Results 1 to 3 of 3

Thread: இஃபிஜெநீயா - 2

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0

    இஃபிஜெநீயா - 2

    (அகமெம்நோன் மகளை வரவழைத்தார் . அவர் எதிர்பார்க்கவில்லை மனைவியும் வருவாள் என்பதை )


    கிளித்தெம்நேஸ்த்ரா :--- ஒரேயொரு கேள்வி , கணவரே , பதில்சொல் ஆண்மையுடன் .


    அகமெம்நோன் : ------- உத்தரவு போடாதே எனக்கு ; நிச்சயம் பதில்சொல்வேன்.

    க்ளித்தெம்நேஸ்த்ரா : ------ இந்தக் குழந்தை , உன்மற்றும் என்குழந்தை
    கொல்லப் போகிறாயா இதனை ?

    அகமெம்நோன் : --------- கடவுளே , என்ன கேள்வியிது ? எவ்வளவு
    தவறான ஐயம்?

    க்ளித்தெம்நேஸ்த்ரா -------- உடைத்துவிடு மர்மத்தை ; சொல்பதில்: ஆம்இல்லை.

    அகமெம்நோன் ------------- அறிவுபூர்வக் கேள்விகேள் , அறிவுபூர்வ விடைபெறுவாய்

    க்ளித்தெம்நேஸ்த்ரா --- ஒன்று மட்டுந்தான் , பதில்தா அதற்கு .

    அகமெம்நோன் ---- தெய்வமே, உதவு.; இதுநியாயமா யாவும்
    எனக்கெதிராய் உள்ளன .

    க்ளித்தெம்நேஸ்த்ரா --- எதிராக, உனக்கு , எனக்கு , இவளுக்கு , நம்மூவர்க்கும் .

    அகமெம்நோன் -------- யாருனக்குச் சொன்னவர் தவறாய் ?

    க்ளித்தெம்நேஸ்த்ரா ---- அப்படியா கேட்கிறாய் ? மதியின்றா உனக்கு ?
    மூளையென இருக்கிறதா ஒன்று ?

    அகமெம்நோன் ---- தொலைந்தேன்நான் , தெரிந்துவிட்ட தெல்லாம்
    வெளிப்பட்ட தென்கமுக்கம் .

    க்ளித்தெம்நேஸ்த்ரா -- ட்ரோய்க்குப் பலியொன்று வேண்டு மென்றால்
    மெநலாஸ் கொல்லட்டும் ஹெர்மி யோனை,
    அவருக்கு ஹெலெனால் பிறந்த மகளை .
    தகராறே அவரால்தான் , எல்லாமே ஹெலென் பொருட்டு .

    ----------------------------------------------------------------------------------------------------------------------------

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    மனைவிக்கும் கணவனுக்குமிடையில் மகளை முன்னிட்டு நிகழும் உரையாடல் மிகவும் வலிவுடையதாய் உள்ளது. கமுக்கமாய் செய்யவிருந்த செய்கையை மனைவி கண்டுபிடித்துவிட கணவன் சமாளிக்கும் விதம் நன்றாகக் காட்டப்பட்டுள்ளது. க்ளித்தெம்நேஸ்த்ரா கேட்பதில் நியாயம் இருக்கிறது. மகளைப் பலி கொடுக்க எந்தத் தாய்தான் முன்வருவாள்? இப்படிப்பட்ட தாய் மற்ற மகள், மகன் விஷயத்தில் ஏன் அவ்வளவு கொடூரமாய் நடந்துகொண்டாள்? கணவன் மீதான வெறுப்பை, அவனிடம் பாசம் காட்டிய பிள்ளைகள் மேல் காட்டி தணித்துக்கொண்டாள் போலும்.

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    விரிந்த திறனாய்வுக்கு மிக்க நன்றி . க்ளித்தெம்நேஸ்த்ரா நல்ல தாய்தான் . எலெக்த்ராவும் ஒரேஸ்த்தும் அவளைக் கொன்று பழி தீர்க்கத் திட்டமிட்டதால் அவர்களை அவள் வெறுத்தாள் .

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •