Results 1 to 2 of 2

Thread: செப்டம்பர் 8, புதன் கிழமை மலேசிய செய்திகள்

                  
   
   
 1. #1
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
  Join Date
  31 Mar 2003
  Location
  சிலாங்கூர், மலேசியாA
  Age
  62
  Posts
  2,493
  Post Thanks / Like
  iCash Credits
  17,246
  Downloads
  90
  Uploads
  0

  செப்டம்பர் 8, புதன் கிழமை மலேசிய செய்திகள்

  கர்பால் சிங்குக்கு நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்துக் கொள்ள தற்காலிகத் தடை

  DAP கட்சியின் தலைவரும் Bukit Gelugor நாடாளுமன்ற உறுப்பினருமான கர்பால் சிங் மீது நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்துக் கொள்வதிலிருந்து தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

  நாடாளுமன்றத்தை அவமதித்த குற்றத்திற்கு 3 நாட்களுக்குள் கர்பால் சிங் மன்னிப்பு கேட்டால் அத்தடை 10 நாட்களுக்கு விதிக்கப்படும்.

  அப்படி மன்னிப்பு கேட்காவிடில் அத்தடை 60 நாட்களுக்கு நீட்டிக்கப்படும். இத்தடை அமுலில் இருக்கும் காலக்கட்டத்தில் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் நாடளுமன்ற உறுப்பினருக்கான சலுகைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும்.

  ----------------------------------------------------------


  டத்தோ ஸ்ரீ அன்வாரின் வழக்கை மறு பரிசீலனை செய்ய கூட்டரசு நீதிமன்றம் அனுமதி வழங்கியது


  ஊழல் புரிந்ததாக தீர்ப்பளிக்கப்பட்டு 6 ஆண்டு சிறை தண்டனையையும் அனுபவித்துவிட்ட டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அத்தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென செய்த மனுவிற்கு புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.

  அத்தீர்ப்பை மறு விசாரனை செய்வதற்கு உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை என்று நாட்டின் சட்டதுறை தலைவர் டான் ஸ்ரீ அப்துல் கானி பாதாயில் வாதாடியதை 3 பேர் அடங்கிய நீதிபதி குழு தள்ளுபடி செய்தது.

  இதனிடையே, முதுகெலும்பு சிகிச்சைக்காக ஜெர்மனி சென்ற டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், 2 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின் நலமுடன் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.  --------------------------------------------------------------------------------

  2005 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு வரும் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படும்

  வரும் வெள்ளிக்கிழமை அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கையை பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோ ஸ்ரீ அப்துல்லா அகமட் படாவி நாடாளுமன்றத்தில் மாலை 4 மணிக்கு தாக்கல் செய்வார்.

  அதனை உள்நாட்டு முக்கிய தொலைக்காட்சி நிலையங்கள் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யவுள்ளனர்.

  வரவு செலவு அறிக்கையை பொதுமக்கள் மாலை 4.30 முதல் புத்ராஜெயாவில் உள்ள நிதியமைச்சில் வாங்கிக் கொள்ளலாம்.  --------------------------------------------------------------------------------

  தாய்லாந்திலிருந்து கோழிகளை கடத்தும் முயற்சியை போலீசார் முறியடித்தனர்

  கிளாந்தான், Pengkalan Kubor-யில் மலேசிய கடற்படை ரோந்து போலிசார் இராயிரத்து 400 ரிங்கிட் மதிப்புள்ள பதப்படுத்தப்பட்ட 240 கோழிகளை தாய்லாந்திலிருந்து நாட்டுக்குள் கடத்தும் முயற்சியை முறியடித்தனர்.

  நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் கைபற்றப்பட்ட கோழி இறைச்சி அடங்கிய அந்த 20 அட்டை பெட்டிகள் சோதனைகள் மேற்கொள்வதற்காக Kelantan கால் நடை இலாகாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

  கிளாந்தானில் நேற்றிரவு 10 வயது சிறுவன் பறவை சளிக் காய்ச்சல் கண்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் சம்பவத்தை தொடர்ந்து சுகாதார அமைச்சு அந்நோய் குறித்து எச்சரிக்கையாகவும் தயார் நிலையில் இருப்பதாகவும் சுகாதார அமைச்சின் நாடாளுமன்ற செயலாளார் டத்தோ லீ காஹ் சூன் நேற்று தெரிவித்தார்.

  ---------------------------------------------------------

  பொடா சட்டம் ரத்து செய்ய எதிர்ப்பு: சதீஷ்கார் ஆதரவு

  பொடா சட்டத்தை வாபஸ் பெறும் மத்திய அரசின் முடிவுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.மேலும் அவர் பொடா சட்டத்தை வாபஸ் பெறும் திட்டத்தை கடுமையாக எதிர்க்கும் படி அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கும் கடிதம் எழுதியிருக்கிறார்.

  ஜெயலலிதாவின் இந்த கடிதத்துக்கு சதீஷ்கார் முதல்-மந்திரி ராமன்சிங் பதில் கடிதம் எழுதி இருக்கிறார். ஜெயலலிதாவின் கருத்துக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

  ஜெயலலிதா எழுதிய கடிதத்திற்கு மறு கடிதமாக அவர் தங்களின் முடிவௌ நான் ஆதரிக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

  ------------------------------------------------------


  பாக்தாத் நகரில் வெடிகுண்டு தாக்குதல்: அந்நகர் ஆளுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

  நேற்று ஈராக், பாக்தாத் நகரில் ஆயுதமேந்திய கும்பல் ஒன்று நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் அந்நகர் ஆளுநர் Ali al-Haidri அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

  இருப்பினும் அச்சம்பவத்தில் பொது மக்கள் சிலர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் முழு விபரம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

  இதற்கிடையில் நேற்று மாலை கிடைக்கப்பெற்ற தகவலின் படி நேற்று முன்தினம் நள்ளிரவு Palestin Gaza, நகரின் மீது இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் குறைந்தது 16 பேர் பலியானதுடன் 20 பேர் காயமுற்றனர்.

  அந்நகரில் Hamas தீவிரவாத கும்பலின் பயிற்சி தளம் என நம்பப்பட்ட திடல் மீது Israeli-ய Apache ஹெலிக்காப்டர் தாக்குதல் நடத்தியது.  --------------------------------------------------------------------------------

  பள்ளி பிணைப்பிடிப்பில் குண்டு வெடிப்பு சம்பவம்: பாதிக்கப்பட்ட 89 பேரின் நிலை கவலைக்கிடம்

  3 நாட்களுக்கு முன் ரஷ்ய பள்ளியில் பிணைப்பிடிப்பின் போது நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 89 குழந்தைகளின் நிலை இன்னும் கவலைக்கிடமாகவே இருக்கிறது.

  அச்சம்பவத்திற்கு 10 அரபு நாட்டவர் உட்பட 32 தீவிரவாதிகள் காரணமென கண்டறியப்பட்டுள்ளது. அதன் தொடர்ப்பில் கைதாகியுள்ள 3 பேரில் ஒருவன் அப்பள்ளியின் முன்னாள் மாணவன் என தெரியவந்துள்ளது.

  பிணைப்பிடிக்கப்பட்ட குழந்தைகள் வெளியேரும் வேளையில் கூட்டத்தோடு கலந்து தப்பியோட முயன்ற போது அத்தீவிரவாதி பிடிபட்டான்.

  -----------------------------------------------------------------------


  மலேசியா- சீனா உலகக் கிண்ணத் தேர்வு சுற்று ஆட்டம்: ரசிகர்கள் மஞ்சள் நிற ஆடையை அணிய வேண்டும்

  இன்று இரவு பினாங்கு பண்டாராயா அரங்கில், நடைபெறவிருக்கும் மலேசியா-சீனா, உலகக் கிண்ணத் தேர்வு சுற்று ஆட்டத்தை, காண வரும் மலேசிய ரசிகர்கள் அனைவரும், மஞ்சள் நிற ஆடையை அணிந்து, வருமாறு மலேசிய கால்பந்து சங்கத்தின், துணை தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் இப்ராஹிம் சாஹாட் கேட்டுக் கொண்டுள்ளார்.

  உலக தரத்தை கொண்டியிருக்கும், இவ்வாட்டத்தை காண மலேசிய ரகசிர்கள் நழுவவிடக் கூடாது என்றும் Ibrahim Saad கூறினார்.

  கடந்த வாரம் தாய்லாந்து குழுவை 2க்கு 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய மலேசியா, இன்று நடைபெறும் ஆட்டத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என தேசிய கால்பந்து பயிற்சியாளர் Bertalan Bicskei நம்பிக்கை தெரிவித்தார்.
  Last edited by கீதம்; 20-05-2012 at 10:32 AM. Reason: ஒருங்குறியாக்கம்
  வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
  திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

  நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

 2. #2
  மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
  Join Date
  16 Jan 2004
  Posts
  10,688
  Post Thanks / Like
  iCash Credits
  26,644
  Downloads
  10
  Uploads
  0
  இன்றைய செய்திகளுக்கு நன்றி அண்ணா.

  கோழி கடத்தல் படித்து சிரித்தேன். நான் சின்ன வயதில் கடத்திய கோழி கதை நினைவுக்கு வருது..
  Last edited by கீதம்; 20-05-2012 at 11:00 AM. Reason: ஒருங்குறியாக்கம்
  பரஞ்சோதி


Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •