Results 1 to 4 of 4

Thread: வாய்வுத்தொல்லையால் அவதிப்படுபவரா நீங்கள்?

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் ravikrishnan's Avatar
    Join Date
    07 Sep 2011
    Location
    Antarctica
    Posts
    336
    Post Thanks / Like
    iCash Credits
    19,778
    Downloads
    1
    Uploads
    0

    வாய்வுத்தொல்லையால் அவதிப்படுபவரா நீங்கள்?



    வாய்வுத்தொல்லையால் அவதிப்படுபவரா நீங்கள்?

    சராசரியாக, ஒரு இந்தியன் ஒரு நாளில் 2-4 தடவை அபான வாயுவை வெளியேற்றுகிறான். இந்த வாயு நாற்றமில்லாமலே இருக்கலாம். இதை அடக்குவது கூடாது என்கிறது மருத்துவ உலகம். அபான வாயு உடலிலி ருந்து பிரிவதை யாருமே விரும்புவதில்லை. பலர் முன்பு இது ஏற்பட் டால், தர்ம சங்கடமாக நாம் நினைக்கிறோம்.

    வாயின் வழியே உள் நுழையும் காற்று இரப்பையால், ஏப்பமாக திருப்பி அனுப்பப்படும். வயிற்றிலிருந்து வாய்வும், மலமும் வெளியேறுவது நல்லது. இவை தேங்கிவிட்டால்தான் பிரச்சனை. ஜீரண மண்டலத்தில் அதிக வாயு உணடானால், அதை வெளியேற்ற பல வழிகள் மேற்கொள் ளப்படுகிறது.

    குதம் வழியாகவும், வாய்வழியே ஏப்பமாகவும் வெளியேற்றப்படும். மூன்றாவது முறையாக, ஜீரண அவயங்களின் சுவர்கள் வழியே ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு, நுரையீரல் வழியே வெளியேற்றப்படுகிறது. ஜீரண மண்டலத்திலுள்ள பாக்டீரியாக்களும் சுலபமாக வெளியேற்று வதற்காக, வாயுவை சிதைத்து மாற்றுகின்றன.

    வாய்வுத் தொல்லைகளின் காரணங்கள்

    1. மூக்கினால் சுவாசிக்கும் காற்று முற்றிலும் நுரையீரலுக்கு சென்று விடும். வாயினால் இழுக்கப்படும் காற்றின் பெரும்பகுதி ஏப்பமாக திரும்பும். இந்த காற்றில் 20 சதவிகிதமாவது ஏப்பமாக திரும்பாமல் தங்கி விடும். வாயினால் காற்றை விழுங்கும் பழக்கம் பலரிடம் அதிகமாக உள்ளது. மன இறுக்கம், டென்ஷன் உள்ளவர்கள் உணவு உண்ணும் போது மற்றவர்களை விட அதிக காற்றை உணவுடன் உட்கொள்ளுவார் கள். அதிக வாயு தொல்லைகளை உண்டாக்கும். அதிகமாக சாப்பிடுவது, பேசிக் கொண்டே சாப்பிடுவதும் காற்று உள்ளே போக ஏதுவாகும்.

    2. குடலில், பேக்டீரியாவின் வளர்சிதை மாற்றத்தால், ஹைட்ரஜன், மீதேன் மற்றும் கார்பன்டைஆக்ஸைட் வாயுகள் உண்டாகின்றன. இந்த வாயு உற்பத்தி, முட்டை கோஸ், பீன்ஸ் இவற்றை உண்டால் அதிகமாகும்.

    3. உணவில் அதிகமாக கிழங்கு வகைகளை சேர்த்துக் கொண்டால் வாயு உண்டாகும்.

    4. சிலருக்கு, சர்க்கரையை ஜீரணிக்கும் நொதிகள் குறைந்து போய் அந்த நிலையில் சர்க்கரை உணவுகளை சாப்பிட்டால், அபரிமிதமாக வாயு உண்டாகும். குறிப்பாக லாக்டோஸ் என்சைம் குறைந்தால், பாலில் உள்ள லாக்டோஸை ஜீரணிப்பது கடினம். இந்த குறைபாடு உள்ளவர்கள் பாலை குடித்தால் வாய்வு தான் அதிகமாகும்.

    5. பேங்கிரியாடைட்டிஸ் எனும் பாதிப்பினால் கணையத்திலிருந்து வரும் ஜீரண சாறு குறைபாட்டினால், ஜீரணம் சரிவர நடக்காது. அப்போது வாயு உண்டாகும். நுரையுடன் மலம் வரும். இந்த நுரை வாயுவினால் ஏற்படுவது.

    6. அமீபியாசிஸ் நோயால், அதிக வாயு உண்டாகும்.

    7. செயற்கை பற்கள் சரியாக பொறுத்தப்படாவிட்டால், உமிழ்நீரை அதிகம் முழுங்க நேரிடும். உமிழ் நீரில் காற்றுக்குமிழிகள் இருப்பதால் காற்றையும் சேர்த்து விழுங்க நேரிடும்.

    8. ரத்த அழுத்தம், வலி, நோய் எதிர்ப்பு இவற்றுக்கான மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு, பக்க விளைவாக குடல் தசைகள் அசைவது அதிகமாகும். இதனால் வாயு அதிகமாக வெளியாகும்.

    அறிகுறிகள்

    அடிவயிறு வலி, வயிறு உப்புசம் ஏற்படும். சாப்பிட்டவுடன் அதிகமாக ஏப்பம் வரும். சாதாரண சமயங்களில் கூட ஏப்பம் வந்து கொண்டே இருக்கலாம். அபான வாயு, நாற்றத்துடனோ, நாற்றமில்லாமலோ, அடிக்கடி பிரியும்.

    சிகிச்சை

    1. பான் பாக்கு சாப்பிடுவது, புகைப்பது இவற்றை தவிர்க்கவேண்டும்.

    2. மாமிசம், வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு போன்றவற்றை தவிர்க்கவேண்டும். இனிப்பு, பருப்பு, தக்காளி இவைகளையும் குறைக்கவும்.

    3. எந்த உணவால் வாயு அதிகம் உண்டாகிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். முதலில் பால், பால்சார்ந்த உணவுகளை நிறுத்திப்பார்க்க வேண்டும்.

    பிறகு பழங்கள், சில காய்கறிகள், ஒரேடியாக வாயுவை உண்டாக்கும் உணவுகளை நிறுத்தி விட வேண்டாம். ஒவ்வொன்றாக நிறுத்த வேண்டும்.

    4. சாப்பிடும் போது பேசுவதை தவிர்க்கவேண்டும். நிதானமாக மென்று சாப்பிட வேண்டும்.

    5. டீ, காஃபி தவிர்க்கவேண்டும். அதே போல் பாட்டில் பானங்கள் தவிர்க்கவேண்டும்

    கீழ் கண்டவைகளினால் கொஞ்சம் வாயுத்தொல்லையிலிருந்து விடுபடலாம்..

    1. ஏலக்காய் நல்ல வீட்டு மருந்து. தண்ணீருடன் 5 கிராம் ஏலக்காய் பொடியை எடுத்துக் கொள்ளலாம். நெய்யில் வறுத்த பெருங்காயம், கருஉப்பு, சுக்கு, ஏலக்காய் இவைகளெல்லாம் ஒவ்வொன்றும் 5 கிராம் எடுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் போது இந்த கலவையில் 1/2 ஸ்பூன் தண்ணீருடன் 2, 3 தடவை எடுத்துக் கொள்ளவும். வாயு அகலும்.

    2. புதினா, இலவங்கம், இஞ்சி இவற்றின் சாரத்தை இரண்டு துளிகள், ஒரு கப் சுடுநீரில் சேர்த்து குடிக்கவும்.

    3. பெருஞ்சீரகம், ஒரு பாகம், செலரி விதைகள் இரண்டு பாகம், சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிடலாம்.

    4. குழந்தைகளுக்கு பெருங்காயம் கரைத்த வெந்நீரில் துணியை நனைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.

    5. ஒரு தேக்கரண்டி துளசி சாற்றுடன் 1/2 தேக்கரண்டி நெய் கலந்து குடிக்கலாம்.
    நன்றி:இணையம்

  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    பயனுள்ள பல தகவல்கள் அடங்கிய பதிவுக்கு மிக்க நன்றிகள் ரவிகிருஷ்ணன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    இனியவர் பண்பட்டவர் வெற்றி's Avatar
    Join Date
    03 Mar 2007
    Location
    இரும்பூர்
    Posts
    701
    Post Thanks / Like
    iCash Credits
    12,009
    Downloads
    33
    Uploads
    2
    நல்லது... நல்ல தகவல்.. (ஆமா டீ காபி குடிக்காமல் இருக்க முடியலை சாமி )
    ஜெயிப்பது நிஜம்

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    Quote Originally Posted by ravikrishnan View Post


    மாமிசம், வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு போன்றவற்றை தவிர்க்கவேண்டும். இனிப்பு, பருப்பு, தக்காளி இவைகளையும் குறைக்கவும்.

    பூண்டு சாப்பிடக்கூடாது என்று சொல்லியுள்ளீர்களே, வாயுத்தொல்லைக்கு பூண்டு நல்ல மருந்தாயிற்றே!
    சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •