Results 1 to 6 of 6

Thread: எலெக்த்ரா

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0

    எலெக்த்ரா

    கிரேக்க இதிகாசம் , இலியட்,, எலெக்த்ரா நாடகத்துக்கு ,,அடிப்படை .

    அதன் சுருக்கம்
    :
    மன்னர் அகமெம்நோனுக்கு எலெக்த்ரா , கிரிசேர்த்தமிஸ் என்ற இரு புதல்விகளும் ஒரேஸ்த்தஸ்

    என்னும் மகனும் இருக்கின்றனர்

    ( இஃபிஜெனியா என்ற மகள் தெய்வத்துக்குப் பலி கொடுக்கப்பட்டுவிட்டாள் )

    அரசரது தலைமையில் கிரேக்கப் படை ட்ரோய் நகரத்தாரை எதிர்த்துப் போரில் ஈடுபட்டிருந்தது ;

    அது நெடுங்காலம் நீடிக்கவே , அவரது மனைவி க்ளித்தெம்நேஸ்த்ரா , எகிஸ்த்தஸ் என்பவனை

    மணந்துகொண்டாள் . வெற்றிக் கனி கொய்து அவர் திரும்பி வந்தபோது , மனைவியும் புதுக்

    கணவனும் , முன் திட்டப்படி அவரைக் கொன்றுவிட்டனர் .

    தம்பி பழி வாங்க வேண்டும் என்பது எலெக்த்ராவின் விருப்பம் . சிறுவனாகிய அவனது உயிருக்கு அன்னையால்

    நேரக்கூடிய ஆபத்தைத் தவிர்ப்பதற்காக அவன் வேறு ஊரில் பத்திரமாய் வளர்வதற்கு அவள் கமுக்கமாய் ஏற்பாடு

    செய்தாள் . தக்க வயதில் அவன் வந்து வினை முடிக்க வேண்டும் .

    இரு நாடகங்களிலிருந்தும் சில காட்சிகளை , ஆங்கில வழி , மொழி பெயர்த்து வழங்குவேன் ..

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    இதில் கடைசியாக வரும் கோர்ட் சீனுக்காக காத்திருக்கிறேன்
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    இதில் கடைசியாக வரும் கோர்ட் சீனுக்காக காத்திருக்கிறேன்
    மன்னிக்கக் கோருகிறேன் . முழு நாடகமும் என்வசம் இல்லாமையால் அந்தக் காட்சியை என்னால் தரமுடியாமைக்கு வருந்துகிறேன் . நீங்கள் எழுதினால் மகிழ்ச்சியுடன் வாசிப்பேன் .

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    எலக்ட்ரா காம்ப்ளெக்ஸ் பற்றி ஓரளவு கேள்விப்பட்டிருக்கிறேன். இலியட் கதை மூலம் முழு விவரங்களையும் அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன். தொடரவிருக்கும் மொழியாக்கப் பதிவுகளுக்காய் மிகவும் நன்றி.

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    எலக்ட்ரா காம்ப்ளெக்ஸ் பற்றி ஓரளவு கேள்விப்பட்டிருக்கிறேன். இலியட் கதை மூலம் முழு விவரங்களையும் அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன். தொடரவிருக்கும் மொழியாக்கப் பதிவுகளுக்காய் மிகவும் நன்றி.
    பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0

    யூரிப்பிடீசின் எலெக்த்ரா

    ( எலெக்த்ரா அவல வாழ்க்கையில் அல்லல் உற வேண்டும் என்ற தீய நோக்கத்தில் அவளை ஒரு பரம ஏழைக்கு மணம்

    முடித்தாள் தாய் ; எனினும் ஊருக்கு வெளியே , குடிசையில் , நல்ல மனைவியாய் வாழ்ந்தாள் அவள் . ஒரு நாள்

    ஒரேஸ்த்தஸ் வந்து , தமக்கையுடன் கலந்தாலோசித்து , தெய்வத்தை வழிபட எகிஸ்த்தஸ் வருவதை அறிந்து ,

    திட்டமிட்டுக் கொன்று , தூக்கிக் கொணர்ந்த பிணத்தை நோக்கி எலெக்த்ரா கூறியது )

    என்தாயில் ஒழுக்கமுள்ள ஒரு மனைவியை அடையலாம்

    என்று கற்பனை செய்தநீ ஒருமுட்டாள் .

    ஆ ! பிறனுடைய துணைவிமேல் கண்வைத்து

    அவளை வசப்படுத்தி மணந்தவன்,

    தனக்கு விசுவாசமாக இருப்பாள்

    முதல் கணவனுக்கு விசுவாசமாய் இல்லாதவள்

    என நம்பினால் அவனொரு மடையன் .

    பரிதாப வாழ்வு வாழ்ந்தாய்நீ , அதை உணராமலே .

    பழிகாரியை மணந்தாய் என்பது உனக்குத் தெரியும் ;

    மோசக்காரன் நீ என்பது அவளுக்குத் தெரியும் .

    இருவரும் குற்றவாளிகள் , ஒருவரால்

    மற்ற்வர் கெட்டீர் .

    (தொடரும் )

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •