Results 1 to 7 of 7

Thread: மனச் சலனம் நீக்கும் இருதய சலம்!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0

    மனச் சலனம் நீக்கும் இருதய சலம்!

    மெய்யே சத்தியம் நிச்சயம் நித்தியம்
    மெய்யைப் பொய்யாக்கி இடுவதும் சுடுவதும்
    எல்லோர்க்கும் நியதி என்றே கற்பிக்கும்
    பொல்லாப்பை நம்பி அல்லலுறும் நம்மனம்

    "அபயம் யாமுளோம்" இருதய நாதம்
    அகர முதல்தரும் அமிழ்த போதம்
    அகத்துள் கவனங் குவித்துக் கேட்பாய்
    அலைக்கழி மரண பயத்தை அவிப்பாய்

    மெய்யென்றே உடம்புக்குப் பேரும் ஏனோஅது
    பொய்க்கின்ற சடலமாய் வீழ்வ தேனோ
    நெஞ்சுக்குள் பெய்கின்ற அன்பின் தேனை
    உண்ணின்று உண்ணாமல் வீழ்கின் றாயே

    அன்பின் தேனது ஏந்தி வரும்பார்
    நின்றன் மூச்சு! கவனந் திருப்பி
    ஊங்கே ஊன்று!! நாத ஜோதி
    வாசி ஊற்று வாசி!!! சுவாசி!!!!

    ஆசி அன்பின் ஊறும் மார்புள்
    ஆசி ஏந்திப் பாயும் வாசி
    நேசி பூசி சுவாசி வாசி
    நோயுஞ் சாவுந் தீர யோசி

    சலனஞ் செய்தல் மனத்தின் இயல்பு
    சலனம் இன்மை இருதய இயற்கை
    கவனம் எங்கே வைப்பாய் நீயும்
    சயனம் விட்டே விசாரஞ் செய்யே

    பொருளாய்க் காணுஞ் ஞாலம் முழுக்க
    அருளின் தேக்கம்! மாயை மறைக்கும்!!
    சுத்த ஆவியின் திரட்சி யாவும்!!!
    சுத்த அசுத்த மாயை மருட்டும்(மயக்கும்)!!!!

    சத்தி காண்பாய் பொருளின் மூலம்
    சுத்த சிவமே சத்தி மூலம்
    சத்தி சிவத்தின் பிள்ளை யாமே(நீயே, யாவும்)
    சுத்த நெஞ்சில் உண்மை ஆமே

    கவனங் கொள்வாய் நேசம் மீதே
    கண்ணில் தோன்றுங் காட்சி யாவும்
    நெஞ்சின் உள்ளே இருதயத் திட்டே
    வஞ்ச மாயை உரியக் காண்பாய்

    ஊனக் கண்ணோ மரணங் காட்டும்நின்
    மார்புள் இமையா ஞானக் கண்ணோ
    பேரா வாழ்வின் திரட்சி காட்டும்நின்
    தேகக் கூட்டுள் மெய்ம்மை காட்டும்

    மாயை யுள்ளே சுத்தம் வேறா
    ஞானப் பிள்ளை நீயுங் கேட்பாய்
    போலிச் சுத்தம் அதுவே மருட்டி(மயக்கி)
    ஞாலம் முழுக்க அசுத்தம் அழுத்தும்

    சுத்த மாயை என்னும் அசத்துவம்
    பின்னும் பொல்லா அசுத்த மாயை
    என்னுங் கல்லாம் இருமை பேதம்
    வன்பாம் இராசதம் முடக்கத் தாமதம்

    குட்டும் எத்தன் என்றுங் குட்டக்
    குட்டக் குனியும் பித்தன் என்றும்
    நட்டு வைத்த சதியை முறிப்பாய்
    குட்டு உடைக்குஞ் சித்தன் ஆவாய்


    (மாயையிலே சுத்த மாயை அசுத்த மாயை என்று இரு வகை

    சுத்த மாயை என்பது அஞ்ஞானத் திமிர், இதுவே அசத்துவம் என்னும்
    திரிகுணப் பிரதானம்

    அந்தத் திமிரானது ஞானம் போல் தன்னைக் காட்டிக் கொண்டு
    இந்த ஞாலம் முழுமையையும் அசுத்த மாயையில் அழுத்தும்

    அசுத்த மாயை என்பது இரு வகை
    ஒன்று இராசதம் என்னும் அடங்கா இயக்கம், தீவிர வாதம், வன்பு

    இன்னொன்று தாமதம் என்னும் இயங்கா முடக்கம், தீவிரத் தூக்கம்,
    பூரண மயக்கம்

    ஆக அசத்துவம் என்னும் சுத்த மாயையும் தாமதம் இராசதம் என்னும்
    அசுத்த மாயையும் சேர்ந்ததே திரிகுண மாயை.

    மொத்த மாயையையும் குழியாகக் கொண்டால்
    அசத்துவம் குழியின் மேற்புறம், ஆனால் அது தன்னைக்
    குன்றின் உச்சமாக எண்ணிப் பெருமிதப்படும் அஞ்ஞானத் திமிர்

    இராசதம் குழியின் நடு பாகம்
    தாமதம் குழியின் அடிவாரம்

    குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்
    குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
    குருடும் குருடும் குருட்டாட்டம் போடக்
    குருடுங் குருடும் குழிவிழுந் தனவே

    இது திருமூலர் திருமந்திரம்

    Blind will lead the blind and both will fall in the ditch

    இது குரு நாதர் இயேசு கிறிஸ்துவின் வேத வாசகம், திருமந்திரத்தின் கடைசி இரு வரிகள்
    அப்படியே ஆங்கிலத்தில், சர்வ சமய சமரசம் என்பது இதுவே!

    குட்டும் எத்தன் = இராசதம்
    குட்டக் குட்டக் குனியும் பித்தன் = தாமதம்
    நட்டு வைத்த சதி = அசத்துவம்
    குட்டு உடைத்தல் = திரிகுண மாயையை உரித்தல்)
    Last edited by நாகரா; 06-10-2021 at 08:28 AM.
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    24 Jun 2011
    Location
    A, A
    Posts
    334
    Post Thanks / Like
    iCash Credits
    20,697
    Downloads
    0
    Uploads
    0
    மெய் ,பொய் பற்றி நெய் ஊற்றி எழுதிய கவிதை ..
    வசிகரன்

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by நாகரா View Post
    குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்
    குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
    குருடும் குருடும் குருட்டாட்டம் போடக்
    குருடுங் குருடும் குழிவிழுந் தனவே

    இது திருமூலர் திருமந்திரம்

    Blind will lead the blind and both will fall in the ditch

    இது குரு நாதர் இயேசு கிறிஸ்துவின் வேத வாசகம், திருமந்திரத்தின் கடைசி இரு வரிகள்
    அப்படியே ஆங்கிலத்தில், சர்வ சமய சமரசம் என்பது இதுவே!
    ஐயா.. இத்துடன் கபீரின் ஹிந்திமொழி கண்ணிகளையும் இணைத்து கொள்ளுங்கள்...!!

    आगॆ अन्धा कूप मॆं दूजा लिया बुलाय
    दॊनॊं डूबॆ बापुरॆ, निकसॆ कौन उपाय
    (ஆகே அந்தா கூப் மேன், தூஜா லியா புலாய்
    தோனோ டூபே பாபுரே, நிக்ஸே கௌன் உபாய்)
    பொருள்:
    வாவியுள் அந்தக னொருவன் வாவென்பான் வேறொ ருவனை
    பாவிகள் இருவரும் மூழ்குவர் வெளியேறும் வழியும் எங்ஙனை..!!

    திருமூலர், இயேசுநாதர், கபீர் மூவரின் கூற்றும் சர்வ சமய சமரச சன்மார்க்கநெறிக்கு மிகசிறந்த எடுத்துகாட்டு..!!

    (வாவி = கிணறு
    அந்தகன் = குருடன்)

    மனசஞ்சலம் நீக்கும் அருட்பாக்கள் அனைத்தும் நல்முத்துக்கள்.. வாழ்த்துக்கள் நாகரா ஐயா..!!


    நன்றி: கபீரன்பன்
    Last edited by சுகந்தப்ரீதன்; 16-06-2012 at 07:46 PM.
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by vasikaran.g View Post
    மெய் ,பொய் பற்றி நெய் ஊற்றி எழுதிய கவிதை ..
    நீவிர் பெய்த பின்னூட்ட நெய்க்கு நன்றி வசிகரன்
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    ஐயா.. இத்துடன் கபீரின் ஹிந்திமொழி கண்ணிகளையும் இணைத்து கொள்ளுங்கள்...!!

    आगॆ अन्धा कूप मॆं दूजा लिया बुलाय
    दॊनॊं डूबॆ बापुरॆ, निकसॆ कौन उपाय
    (ஆகே அந்தா கூப் மேன், தூஜா லியா புலாய்
    தோனோ டூபே பாபுரே, நிக்ஸே கௌன் உபாய்)
    பொருள்:
    வாவியுள் அந்தக னொருவன் வாவென்பான் வேறொ ருவனை
    பாவிகள் இருவரும் மூழ்குவர் வெளியேறும் வழியும் எங்ஙனை..!!

    திருமூலர், இயேசுநாதர், கபீர் மூவரின் கூற்றும் சர்வ சமய சமரச சன்மார்க்கநெறிக்கு மிகசிறந்த எடுத்துகாட்டு..!!

    (வாவி = கிணறு
    அந்தகன் = குருடன்)

    மனசஞ்சலம் நீக்கும் அருட்பாக்கள் அனைத்தும் நல்முத்துக்கள்.. வாழ்த்துக்கள் நாகரா ஐயா..!!


    நன்றி: கபீரன்பன்
    கபீரின் அருண்மொழி இணைத்தமைக்கும், உம் வாழ்த்துக்களுக்கும் நன்றி சுகந்தப்ரீதன்
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Feb 2012
    Posts
    191
    Post Thanks / Like
    iCash Credits
    16,842
    Downloads
    0
    Uploads
    0
    தத்துவம் தத்துவத்தோடு தரும்
    உங்களின் பலமான எண்ணப்பாய்ச்சலில்

    'ஆசி அன்பின் ஊறும் மார்புள்
    ஆசி ஏந்திப் பாயும் வாசி
    நேசி பூசி சுவாசி வாசி
    நோயுஞ் சாவுந் தீர யோசி..'

    பா அமுது பருகிய
    இந்நாள் என் திருநாள் ..

    வரு நாள் எல்லாம்
    எம் திரு நாள் என்று சொல்லிக் கொண்டேன்.

    வாழ்க உம்மருந்தொண்டு...
    என் இனியபிறந்த நாள் வாழ்த்துக்கள்........

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    உம் ஊக்க வரிகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி திரு. ந. க.
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •