உங்க நேர்மை எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ப பிடிச்சிருக்கு ஒட்டகூத்தரே...!!![]()
உங்க நேர்மை எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ப பிடிச்சிருக்கு ஒட்டகூத்தரே...!!![]()
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
சட்டத்தின் படி( 8) ....-சுவாரஷ்யமான தொடர்கதை
சென்ற வாரம்
கதவை திறந்துக் கொண்டு நிறைமாத கர்ப்பிணி ஒருவள் வெளியேவந்தாள். அப்போது ராசாத்தியைப் பார்த்து பானுவும், பானுவைப்பார்த்து ராசாத்தியும் திகைத்து நின்றார்கள்.
எதற்காக…..இந்த திகைப்பு?
வேலுவையும் அவன் குழந்தையையும் பேக்டரிக்கு வெளியே நிற்க வைத்துவிட்டு மேனேசரிடம் பனியன் பண்டலை நல்லமுறையில் சேர்த்ததை பெற்றுக்கொண்டவரின் கையப்பமுள்ள நகல்களை சமர்பித்துவிட்டு திரும்பிய பொழுது,
என்னப்பா இப்பத்தான் வந்தியா? சரி சரி ரொம்ப களைப்பாயிருப்ப.. போய் ரெஸ்ட் எடு.. என்றார் கம்பெனி முதலாளி திவாகரன்.
டீரைவர் ஏதோ சொல்ல முற்படுவதற்குள் திவாகரின் செல் அலறியது.
'மனேஜர் டிரைவர் மணி எங்கே?'
'சார் நீங்கத்தான் அவருக்கு லீவு கொடுத்து அனுப்பி வைச்சிட்டீங்க' என்றார் பவ்யமாக…
லாரி டிரைவரைப்பார்த்து 'நீ ரொம்ப டயர்டா இருக்கிறீயா? வண்டி ஓட்டுவியா?'
'முதலாளி எனக்கு தெரிந்த ஆள் ஒருத்தர் இருக்கிறார்.. அவரு கார் ஓட்டுவார்'
என்று ஆபீஜ் ருமின் ஜன்னல் வழியே வேலுவைக்காட்டினான்;.
'அவரைக் கூப்பிடுய்யா…'
'வேலு இங்க வாப்பா'…அழைத்தவன் லாரி டிரைவர்.
தன் குழந்தையுடன் முதலாளியின் அறைக்குள் பவ்யமாக வந்து நின்றான் வேலு.
'ஏப்பா கார் ஓட்டுவியா?'
'ஓட்டுவேன் முதலாளி ஆனால் லைசன்ஸ் இல்லை'
'ம்ம்ம…சரி அது பரவாயில்லை..இது யார் உன் குழந்தையா?'
'ஆமாங்க…'
'மேனேசர் நாங்க வர்ர வரைக்கும் குழந்தையை வாட்ச் மேனிடம் பார்த்துக்க சொல்லு.'
லாரி டிரைவரைப் பார்த்து 'சரிப்பா வேலைப் போட்டு கொடுத்துடலாம் நாளை காலை என்னை வந்து பார்.'
வேலு பின் சீட்டுக் கதவை திறந்து விட்டான் திவாகரன் அமர்ந்தபடி
'திருப்பூர்ல உனக்கு எல்லா இடமும் தெரியுமா?' ஏன்றார்.
'தெரியுமுங்க..'
'சரி ஹோட்டல் வேலனுக்கு போ…Buyer வெயிட் பண்ணீட்டு இருப்பார்.'
வேலுவினுடைய டிரைவிங்கில் இருந்த நிதானம், சாலை விதிமுறைகளை அனுசரித்தல், மொத்தத்தில் அனுபவமுள்ள ஓட்டுனரின் திறமை யிருந்ததை கண்டு மனதுக்குள்ளேயே பராட்டினார் திவாகரன்.
'உனக்கு பனியன் கம்பனியில் என்ன வேலை தெரியும்?'
'முதலாளி நான் ஏழு வயசிலிருந்தே பனியன் கம்பனிகளில் வேலை செய்யறேன.கை மடிக்கறதுலயிருந்து கட்டிங், டெய்லரிங், அயன், பரிண்டிங், டையிங்ன்னு எல்லா செக்சனிலும் வேலை செஞ்சிருக்கேன் '.
'உன் குடும்பம் எல்லாம் எங்கே யிருக்காங்க?''
இந்த கேள்வியை வேலு சற்றும் எதிர்பார்க்கவில்லை. உண்மையைச்சொன்னால் வேலை கொடுப்பாரா? இல்லை ஒரு குடும்பத்தை காப்பாற்ற வழி தெரியாத உனக்கு எத்தனை வேலை தெரிந்தாலும் ஒழுங்காக வேலை செய்ய முடியாது என்று எண்ணி வேலைக் கொடுக்காவிட்டால் என்ன செய்வது என்று மனதுக்குள்ளேயே நீண்டநேரம் யோசித்தான் வேலு.
அதற்குள் ஹோட்டலையடைந்தது கார்.
தன்னை சுதாரித்துக் கொண்ட வேலு காரை சரியான இடத்தில் நிறுத்திவிட்டு பின்கதவை பவ்யமாக திறந்தான் திவாகரன் முன்னே செல்ல பின்னாலேயே ஓடிவந்தான் வேலு.
"முதலாளி சூட்கேஜ் மறந்துட்டீங்க".
திவாகரன் வேலுவை மேலும் கீழும் பார்த்தபடி சூட்கேஸை வாங்கிக் கொண்டு ஹோட்டலுக்குள் சென்றான்.
உள்ளுர் ஏஜென்ட் Buyer யை அறிமுகப்படுத்தினார்.
Glad to meet you Mr Diwagaran என்றார் அந்த வெளிநாட்டு Buyer
Thank you very much Sir என்றபடி இருவரும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு தங்கள் வியாபாரத்தை பற்றி பேச ஆரம்பித்தார்கள்.
"Mr. we want XXL size black and blue color T shirt with must be picture of our President of America."
"Oh..Sure sir…I am bring this cloth material for show you as a sample and Also this is our documents where we doing business with some other good companies in America.. .Please see.."
"Good Diwakaran it is surprising. I am so happy to see this you are having business connection with our Nation..this cloth is very nice…it may be suitable for that T shirt. Ok…well…we need 1,50000 pieces next October…ok? Can you do this?"
"Sure sir…no problem."
என்றபடி அவர்களது பிஸினஸ் பேச்சுவார்த்தைகள் இனிதாக முடிந்தது.'
இந்த சிறிய இடைவெளியில் காரை சுத்தமாக துடைத்து வைத்திருந்தான் வேலு.
முதலாளி வருவதை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டி|ருந்தான்.
திவாகரன் பேச்சுவார்த்தையை முடித்தபடி மகிழ்ச்சியாக வெளியே வந்தான்…
.
வேலு கார் கதவை திறந்து விட, ஏறி அமர்ந்தான் திவாகரன்.
'பேக்டரிக்கு போப்பா…ஆமா நான் குடும்பத்தைப் பற்றிக் கேட்டதற்கு ஒண்ணும் பதிலேக் காணோம்?' ஏன்று பழையதை ஞாபகப் படுத்தினர் திவாகரன்
'ஒரு முடிவுக்கு வந்தவனாக உண்மையை சொல்லுவோம்.. பொய்க்கும,; குடிக்கும் ஒரு முற்றுப் புள்ளி வைப்போம் என்ற முடிவுடன்
முதலாளி சின்ன வயசிலே அம்மா இறந்துட்டாங்க எனக்கு அம்மாங்கற பேர்ல வந்த ஒருத்தியால சரியான சாப்பாடு, படிப்பு. எதுவுமே கிடைக்காம போச்சு. ஏழு வயசிலிருந்தே உழைக்க ஆரம்பிச்சுட்டேன்.கூட்டாளிகளுடன் சேர்ந்து குடிக்கவும் ஆரம்பிச்சுட்டேன்.
சொல்றதுக்கு இருந்த அம்மாவும் அப்பாவும் போயிட்டாங்க ஆனால் சொந்தக் காரங்களாப் பார்த்து தூரத்து உறவுக்கார பெண்ணை கல்யாணம் பண்ணி வைச்சாங்க..அவளை செய்யாத சித்ரவரையெல்லாம் செஞ்சேன். மூணு வருசமா அத்தணையையும் பொறுத்தவ…( சற்று நிறுத்திபோன மாசத்துல ஒருநாள் கோவிச்சுக்கிட்டு பையனைக் கூட்டிட்டு சென்னைக்கு போயிட்டா..அப்புறம் அதை கேள்விப்பட்டு நானும் சென்னைக்கு போயி அவளை தேடி தேடி அலைஞ்சேன்…கடைசியில அவளை பார்க்கவே முடியல…என் பையன் மட்டும்தான் கிடைச்சான்"..என்று தேம்பி தேம்பி அழுதபடி சொல்லி முடித்தான் வேலு.
கார் பேக்டரியை வந்தடைந்தது.
வேலு இறங்கி திவாகருக்காக காரின் பின்பக்க கதவை திறந்துவிட முயலுவதற்குள்,
ஏதோ பதற்றத்தில் இருப்பவனாக திவாகரே கதவை திறந்து சூட்கேஸை எடுத்துக் கொண்டு விறு விறு என்று ஆபீஸ் அறைக்குள் நுழைந்தான்.
வேலு தன்னை தவறாக முதலாளி நினைத்து விட்டாரோ என்று செய்வதறியாது நின்றான்.
அடிமேல் அடி என்பது இதுதானோ?
என்னதான் நடக்கும் என்பதை அறிய அடுத்தவாரம் வரை காத்திருங்களேன்.
வேலுவுக்கு வேலை கிடைச்சாச்சு...ஆனா...அவன் கதையைக் கேட்டதும் முதலாளி ஏன் பதட்டப்பட்டார்....சுவாரசியமான அத்தியாய முடிவு. நல்லாருக்குங்க ஒட்டக்கூத்தன்...தொடருங்க.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
சட்டத்தின் படி (9)
சென்ற வாரம்
ஏதோ பதற்றத்தில் இருப்பவனாக திவாகரே கதவை திறந்து சூட்கேஸை எடுத்துக் கொண்டு விறு விறு என்று ஆபீஸ் அறைக்குள் நுழைந்தான்.
வேலு தன்னை தவறாக முதலாளி நினைத்து விட்டாரோ என்று செய்வதறியாது நின்றான்.
பார்வையில் பலவிதம் என்ற உண்மை பானுவின் பார்வையில் ராசாத்தியைப் பார்க்கும் பார்வை வினாடிக்கு வினாடி மாறுபட்டது.
மோனோலிசாவின் பார்வையைப் போல் இருந்தது பானுவின் பார்வை. ஒன்றும் புரியவில்லை முத்துவிற்கு.
கோபம் வெறுப்பு ஏளனம் கடைசியில் ராசாத்தியை ஏற இறங்க பார்த்தபின் கொஞ்சம் அனுதாப பார்வைத் தெரிந்தது. ஒன்றும் பேசாமல் பார்வையால் உள்ளே வா என்பது போல் இருந்தது அவள் பார்வை.
முத்து செல்ல ராசாத்தி பின் தொடர்ந்தாள்.
கோயமுத்தூர் சுற்றுவட்டார மண்ணுக்கே சொந்தமான முதல் உபசரிப்பு, யார் வந்தாலும் வந்தவர்க்கு முதலில் தண்ணீர் கொடுப்பது. எங்கிருந்தோ வந்தவர்கள் தாகத்திலிருந்து தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஆண்டாண்டு காலமாய் இந்த பழக்கம் இன்னும் இந்த கொங்கு மண்ணில் இருக்கிறது.
பானு என்கின்ற இந்த பானுமதி கோயமுத்தூரைச் சேர்ந்தவள். வீட்டார் பார்த்து முத்துவிற்கு மணமுடித்து வைத்தார்கள். மிகவும் நல்ல பழக்கம் கொண்ட ஒரு குடும்பப் பெண். ஆனால் என்ன?.. கொஞ்சம் சந்தேகப் புத்தி.
உள்ளே சென்ற பானு, ராசாத்திக்கு செம்பு நிறையத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.
“என்ன முழுகாம இருக்கியா?”
தலையை குனிந்தபடி “ம்” என்றாள் ராசாத்தி.
சற்று பதற்றமான முகத்துடன் ராசாத்தியையே பார்த்துக்கொண்டிருந்தாள் பானு.
முத்துவின் சம்பாதனை இந்த வீட்டில் வயிற்றுக்கு மட்டும் சரியாக இருந்தது. சின்ன வீடு. மொத்தம் இரண்டே அறைகள் தான். ஒன்று வந்தவர் அமருவதற்கு. அல்லது படுப்பதற்கு, இன்னொன்று சமையல் செய்ய.
ஏதோ மனதில் தோன்றியவளாய் வேகமாக சமையல் அறைக்குள் சென்றாள் பானு.
“என்னங்க….”
பானுவின் குரல் சற்று சப்தமாகவும், கோபமாகவும் இருந்தது.
முத்து “என்ன பானு” என்றபடி உள்ளே சென்றான்.
“மெதுவாய் பேசு பானு” என்றான் முத்து.
“இனி பேசறதுக்கு என்ன இருக்கு? அதுதான் கூட்டிட்டு வந்துட்டியே ஒரு சக்களத்தியை…”
தங்கச்சியாய் நினைத்து பாசத்தோடு கூட்டி வந்தவளை சக்களத்தி என்று சொன்னவுடன் கோபம் வருவதற்கு முன்பே அவன் கை அவள் கன்னத்தை நோக்கி விரைந்தது.
“பளார்” என்று ஓர் அறை விட்டான் முத்து.
பானுவிற்கு மின்னல் தெறித்தது போல் இருந்தது அந்த அடி. வலி தாங்காமல் ஓ எனக் கத்தினாள்.
அந்த சப்தத்தை கேட்டு பதறியபடி உள்ளே வந்த ராசாத்தி…
“அண்ணா அண்ணியை அடிக்காதீங்க..என்னால உங்களுக்கு பிரச்சனை வேண்டாம். நான் இங்க இருக்க விரும்பல..அண்ணா நிறைமாசத்துல அண்ணி இருக்குறாங்க..அவங்களை போய் அடிக்கலாமா? இது தப்பில்லையா?” என்று கண்ணீர் மல்க கை யெடுத்துக் கும்பிட்டபடி ராசாத்தி வெளியே புறப்படத் தயாரான போது…
பானுமதி சற்றே யோசித்தவளாய், ராசாத்தியை தடுத்து நிறுத்தினாள்.
“எப்போ நீங்க என்னை அண்ணியா ஏத்துக்கிட்டீங்களோ இனிமே நீங்களும் எனக்கு அண்ணிதான். உட்காருங்க நீங்க எங்கேயும் போக வேண்டாம். இங்கயே என் கூடவே இருங்க”…என்று கண்ணீர் கன்ன மேட்டில் வழிந்தபடி பாச உணர்வுடன் சொன்னாள் பானு.
ராசாத்தி பேச வார்த்தையில்லாமல் வாய் விக்கித்து நின்றாள். அந்த இருவரின் பாசக்குவியலில் சிக்குண்டு மூச்சு திணறியபடி கண்ணீh.; விட்டாள்.
“சரி..அதுதான் சொல்லிட்டாளே..உள்ளே போய் உட்காரு தங்கச்சி”…முத்துவுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. மனைவியை நினைத்து பெருமைப்பட்டான் முத்து.
“மாசமா இருக்கிறாள் இல்ல…காலையில இருந்து சாப்பிட்டு இருக்கமாட்டா .. போய் ஏதாவது பண்ணிக் கொடு”.. பாசத்தோடு கணவன் என்கிற உரிமையோடு உத்திரவிட்டான்.
“ஆமா ஆமா…இருங்க அண்ணி ..அண்ணன் கூட பேசிட்டு இருங்க… கொஞ்ச நேரத்துலேயே சாப்பாடு செஞ்சுத் தரேன்” என்று சமையல் கட்டுக்குள் போன பானுமதியை ராசாத்தி தடுத்து,
“அண்ணி நான் சமைக்கிறேன்.. நீங்களும் அண்ணனும் பேசிட்டுயிருங்க.எந்தெந்த பொருட்கள் எங்கேயிருக்குன்னு சொன்னா மட்டும் போதும்” என்றாள் ராசாத்தி.
அனைத்து டப்பாவையும் திறந்துக் காட்டினாள் பானு.
பானுசும் ராசாத்தியும் பேசுவதைப் பார்த்து சந்தோசத்துடன் நின்றான் முத்து.
“ஏங்க உங்க தங்கச்சிக்கு முதன் முதலா சாப்பாடு கவுச்சியோட போடலாம்… ஏதாவது போய் வாங்கிட்டு வாங்க…” என்றாள் பானு.
“அண்ணி நான் இனிமேல் இங்கதானே யிருக்கப் போறேன்..இப்போதைக்கு சாம்பாரும்,மிளகுரசமும் பொறியலும் செய்தாலே போதும்..என்ன அண்ணா உங்களுக்கு போதுமா?”
“ராசாத்தி எனக்கு போதும் எதுக்கும் உங்க அண்ணியை ஒரு வார்த்தைக் கேட்டுக்கோ”
“அண்ணி.. நானும், உங்க அண்ணனும் காத்தாட வெளியில் இருக்கோம்”.. என்று சொல்லிவிட்டு வெளித்திண்ணையில வந்து பானுமதியும், முத்துவும் உட்கார்ந்தார்கள்..
“பானு எதற்கு வெளியே வந்தேன்னு எனக்கு தெரியும் ராசாத்தியின் கதையை கேட்கத்தானே?”
“ஆமா சொல்லுங்க அவங்க யாரு? ஆனா.. என்னமோ எனக்கு அவுங்க நல்லவங்களாத்தான் தெரியுது.”
முத்து கடற்கரையில் நடந்த முழுக் கதையையும் ஒன்றுவிடாமல் விபரமாகக் கூறினான்.
“அடப்பாவி தங்கமானவளை தறுதலை அநாதையாக்கிட்டானே?! குழந்தையின் கதி என்ன ஆச்சோ?” என்று கண் கலங்கினாள் பானுமதி.
“அண்ணா அண்ணி வாங்க சாப்பிடலாம”;
இருவருக்கும் சாதம் வைத்தாள்
“அண்ணி நீங்களும் உட்காருங்க”
“இல்லே நீங்க ரெண்டு பேரும் முதல்ல சாப்பிடுங்க .. அப்புறம் நான் வாப்பிடுறேன்” என்றாள் ராசாத்தி
சமையலை கணவனும் மனைவியுமு; மாறி மாறி புகழ்ந்து கொண்டே சாப்பிட்டார்கள்.
கடவுளே இவங்களுக்கு என் வேதனை தெரிய வேண்டாம் என்னோடு இருக்கட்டும். அதற்கு எனக்கு தைரியத்தை கொடு என்று கடவுளை மனதார வேண்டினாள் ராசாத்தி.
விடிகாலை சுமார் 5 மணியளலில் பானுவிற்கு பிரசவ வலி மெல்ல மெல்ல அதிகரித்தது
அண்ணி என்று வலியால் முணுமுணுத்தாள்.
இன்னும் சில நேரத்தில் புதுக் குழந்தை இந்த மண்ணிற்கு வரப்போகிறது. அவளுக்கு இது முதல் பிரசவம் வேறு. பயந்தபடி கதறத் தொடங்கினாள். வயிறும் இரண்டு குழந்தைகள் இருப்பது போல் பெரிதாகவே இருந்தது. பனிக்குடம் கொஞ்சம் கொஞ்சமாக உடைவதற்கு தயாராகி கொண்டிருந்தது.
ராசாத்தி அடனே எழுந்து பானுமதியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அண்ணா ஏதாவது வண்டியை கூட்டிட்டு வாங்க..உடனே ஆஸ்பத்திரிக்கு போகனும்.
பதறி துடித்துக் கொண்டு எழுந்த முத்து அஞ்சரைப் பெட்டி முதல் அரிசி டின் வரை எல்லாவற்றையும் தேடி எடுத்த பணம் 1200 ஐ தொட்டது.
இதைப் பார்தத ராசாத்தி அண்ணா “இந்தாங்க இதையும் புடிங்க”..என்று தன்னிடமுள்ள சில ஐநூறு ருபாய் அநாட்டுகளை கொடுத்தாள். (கடற்கரையில் தன்னை கற்பழித்த அந்த காமுகன் கொடுத்தப் பணம்)
பானுமதியுடைய அழுகை சப்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்திலுள்ளவர்களும் ஓடி வந்தார்கள்.
அதற்குள் ஒருவர் 101 போன் செய்தார்.
ஆம்புலன்ஸ் வந்ததும் ராசாத்தி, முத்து பிறர் உதவியுடன் பானுவை ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்க்ள்.
பானுமதியின் அழுகை அவளின் பிரசவ வேதனையை சொல்லாமல் சொல்லியது. அவசர அவசரமாக முத்துவிடம் கையெழுத்து வாங்கினார்கள் அங்குள்ள மருத்துவ ஊழியர்கள்.
ஆப்ரேசன் தியேட்டருக்குள் பானுமதி கொண்டுச் செல்லப்பட்டாள்.
பின்னாலேயே பதற்றத்துடன் சென்ற முத்துவையும், ராசாத்தியையும் தடுத்து நிறுத்தினார் ஒரு நர்ஸ்.
“நீங்கல்லாம் இங்கயே இருங்க…”
டாக்டர் புனிதா உள்ளே சென்ற 30 நிமிடத்தில் குழந்தை அழும் குரல் கேட்டது.
முத்துவுக்கும் ராசாத்திக்கும் ஆனந்த அதிர்வை அந்த மழலையின் முதல் அழுதை ஏற்படுத்தியது.ஆனந்தக் கண்ணீர் விட்டான் முத்து.
டாக்டர் புனிதா சிரித்த முகத்துடன் “ஆண் குழந்தை பிறந்திருக்கு”..என்றபடி குழந்தையை ராசாத்தியிடம் கொடுத்தார்.
என் செல்லம்..இதோடா அப்பா பாரு…அத்தையைப் பாரு என்றபடி முத்தமிட்டாள். இருவரும் மாறி மாறி குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது ஆப்பரேசன் தியேட்டரிலிருந்து பானுவின் அலறல் சத்தம் மீண்டும் கேட்டது.
ஒரு நர்ஸ் அங்கிருந்து டாக்டர் அறைக்கு வேகமாக பதறி அடித்தபடி வேர்க்க விறுவிறுக்க ஓடினாள்.
மின்னல் வேகத்தில் புனிதா டாக்டரும் அவரோடு இன்னும் சில டாக்டர்களும் ஆப்பரேசன் தியேட்டருக்குள் நுழைந்தார்கள்.
முத்துவும் ராசாத்தியும் கையில் குழந்தையோடு இதைப் பார்த்து, எதற்காக இப்படி வேகமாக போகிறார்கள் என்றபடி பயந்து போய் இருவரும் மூச்சடைத்து நின்றார்கள்.
என்ன நடந்தது பானுவிற்கு?....அடுத்த வாரம் காத்திருங்களேன்.
என்ன நடந்திருக்கும்..? இன்னொரு குழந்தை பிறந்திருக்கும்.. அவ்வளவுதான்..![]()
ஆர்வத்தினை தூண்டும் தொடர்கதை ...தொடருங்கள் தோழர்...
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
சட்டத்தின் படி (10)
சென்ற வாரம்
முத்துவும் ராசாத்தியும் கையில் குழந்தையோடு இதைப் பார்த்து, எதற்காக இப்படி வேகமாக போகிறார்கள் என்றபடி பயந்து போய் இருவரும் மூச்சடைத்து நின்றார்கள்.
திவாகரன் வருவதற்கு பவ்யமாக கதவைத் திறந்து விட்டு ஏசியை ஆன் செய்தான் ஆபீஸ் பியூ ன்.
கோட்டை கழட்டிவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின், இன்டர்காமில் மேனேசரை அழைத்து பேக்டரி விசயங்கள் அனைத்தையும் தெரிந்துக் கொண்ட பின் மேற்கொண்டு செய்ய வேண்டியவைகளையும் மற்றும் புதிதாக கிடைத்து இருக்கிற ஆடர்களை பற்றியும் இருவரும் விவாதித்தார்கள்.
நிட்டிங் சூப்பர்வைசர் வந்தாரா?
இல்லைங்க சார்…வேலைக்கு இனிமேல் வரமாட்டார் என்றார் மேனேசர்.
திவாகரன் கண்களாலேயே ஏன் என்றார்
நமக்கு வர வேண்டிய நூல் பண்டல்களை வேறு கம்பெனிக்கு அவர் அனுப்பி வைத்து கமிசன் பெற்ற அந்த விவகாரம் நிருபணமாகி விட்டது. அதை நான் தட்டிக் கேட்டேன். சண்டை போட்டுக் கொண்டு போய் விட்டார். என்று தயக்கத்துடன் சொன்னார் அந்த மேனேசர்.
வெரி குட். கேள்விப்பட்டேன். நானும் அதைப்பத்தி கேட்கலாமுன்னுதான் நினைச்சிட்டு இருந்தேன். நான் என்ன செய்யனுமுன்னு நினைச்சேனோ அதைத்தான் நீங்க செஞ்சு இருக்கீங்க. உடனே அவருடைய ரூமை காலி பண்ணிடுங்க.
நிட்டிங், கட்டிங,; ஓவர்லாக், பேட்லாக், பிரிண்டிங், செக்கிங், அயர்னிங், பேக்கிங் என அனைத்து செக்சன் சூப்பர் வைசர்களுடன் சென்று ஆய்வு நடத்திவிட்டு மறுபடியும் ஆபிஸ்க்குள் நுழைந்தார்.
டேபிளின் மீது இருந்த பைல்களை எடுத்துப் பார்த்து கையெழுத்து போட்டுவிட்டு, இண்டர்காமில் மேனேசரிடம் ஏதோ பேசிவிட்டு டையிங் பேக்டரிக்கு செல்ல காரில் புறப்பட்டு சென்றார்.
அவர் போன சிறிது நேரத்தில் ஆபிஸ்க்கு வெளியே பவ்யமாக “என்ன நினைத்தாரோ முதலாளி” என்ற குழப்பத்துடன் தன் மகனுடன் நின்றுக் கொண்டிருந்த வேலுவை அழைத்தார் அந்த மேனேஜர்.
இந்தாப்பா பையனும் நீயும் அந்த கேண்டினுக்கு சென்று சாப்பிட்டு இங்கே வாங்க… கேண்டீனுக்கு போன் பண்ணி சொல்லிட்டேன் போங்க என்றார்.
வேலு மகனுடன் கேண்டீனில் திருப்தியாக சாப்பிட்டு விட்டு மேனேசர் ரூம் அருகே வந்து நின்றான்.
டையிங் பேக்டரியிலிருந்து திவாகரன் "என்ன ரெண்டு ஜெனரேட்டர்களும் ரிப்பேரா? இன்சார்ஜ் எங்கே போனார்?" என்றபடி படு கோபமாக அங்கிருந்த ஒருவரை திட்டிக் கொண்டிருந்தார்.
சார் இன்சார்ஜ் எங்கயோ வெளியில போறதா சொல்லிட்டு போனாரு…
உடனே மேனேஜருக்கு போன் செய்தார் திவாகரன்.
என்னய்யா வேலைப் பாக்குறீங்க? காலையில சேம்பல் கொடுத்தாகனும் என்ன செய்வீங்களோ ஏது செயிவீங்களோ எனக்குத் தெரியாது. இன்னும் அரைமணி நேரத்துக்குள் ஜெனரேட்டர் ஓடியாகனும் என்று மிரட்டியபடி போனைக் கட் செய்தார்.
டையிங் இன்சார்ஜ்க்கும் மெக்கானிக்குக்கும் எத்தனை தடவைசொன்னாலும் மண்டையில ஏறாது இப்போ என் தலையிலதான் கட்டிட்டு போயிட்டாரு முதலாளி. அவனுங்க வரட்டும் நாளைக்கு பார்த்துக்கிறேன் என்றபடி அந்த மேனேசர் புலம்பிக்கொண்டிருந்தார்.
“அங்கு நின்றுக் கொண்டிருந்த வேலு மிகவும் பணிவாக அய்;யா எனக்கு ஜெனரேட்டரெல்லாம் ரிப்பேர் பாக்கத் தெரியுமுங்க..மெக்கானிக்கிடம் 5 வருசம் ஹெல்பரா வேலை பாத்திருக்கேன்”;.
வேலுவை ஏற இறங்க பார்த்த மேனேசர் “உனக்கு மெக்கானிக் வொர்க் தெரியுமா? ஓட வைச்சுருவியா?”
“ஐயா ஜெனரேட்டரை பார்த்தபின்தான் என்ன போயிருக்கிறது என்பதை சொல்ல முடியும். அதை பார்த்து பின் கண்டிப்பாக ஓட வைத்து விட முடியும”; என்றான் வேலு.
உடனே திவாகரனுக்கு போனில் தகவல் சொன்னார் மேனேசர்.
உடனே வேலுவையும் அவர் மகனையும் கூட்டிக்கொண்டு மேனேசர் காரில் டையிங் பேக்டரியை அடைந்தார்.
ஜெனரேட்டர் அருகில் நின்றிருந்த திவாகரனை வேலு கும்பிட்டபடி “ஐயா” என்றான்
“போப்பா போய் என்னென்னு பாரு”
ஜெனரேட்டரை ஆன் செய்தான் வேலு. கர் கர் என்ற சப்தம் மட்டும் வந்தது
உடனே ஏதோ யோசித்தவனாய் அருகிலுள்ள டூல் பாக்ஸிலிருந்து ஸ்பேனரை எடுத்து டீசல் டியூபை கழற்றி விட்டான். பிறகு உள்ளிருந்த பில்டரை அனைத்தையும் கழட்டினான். அவன் நினைத்தபடியே டீசல் அடைத்துக் கொண்டிருந்தது எல்லாவற்றையும் சுத்தம் செய்துக் கொண்டிருக்கையில்…
அங்குள்ள பணியாட்கள் ஒருவர் மீது ஒருவர் பழி போட்டுக் கொண்டு சண்டைப் போட்டுக் கொண்டிருந்தார்.
திவாகரன் “நிறுத்துங்க..உங்களைப் பத்தி எனக்கு நல்லாவேத் தெரியும். ஒரு பானை சோத்துக்கு”… என்று திவாகரன் முடிப்பதற்குள்
வேலுவின் மகன் “ஒரு குண்டா சாம்பார் ”; என்றான்.
திவாகரன் உட்பட அனைவரும் கொல் என்று சிரித்தனர்.
அவனுடைய தலையை மெல்ல வருடிக் கொடுத்தான் வேலு.
எல்லாவற்றையும் சரியாக பொருத்தியபின் ஜெனரேட்டரை ஸ்ட்டார்ட் செய்தான் வேலு. ஜெனரேட்டர் ஓடத் துவங்கியது. அனைவரின் முகத்திலும் சந்தோசம் தெரிந்தது.
“இந்தாப்பா ம்ம் வேலு நீ இங்கேயேயிருந்து ஜெனரேட்டரை பார்த்துக்கோ.! என்றபடி மானேசரிடம் பையனை தன்னுடைய ஆபிஸ் ரூமில் தங்க வைக்கும் படி சொல்லிவிட்டு பேக்டரிக்கு காரில் சென்றார்
ஒரு மணி நேரத்திற்குபின் தன் மகனை காண வேலு MD ரூம்மிற்கு சென்றார்.
மகனை காணவில்லை
ஒவ்வொரு இடமாக தேடினான் எங்கும் பையனில்லை.
RO plant (ஆழமான தொட்டி) அங்கேயும் பரபரப்பாக அங்கும் இங்கும் ஓடி பார்த்தான். பையனை காணவில்லை என்று செய்தி பரவ தொழிலாளிகள் ஆளுக்கு ஒரு பக்கமாக தேடி பார்த்தனர் வேலு தன்னையும் அறியாமல் மகனே மகனே என்று சப்தமாக அழுதான். அப்போது மேனேசரின் செல் அலறியது.
எங்காவது தொலைந்து போய் விட்டானா வேலுவின் மகன்?
அடுத்தவாரம் பார்ப்போமா?
சென்ற வாரம்
RO plant (ஆழமான தொட்டி) அங்கேயும் பரபரப்பாக அங்கும் இங்கும் ஓடி பார்த்தான். பையனை காணவில்லை என்று செய்தி பரவ தொழிலாளிகள் ஆளுக்கு ஒரு பக்கமாக தேடி பார்த்தனர் வேலு தன்னையும் அறியாமல் மகனே மகனே என்று சப்தமாக அழுதான். அப்போது மேனேசரின் செல் அலறியது.
(11)
அரைமணி நேரம் கழித்து டாக்டர் வெளியே வந்தார் அவரின் முகம் வாட்டமாகவும் சோர்வாகவும் இருந்தது.
டாக்டர்…..என்றழைத்தபடி முத்துவும,; ராசாத்தியும் அவரை நெருங்கினார்கள.
கருப்பை ரொம்ப பலவீனமா இருந்ததாலே வலி தாங்க முடியாம ரத்தப் போக்கு அதிகமாகிப் போச்சு. ரத்த அழுத்தமும் கம்மியாயிட்டே இருக்கு. என்னால் முடிந்த அளவுக்கு சிகிச்சையளித்துவிட்டேன். இனி கடவுளின் கையில்தான,;; உள்ளேபோய் பாருங்கள் என்று விரக்தியுடன் கூறியபடி சென்றார்.
அய்யோ என்று அலறியபடி, இருவரும் மிகுந்த சோகத்துடன் கண்களில் கவலை ததும்பும் கண்ணீரை துடைத்தபடி லேபர் வார்டுக்குள் சென்றார்கள்;.
அங்கே…அருகில் குழந்தையுடன் படுத்துக் கிடந்த பானு, தன் உயிர் போனாலும் உன்னை உயிரோடு பெற்|றுவிட்டேன், உன்னை பிரியப் போகிறேனே என்று கண்கலங்க அரை மயக்கத்தில் வலியோடு அந்த சின்னக் குழந்தையைப் பார்த்தபடி கிடந்தாள்.
உள்ளே வந்த இருவரையும் பார்த்தாள். அழக்கூட முடியாமல் தயங்கி தயங்கி, அருகில் வந்த ராசாத்தியிடம் சன்னமான குரலில்,
“அண்ணி இனி நான் …..”
“இல்லை அண்ணி உங்களுக்கு ஒன்றும் ஆகாது.” வந்த துக்கத்தை நெஞ்சிலே அடக்கியபடி ஆறுதல் சொன்னாள் ராசாத்தி.
முத்து, தன் தோளிலிருந்த துண்டை வாயில் வைத்தபடி….“பானு பயப்படாதே என்னை விட்டு போகவிடமாட்டேன்” பானுமதி கரத்தைப் பற்றியவாறு முத்து கதறினான். அவனையறியாமல் ஆண்மையையும் மீறி, கண்களிலிருந்து கண்ணீர் வந்தது.
இதுதான் தாம்பத்யத்தின்; உண்மையான உறவோ?
பானு…குழந்தையை கையில் எடுக்கும் படி கண் ஜாடையில் கூற, ராசாத்தி குழந்தையை எடுத்து பானுமதியின் கழுத்தருகே காண்பித்தாள்.
பலமுறை அந்த பிஞ்சுவை முத்தமிட்டபடி, “அண்ணி இனி நான் பிழைக்க மாட்டேன. இந்த குழந்தைக்கு இனி நீங்கள்தான் தாயும் , அத்தையும்.கடவுளா பார்த்துத்தான் உங்களை எங்களுக்கு கொடுத்துள்ளார்.’ என்று கண்கலங்க அழுதாள் பானு.
என்ன செய்வது என்றே தெரியாமல் நின்ற முத்துவைப் பார்த்து, “என்னங்க எந்த காலத்திலும் உங்க தங்கையை கைவிட்டுடாதீங்க” என்று தன் கணவரை பார்த்து கூறியபடி விக்கித்து சொன்ன பானுவின் கண்ணுக்கு தெரியாத உயிர் பிரிந்தது.
ராசாத்தி கையிலுள்ள குழந்தையை அணைத்தப்படி கதறினாள்..
தலைதலையாக அடித்துக் கொண்டு முத்து அழுது புரண்டான்.
என்ன செய்வது? ஆண்டாண்டு காலமாய் அழுது புரண்டாலும், மாண்டார் வருவதில்லை.
வந்த உயிரை பானுமதி தந்த உயிரை கண்ணும் கருத்துமாக காப்பாற்றுவதில் ராசாத்தி மிகவும் அக்கறை செலுத்தினாள்.
காலத்தின் சக்கரம் எவ்வளவு வலிமை வாய்ந்தது தெரியுமா? ஒரு நிமிடம் என்பது எவ்வளவு உயர்நதது என்பது சோம்பேறிக்கும் உழைக்கத் தெரியாதவர்க்கும் தெரிந்திருக்க நியாயமில்லை
ஊன் உறக்கமில்லாமல் உழைத்தவர்களின் கணடுபிடிப்பால் இன்றைக்கு இரவினில் இருளில்லை. விஞ்ஞான வளர்ச்சியின் பரிமாணமே நேரத்தை நேசித்ததன் விளைவுதான். அதன் பயனை இன்று நாம் அனுபவித்துக் கொண்டுயிருக்கிறோம்.
மாதங்கள் கடந்தன.
நிறைமாத கர்ப்பிணி ராசாத்தி, நான்கு மாத குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்துக் கொண்டிருக்கிற பொழுது பிரசவலி எடுததது.
பல்லைக் கடித்துக் கொண்டு, குழந்தையை தொட்டிலில் விட்டு விட்டு, அவளையும் அறியாமல் அம்மா என்று கத்தினாள்
அந்த சப்தம் எட்டு வீடு தாண்டியும் கேட்டது.
இதே சப்தம் பணக்காரர் குடியிருக்கும் அபார்ட்மெண்டில் கேட்டிருந்தால் யாரும் அவ்வளவு சீக்கிரம் வர மாட்டடார்கள.
ஆனால் அந்த பகுதி ஏழைகள் வாழும்; என்பதால், போட்டது போட்டபடி பெண்களும் ஆண்களும் முத்துவின் வீட்டிற்கு ஓடி வந்தார்கள்.
நிலமையுணர்ந்த பெண்கள், ஆண்களை வெளியேபோக சொல்லிவிட்டு, ஆறுதலாக “கொஞ்சம் பொறுத்துக்கம்மா” என்று படி, வயதில் முதிர்ந்த தாய்மார்கள்.. பிரசவ ஏற்பாட்டினைச் செய்தனர் மணிகணக்கில் இல்லை... சில நிமிடத்ததில் குழந்தையின் அழுகை சப்தம்…. அழகான பெண்குழந்தையை ஈன்றெடுத்தாள்.
எங்கேயோ சென்றுவிட்டு வந்த முத்துவிடம் “இந்தாட முத்து…. உன் தங்கைக்கு பெண்குழந்தை பொறந்திருக்கு, போய் பேறுகால செலவு வாங்கிட்டு வா” (பேறுகால செலவு என்றால் குழந்தை பெற்றவளுக்கு கொடுக்க கூடியவை துவையளாகசும் கசாயமாகசும் கொடுப்பார்கள் இன்று மருத்துவமனையில் நடப்பது வேறு.)
முகமெல்லாம் பூ ரிப்பான முத்து “இதோ ஒரு நிமிடம்” என்று கடைக்கு ஓடினான்.
செலவுடன் வந்த முத்து, குழந்தையை எடுத்து மகிழ்ந்தாள். சில நாட்கள் பக்கத்து வீட்டுத்தாய்மார்கள் முத்துவினுடைய குழந்தையையும் பச்ச ஒடம்புக்காரியான ராசாத்தியைகவனித்துக் கொண்டார்கள்.
உடல் தேறிய ராசாத்தி, தன் குழந்தைக்கு தன்னுடைய தாய் பாலையையும,; முத்துவினுடைய குழந்தைக்கு புட்டிபாலையையும் தன் மடியில் படுக்க வைத்துக் கொடுத்துக்கொண்டிருந்தாள்.
அப்போது முத்துவின் குழந்தையினுடைய பிஞ்சு விரல், ராசாத்தியின் மார்பை வருடியது.
திகைத்துப் போன ராசாத்தி பக்க வீட்டு பாட்டியிடம், முத்துவினுடைய குழந்தையைப் பார்க்க சொல்லிவிட்டு, பூ க்கடைக்கு சென்றாள்.
பூ க் கடையில் மலராத மல்லிகையும், காய்கறிக்கடைக்கு சென்று ஒரு கோஸ்(காய்) வாங்கி வந்து மார்பு மீது மல்லிகை பூ வை வைத்து, அதன் மீது கோஸ் இலையை வைத்துக் கட்டினாள்.
முத்துவின் குழந்தையை எடுத்து வந்த பாட்டி, ஏதேச்சையாகப் பார்த்துவிட்டு
“உனக்கொன்ன பைத்தயமா? அப்படி செய்யாதே பால் வற்றி போகும்.”
“இல்லைம்மா குழந்தைக்கு ஏம்மார்பு பால் குடிக்கனும் ஆசை”.
“கொடுக்க வேண்டியதுதானே ?”
“அம்மா இதென்ன கொடுமை இவன் என் மருமகன்” அதான் பார்க்கிறேன்…”
“இந்த குழந்தையும் பாவம் இல்லையா? தாய்ப்பால் இல்லாமல் குழந்தை நொடுஞ்சிப் போகாதா? மனசாட்சியோட யோசிச்சு பாரு. உறவைப்பத்தி அப்புறம் யோசி. ஆமா…இந்தா இதுக்கு முடிவெடுக்க வேண்டியது நீதான்.” என்று சொல்லிவிட்டு ஏதோ அவசரஅவசரமாக சென்றாள் பக்கத்துவீட்டு பாட்டி.
என்ன முடிவு என்பதை அடுத்த வாரம் பார்ப்போமா?
சட்டத்தின் படி(12) ....-சுவாரஷ்யமான தொடர்கதை
சென்ற வாரம்
“இந்த குழந்தையும் பாவம் இல்லையா? தாய்ப்பால் இல்லாமல் குழந்தை நொடுஞ்சிப் போகாதா? மனசாட்சியோட யோசிச்சு பாரு. உறவைப்பத்தி அப்புறம் யோசி. ஆமா…இந்தா இதுக்கு முடிவெடுக்க வேண்டியது நீதான்.” என்று சொல்லிவிட்டு ஏதோ அவசரஅவசரமாக சென்றாள் பக்கத்துவீட்டு பாட்டி.
“சார் சொல்லுங்க சார்”
“பக்கத்துலே வேலுயிருந்தா செல்லக்குடுப்பா”
வேலு முதலாளி என்றபடி வேலுவிடம் வெல்லை கொடுத்தார் மனேசர்
“ஐயா வணக்கம்”
“வேலு உன் பையன்கூட பேசிட்டு இருந்தேன். அப்போ அவனுடைய காலில் தீக்காயம் இருந்ததைப் பார்த்தேன். உடனே உன்னிடம் சொல்லாமல் ஆஸ்ப்பிட்டல் கூட்டி வந்துவிட்டேன்”
“ஐயா …நீங்க…. என் பையன் மேல..”
“ரொம்ப அக்கரையின்னு கேக்குற?”
“யோவ் வேலு.. உன் பையன் ரொம்ப புத்திசாலி. நான் வாய்விட்டு சிரிச்சு ரொம்ப நாளாச்சு. அவன் சொன்ன ஜோக்குலே நான் என்னயே மறந்து சிரிச்சிட்டேன்யா.. என்னன்னு சொல்லறேன் கேளு. பழமொழி ஒரு வரி தான் சொன்னேன். அடுத்தவரி அவன் சொன்னது என்னத் தெரியுமா?
தம்பியுடையார்…அண்ணன் செட்டியர்
நல்ல மாட்டுக்கு 2கிலோ புண்ணாக்கு
தோல் கொடுப்பான் கறிக்கடை பாய்”
என்று சிரித்தபடி சொன்னார் முதலாளி திவாகரன்.
சிறிது நேர மவுனத்திற்கு “கவலைப்படாதே பையனை பங்களாவுக்கு கூட்டிட்டு போறேன். காலையிலே பேக்கரிக்கு வந்துடு.”
அடுத்தநாள் காலையில் தன் குழந்தை முதலாளி திவாகரனுடன் காரில் புது துணியணிந்தபடி முதலாளியின் கையை பிடித்தபடி காரிலிருந்து இறங்கி வந்தான்.
இக்காட்சியை கண்ட வேலு மற்றும் ஊழியர்கள் திகைப்புடனும், அதிர்ச்சியுடனும் பார்த்தார்கள்.
வேலுவை ஆபிஜ்க்கு வரும்படி ஜாடையில் அழைத்தவாறு முதலாளி சென்றார்
“பையனுக்கு என்ன வயசாச்சு”
“ஐயா 5 முடிஞ்சு 6 வயசாச்சு”.
‘இனி நீ பழைய வீட்டை காலி செஞ்சுட்டு பேக்டரி வீட்டிலே தங்கிடு. ஸ்கூல்லே சேர்த்திடலாம். பையனை படிக்க வைக்கிறது என் செலவு”.
எப்படி இந்த ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைத்தது. கடவுளே உனக்கு நன்றி.சொல்வதா முதலாளிக்கு நன்றி சொல்வதா இல்லை இங்கு என்னை வேலைக்கு சேர்த்தாரே டிரைவருக்கு நன்றி சொல்வதா என்று நினைத்து மலைபோல் சிலையாக நின்ற வேலுவைப்பார்த்து
“என்னப்பா நான் பாட்டுக்கு சொல்லிட்டேயிருக்கேன். நீ பேசாமயிருக்க?”
'முதலாளி"
“உன் குடும்பத்தை பற்றி. எல்லாம் டிரைவரிடமும் உன் பையனிடமும் கேட்டு தெரிஞ்குக்கிட்டேன். ஆனால் உன்னிடம் நிறை இருப்பதை மனேசர் மூலமாகவும் நேரிடையாகவும் தெரிந்தது. உனக்கு பனியன் கம்பெனியில் என்ன என்ன வேலைத் தெரியுமோ அத்தனையையும் செய்ய உனக்கு முழு உரிமை தருகிறேன் ஆனால் தப்பு தண்டா நடந்தால் நடக்கிறதே வேற”. என்று கடும் எச்சரிக்கை யோடு சொன்னார்.
பத்தாண்டு கால இரவு பகல் என்று பாரமல் நேரத்தை அலட்சியப்படுத்தாமல் தன்னை அரவணைத்த பனியன் பேக்டரி முதலாளியின் நம்பிக்கையும் பெற்றார் வேலு. உழைப்புடன் சேர்ந்து நாணயமும் இருந்தததால் இன்று வேலு முதலாளி திவாகரின் வலது கை மட்டுமல்லாமல் ஒர்கிங் பார்ட்னர் என்ற நிலை வரை உயர்ந்தான்.
எல்லா தொழிலும் தெரிந்தால் மட்டும் போhதாது உண்மை வேண்டும் கடமைக்காக உழைப்பது வயிரை கழுவ மட்டுமே உதவும். அதையே தன்னுடைய தொழிலாக நினைத்தால் உயர்வு தானக தேடி வரும் என்பதற்கு வேலு ஒரு உதாரணம்.
குடிகாரனாக, ஒழுக்கத்தை ஒதுக்கி வைத்தவனாக. மனைவியைப் பிரிந்து இனி வாழ்க்கையே இல்லை என்ற அளவு இருந்த வேலுவுக்கு இந்த உயர் நிலைக்கு வரக் காரணம் நேர்மையான உழைப்பு.
வேலுவின் செல் மணியடித்தது.
சொல்லுங்க முதலாளி…..
….
ஆடிட்டர் ஆபிஸ்லதான் இருக்கேன்…
….
அமௌண்ட் போட்டாச்சு…
;;;;;;……….
லண்டன் ஜெர்மனிக்கு அவர்கள் கேட்ட ஆர்டர் முழுவதும் பையர் மூலமா அனுப்பிட்டேன்.அமெரிக்க பையர்க்காக வெயிட்டிங் பண்ணிட்டு இருக்கோம்.
………
நோ ப்ராப்ளம்…யூ னியன் லீடர்க்கிட்ட பேசி எல்லா பிரச்சனையையும் சால்வ் பண்ணிட்டேன்.
;;;;;……………
இன்சினியர்கிட்டப் பிளானைப்பற்றி முழுமையா சொல்லிட்டேன் இலர் ஒரு வருசத்தில் கட்டிடத்தை முடித்து தர்ரேன்னு சொல்லிட்டாரு.
……….
பாரின்லேயிருந்து நாலு கம்பெனியிடமிருந்து மெசினரி கொட்டீடசன் வந்திருக்கு நீங்க சொன்னா டிக் பண்றேன்.
……….
சரிங்க டிக் பண்ணி அ|னுப்பிச்சறேன். நாளைக்கு புது பேக்டரி கட்டறதுக்கு
பூ மி பூ சை போடனும் நீங்க அவசியம் வரணும்.
……….
அரவிந்த்க்கு இன்னைக்கு தான் 10 வது ரிசல்ட் வருதாம். அவன் கம்ப்யூ ட்டர் முன்னாடி உட்கார்ந்திருக்கான்.
பெரிசா தெரியலைங்க…பார்ப்போம்…என்ன நடக்க போகுதுன்னு…..
என்று செல்லை பேசி முடித்துவிட்டு ஆப் செய்தான் வேலு……
யார் அந்த அரவிந்த்…..அவனது ரிசல்ட் என்ன ஆக போகுது…….
அடுத்த வராம் வரை காத்திருங்களேன் …
சும்மா சொல்ல கூடாது இப்படியும் இன்று நடக்குமா எனும் எண்ணம் தோன்றினாலும் அந்த எண்ணத்தையும் தாண்டி செல்கிறது கதை அருமை ஒட்டகூத்தன் தொடருங்கள்....
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
சென்ற வாரம் அம்மா இதென்ன கொடுமை இவன் என் மருமகன்” அதான் பார்க்கிறேன்…”
“இந்த குழந்தையும் பாவம் இல்லையா? தாய்ப்பால் இல்லாமல் குழந்தை நொடுஞ்சிப் போகாதா? மனசாட்சியோட யோசிச்சு பாரு. உறவைப்பத்தி அப்புறம் யோசி. ஆமா…இந்தா இதுக்கு முடிவெடுக்க வேண்டியது நீதான்.” என்று சொல்லிவிட்டு ஏதோ அவசரஅவசரமாக சென்றாள் பக்கத்துவீட்டு பாட்டி.
“அக்கா எப்படியிருக்க?”
“வாடி சின்னதாயி அஞ்சு வருசம் கழிச்சு வந்துட்டு எப்படியிருக்கேன்னா கேக்குற?”
“என்னக்கா செய்யறது அந்த மனுசன் போனதுக்கப்புறம் பின்னாலே எல்லாவும் என் தலையிலேதான்”
“ஆமாடி ஆம்பிள்ளைங்க உசுரோட இருக்கிறவரைக்கும் அவங்க அருமை தெரியாது போனதுக்கப்புறம்தான் அருமை பெருமை எல்லாம் தெரியும். சரி பையனுக்கு புள்ளைக்கு கல்யாணம் காட்சியெல்லாம் எப்போ?”
“அது எல்லாம் கடனஒடன வாங்கி முடிச்சுவைச்சுட்டேன்.ஆனால...”;
“என்ன சின்னதாயி ஆனகூனா விசயத்தை சொல்லு”
“பொண்ணும் பையனும் மருமகனும் தனிகுடித்தனம் போயிட்டாங்க.”
“இப்போ நான் நீ செஞ்சத அவங்களும் செஞ்சுரக்காங்க...நாளை அது புள்ளைகளும் அப்படிதான் செய்யும் இது வாழையடி வாழையா வருவதுதான
“அதுவும் சரிதான் ஆமா அந்த ராசாத்தி... ம...; அஞ்சு வருசத்திற்கு முன்னாடி நீ சொன்னது பச்சமரத்திலே ஆணி அடிச்சமாதிரி அப்படியே நெனப்பிலே இருக்கு. ஆமா அவ என்ன முடிவெடுத்தா?”
“ஏண்டி தெரியாமத்தான் கேக்குறேன..; அஞ்சு வருசம் எத்தனை சங்கதி, உங்க குடும்பத்திலும் உன் சொந்தக்கார குடும்பத்திலும் நடந்திருக்கும?; அதையெல்லாம் மறந்திட்டு அடுத்தவ சங்கதியை மடடும் எப்படிடீ மறக்காம அதை தெரிஞ்சுக்க பேயா பறக்கிறீங்க?”
“அய்யோ அக்கா அதுக்கில்லை. பெத்த குழந்தையும் பெறாத குழந்தையையும் முத்துக்கிட்டயே கொடுத்துட்டு போயிட்டாளோ என்னவோமுன்னு நெனச்சேன்”!.
“நெனப்படி நெனப்ப.. இந்த அஞ்சு வருசம் எனக்கு தெரிஞ்சதை சொல்றேன் கேட்டுக்கோ. தன் மடியிலே ரெண்டுக் குழந்தைகளையும் படுக்க வைச்சு தன்னோடு குழந்தைக்கு தன் பாலையும் முத்துக் குழந்தைக்:கு பால்புட்டியை தன் மார்பிலே வைச்சு கொடுத்தாடி, தன்னோட குழந்தையைவிட ஒருபடி முத்து குழந்தையை நல்லவிதமா பாத்துக்கிட்டா”
“அப்படி எத்தனை வருசமா கொடுத்தா அக்கா?”
“யேய் இவளே சுகம் விசாரிக்க வந்தீயா ..இல்ல...ஏன் வாயிலே நல்ல வார்த்தை வந்துடும் போடீ..”
ஹிக்கும்...கன்னத்தில் இடித்தபடி சென்றாள் நலம் விசாரிக்க வந்த சின்னதாயி.
முத்து வந்துக்கொண்டே “என்ன ஆத்தா... எப்போதும் வராத சின்னதாயி இப்போ வந்திருக்கு”
“அஞ்சு வருசம் கழிச்சு வந்ததற்கே உன்னையும் உன் தங்கச்சியையும் பிரிக்கிற வழியைத் தேடுறா.! வருசாவருசம் வந்தாள்னா இந்த ஊரே ரெண்டுபட்டுபோக வைச்சுரவாடா இந்த சின்னதாயி.”
“அட உடுங்க ஆத்தா..அது பொம்பளைகளின் பொறந்த குணம் தானே...”
“அடி செருப்பால டேய் நானும் பொம்பளைதாண்டா...”
“அய்யோ ஆத்தா நீ பொம்பளையில்ல தெய்வம்...”
பின்னே?
“தெய்வம் ஆத்தா தெய்வம்.”
ராசாத்தி வந்துக் கொண்டே “அண்ணே யாரைன்னே தெய்வம் ன்னு சொல்றீங்க?”
“வேறு யாரை, எல்லாம் நம்ம ஆத்தாளைத்தான்.”
“நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் ஆத்தா மற்றவங்களுக்கு எப்படியோ என்க்கு அம்மாளுக்கு அம்மா சாமிக்கு சாமி.”
கண்ணீரும் கம்பளையுமாக அந்த ஆத்தா..
“ஆமா ராசா நீ எப்போ வந்தியோ அன்னையிலிருந்து செத்துப் போன என் மகள் மருஜென்மம் எடுத்து வந்த மாதிரித்தான்”
“ஆத்தா நீங்க எங்க இதுவரைக்கும..?; என்று கேட்க நினைத்த ராசாத்தியை மேலும் பேச வேண்டாம் என்றபடி சைகைக் காட்டினான் முத்து
“ஏண்டா அவள அடக்குற? கட்டி வைச்ச கட்டுச் சோறும், முத்திப்போன கத்திரிக்காயும் முழகாத முட்டச்சிகதையும் என்னைக்காவது வெளியில வந்துதானடா ஆகனும்.”!
புருசன் வேறொருத்தியைக் கட்டிக்கிட்டு ஓடிப்போனதுக்கப்புறம், அவன்கூட இருந்தா புள்ளை கெட்டுப்போயிருவான்னு, ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு ரொம்ப செல்லமா வளர்த்த புள்ளையை அவன்கிட்டயிருந்து பிரிச்சு, தனியாள நின்னு பொத்தி பொத்தி வளர்த்தேன்.”
“என் கஷ்டம் அறிஞ்சு நல்லாப் படிப்பான்ன்னு நினைச்சு கஷ்டப்பட்டு காலேஜ்ல சேத்தேன்.அங்கத்தான் விதி விளையாடிடுச்சு டுர் போன இடத்திலே...என்று ஆத்தா சொல்ல ஆரம்பிப்பதற்குள் முத்து வசிக்கும் தெருவை சேர்ந்;தவர் ஓட்டமாக வந்து மூச்சிறைக்க
“முத்துண்ணே பள்ளிக்கூடம் விட்டு பிள்ளைகள் வரும் போது வேற ஒரு பள்ளிக்கூட பஸ் இடிச்சு ரெண்டு குழந்தைகள் மேல ஏறிடுச்சாம”;,
ராசாத்தி பதறியபடி “அண்ணே எந்த பள்ளிக்கூடம்மின்னு கேட்டீங்களா?”
“அதுதாம்மா உங்க குழந்தைகள் படிக்கிற பள்ளிக் கூடம்தான்.”
ராசாத்தி நெஞ்சு நெஞ்சாக அடித்துக் கொண்டு பள்ளிக்கூடம் நோக்கி ஓடினாள்.
முத்துவும் ராசாத்தியை தொடர்ந்து ஓடினாள். ஆத்தாவும் அழுதபடி வா
ய்க்கு வந்த வார்த்தைகளில் அந்த பஸ் காரனை சாபமிட்டபடி ஒடினாள்.....
என்ன நடந்தது? இவர்களது பிள்ளைகளுக்கு...விபத்தில் இறந்து விட்டார்களா?
சட்டத்தின் படி(14) ....-சுவாரஷ்யமான தொடர்கதை
சென்ற வாரம் அரவிந்த்க்கு இன்னைக்கு தான் 10 வது ரிசல்ட் வருதாம். அவன் கம்ப்யூ ட்டர் முன்னாடி உட்கார்ந்திருக்கான்.
பெரிசா தெரியலைங்க…பார்ப்போம்…என்ன நடக்க போகுதுன்னு…..
என்று செல்லை பேசி முடித்துவிட்டு ஆப் செய்தான் வேலு……
வேலு மிகவும் கவனத்துடன் ஒவ்வொரு பைலாக பார்த்துக்கொண்டிருந்தார். தன் மகன் அரவிந்த் காலில் விழுந்துக கொண்டிருப்பதைகூட அவர் கவனிக்கவில்லை.
சுற்று பொறுமையிழந்த அரவிந்த் “ அப்பா என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கப்பா… நான் மாநிலத்தில் 2 வதுமாணவனாக பாஸாயிட்டேன்.” ஏன்று மகி;ழ்ச்சி பொங்க சொன்னான்.
ஏவ்வித சலனமுமின்றி சந்தோசத்தை காட்டாமல் எந்திரிப்பா என்றார் வேலு.
“என்னப்பா மாநிலத்தில் 2 வது மாணவனாக பாஸ் பண்ணியிருக்கேன….; கொஞ்சம் கூட சந்தோசமா இல்லையே..?”
“இல்லைப்பா நான் உன்னை படிக்க வைச்சிருந்தேனா… பாஸ் பண்ணியிருப்ப.. ஆனால் இந்த அளவுக்கு வந்திருக்க மாட்ட, உன்னை ஆசிர்வாதம் பண்ணறதுக்கோ சந்தோசப்படறதுக்கோ எனக்கு உரிமையில்லப்பா.”.
“என்னப்பா சொல்லறீங்க? நீங்க என்ன பெத்த அப்பா”…
“இல்லைன்னு சொல்லலையே? உங்க அம்மாவை தொலைச்சிட்டு உன்னை மட்டும் கூட்டிட்டு வந்த எனக்கு இந்த பேக்டரியில் எல்லா உரிமையும் கொடுத்து கணக்கு வழக்குகளையும் பார்க்க, பேச சொல்லிக் கொடுத்து இன்னைக்கு இந்த பேக்டரியின் ஒர்க்கிங் பார்ட்டனரா உயர்ந்த நிலைமைக்கு…..”
“அது உங்களோடு கடினமான உழைப்பின் பிரதி பலன் தானப்பா”
அரவிந்தனுடைய கன்னத்தில் பளார் என்று அறைந்து “என்னடா உழைப்பு? பெரிய உழைப்பு? இந்த பேக்டரியில் 20 வருசம் 30 வருசமா வேலை செஞ்சவனுங்க உழைக்காததை விடவா நான் கடுமையா உழைச்சுட்டேன்.? முதலாளிக்கு நாமென்ன ஒட்டா? உறவா? நம்மள இத்தனை ஒசரத்திலே வைச்சுயிருக்காரு. இவருயில்லைன்னா நீ படிச்சே யிருக்கமாட்ட…நானும் குடிச்சுட்டு தெரு தெருவா அலைஞ்சுட்டுத்தாயிருந்திருப்பேன். என்னை பற்றி டிரைவர் முழுக்கதையையும் சொல்லியும் அவரா இதுவரைக்கும் என்கிட்ட கேட்டதில்லை நானும் சொன்னதில்லை. இப்ப சொல்லு…நீ மொதல்ல யார் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கியிருக்கணும்.?
அரவிந்த் தலைகுனிந்தபடி “சரி இப்பவே போறேன்பா…”
“நான் தான் உன்னை ஆசிர்வாதம் பண்ண வந்துட்டேனே… என்ன மாநிலத்தில் முதலாவதா வருவன்னு எதிர்பார்த்தேன், பரவாயில்லை 12 வகுப்பில் கண்டிப்பா வருவ…காலில் விழுந்த அரவிந்தை தொட்டு ஆசிர்வதித்தபடி வேலு புது பேக்டரிக்கு பூமி பூஜை போடணும்ன்னு சொன்னேன்ல்ல…போலாமா?”
ஐயா…..
ஐயா …ஜோசியரை பார்த்துவிட்டு வந்தேன்…
என்ன வேலு…என்ன நாள் நட்சத்திரம் கிரகம் இதிலே எதாவது?
ஆமாங்கய்யா……….
“வேலு எந்த ஜோசியர்கிட்ட ஜோசியம் பார்த்து நல்ல நேரம் பார்த்து எங்கிட்ட வேலை கேட்டியா இல்லை நாதான் உனக்கு நல்ல நேரம் பார்த்து வேலைக்கு சேர்;த்தேனா?. நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்து அத்தனை பேரின் ஆசிர்வாதம் பெற்ற புது மாப்பிள்ளை புது பெண்ணுமே சில நாட்களில் கோயிலுக்கு சாமி கும்பிட போற வழியில கார் ஆக்சிடன்ட்ல செத்ததை எத்தனை பத்திரிக்கைகளில் பார்த்திருக்கோம்? சரி சரி உன் விருப்பபடியே செய்ப்பா..”
“இல்லை..முதலாளி இப்பவே பூமி பூஜை போடலாம்”
“வேலு இன்னொரு முக்கியமான விசயம் இவன் ப்ளஸ் 2 முடிப்பதற்கு முன்னமே பேக்டரி வேலையெல்லாம் முடிச்சிடனும்…டேய் அரவிந்த்….”
ஐயா….
ம்ம்…இந்ந ஸ்கூலியே படிக்கிறயா இல்லை…வேற ஸ்கூல சேர்ந்துப் படிக்கிறயா?
ஐயா எப்படி சொன்னாலும் சம்மதம் தாய்யா…
“ஏண்டா நானா படிக்கப் போறேன்…? இந்த நன்றி கின்றி நெனச்சு உன் படிப்பை பாழாக்கிடாதே..உனக்கு என்ன விருப்பமோ அதை செய் என்னடா முழிக்கிற?
வேலு வா போய் பூமி பூஜை போடலாம். டேய் நல்லா யோசித்து சொல்” என்றபடி முதலாளி திவாகரனும் வேலுவும் பூமி பூஜை போட சென்றார்கள்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks