ஓசையுடன் துடிக்கின்ற இதயமே ! உன்னுடைய
ஓசையைக் கொஞ்சம் குறைத்துக்கொள் உன்னுள்ளே
கருத்துக்கினிய என்காதலி கண்மூடித் தூங்குகிறாள்.
ஓ இதயமே ! என்காதலி
நித்திரை கலையாமல் நிம்மதியாய் உறங்கிடவே
நீலாம்பரி என்னும் தாலாட்டு இராகத்தில்
நித்தமும் துடித்தே கண்வளரச் செய்திடுவாய்!
ஓயாமல் துடிக்கின்ற இதயமே!
அடுத்த மாதம் உனக்கு அறுவை சிகிச்சையாமே!
விடுக்கின்றேன் உனக்கு ஓர் எச்சரிக்கை !
காதலியின் மீது கத்தியேதும் பட்டுவிடாமல்
கவனமாய் பார்த்திடுவாய்! காதலியைக் காத்திடுவாய் !
Bookmarks