Results 1 to 1 of 1

Thread: அக்டோபர் 25, திங்கட்கிழமை மலேசிய செய்திகள்

                  
   
   
 1. #1
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
  Join Date
  31 Mar 2003
  Location
  சிலாங்கூர், மலேசியாA
  Age
  62
  Posts
  2,493
  Post Thanks / Like
  iCash Credits
  17,246
  Downloads
  90
  Uploads
  0

  அக்டோபர் 25, திங்கட்கிழமை மலேசிய செய்திகள்

  துணிவுடன் பண ஊழல் ஆதாரங்களை தெரிவிக்க வேண்டும்

  அம்னோ அங்கத்தினர், பண ஊழல் தொடர்பான புகார்களை தைரியமாக தெரிவிக்க வேண்டும். அதே சமயம், பண ஊழல் தொடர்பான புகார்கள் தகுந்த ஆதரங்களுடன் இருக்க வேண்டும் என துணை பிரதமரும் UMNO-வின் துனைத் தலைவருமான Datuk Seri Najib Tun Razak கூறினார்.

  பண ஊழல் தொடர்பான புகார்களை பரிசீலனை செய்யும் பொறுப்பை அக்கட்சியின் கட்டொழுங்கு பிரிவு ஏற்றுள்ளது.

  செய்யப்படும் புகார்கள் சரியான ஆதாரங்கள் கொண்டிராமல் இருப்பதால், அதனை முறைபடி ஆராய கட்டொழுங்கு பிரிவு பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  கட்சியில் பண ஊழலை தவிர்ப்பதற்காக UMNO பல மாற்றங்களையும் பண ஊழல் துடைத்தொழிப்பு நடவடிக்கைகளையும் ஏற்கனவே எடுத்துள்ளது.

  இன்னும் தீவிரப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை UMNO மேற்கொள்ளவிருப்பதாக Datuk Seri Najib Tun Razak நம்பிக்கை தெரிவித்தார்.
  --------------------------------------------------------------------------------------------

  Anwar அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்துவார்: PAS நம்பிக்கை


  கடந்த மாதம் தனது முதுகலும்பு சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற முன்னாள் துணை பிதரமர் Datuk Seri Anwar Ibrahim இவ்வார இறுதியில் நாடு திரும்புகிறார்.

  நாடு திரும்பியபின் Datuk Seri Anwar Ibrahim மலேசிய அரசியலில் புது மாற்றங்களை ஏற்படுத்துவார் என தாம் நம்புவதாக PAS கட்சியின் துணை தலைவர் Datuk Dr Hassan Ali நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

  நேற்று கூடிய எதிர்கட்சிகளின் கூட்டத்தின் போது அவர் அவ்வாறு தெரிவித்தார்.

  Keadilan கட்சியின் துணைத் தலைவர் Dr Syed Husin Ali, DAP கட்சியின் தகவல் பிரிவு தலைவர் Ronnie Liu, மற்றும் அக்கட்சியின் பத்திரிக்கை அலோசகர் M.G.G. Pillai ஆகீயோரும் அக்கூட்டத்தில் இருந்தனர்.

  தற்போது Jeddah-வில் தனது 'umrah' கடமையை செலுத்திக் கொண்டிருக்கும் 57 வயதான Anwar Ibrahim தமது துணைவியாருடன் இவ்வாரம் ஞாயிற்றுக் கிழமை நாடு திரும்புவார் என கூறப்படுகிறது.


  --------------------------------------------------------------------------------
  சுலபமான முறையில் Zakat செலுத்தலாம்
  zakat எனப்படும் இஸ்லாமிய சமய வரி கட்டணத்தை இனி 'Zakat SMS Banking' எனும் கைத்தொலைபேசி குறுந்தகவல் சேவை வழி செய்யலாம்.

  Negeri Sembilan சமய வரி மையம் அறிமுகப்படுத்திய இச்சேவை Bank Islam Malaysia Bhd ஒத்துழைப்போடு ஏற்படுத்தப்பட்டது என அம்மையத்தின் நிர்வாகி Nor Azmi Musa தெரிவித்தார்.

  Bank Islam Malaysia Bhd-டின் விவேக அட்டையை கொண்டுள்ளோர் இனிவரும் காலங்களில் இச்சேவை மூலம் தங்களின் zakat கட்டணங்களை செலுத்தலாம்.


  --------------------------------------------------------------------------------


  தைவானிய குடும்ப மாதுவின் சடலம் தகனம் செய்யப்பட்டது

  கடந்த திங்கள் கிழமை Melaka, Kelebang-கில் கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்ட தைவானிய குடும்பமாதுவின் சடலம் தகனம் செய்யப்பட்டது.

  அவரது அஸ்தியை நாளை தைவானுக்கு கொண்டு செல்லவிருப்பதாக தொழில்சாலை ஒன்றில் நிர்வாகியாக பணிப்புரியும் அவரின் கணவர் Lu Shao Hua தெரிவித்தார்.

  Melaka மாநில முதலமைச்சர் Datuk Seri Mohamed Ali Rustam உட்பட பல முக்கிய
  பேராளார்களும் அந்த இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

  இக்கொலை சம்பவம் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை Johor Baharuவில்
  உள்ள தங்கும் விடுதி ஒன்றில் சீங்கப்பூரை சேர்ந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


  --------------------------------------------------------------------------------


  சித்திரம் வரைய சுவர் முக்கியம்

  மலேசிய ராணுவ வீரர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என பிரதமர் DATUK SERI ABDULLAH AHMAD BADAWI அறிவுறுத்தியுள்ளார்.

  நவீன போர் கருவிகள், ஆயுதங்களை விட ராணுவ வீரர்களின் உடல் ஆரோக்கியம் நாட்டின்
  முழுமையான தற்காப்பு பணிக்கு மிகவும் முக்கியம் என அவர் கூறினார்.

  மலேசிய ராணுவ படையில் உள்ள சில உறுப்பினர்கள் அதிக எடையை கொண்டிருப்பதால், தற்காப்பு அமைச்சு அப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையின் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

  இந்நடவடிக்கையை பிரதமர் வெகுவாக பாராட்டினார்.

  கோலாலம்பூரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தற்காப்பு அமைச்சின் ஊழியர்களுடன்
  நோன்பு துறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் பிரதமர் செய்தியாளர்களிடம் பேசினார்.

  இந்நிகழ்ச்சியில், தற்காப்பு அமைச்சர் DATUK SERI MOHD NAJIB TUN RAZAK க்கும் கலந்து கொண்டார்.

  அந்நிய தலையீடு இல்லாமல் மலேசியா நாட்டின் பாதுகாப்பை சிறந்த முறையில்
  நிர்வகிக்க முடியும் என NAJIB செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  --------------------------------------------------------------------------------


  சட்டவிரோதக் குடியேறிகள் பிரச்சனையை தீர்க்கும் பணியில் அமலாக்கப் பிரிவு,
  ஊக்குவிப்புத் தொகை வழங்கும் திட்டம்


  சட்டவிரோதக் குடியேறிகள் பிரச்சனையை தீர்ப்பதில் சம்பந்தப்பட்டிருக்கும் அமலாக்க குழுவினருக்கு ஊக்குவிப்புத் தொகை அளிக்கப்படும். இதற்கான சிறப்பு திட்டம் ஒன்று அரசாங்கத்தால் வரையறுக்கப்படுவதாக உள்நாட்டு விவகாரத்துறை அமைச்சர் டத்தோ அஸ்மி காலிட் தெரிவித்தார்.

  சட்டவிரோதக் குடியேறிகளின் பிரச்சனைகளை தீர்ப்பதிலும் சட்டவிரோதமான முறையில் நாட்டில் எவரும் நுழையாதிருப்பதற்கும் கடும் முயற்சிகளில் ஈடுபட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு இந்த வெகுமதி வழங்கப்படும். இதற்கென அடையாளம் காணப்பட்ட குழுவில் ரேலா உறுப்பினரும் அடங்குவர் என்று அவர் தெரிவித்தார்.

  இந்த ஊக்குவிப்பு நிதி அமலாக்கம் பற்றி விரைவில் அமைச்சரவையில் தெரிவிக்கப்படும் என்றார் அவர். இவ்வாறான ஊக்குவிப்பு தொகையின் மூலம், சட்டவிரோத குடியேறிகளின் பிரச்சனையை தீர்ப்பதற்கான அரசாங்க முயற்சிகள் மேலும் பலனளிக்கக்கூடும் என்று அஸ்மி நம்பிக்கை தெரிவித்தார்.


  ---------------------------------------------------------------------------------

  பள்ளிகளுக்கு அருகில் சிகரெட் விற்பனை தடை

  தற்போது இளையோர்களிடையே அதிகரித்து வரும் புகை பழக்கத்தை துடைத்தொழிக்கும் வகையில் சென்னையிலுள்ள பள்ளி, கல்லூரிகளின் 100 மீட்டர் சுற்று வட்டாரத்திற்குள் சிகரெட், பீடி உட்பட அனைத்து புகையிலைப் பொருட்களையும் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

  டிசம்பர் 1-ம் தேதி முதல் இத்தடை அமலுக்கு வருமென இந்திய சுகாதாரத் அமைச்சர் அன்புமணி தெரிவித்தார்.

  இதனிடையே, புகையிலை மற்றும் சிகரெட் விற்பனைகளை முறையே கண்காணிப்பதற்காக இந்திய புகையிலைச் சட்டத்தில் 6 புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.


  --------------------------------------------------------------------------------


  நீதிமன்றம் செல்லவிருக்கும் Salman Khan

  கார் விபத்தொன்றில் ஒருவரை கொன்றதோடு நால்வரை காயப்படுத்தின் பேரில் குற்றஞ் சாட்டப்பட்ட முன்னணி Hindi திரையுலக நாயகன் Salman Khan நவம்பர் 24-ஆம் தேதி நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்.

  கடந்த 2002-ஆம் செப்டம்பர் 28-ஆம் தேதி Bandra புறநகர் பகுதியில் நடந்த அச்சம்பவத்தில் மதுவறுந்தி கார் ஓட்டியதோடு கடை ஒன்றை இடித்து சாய்த்தாகவும் அவர் மீது குற்றங்கள் சாட்டப்பட்டிருக்கின்றன.


  --------------------------------------------------------------------------------

  விஜயக்குமாருக்கு அமெரிக்கா அழைப்பு

  புத்திசாலித்தனமாக திட்டமிட்டு சந்தனக் கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்ற திட்டத்தைத் தீட்டிய தமிழக அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார் அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ மற்றும் எப்.பி.ஐ அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளனர் என இந்தியாவில் பரவலாக பேசப்பட்டுவருகிறது.

  20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவராலும் பிடிக்க முடியாத நபராக விளங்கிய வீரப்பனை, தமிழக அதிரடிப்படையின் வித்தியாசமான அணுகுமுறையால் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

  அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமாரின் தலைமையில் அதிரடிப்படை அமைத்த வியூகம், வீரப்பனை காட்டிலிருந்து வெளியே வரவழைத்த புத்திசாலித்தனம் அனைவராலும் பாராட்டப்படுகிறது.

  இந்நிலையில் அமெரிக்காவிலும் வீரப்பன் என்கவுன்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  விரைவில் அமெரிக்காவில் நிடைபெறவுள்ள இந்த அமைப்புகளின் மாநாட்டில் விஜயக்குமார் கலந்து கொண்டு அந்த தாக்குதல் குறித்து விவரிக்குமாறு அவ்வமைப்புகள் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
  ---------------------------------------------------------------------------------

  ஜப்பான் நிலநடுக்கத்தில் 6 பேர் பலி

  இன்று, ஜப்பானின் வட பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர்; 900 பேர் காயமுற்றன; மேலும் நால்வரை காணவில்லை.

  இதனை தொடர்ந்து அந்நாட்டு ராணுவ படை பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியை
  தீவிரப்படுத்தியுள்ளது.

  வடமேற்கு TOKYO வில் இருந்து 260 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள OJIYA எனும் மையப் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

  இப்பேரிடரில், விரைவு ரயில் ஒன்று தண்டவாளத்தை விட்டு விலகி சாலையில் தடம் புரண்டது. சனிக் கிழமை மாலை தொடங்கிய இந்நிலநடுக்கம், நேற்று காலை வரை நீடித்தது.

  சம்பந்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் பேர் தங்கள் இருப்பிடங்களில் இருந்து, வேறு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

  ஏறக்குறைய 3 லட்சம் வீடுகளின் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது.இதற்காக 50 அவசரகால பாதுகாப்பு மையங்கள் உடனடியாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.


  --------------------------------------------------------------------------------

  மாடுகளை இறக்குமதி செய்ய ஜப்பான் ஒப்புதல்

  மூன்று நாள் பேச்சு வார்த்தைக்கு பின்னர் அமெரிக்காவிலிருந்து ஜப்பானுக்கு இறக்குமதியாகும் மாடுகளுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது.

  இருப்பினும், இனி அந்நாட்டிலிருந்து இறக்குமதியாகவிருக்கும் மாடுகள் குறைந்தது 20 மாத வயது அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும் என ஜப்பான் உறுதியாக கூறியுள்ளது.

  முன்னதாக, அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மாடுகளினால் மூளை குழம்பு நோய்
  பரவ தொடங்கியதை தொடர்ந்து ஜப்பான், அமெரிக்காவின் மாடுகளுக்கு கடந்த டிசம்பர் முதல் தடைவிதித்தது.

  ஜப்பானுடனான இவ்வர்த்தகத்தில் மட்டும் அமெரிக்கா ஆண்டு ஒன்றுக்கு 1 பில்லியன் டாலர் வரை லாபம் ஈட்டி வந்நது.


  --------------------------------------------------------------------------------


  தீவிர விசாரனைக்கு பின் தீவிரவாத தலைவன் அடையாளம்

  ஈராக்,BAGHDAD டில் உள்ள ABU MUSAB AL-ZARQAWI தீவிரவாத கும்பலில் புதிதாக நியமிக்கப்பட்ட மூத்த தலைவர் ஒருவரையும்,தென் FALLUJA பகுதியில் மேலும் ஐவரையும் அமெரிக்க ராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.

  தொடக்கத்தில்,AL- ZARQAWI கும்பலின் சாதாரண உறுப்பினர் என கருதப்பட்ட அந்த மூத்த தலைவர், கடுமையான விசாரணைக்கு பின்னரே அவர் அக்கும்பலின் ஒரு முக்கிய தலைவர் என தெரிய வந்தது.

  இதனிடையே, BAGHDAD டில் நிகழ்ந்த இரு வெவ்வேறு கார் குண்டு வெடிப்பு சம்பவங்களில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்.

  AL-ZARQAWI கும்பலை சேர்ந்த தீவிரவாதிகளை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடித்து கொடுப்பவர்களுக்கு 25 மில்லியன் டாலர் வழங்கப்படும் என அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது.
  --------------------------------------------------------------------------------------

  தேசியக் கொடியில்லாமல் தேசிய விளையாட்டுப் போட்டி

  இலங்கை, வவுனியாவில் தேசிய அளவிலான வலைப்பந்தாட்டப் போட்டி துவக்க விழாவில், தேசியக் கொடி ஏற்றப்படாமலேயே ஆட்டம் துவங்கப்பட்டது.

  சனிக்கிழமை, இலங்கை பிரதமரின் மனைவி அப்போட்டியை தலைமையேற்றார் துவக்கி வைத்தார்.

  இம்மாதிரியான நிகழ்ச்சிகளில் தேசியக் கொடி ஏற்றுவது வழக்கமே என்றாலும் தமிழ் பிரதேசத்தில் இலங்கை தேசியக் கொடியை ஏற்றக்கூடாது என விடுதலைப் புலிகளின் விளையாட்டுத் துறைப் பிரிவினர் ஆட்சேபனை தெரிவித்தனர்.

  இதனை அடுத்து ஏற்பாட்டாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி எக்கொடியும் பறக்காவிடாமல் போட்டியினை ஒன்றரை மணி நேரம் தாமதமாக ஆரம்பித்தனர்.

  மாவட்டங்களுக்கிடையிலான இப்போட்டி நேற்றும் தொடர்ந்தது.
  Last edited by கீதம்; 20-05-2012 at 09:00 AM. Reason: ஒருங்குறியாக்கம்
  வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
  திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

  நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •