Results 1 to 3 of 3

Thread: இஃபிஜெநியா - 3

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0

    இஃபிஜெநியா - 3

    எக்கிலிஸ் - பலியிட எல்லாரும் வற்புறுத்து கின்றார் .

    கிளித்தெம்நேஸ்த்ரா -- பேசயாரும் இல்லையா இவளுக் காதரவாய் ?

    எக்கிலிச் - பேசினேன்நான் , அதனால் சாகப் பார்த்தேன் .

    கிளித்தெம்நேஸ்த்ரா - எப்படி , இளைஞனே ?

    எக்கிலிஸ் ------ கல்லெறிந் தார்கள் .

    கிளித்தெம்நேஸ்த்ரா - என்மகளைக் காப்பாற்ற முயன்ற தற்கா ?

    எக்கிலிஸ் - அதற்காக வேதான் .

    இஃபிஜெநியா - என்னுடலை அடைவதற்குத் தெய்வம் விரும்பின்
    என்றைக் கிருந்தாலும் சாகவேண்டி யநான்
    ஏமாற்று வேனா தெய்வத்தை ?
    மாட்டேன் . கொடுக்கிறேன் என்னுடம்பை நாட்டினுக்கு .
    பலியிடுங்கள் என்னை , சிதையுங்கள் ட்ரோயை .
    அதுஎன்றன் நினைவுச் சின்னமாகும் நிரந்தரமாய் .
    அதுவேஎன் திருமணம் , என்மக்கள் , என்புகழ்

    எக்கிலிஸ் - -- கேளிதனை; விரும்புகிறேன் உனக்குதவ ; உன்னிசைவோ
    டென்னில்லுக் கழைத்தேக விழைகின்றேன் அழுத்தமாய் .
    என்னன்னை சாட்சியாய் இழப்பாகும் எனக்கு
    கிரேக்கரைத் தடுத்துன்னைக் காவா விட்டால் ..
    நினைவிற்கொள் சாவு பயங்கர நிகழ்வு .

    இஃபிஜெநியா - ஐயமில்லை அதுபற்றி ; இருந்தாலும் கூறுகிறேன்
    ஹெலென்தன் எழிலால் இழைத்தாள் பெருந்தீங்கு
    போர்மூட்டி வீரர்கள் குருதிகொட்டச் செய்தமையால்;
    ஆதலால் முன்பின் தெரியாத நல்வேந்தே,
    மாளாதே எனக்காக , மாய்க்காதே எவரையும்.
    அனுமதிப்பாய் என்னை கிரேக்கத்தைக் காப்பதற்கு

    க்ளித்தெம்நேஸ்த்ரா - போகிறாயா என்குழந்தாய் ?

    இஃபிஜெநியா -- ஆமாம் , ஒரேயடியாய் .

    க்ளித்தெம்நேஸ்த்ரா - தாயாரை விட்டுவிட்டா ?

    இஃபிஜெநியா - - பார்க்கிறாயே , எளிதான செயலல்ல .

    க்ளித்தெம்நேஸ்த்ரா - இருஇரு , போகாதே .

    இஃபிஜெநியா - - வேண்டாம் கண்ணீர் , தயைசெய்து .

    ( முடிந்தது )

    ------------------------------------------------------------------------------------------------------------------------- .

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    இஃபிஜெநியாவின் மன உறுதி மலைக்கவைக்கிறது. எக்கிலிஸிடம், 'மாளாதே எனக்காக, மாய்க்காதே எவரையும்' என்று சொல்வதன் மூலம் தன்னால் பிறர் உயிருக்கு எத்தீங்கும் உண்டாகலாகாது என்னும் நல்லெண்ணம் புரிகிறது. தாயின், காதலனின் கையறு நிலையையும், தவிப்பையும், இஃபிஜெநியாவின் மனோதிடத்தையும் கண்முன் கொணரும் வசனங்கள். தேர்ந்த மொழிபெயர்ப்புக்கு நன்றி.

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    இஃபிஜெநியாவின் மன உறுதி மலைக்கவைக்கிறது. எக்கிலிஸிடம், 'மாளாதே எனக்காக, மாய்க்காதே எவரையும்' என்று சொல்வதன் மூலம் தன்னால் பிறர் உயிருக்கு எத்தீங்கும் உண்டாகலாகாது என்னும் நல்லெண்ணம் புரிகிறது. தாயின், காதலனின் கையறு நிலையையும், தவிப்பையும், இஃபிஜெநியாவின் மனோதிடத்தையும் கண்முன் கொணரும் வசனங்கள். தேர்ந்த மொழிபெயர்ப்புக்கு நன்றி.
    மிகச் சரியான விமர்சனம் . கிரேக்க நாடகங்கள் உயர்தரமானவை யாதலால் தான் பற்பல மொழிகளில் பெயர்க்கப்பட்டு வாசித்துச் சுவைக்கப்படுகின்றன . பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி .
    Last edited by கீதம்; 08-08-2012 at 11:59 PM. Reason: இரட்டைப்பதிவு

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •