Results 1 to 10 of 10

Thread: தமிழில் புதிய சந்திப்பிழை திருத்தி

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    22 Dec 2009
    Posts
    21
    Post Thanks / Like
    iCash Credits
    12,001
    Downloads
    1
    Uploads
    0

    தமிழில் புதிய சந்திப்பிழை திருத்தி

    இணையத் தமிழில் சந்திப்பிழைகள், மரபுப் பிழைகள், வாக்கியப்பிழைகள், எழுத்துப் பிழைகள் உட்பட பலவானவை மலிந்து காணக்கிடைக்கிறது. சிறியவர், பெரியவர், புதியவர், பிரபலமானவர் என எங்கும் பிழைகளைக் காணலாம். தமிழ்த் தளங்களின், தமிழ்ப் பயனர்களின், தமிழ் வாசகர்களின் பரவலுக்கேற்ப தமிழ் திருத்திகள்(Editor) புழக்கத்தில் அதிகமில்லை. தமிழில் சந்திப்பிழைகளைத் திருத்த "நாவி" என்கிற புதுச் செயலி தற்போது அறிமுகமாகியுள்ளது. தற்போதுவரை கொஞ்சம் மரபுப் பிழைகளைத் திருத்தவும், 40% சந்திப் பிழைகளைத் திருத்தவும், 90% சந்திப்பிழைகளைப் புரிந்து கொள்ளவும் இதன் மூலம் முடிகிறது, மேலும் மேம்படுத்தப்படவும் உள்ளது,

    ஒரு மொழிக்குப் பிழை திருத்தி என்பது 100% செம்மையாக இருக்கமுடியாது, காரணம் தமிழ் போன்ற மொழிகளில் ஒரு சிறு புள்ளியோ, சிறு ஒற்றோ பொருளையே மாற்றும் வல்லமை கொண்டது. எப்படி எழுதினாலும் ஏதோ ஒருவிதத்தில் பொருள்படும், எழுதியவர்தான் என்ன பொருளில் எழுதினார் என்பதை அவர்தான் தீர்மானிப்பதாக இருக்கும். இருந்தபோதும் அடிக்கடி புழக்கத்தில் பயன்படும், அடிப்படை உருபுகள், ஒலிக்குறிப்புகள் முதலியவற்றைக் கொண்டு நாவி கணிக்கிறது.

    நாவி -முகவரி

    இச்செயலியில் வாக்கியத்தைப் போட்டு ஆய்வு செய் பொத்தானைத் தட்டினால். வலிமிகும் இடங்களை ஆராய்ந்து பரிந்துரைக்கும். அதுபோக கணிக்கமுடியாத வார்த்தைகளுக்கு ஏற்ற இலக்கண விதிகளைச் சுட்டிக்காட்டும். வலி மிகாத இடங்களில் தவறாக வலி மிகுந்தாலும் கொஞ்சம் கண்டுபிடித்துக் காட்டும். ஆய்வு செய்து காட்டும் பகுதியில் வலி மிகுமிடங்கள் பச்சை நிறத்திலும், வலி மிகாத இடங்கள் சிவப்பு நிறத்திலும், கணிக்கமுடியாத வார்த்தைகள் தடித்த வடிவத்திலும் இருக்கும். அச்சொற்களைச் சொடிக்கினால்[click] அதற்கான காரணத்தைக் காணலாம். மென் பரிந்துரை கூடுமானவரை பிழையற்று இருக்கும். சந்தேக வார்த்தைகளைக் கீழ் கண்ட விதிகளைப் படித்து நீங்களே உங்கள் விருப்பமான வார்த்தையைத் தேர்வு செய்து கொள்ளலாம். இறுதியாக "சம்மதம்" என்கிற பொத்தானில் சம்மதத்தைக் கொடுத்ததும் வாக்கியங்கள் திருத்தப்பட்டிருக்கும். பிழைகளைத் திருத்தவும், கற்றுக்கொள்ளவும் புதியவர்களுக்கு மிகவும் பயன்படும்.

    இச்செயலி பிறமொழிச் சொற்கள், உயர்திணைப் பெயர்கள், இடப்பெயர்கள் போன்ற எண்ணற்ற பெயர்களைக் கண்டுனராது. மற்றத் தமிழ் இலக்கண வரம்பிற்குட்பட வாக்கியங்களைப் பகுத்து சந்திப் பிழைகளைத் திருத்த முயலும்/பரிந்துரைக்கும். சரியான காற்புள்ளி, நிறுத்தப் புள்ளி, கேள்விக்குறி, தகுந்த இடைவெளி என முறையான வாக்கியமாக இருந்தால் சிறப்பு.

    பயன்படுத்திவிட்டு குறைகளையும், அபிவிருத்தி ஆலோசனைகளையும் இங்கு வழங்குங்கள்

  2. Likes கீதம் liked this post
  3. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    பயனுள்ள செயலியின் அறிமுகத்திற்கு நன்றி நண்பரே.
    இத்தகைய முயற்சிகள் படிப்படியாக பிழைகளை நீக்க உதவும்.

  4. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    இப்படிப்பட்ட செயலிகள் இன்னும் சில நாட்களுக்குப் பிறகு மேலும் செம்மையாகும். பலரின் பங்கெடுப்புகள் அவற்றை மேம்படுத்தும்.

    தகவலுக்கு நன்றி நண்பரே.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    அலுவலகக்கணினியில் இந்த வலைதளத்தை பார்வை இட முடியவில்லை. இரவு மடிக்கணினியில் இதை முயன்று பார்க்கிறேன்.

  6. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    பயனுள்ள செயலியின் அறிமுகத்திற்கு நன்றி நண்பரே.
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  7. #6
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    தமிழைத் தவறில்லாமல் எழுத விரும்பும் பலருக்கும் பயன்படும் செயலி. அறிமுகப் பகிர்வுக்கு நன்றி நீச்சல்காரன்.

  8. #7
    இனியவர் பண்பட்டவர் ஆளுங்க's Avatar
    Join Date
    05 Jul 2010
    Location
    திருச்சிராப்பள்ளி/ திருநெல்வேலி
    Age
    37
    Posts
    648
    Post Thanks / Like
    iCash Credits
    15,137
    Downloads
    136
    Uploads
    0
    நேற்று தான் இதைப் பற்றி இணையத்தில் படித்தேன்...
    தமிழ்மன்றத்திலும் இதைப் பற்றி பதிவிட்டமைக்கு நன்றி நண்பரே!

    வானை அளப்போம்!! கடல் மீனை அளப்போம்!!
    சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்

  9. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    பிழையின்றி எழுத உதவும் செயலி பற்றிய செய்தியைப் பதிவிட்டு உதவியமைக்கு மிக்க நன்றி.
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  10. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    நல்லதொரு பகிர்வுக்கு நன்றி நீச்சல்காரரே..!! இதற்காக உழைத்தவர்களுக்கு எம் நன்றி உரித்தாகுக..!!

    சந்திபிழை இன்றி எழுத தெரியாத என்போன்ற சந்ததியினருக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  11. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    பாராட்டப்பட வேண்டிய ஒரு முயற்சி. தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •