Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 21 of 21

Thread: நாற்பதடி வெண்பா: நல்லியற்கை நல்கியதாம் நல்லுணவை நாமுண்போம்

                  
   
   
  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    இன்னிசை கலிவெண்பாவில் உங்களின் உளசுவையும் நளசுவையும் ஒருங்கே கண்டு உள்ளம் களிப்புற்றேன்.. தயாளன் ஐயா..!!

    எனக்கு மரபுகளின் வரம்புகள் தெரியாது..புரியாது.. இருந்தாலும் வரிகளுக்கு இடையே இடைவெளிவிட்டு பத்திகளாக்கி பதிந்தால் வாசகர்களுக்கு வாசிக்க வசீகரமாய் இருக்குமென்று தோன்றுகிறது... என் கூற்றில் தவறெனில் மன்னிக்க வேண்டுகிறேன் ஐயா..!!

    இயற்கை உணவின் அவசியத்தை எள்ளலுடன் எடுத்தியம்பிய மரபுகவிதைக்கு நன்றி ஐயா..!! தொடர்ந்து கவிபாடுங்கள்..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  2. #14
    இனியவர் பண்பட்டவர் Dr.சுந்தரராஜ் தயாளன்'s Avatar
    Join Date
    17 Feb 2012
    Location
    Bangalore, Karnataka, India
    Age
    71
    Posts
    698
    Post Thanks / Like
    iCash Credits
    15,892
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by கலைவேந்தன் View Post
    தங்களை ஒருமுறையேனும் சந்திக்கவேண்டும் என்னும் ஆவல் மிகுகிறது ஐயா.. அடுத்தமுறை ஊருக்கு வந்தால் பெங்களூரில் தங்களைச் சந்திப்பேன் இன்ஷா அல்லாஹ்..!
    தாராளமாக, கலைவேந்தன் அவர்களே...நானும் உங்களை சந்திக்க ஆவலுடன் உள்ளேன். அடுத்தமுறை ஊருக்கு வரும்போது சொல்லுங்கள் அதற்குத் தகுந்தார்ப் போல் ஏற்பாடு செய்யலாம்.

  3. #15
    இனியவர் பண்பட்டவர் Dr.சுந்தரராஜ் தயாளன்'s Avatar
    Join Date
    17 Feb 2012
    Location
    Bangalore, Karnataka, India
    Age
    71
    Posts
    698
    Post Thanks / Like
    iCash Credits
    15,892
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    வெகு அருமை....எனச் சொன்னாலும் அது சம்பிரதாயமே. இதமான கவிதை.....பதமாக பகிரும் நல்லுணவு தகவல்கள் நல்ல கவி வடிவத்தில், தெள்ளுதமிழ் வெண்பாவில் அள்ளுகிறது மனதை.

    மனமார்ந்த பாராட்டுக்கள் ஐயா.

    (உடல்நலம் தேவலையா இப்போது?)
    மிக நன்றி சிவா.ஜி அவர்களே. இதுபோன்ற பின்னுட்டங்கள் என்னை மேலும், மேலும் எழுதத்தூண்டுகிறது. எனது உடல்நலம் இப்போது ஓரளவுக்கு பரவாயில்லை. அலுவலகத்தில் வேலைப்பளு கூடுதலாகியுள்ளது

  4. #16
    இனியவர் பண்பட்டவர் Dr.சுந்தரராஜ் தயாளன்'s Avatar
    Join Date
    17 Feb 2012
    Location
    Bangalore, Karnataka, India
    Age
    71
    Posts
    698
    Post Thanks / Like
    iCash Credits
    15,892
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by ஜானகி View Post
    அறுசுவை விருந்து உண்ட மாதிரி திருப்தியாக இருக்கிறது. வாழ்த்த வகை தெரியவில்லை....!
    மிகவும் நன்றி ஜானகி அவர்களே

  5. #17
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    20,623
    Downloads
    1
    Uploads
    0
    வெளிப்படையா சொல்லனும்னா, இந்த வெண்பாவை படிக்கும் அலவுக்கு எனக்கு தகுதியில்லை..
    நல்லாயிருக்குன்னு சொல்லணும்னா அதைப் படிக்கணும் இல்லையா, ஆனா நான் படிக்கலை. (புரிஞ்சாத்தானெ படிக்கிறதுக்கு.)

    வாழ்த்துக்கள் அண்ணா

  6. #18
    இனியவர் பண்பட்டவர் Dr.சுந்தரராஜ் தயாளன்'s Avatar
    Join Date
    17 Feb 2012
    Location
    Bangalore, Karnataka, India
    Age
    71
    Posts
    698
    Post Thanks / Like
    iCash Credits
    15,892
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by jayaprakash View Post
    இப்பவும் இப்படீல்லாம் எழுத ஆள் இருக்காகளா? தமிழ் பொழைச்சிக்கும்.
    நிச்சயம் தமிழ் பிழைக்கும் நண்பரே. மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்று சொன்னவரை / கனவுகண்டவர்களை எல்லாம் அது பொய்ப்பிக்கும். வருகைக்கு நன்றி

  7. #19
    இனியவர் பண்பட்டவர் Dr.சுந்தரராஜ் தயாளன்'s Avatar
    Join Date
    17 Feb 2012
    Location
    Bangalore, Karnataka, India
    Age
    71
    Posts
    698
    Post Thanks / Like
    iCash Credits
    15,892
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    இரக்கமின்றிக் கொன்று புசிப்போரே! நிற்க!
    மரக்கறியின் மாண்பதனைப் பாவில் - உரக்கவே
    ஓதும் தயாளராம் சுந்தரரின் நல்லுரையைக்
    காதுகொடுத் துக்கேட்பீர் இங்கு.
    மிகவும் நன்றி ஜெகதீசன் ஐயா...அழகான சாற்றுக்கவி தந்தீர் நேரிசை வெண்பாவில்... இதுபோன்ற பின்னுட்டங்கள் என்னை மேலும் மேலும் எழுத ஊக்குவிக்கும் என்பதில் ஐயமில்லை.

  8. #20
    இனியவர் பண்பட்டவர் Dr.சுந்தரராஜ் தயாளன்'s Avatar
    Join Date
    17 Feb 2012
    Location
    Bangalore, Karnataka, India
    Age
    71
    Posts
    698
    Post Thanks / Like
    iCash Credits
    15,892
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    இன்னிசை கலிவெண்பாவில் உங்களின் உளசுவையும் நளசுவையும் ஒருங்கே கண்டு உள்ளம் களிப்புற்றேன்.. தயாளன் ஐயா..!!

    எனக்கு மரபுகளின் வரம்புகள் தெரியாது..புரியாது.. இருந்தாலும் வரிகளுக்கு இடையே இடைவெளிவிட்டு பத்திகளாக்கி பதிந்தால் வாசகர்களுக்கு வாசிக்க வசீகரமாய் இருக்குமென்று தோன்றுகிறது... என் கூற்றில் தவறெனில் மன்னிக்க வேண்டுகிறேன் ஐயா..!!

    இயற்கை உணவின் அவசியத்தை எள்ளலுடன் எடுத்தியம்பிய மரபுகவிதைக்கு நன்றி ஐயா..!! தொடர்ந்து கவிபாடுங்கள்..!!
    அழகிய பின்னுட்டம் தந்ததற்கு மிக்க நன்றிகள் சுகந்தப்ரீதன். பொதுவாக, இரண்டு அடிகள் இருப்பது குறள் வெண்பா என்றும், மூன்று அடிகள் வருவது சிந்தியல் வெண்பா என்றும், நான்கு அடிகள் வருவது அளவியல் வெண்பா என்றும் சொல்லப்படும். நான்கில் இருந்து பதினோரு அடிகள் வரை உள்ளது பல்தொடை வெண்பா (பஃறொடை வெண்பா) எனப்படும். பன்னிரண்டு முதல் எவ்வளவு அடிகள் வேண்டுமானாலும் (ஆயிரம் அடிகள் கூட) நீளுவது கலிவெண்பா என்றும் அழைக்கபடுகிறது, தொல்காப்பியர் காலம் தொட்டு. தற்போது நான் எழுதியுள்ள இந்த வெண்பா நாற்பது அடிகள் உள்ளதால் இது கலிவெண்பா ஆகிறது. நீங்கள் சொல்வதுபோல் இடைவெளி இட்டு பத்திகளாகப் பதிந்திருக்கலாம். அதற்குப்பதிலாக, நிறங்களை மாற்றி பதியலாம் என்று வேறு வேறு நிறத்தில் பதிந்தேன். நீங்கள் அதைக் கவனிக்கவில்லை என்று தோன்றுகிறது. போகட்டும், அடுத்த முறை நிச்சயம் பத்திகள் இட்டு பதிகிறேன். சரீங்களா?

  9. #21
    இனியவர் பண்பட்டவர் Dr.சுந்தரராஜ் தயாளன்'s Avatar
    Join Date
    17 Feb 2012
    Location
    Bangalore, Karnataka, India
    Age
    71
    Posts
    698
    Post Thanks / Like
    iCash Credits
    15,892
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by தீபா View Post
    வெளிப்படையா சொல்லனும்னா, இந்த வெண்பாவை படிக்கும் அலவுக்கு எனக்கு தகுதியில்லை..
    நல்லாயிருக்குன்னு சொல்லணும்னா அதைப் படிக்கணும் இல்லையா, ஆனா நான் படிக்கலை. (புரிஞ்சாத்தானெ படிக்கிறதுக்கு.)

    வாழ்த்துக்கள் அண்ணா
    படிக்காமலேயே வாழ்த்துகள் சொன்ன தீபா அவர்களுக்கு மிக்க நன்றி!!!

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •