Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 39

Thread: சட்டத்தின் படி- சுவாரஷ்யமான தொடர்கதை

                  
   
   
 1. #1
  புதியவர் பண்பட்டவர்
  Join Date
  21 Mar 2009
  Posts
  33
  Post Thanks / Like
  iCash Credits
  10,851
  Downloads
  2
  Uploads
  0

  சட்டத்தின் படி- சுவாரஷ்யமான தொடர்கதை

  வந்தோரை வாழ வைக்கும் தமிழகத்தின் முகவரியில்,
  அண்டை மாநில மொழி,வடக்கத்திய மொழி அந்நிய மொழி அதனை மொழி பேசுபவர்களையும் மும்மொழிக்கு சொந்தமாகிய இன்மையான தமிழில்,
  "அன்புள்ள பயணிகளின் கனிவான கவனத்திற்கு ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கிற நீலகிரி எக்ஸ்பிரஸ் தடம் என் 1 இல் வந்து கொண்டிருக்கிறது".
  இதோ வந்து விட்டது.
  2 நிமிட ஹோரன் சத்தம்.....
  அத்தனை பயணிகளையும் சுமந்து வந்த களைப்புடன் நீண்ட பெருமூச்சு விட்டு, நின்றது அந்த நீண்ட ரயில்.
  அப்பப்பா எதனை ஆராவாரம்...எத்தனை விதமான மனிதர்கள்...
  எண்ணற்ற செய்திதாளின் பெயர்களை கூறியபடி விற்பனை செய்து கொண்டிருந்தா ஒரு ஆள்.
  டி, காபி ......
  "சார் கூலி.....".
  "போர்டர் இங்க வாப்பா...."- இது போன்ற சத்தங்கள்.
  வந்தவரை வரவேற்க அலைபாயும் கண்களுடன் கையில் செல்போனுடன் ஒரு இளம்பெண்...
  "இல்லப்பா அவ்ளோ எல்லாம் முடியாது."..
  "சார் போட்டு கொடுங்க"...
  "ஓகே..பா நான் ட்ரை பண்றேன்".
  இதில் குழந்தைகளின் குறும்புகள் வேறு...
  "அம்மா...டூ பாத்ரூம்...முதுகில் ரெண்டு சாத்து...மூதேவி...train லையே போக வேண்டியது தான...கொஞ்சம் பொறுத்துக்கோ".
  "எங்க எல்லாத்தையும் எடுத்திடிங்களா? அந்த சூட்கேசுலதான் எங்க மாமாவுக்கும், தங்கச்சிக்கும் வாங்கி வச்ச புடவையும் சுடிதாரையும் வச்சிருக்கேன், அந்த பேக் எங்க?" "ஏய்ய் ..அது மேல தாண்டி உக்காந்திருக்க..".
  "சார் சூட்கேஸ் ரிப்பேர்."...
  "பாத்தியாடி அவன் conform பண்ணிட்டான்..சூட்கேஸ் ஒடஞ்சிருச்சுன்னு."..
  இப்படி ஆவல், நகைச்சுவை, எரிச்சல், தவிப்பு, நம்பிக்கை, திகைப்பு, என், எதற்கு, எப்படி விடை தெரியாமல் பல முகங்கள் சென்னை சென்டரல் நிலையத்தில், அனைத்து பயணிகளும் ப்ளு மௌண்டன் லிருந்து இறங்கி விட்டார்கள்.
  ஒவ்வொரு பெட்டியாக கதவு ஜென்னலை அடைத்து வந்த ஊழியர் , கதவோரத்தில் ஒரு பெண்ணும், குழந்தையும் அசைவற்று படுத்திருப்பதை பார்த்து திடுக்கிட்டார்.
  என்ன நடந்தது?.... காத்திருங்கள்

 2. #2
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  24 Jan 2012
  Location
  Bangalore
  Age
  60
  Posts
  2,259
  Post Thanks / Like
  iCash Credits
  47,548
  Downloads
  7
  Uploads
  0
  சுவராசியம்...தொடருங்கள்...
  ஜெயந்த்.

  யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
  இனிதாவ தெங்குங் காணோம்…

 3. #3
  புதியவர் பண்பட்டவர்
  Join Date
  21 Mar 2009
  Posts
  33
  Post Thanks / Like
  iCash Credits
  10,851
  Downloads
  2
  Uploads
  0

  சட்டத்தின் படி ....(2)

  சட்டத்தின் படி ....(2)

  சென்ற வாரம்
  ஒவ்வொரு பெட்டியாக கதவு ஜென்னலை அடைத்து வந்த ஊழியர் , கதவோரத்தில் ஒரு பெண்ணும், குழந்தையும் அசைவற்று படுத்திருப்பதை பார்த்து திடுக்கிட்டார்.

  ராசாத்தி ராசாததி கதவைத திற. யேய் கதவைத் திற. ஏன படபடவென கதவைத் தட்டினான் வேலு.
  ஏய் வேலு என்ன இன்னும் தெளியலையா? ச்சி இந்தாட சாவி. உன் பொண்டாட்டி குழந்தையை தூக்கிட்டு போயிட்டா..என்று வெறுப்புடன் சாவியை கொடுத்தார் பக்கத்து வீட்டு பார்வதி.

  புதறி போன வேலு, அக்கா எங்கக்க போனா..? நாக்கு குழறியது.

  “போடா…உன்னால அவளுக்கு நிம்மதியேப் போச்சுடா…ஒரு தடவையா ரெண்டு தடவையா? தினம் தினம் இப்படி பண்ணினா எவதாண்டா பொறுத்துக்குவா? அவளுக்கு என்னடா குறைச்சல் பாவம்டா அவ…”

  அக்கா…இனிமேல் நான் சத்தியமா…என்று வேலு சொல்லுவதற்கு முன்..
  “ஆமாண்டா நீயும் உன் சத்தியமும்…”

  வேலு அழுகையுடன்” அக்கா சொல்லுக்கா..அவ எங்க போறன்னு சொன்னா?”

  “ச் சீ…அழுகாதே.என் தம்பியா இருந்தா வெட்டியே போட்டிருப்பேன். ஏவ்வளவோ எடுத்துச சொன்னேன். இந்த குழந்தையையும், இனி வர குழந்தையையும் காப்பாத்தனும்னா நான் போயிதான்கா ஆகணும்ன்னு போயிட்டா”
  ஏதோ நினைவு வந்தவளாக..”ஆங்…மெட்ராஸ்ல அவங்க ஒண்ணுவிட்ட அண்ணன்..அது ஓரு கடலுக்கு பக்கத்திலே கடை வெச்சிருக்கானாம்..அங்கே போறேன்னு சொன்னாள்”

  ஆடி போன வேலு கதவை திறந்து..பையில் வேட்டி சட்டையை திணித்து, சாமி அலமாரியில் இருந்த கவரில் 200 ருபாய் குறைய 800 ருபாய் இருந்தது. ருhசாததி 200ருபாய் எடுத்து கொண்டதை நினைத்து தலையில் இடித்து கொண்டு இழுதான்.

  கதவை சாத்திவிட்டு சாவியை பக்கத்து வீட்டு பார்வதியிடம் கொடுத்தான்.
  “போடா போய் அவளை தேடி கூட்டிட்டு வர்ர வழியைப்பாரு”

  ஓட்டமும் நடையுமாக திருப்பூர் ரயில் ;நிலையத்தை அடைந்தான்.
  “சார் மெடராஸ் ரயில் எப்ப வரும்?”
  “யோவ் மணி என்ன? அது போய் அரைமணி நேரமாகுது.”
  தலையில் இடிவிழுந்தது போல் விக்கித்து நின்றவனைப் பார்த்து “என்ன பேய் அறைஞ்ச மாதிரி நிக்கற?
  சுதாரித்து கொண்ட வேலு..”சார் மெட்ராஸ் எத்தனை மணிக்கு போய் சேரும்?”
  “யோவ்..இது நம்ம நாட்டு ரயில். சரியான நேரத்திற்கு போகாது. சுமார் 5.30 லிருந்து 6 மணிக்குள் போய் சேரும்.”

  “நன்றிய்யா” என்று வொல்லிக் கொண்டே லாரி ஸ்டேண்டை நோக்கி ஓடினான்.

  சென்னை துறைமுகம் செல்ல பனியன் லோடுடன் லாரியின் டிரைவர் யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.


  “அண்ணே மெட்ராஸ் போகுமான்னே? “
  “இல்லை லண்டன் போகுது வர்ரியா?” ஏன்றார் எரிச்சலுடன்..
  அப்போது அங்கு வந்தார் ஒருவர்..
  “யோவ் இன்னுமா நீ கிளம்பல?”
  கிளினர் இன்னும் வரல..வந்ததும் கிளம்ப வேண்டியதுதான் “

  வேற டிரைவர் கிளினர போடச்சொல்லி இந்த மேனேசரை எத்தன தடைவ சொன்னாலும் கேக்க மாட்டீங்கறான். யோவ் இப்ப நீ கிளம்பறயா இல்ல வேற சிப்ட் ஆளுகள வர்ற சொல்லட்டா?


  இதோ சார் கிளினர் வந்துட்டான். நாங்க கிளம்பறோம்.

  “சார்…..”
  வேலுவை பார்த்து எனைய்யா என்றார் டிரைவர்.

  ஏன்னையும் ஏத்திட்டு போங்க சார்…தயவு செய்து…

  சென்னையை நோக்கி லாரி புறப்பட்டது.

  தன்னோட சொந்த கதையை டிரைவரிடம் புலம்பிய படி வந்தான் வேலு.
  “இந்தாப்பா வேலு..உன்னோட கதை தலைவிதி எல்லாம் கிடையாது. எல்லாம் உன திமிரு.முதல்ல நீ திருந்த பார். குடும்பத்தோடு வாழற வழியைப்பாரு. குடிக்கு அடிமையானவன் எத்தனையோ பேர் திருந்தியிருக்காங்க. அதிலே நீயும் ஒருத்தனாயிருக்கணும். இந்தா என் செல் நமபர்..ஏதாவது உதவி வேணும்னா கேளு”.

  தேம்பி தேம்பி அழுதுக் கொண்டே கையெடுத்துக் கும்பிட்டபடி மனைவி குழந்தையை தேட சென்றான் வேலு.

  மனைவி கிடைத்தாளா, இல்லையா?
  தொடரும்….

 4. #4
  இனியவர் பண்பட்டவர்
  Join Date
  03 May 2012
  Location
  Bangalore
  Posts
  860
  Post Thanks / Like
  iCash Credits
  23,392
  Downloads
  7
  Uploads
  0
  அருமை..தொடருங்கள் பாஸ்!!
  வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

 5. #5
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
  Join Date
  23 Dec 2008
  Location
  ஆஸ்திரேலியா
  Age
  52
  Posts
  7,283
  Post Thanks / Like
  iCash Credits
  101,486
  Downloads
  21
  Uploads
  1
  கண் கெட்ட பின்னே சூரியனைத் தேடுகிறான். இருண்ட வாழ்வில் ஒளி கிடைக்குமா? அல்லது நிரந்தர இருள்தானா? தொடரும் பகுதிகளுக்காய் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

 6. #6
  புதியவர் பண்பட்டவர்
  Join Date
  21 Mar 2009
  Posts
  33
  Post Thanks / Like
  iCash Credits
  10,851
  Downloads
  2
  Uploads
  0

  சட்டத்தின் படி ....(3)

  சென்ற வாரம்
  தன்னோட சொந்த கதையை டிரைவரிடம் புலம்பிய படி வந்தான் வேலு.
  “இந்தாப்பா வேலு..உன்னோட கதை தலைவிதி எல்லாம் கிடையாது. எல்லாம் உன திமிரு.முதல்ல நீ திருந்த பார். குடும்பத்தோடு வாழற வழியைப்பாரு. குடிக்கு அடிமையானவன் எத்தனையோ பேர் திருந்தியிருக்காங்க. அதிலே நீயும் ஒருத்தனாயிருக்கணும். இந்தா என் செல் நமபர்..ஏதாவது உதவி வேணும்னா கேளு”.
  தேம்பி தேம்பி அழுதுக் கொண்டே கையெடுத்துக் கும்பிட்டபடி மனைவி குழந்தையை தேட சென்றான் வேலு.
  அருகில் நெருங்கிய ரயில்வே ஊழியர் கதவை பலமாகத்தட்டி “என்ன ஓசி பயணமா? டிக்கட் வாங்கலியா? திடுக்கிட்டு எழுந்த ராசாத்தி…

  இல்லை டிக்கெட் இருக்கு என்று படபடப்புடன் கூறினாள் ராசாத்தி.

  “தோடா..எறங்கு வண்டி கூட்ஸு க்கு போகுது..”

  “பீச்சுக்கு எப்படி போகணும்?

  இதோடா…இன்னா மெட்ராசுக்கு புச்சா கொயந்தைபையனை கூட்டிகினு.. தோம்மா மெட்ராஸ் நல்லவிங்களும் கெட்டவிங்களும் கலந்த ஊரு. பீச்சுல யார பாக்கணும்?

  எங்க அண்ணன் பீச்சுல கடை வெச்சிருக்காரு என்றாள் ராசாத்தி.
  “அட்ரஸ் இருக்கா?

  “இல்ல..காந்தி சிலைக்கு பக்கத்திலே”…..என்று பயம் கலந்த நடுக்கத்தோடு சொன்னாள் ராசாத்தி.

  தன் மகன் அரவிந்தையையும் பையையும் எடுத்துக் கொண்டு சென்டரல் ஸ்டேசனை விட்டு வெளியே வந்தாள்.
  இனம் புரியா கலக்கத்தோடு கண்களில் கண்ணீரோடு மகன் அரவிந்தை பார்த்தாள்.

  ‘அம்மா வலிக்குது ம்மா..அப்பா போட்ட சூடு ரொம்ப வலிக்குதம்மா”…என்றான் குழந்தை அரவிந்த்.

  ராசாத்தி அழுதபடி மகனை முத்தமிட்டு ரோட்டோர கடையில் பையனுக்கு 4 இட்லி வாங்கி கொடுத்தாள்.

  “அம்மா..உனக்கு…”
  “பசியில்லை ப்பா.. நீ சாப்பிடு”..

  கடைக்காரனிடம் “ஐயா ஆஸ்பத்திரி எங்க இருக்குது?”
  எதிர்புறமுள்ள அரசு மருத்துவமனையைக் காட்டினான் அந்த கடைக்காரன்.

  சீட்டு பெற்றுக்கொண்டு, ஞானி MD DCH என்ற பெயர் தாங்கிய அறைக்குள் மகனை அழைத்தபடி சென்றாள்

  டாக்டர் குழந்தையை பரிசோதனை செய்தபின் “என்னம்மா இப்படி சூடு வைச்சுருக்கீங்க? குழந்தையின்னா குறும்பு பண்ணத்தான் செய்யும்..அதுக்குப்போயி இப்படியா பண்றது? ஆமா எந்த ஊரு?”

  “திருப்பூ ரு ங்க..”
  “திருப்பூ ரா?” என்று கேட்டபடி டாக்டர் ராசாத்தியை நிமிர்ந்து பார்த்தார் .
  “நானும் திருப்பூ ர்க்காரன் தான் ..திருப்பூ ரில் எந்த பக்கம்?”
  “தென்னம்பாளையமுங்க…”

  “இங்கே எதற்கு வந்தீங்க?..” என டாக்டர் முடிப்பதற்குள்,
  “எங்க அண்ணன் பீச்சுல கடைவெச்சுருக்காரு….”

  “ஓ அவர பாக்கவா? பையன் காலையிலே ஏதாவது சாப்பிட்டானா? ஊசி போடணும்..”
  “களிம்பு மருந்து மாத்திரை எல்லாம் எழுதியிருக்கேன் போய் வாங்கிக்க..கவலைப்படாதே” என்று அவளை ஆறுதல் படுத்தினார்.

  ஆஸபத்திரியிலிருந்து வெளியே வந்தாள் ராசாத்தி…
  பலரிடம் அண்ணன் இருக்கும் இடத்தைப் பற்றிய விசாரிப்பிற்குப் பின், டவுன்பஸ் ஏறினாள்.

  “பீச்செல்லாம் எறங்கு”…கண்டக்டர் விசிலடித்தார்.

  “அம்மா காந்தி தாத்தாம்மா…”
  ம..; என்றாள்.


  வருடத்தில் 3 முறை மட்டுமே நமக்கு காந்தியை தெரியும்.
  அதோ உழைப்பாளர் சிலை…உழைப்பாளர்களுக்காக குரல் கொடுத்த ஏழையின் சிகரம் ஜீ வா .

  அங்கே இருவர் பேசிக் கொண்டிருந்தார்கள்.

  “இந்த ஜீவானந்தம் இருக்காரே..ஒரே ஒரு வேட்டி சட்டையை துவைத்துப் போட்டு, அது காயும் வரை இடுப்பில் துண்டுடன் இருந்தவரைக் கண்ட கர்ம வீரர் காமராஜர் அவர்கள் ஜீவாவுக்கு வேட்டியும் சட்டையும் வாங்கிக் கொடுத்தார்.அந்த எளிமையான தலைவனின் கல்லறை அன்று சிதிலமடைந்து காலி மது பாட்டில் கழிபிடமாக மாறிக் கிடக்கிறது. கம்யூ னிஸட் காரர்கள் இதை கண்டுகொள்வது போல் இல்லை. மேடையில் உரக்க பேசினால் மட்டும் போதாது..வளர்த்;த தலைவனை தலைமுறைக்கு நினைவு படுத்த வேண்டாமா? என்று வேதனையுடன் சொல்லி;க் கொண்டிருந்தார்.”

  ஒவ்வொரு கடையாக விசாரித்தாள் ராசாத்தி,

  அனுதாபத்தில் பதில், அனுசரனையாக பதில், மேலும கீழும் பார்த்து பதில், நையாண்டி நக்கல் பதில்,

  கடைசியில் வந்த பதில்…
  ‘தெரியாதே..அவர் இல்லை..”

  இந்த பதிலுக்காக மாலை 6 மணிவரை கால் கடுக்க குழந்தையை தூக்கிக் கொண்டு நடந்தாள்.

  உழைப்பாளர் சிலை அடியே அமர்ந்து தேம்பி தேம்பி அழுதாள்.
  பித்துபிடித்தவள் போல் குழந்தையை இறுக்க அணைத்துக் கொண்டு மாறி மாறி முத்தமிட்டாள்.


  அப்பொழுது ராசாத்தி அருகே ஒரு சொகுசுக் கார் வந்து நின்றது.
  “என்னம்மா ஏன் என்னாச்சு? ஏன் அழுவுற?” என்று மிடுக்காக இருந்த 50 வயது மதிக்கத்தகக ஒருவர் கேட்டார்.

  தலைநிமிர்ந்த ராசாத்தி நிலைமையைச் சொன்னாள்.
  “ஓ..அந்த ஆளா? அவன் என்கிட்டத்தான் வாட்ச் மேனா இருக்கான்.. காரில் ஏறு” என்று பின்கதவை திறந்து விட்டார்.

  கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல் நினைத்த ராசாத்தி..அவரை கையெடுத்துக் கும்பிட்டாள்.

  பையனுடன் காரில் ஏறினாள்.
  “டேய் தம்பி..முன் சீட்டுக்கு வா..அப்படியே மெட்ராசை வேடிக்கைப்பாரு..”

  எதார்த்தமாக ராசாத்தி மகனை முன்சீட்டுக்கு அனுப்பினாள்.

  அந்த ஆள் பையன் ஏறுவதற்கு வசதியாக முன் கதவைதிறந்துவிட்டு, அதே சமயம் ஒரு பிஸ்கட் பாக்கெட்டை எடுத்தார்.

  திடீரென்று கையிலிருந்த பிஸ்கட் பாக்கெட் கதவைத் திறக்கும் நேரத்தில், தவறி விழுந்தது.

  “அடடே..பிஸ்கட் விழுந்திருச்சே…தம்பி.. கீழே குனிஞ்சு அதை எடு…”
  குழந்தை பிஸ்கட் எடுக்க சென்ற போது, கார் கதவு மூடியபடி விர்ரென்று புறப்பட்டது…

  “அய்யா என் குழந்தை..வண்டியை நிறுத்துங்க..என்ற கத்தினாள் ராசாத்தி….அவளால் அந்த கார் ஜன்னலையையும் திறக்க முடியவில்லை.”
  “அய்யா….காலைப் பிடிச்சு கெஞ்சிக் கேக்கிறேன்….தயவுசெஞ்சு என்னை இறக்கி விடுங்கள் பெத்த வயிறு பற்றி எரியுது”…என்று வெறிப் பிடித்தவள் போல் கதறினாள் ராசாத்தி.

  அந்த பாவி சாதாரணமாக சொன்னான்…
  “உன் பையன் எங்கேயும் போக மாட்டான்…ஒரு பத்தே நிமிசம்…அதோ அங்கே…”
  ஒரு இடத்தை காட்டியபடி காரை ஓட்டினான்.

  குழந்தை அம்மா அம்மா என்று தடுமாறியபடி ஒடி வருவது மட்டும், ராசாத்திக்கு தெரிந்தது.

  ராசாத்தி மற்றும் அந்த குழந்தைக்கு என்ன ஆனது?
  காத்திருங்கள்.

 7. #7
  இனியவர் பண்பட்டவர்
  Join Date
  03 May 2012
  Location
  Bangalore
  Posts
  860
  Post Thanks / Like
  iCash Credits
  23,392
  Downloads
  7
  Uploads
  0
  அய்யயோ...பாவம் ராசாத்தி..அரவிந்த் தம்பி சீக்கிரம் வந்து அம்மாவை எப்டியாவது காப்பாற்றி விடுடா
  வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

 8. #8
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
  Join Date
  03 Jun 2007
  Location
  புதுதில்லி
  Age
  61
  Posts
  2,017
  Post Thanks / Like
  iCash Credits
  21,942
  Downloads
  10
  Uploads
  0
  கதை சுவாரசியமாகப் போகிறது. தொடருங்கள் நண்பரே..

 9. #9
  புதியவர் பண்பட்டவர்
  Join Date
  21 Mar 2009
  Posts
  33
  Post Thanks / Like
  iCash Credits
  10,851
  Downloads
  2
  Uploads
  0

  சட்டத்தின் படி ....(4)

  அந்த பாவி சாதாரணமாக சொன்னான்…
  “உன் பையன் எங்கேயும் போக மாட்டான்…ஒரு பத்தே நிமிசம்…அதோ அங்கே…”
  ஒரு இடத்தை காட்டியபடி காரை ஓட்டினான்.
  குழந்தை அம்மா அம்மா என்று தடுமாறியபடி ஒடி வருவது மட்டும், ராசாத்திக்கு தெரிந்தது  காலை மாலை இருவேலையிலும் அவசரத்தின்மேல் அவசரம் இதற்கு விடையே இல்லையா நகரத்தில்?
  அலுவலர்கள், கல்லூரி மாணவ மாணவிகள், உழைக்கும் தொழிலாளர்கள், வியாபாரிகள், பெண்கள் உட்பட கார், பைக், ஸ்கூட்டர், ஸ்கூட்டியில் பயணிக்கும் போது சிக்னல் விழவதற்குள் போய்விட வேண்டும்.
  அப்படி என்ன அவசரமோ?

  என்ன காரணமாக இருக்கும்?
  மனைவி சொல்லை மந்திரமாக கொண்ட கணவன் ;

  பிஞ்சுகளைக் காப்பகத்திலிருந்து அழைத்து செல்லும் தாய்மார்கள்,

  இந்த ரயிலை விட்டால் பிளாட் பாரம்தான் கதி என கதிகலங்கும் வேலைமுடித்துச்செல்லும் சம்பளதாரர்கள்.

  மாலை உங்களுக்காக ரெடியாயிருப்பேன் சாக்கு போக்கு சொல்லக்கூடாது என்ற புதுமனைவியின் கடட்டளை. இது கடுகளவு தவறினாலும் நிலைமை மோசமாகிவிடும்.

  மூன்று மாதம் தொடர் முயற்சி விடாமுயற்சியுடன் கடை பஸ்ஸடாப், தண்ணீர்பைப் பால்பூத் , கல்லூரி என விடாது சுற்றி, வெற்றியடைந்து காதலித்த காதலி, இன்னும் கால் மணி நேரம் தான் காத்திருப்பாள் அதற்குள் போய்விட வேண்டும் இல்லையேல் பட்ட கஸ்டம் பாலாகிவிடும். என துடிக்கும் இளைஞன்.

  அம்மாவை ஆஸ்பிட்டல் கூட்டி போக வேண்டும்... டாக்டர் அடுத்த கிளினிக் போவதற்குள் போயாக வேண்டும் என்ற மகனின் பாச பரிதவிப்பு.

  மாப்பிள்ளை லேட் பண்ணாதே உனக்காக காத்திருக்கோம்! நீ வந்த பின்தான் ஓப்பன் பண்ணனும் !!! மது பிரியர்களின் அன்புக்கட்டளை.

  அன்றைக்கு கிடைத்த கூலியில் வீட்டு தேவையானதையும், குழந்தைகளுக்கு தேவையானதை வாங்கும் பொறுப்புள்ள குடும்பத்தலைவன்.

  முதலில் டாஸ்மாக்கு, அப்புறம் கடவுள் புண்யத்தில் மிச்சம் மீதியிருந்தால் வீட்டுக்கு என ஒரு பாலிசியே வைத்திருக்கும் சைக்கிலில் சவாரி செய்யும் தொழிலாளி

  வீடு போய் சேருவதற்குள் சீரியல் முடிந்து விடுமா? மனதில் கேள்விக்குறியுடன் பரபரப்போடு பயணத்தை எதிர்கொள்ளும் சில தாய்மார்கள்.

  இப்படி பலரின்; அவசரம் ஆதங்கம் இந்த நகரத்தில்.
  அப்பப்பா எத்தனை விதமான மனிதர்கள் இந்த சென்னையில்….  ராசாத்தியின் மகன் குழந்தை அரவிந்த் “அம்மா அம்மா..” என்றபடி ரோட்டை கடக்க முயல, திடீரென வந்த கார் மோதியது. அம்மா என்ற கத்தலுடன் கீழே விழுந்தான் அரவிந்த்.

  சட்டென நின்றது கார்.

  “பையன் மேலதான் தப்பு,”

  “ஏய்… மெதுவா வந்தாதான் என்ன? கார் போனா வேற கார் வாங்கிக்கலாம் உயிர் போனா வருமா?”

  “போலிஸ்ஸை கூப்பிடு”

  “முதல்ல ஆம்புலன்ச கூப்பிடுங்கய்யா….”

  என்றவாறு பல பேச்சுக்கள் அங்கே.

  ஒரு பெரிய கூட்டமே கூடிவிட்டது.

  காரை ஓட்டிவந்த ஆள் பயந்து நடுங்கியபடி “எம்மேல தப்பு இல்லீங்க”.

  அவனை ஓங்கி ஒரு அறை விட்டார் ஒரு வாட்டசாட்டமான ஆள். “என்னடா வண்டி ஓட்டுற ராஸ்கல்..”

  குழந்தையை தன் மடியில் தூக்கி வைத்து காலிலுள்ள ரத்தத்ததை துடைத்தபடி 101க்கு போன் செய்தார்.

  அப்போது கூட்டத்தைப்பார்த்து அங்கு வந்த டாக்டர் ஞானி பையனைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

  “காலையில்தான் அவனுடைய அம்மாவும் அந்த குழந்தையும் எங்கிட்டே சிகிச்சை எடுத்தாங்;க… எங்கப்பா உங்கம்மா…? என்று பையனை பரிசோதனை செய்தபடி கேட்டார் டாக்டர் ஞானி.

  “அம்மா… அம்மா கார்லே போச்சு” என்று வலியால் அழுதபடி சொன்னான் அரவிந்த்.


  பாருங்கள் இதுதான் விதியென்பது….

  அந்த வழியே…ராசாத்தியையும் குழந்தையையும் தேடிவந்த வேலு கூட்டம் கூடியிருப்பதைப் பார்த்து…இங்கே யாவது இருப்பார்களா? என்று யோசித்தபடி… “இருக்கணும் கடவுளே… கருணைக் காட்டு” என்று கடவுளை மனதார வேண்டியபடி கூட்டத்தை விலக்கிவிட்டு உள்ளே எட்டிப்பார்த்தான்.

  அவனுக்கு தலையில் இடியே விழுந்ததது போல் இருந்தது.
  “மகனே அரவிந்த்” தென்று கத்தினான்.

  கூட்டம் மொத்தமும் அவனை பலவித பார்வையில் பார்த்தது.

  அப்பாவின் குரலைக் கேட்டவுடன் “அப்பா” என்றான் அரவிந்த்.

  ஓடிச் சென்று டாக்;டரிடமிருந்து மகனை வாரி எடுக்க முயன்றான்.

  “இந்தாப்பா குழந்தை.. என் கூட எடுத்து வா” என காரை நோக்கி சென்றார் டாக்டர்.

  கூட்டத்தை திரும்பி பார்த்து “நான் கவர்மெண்ட் டாக்டர்.. பெயர் ஞானி. என்னுடைய கிளினிக்குக்கு பையனை எடுத்து போறேன் நானே போலிசுக்கும் கம்ப்ளைண்ட் கொடுத்துடுறேன் அடி ஒண்ணும் பலமா இல்லை. பயப்பட வேண்டாம்”

  போகும் போது மோதிய கார் காரனிடம் அவன் முகவரி அனைத்தையும் பெற்றுக் கொண்டார் டாக்டர்.

  “உங்க பேரு என்ன? ஊசி போட்டபடி சின்னக் காயம் தான் பயப்பட தேவையில்லை.”

  வேலுங்க ஐயா…

  “காலையிலேதான் அவனுக்கு சிகியளித்தேன் அம்மா எங்கப்பா ன்னு கேட்டா காரிலே போயிருச்சிங்குறான்? என்ன உங்களுக்குள்ளே ஏதாவது சண்டையா?”

  தலைதலையாய் அடித்துக் கொண்டு “ஆமாம் டாக்டர் ஆமாம். இந்த மொடாக்குடிகாரன் தினம் தினம் குடிச்சட்டு அவளை சந்தேகபட்டு அடி அடின்னு அடிச்சிடுவேங்க.. புள்ளைத்தாச்சின்னு கூட பாக்காம போதையிலே மிதந்திருக்கேங்க.. ஒருநாள் அவளை சூடு வைக்க போனப்ப.., தடுத்த என் புள்ளை மீது பட்டு அதுல காயம் வந்ததுதான் டாக்டர் இது” என்று மகன் காலைக் காட்டியபடி கதறி அழுதான் வேலு.

  “இந்தாப்பா வேலு குடி குடியைக் கெடுக்கும் என்பது உன் விசயத்தில் எவ்வளவு உணை;மை பாத்தியா,? இப்போ குடும்பம் போச்சே…ச்சே.. கவலைப்படாதே எப்படியும் உனக்கு உன் மனைவி கிடைப்பாள். பார் உன் கண்ணில் இருக்கும் மஞ்சள் நிறம், கை கால் நடுக்கம், இர் எல்லாம நுரையீரல் கெட்டுப் போன அறிகுறி … பரிசோதிக்காமலேயே தெரியுது…

  ஒருத்தன் வறுமையோடு வாழ்நாள் எல்லாம் வாழ்ந்திடலாம,; உழைப்பால் முன்னேறிடலாம் ஆனால் வாழ்நாள் முழுவதுமாக மருந்து மாத்திரையோடு வாழ்வதுதான் கொடுமையிலும் கொடுமை.

  இயற்கையா வர்ற வியாதியை மருந்து மூலம் குணப்படுததிடலாம் ஆனால் தானா தேடிப்பிடித்த வியாதியை குணப்படுத்துவதுதான் கஸ்டம். அது ஒயிருக்கே உலை வைத்துவிடும்”

  இப்போ மனைவியை இழந்து அதுவும் கர்ப்பிணி வேறு போ தேடி போய் கண்டுபிடி..”
  “சரி போட்டோ இருக்கா,’

  “இல்லைங்க..”

  “சரி முடிந்தளவு தேடிப்பார். இரவில் தங்குவத்ற்கு வேண்டுமானால் கிளினிக்கில் படுத்துக்கோ”.என்று சொல்லிவிட்டு பர்சை எடுத்து 1000 ரூபாய் கொடுத்தார் கருணையின் மறுவடிவம் ஞானி.

  (அட்மிட் ஆனவுடன் கவுண்டரில் ஆயிரக்கணக்கில் எணம் கட்ட சொல்லும் மருத்துவர் உலகில் இப்படி ஓர் உயர்ந்த உள்ளம்)

  டாக்டரிடம் விடைபெற்ற வேலு மகனைக்கூட்டிக்கொண்டு மீண்டும் ரயில்வே ஸ்டேசனுக்கு சென்றான்.

  ஒரு ரூபாய் காயின் பாக்சில் தான் வைத்திருந்த கார்டிலுள்ள நம்பருக்கு போன் செய்தான்;;;;;;;;;;;;;;;;;.

  மறுமுனையில்

  “Hello”

  யார் சொன்னது அந்த Hello……

  அடுத்தவாரம் வரை காத்திருங்கள்.

 10. #10
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  253,039
  Downloads
  39
  Uploads
  0
  ரொம்ப விறுவிறுப்பாத்தான் போகுது. ஆரம்பிச்ச கொஞ்ச அத்தியாயத்துலேயே பல சம்பவங்கள் நடந்துடிச்சே....காரில் கடத்தப்பட்ட அம்மா கிடைப்பாளா....வேலு திருந்துவானா...இன்னும் கொடுங்க....!!!

  (கதை உங்களோடது இல்லைங்கற பட்சத்துல இந்தக் கதை இருக்க வேண்டிய பகுதி படித்ததில் பிடித்தது. இந்தப் பகுதி சொந்த படைப்புகளுக்கு மட்டுமே ஒட்டக்கூத்தன்)
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 11. #11
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
  Join Date
  23 Dec 2008
  Location
  ஆஸ்திரேலியா
  Age
  52
  Posts
  7,283
  Post Thanks / Like
  iCash Credits
  101,486
  Downloads
  21
  Uploads
  1
  ஒட்டக்கூத்தன் அவர்களே...

  இரண்டுமுறை தனிமடலிட்டும் என் சந்தேகத்துக்குத் தாங்கள் பதிலளிக்கவில்லை. இது தங்களுடைய சொந்தப்படைப்பெனில் தயங்காமல் சொல்லலாம். வெறொருவருடையது எனில் இது அதற்கான பகுதி இல்லை. படித்ததில் பிடித்தது பகுதியில் பதிய வேண்டும். எனவே விரைவில் பதிலளியுங்கள். இல்லையெனில் இப்படைப்பு இங்கிருந்து அகற்றப்படும்.

 12. #12
  புதியவர் பண்பட்டவர்
  Join Date
  21 Mar 2009
  Posts
  33
  Post Thanks / Like
  iCash Credits
  10,851
  Downloads
  2
  Uploads
  0
  அன்பார்ந்த உறவுகளுக்கு வணக்கம், கீதம் அவர்களே
  இந்த தொடர்கதை நான் எழுதுவது தான். சுந்தரகனகு என்ற புனை பெயரில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •