் கலங்களை அளிக்க வல்ல மாத்திரைகளை கொடுப்பது வழமை.ஆனால் இம் மாத்திரைகள் வினை திறன் போதாதவை .

    ஆராட்சியாளர்கள் கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்தார்கள் .தனியே மஞ்சளை பயன் படுத்துவதோடு நின்று விடாமல் அதன் பின் மேலத்தேய மருத்துவ முறைகளை பயன்படுத்தி பார்திருகிரார்கள் .மஞ்சள் வேதிப்பொருள் உட்செலுத்த பட்டவர்களின் புற்று நோய் கணிசமான அளவு குறைந்ததோடு பக்க விளைவுகளும் மிக சொற்பமாய் தான் இருந்தது .

    இன்னொரு விஷயத்தை கவனிக்க வேண்டும் மஞ்சள் புற்று நோயினை குணப்படுத்தும் என்று மேலை தேசம் அறிந்ததும் நாம் உசார் ஆகி இருக்க வேண்டும் .

    இப்போது அவர்கள் இன்னொரு விஷயத்தை கண்டு பிடித்து விட்டார்கள் .அது தான் உடலுக்குள் வெடிகுண்டு வைக்கும் நோய் -BRAIN TUMER - இதற்கும் மஞ்சளில் உள்ள curcumin தீர்வை தரும் என்பதை அதுவும் குத்து மதிப்பாய் அல்ல 81% குணப்படுத்துகிறதாம்.(REsult of Journal of Nutritional Biochemistry ).11 ஆய்வுகளில் 9 ஆய்வு சாதகமான முடிவுகளை தந்துள்ளது .brain tumer க்கான முக்கிய சிகிச்சையான glioblastoma (GBMs) சிகிச்சை முறையின் மேம்படுத்தலில்

    curcumin பேருண் உதவி செய்வதை இந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    இனியும் தாமதிக்கலாமா ???????????????????????????

    இந்த மஞ்சள் என்ன என்ன நோய்க்கு தீர்வு தரும் என மேலை தேசம் சந்தேகிக்கிறது என பட்டியல் போட்டு தந்து விடுகிறேன்.மொத்தம்- 577 நோய்கள்

    oxidative stress
    inflammation
    DNA damage
    lipid peroxidation
    chemically-induced liver disease
    Alzheimer’s disease
    liver fibrosis
    ................................................

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Jul 2012
    Location
    லியோன்
    Age
    45
    Posts
    487
    Post Thanks / Like
    iCash Credits
    18,254
    Downloads
    0
    Uploads
    0
    குலகோட்டன் சொல்ல வந்தது மறைந்து இருந்தபோது அதை தனக்கே உரியபாணியில் கலை அவர்கள் அதை கொண்டுவர செய்தது சிறப்பு. மஞ்சளின் சிறப்பு மருத்துவம் அறிந்தேன்.
    தோழமையுடன்
    ஆ. தைனிஸ்

    உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
    உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    ஓர் எச்சரிக்கை பதிவு இன்றைய அரசியலில் தேவையற்ற அதேநேரம் பலன் இருப்பின் தேவையான பதிவு..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Feb 2012
    Posts
    191
    Post Thanks / Like
    iCash Credits
    16,842
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி.....

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •