Results 1 to 6 of 6

Thread: தினசரி வெந்நீரில் எலுமிச்சை சாறு

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் ravikrishnan's Avatar
    Join Date
    07 Sep 2011
    Location
    Antarctica
    Posts
    336
    Post Thanks / Like
    iCash Credits
    19,778
    Downloads
    1
    Uploads
    0

    தினசரி வெந்நீரில் எலுமிச்சை சாறு



    காலையில் எழுந்த உடன் மிதமான வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவது ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    உடலில் ஜீரணமண்டத்தை சீராக்குவதோடு, இதய நலனையும் பாதுகாக்கிறது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

    வெந்நீரில் எலுமிச்சை கலந்து சாப்பிடுவதால் அதில் உள்ள சிட்ரஸ் அமிலம் உடல் ஆரோக்கியத்தை பேணுகிறது.

    இதில் உள்ள வைட்டமின் சி சரும அழகை பாதுகாக்கிறது. முகத்தை புத்துணர்ச்சியாக்குவதோடு இளமையை மீட்டெடுக்கிறது. அத்துடன் எடைக்குறைப்பிலும் முக்கிய பங்காற்றுகிறது. இது ஜீரணமண்டலத்தை சீராக்குகிறது.

    உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய சக்தி எலுமிச்சம் பழத்தில் உள்ளது. எனவே தினசரி வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது. அது தவிர இது ஆன்டிசெப்டிக் போல செயல்பட்டு உடலில் காயங்களை ஆற்றுகிறது.

    எலுமிச்சை சாறு பானம் இதயநோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும். இதில் உள்ள உயர்தர பொட்டாசியம் இதயத்தை பலமாக்குகிறது.

    எனவே தினசரி காலையில் வெந்நீரில் எலுமிச்சை கலந்து பருகுவது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு திறவு கோலாகும் என்கின்றனர் மருத்துவர்கள்.
    நன்றி:காட்டு பூச்சி

  2. #2
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    ஆஹா அருமையான விஷயமாக இருக்கிறதே.. உடல் பருமன் குறையவும் சுடு நீரில் எலுமிச்சை ரசம் கலந்து தேனும் கலந்து சாப்பிடலாம்...

    அன்பு நன்றிகள் ரவிக்ருஷ்ணன் பகிர்வுக்கு.
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் ravikrishnan's Avatar
    Join Date
    07 Sep 2011
    Location
    Antarctica
    Posts
    336
    Post Thanks / Like
    iCash Credits
    19,778
    Downloads
    1
    Uploads
    0
    நன்றி!!அக்கா, தேநீர்க்கு பதிலாக காலையில், இதனுடன் சிறிது சர்க்கரை சிறிது உப்பு சேர்த்து பருகினால் அருமையாக இருக்கும்.

  4. #4
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    உண்மைதான் ரவிகிருஷ்ணன். மிகவும் நல்லது. நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. நான் அனுபவத்தில் கண்டது.

    பகிர்வுக்கு நன்றி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    பகிர்வுக்கு நன்றி ரவி
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  6. #6
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    Quote Originally Posted by ravikrishnan View Post
    நன்றி!!அக்கா, தேநீர்க்கு பதிலாக காலையில், இதனுடன் சிறிது சர்க்கரை சிறிது உப்பு சேர்த்து பருகினால் அருமையாக இருக்கும்.
    தேநீர் காபி குடிக்கும் பழக்கம் இல்ல க்ருஷ்ணா அதனால் நீ சொன்னது போல செய்தால் உடலுக்கும் ஆரோக்கியம்....
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •