Results 1 to 4 of 4

Thread: ஒரே கண்ணில் கொல்லாதே...

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0

    ஒரே கண்ணில் கொல்லாதே...

    என்னைக் கவர்ந்த பாடல்களில் ஒன்று. எத்திரைப்படம் என்பது தெரியாது. யார் இசை என்பது தெரியாது. youtube இல் தரவேற்றியதும் பாடியவர்கள் ஸ்ரீநிவாஸ், சுவர்ணலதா எனக் காணத் தருகின்றது.

    அதற்கு, எனது மன்றக்கிறுக்கல்களோடு, சில புதிய கிறுக்கல்களையும் சேர்த்து, ஒரு சின்ன முயற்சி.

    ரசிப்பீர்கள் என்று நம்புகின்றேன்...


    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  2. Likes கீதம் liked this post
  3. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    பலமுறை பார்த்தேன், கேட்டேன், வாசித்தேன், ரசித்தேன். அழகான பாடல். 1987 இல் வெளிவந்த வெளிச்சம் என்னும் திரைப்படம் என்றும் இசை மனோஜ் கியான் என்றும் தேடலின் முடிவில் தெரியவருகிறது. விவரங்கள் சரிதானா என்று தெரியவில்லை.

    பாடலோடு வாசிக்கப்பட, கவிதை வசப்படவில்லை. பாடலை ஊமையாக்க, கண்களும் கவித்துளிகளும் பேசியவை அதிகம். பாடலின் வரிகளுக்கு எதிர்த்திசையில் பயணிக்கும் கவி வரிகளில் அதிசயித்தேன். மிகுந்த பிரயாசையுடன் செப்பனிடப்பட்ட அற்புதமான முயற்சிக்குப் பெரும் பாராட்டுகள் அக்னி.

    சின்னஞ்சிறு குறையொன்று.... கவித்துளியொன்றை வாசித்து உள்வாங்குவதற்குள் கண்மறைந்துவிடுவதும், உள்வாங்கியதிலிருந்து மீண்டு வெளிவருவதற்குள் அடுத்து வந்து மோதுவதுமாய் ஆழ்மனம் சென்று திரும்ப, சில அவகாசக் குறைபாடு. ஊடல் வெளிப்பாடு என்பதால் இந்த உளப்பூர்வ ஏற்பாடோ?

  4. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    நன்றி கீதம் அக்கா...

    இப்பாடல், சில பல வருடங்களாக அடிக்கடி என்னால் செவிமடுக்கப்படுவதால், எனக்குப் பாடலை அவதானித்துச் செவிமடுக்கவேண்டிய தேவை இருக்கவில்லை.
    இசைக்கேற்ப ஓரளவு காட்சி மாறவும், வரிகளைக் காட்சிப்படுத்தவும் முயற்சித்தேனே தவிர,
    புதிதாக ஒருவர் பார்த்துக் கேட்கையில் அது ஒரு அவசர ஓட்டமாக அமையும் என்பதை சற்றும் எண்ணிப்பார்க்கவில்லை.

    எதையும் பிளான் பண்ணிப் பண்ணனும்...

    இதைப்போல, இன்னுமொருமுறை செய்யக்கிட்டினால், நிச்சயமாக உங்கள் பின்னூட்டம் எனக்கு முன்னாடி வந்து நிற்கும்.

    நன்றி கீதம் அக்கா...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  5. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    ஒலிக்கும் பாடல் வரிகளும்.. ஒளிரும் நவரச காதல் வரிகளும்... மனம் இனிக்கும் மதுரசம்..!!

    வாசகரை ரசிக்க வைக்கும் வித்தியாசமான முயற்சி... தொடருங்கள் அக்னியண்ணா..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •