Results 1 to 12 of 12

Thread: நாவிதன் - முடிமன்னன் .( சிலேடை )

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0

    நாவிதன் - முடிமன்னன் .( சிலேடை )

    கண்டு தலைவணங்கும் மக்களுக்குப் பொன்னாடைத்

    துண்டினைப் போர்த்திக் களைந்திடுவார்-மண்டலத்தில்

    யாவரும் போற்றும் முடிமன்னர் ஆதலினால்

    நாவிதன் வேந்தனுக்கு நேர்.


    பொருள் : தன்னைக் கண்டு வணங்கிடும் புலவர் பெருமக்களுக்குப் பொன்னாடைப் போர்த்திப் பொருள் கொடுத்து, அவர்தம் துயர்

    களைந்திடுவான் மன்னன். முடிவெட்டிக் கொள்ள நாவிதனிடம் வரும் பொது மக்கள் தலைவணங்கி , இருக்கையில் அமர்ந்து இருப்பர்.

    நாவிதன் , அவர்களுக்குத் துண்டினைப் போர்த்தி, அவர்களுடைய முடியைக் களைந்திடுவான். அரசனுக்கு " முடிமன்னன் " என்ற பெயர்

    உண்டு. சிகை அலங்காரம் செய்கின்ற நாவிதர்களை , ' முடிமன்னர் ' என்று அழைக்கலாம். ஆகவே இந்த மண்டலத்தில், நாவிதனும்,

    வேந்தனும் சமமானவர்கள் என்று சொல்லலாம்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  2. Likes ஆதி liked this post
  3. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    அருமையான சிலேடை ஐயா, வெகுவாக பொருந்துகிறது, வாழ்த்துக்கள்
    அன்புடன் ஆதி



  4. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    இன்றைய சூழ்நிலைக்கு வெகு பொருத்தமான சிலேடை...

    நம்ம கிட்ட சம்பளம் வாங்கிகிட்டு நம்மளுக்கே மொட்டையடிப்பாங்க..
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  5. Likes ஆதி liked this post
  6. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    ஆதன், தாமரை ஆகியோரின் பாராட்டுகளுக்கு நன்றி.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  7. #5
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    அழகான பொருத்தம். தேர்ந்த வரிகளால் எழுதப்பட்ட சிலேடைப் பாடலை மிகவும் ரசித்தேன். பாராட்டுகள் ஐயா.

  8. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    கீதம் அவர்களின் பாராட்டுக்கு நன்றி.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  9. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    இன்றைய காலத்திற்கேற்ற சிலேடை வரிகள் அருமை ...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  10. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    நாஞ்சில் த. க. ஜெய் அவர்களின் பாராட்டுக்கு நன்றி.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  11. #9
    இனியவர் பண்பட்டவர் Dr.சுந்தரராஜ் தயாளன்'s Avatar
    Join Date
    17 Feb 2012
    Location
    Bangalore, Karnataka, India
    Age
    71
    Posts
    698
    Post Thanks / Like
    iCash Credits
    15,892
    Downloads
    0
    Uploads
    0
    சிலேடை அருமையாக உள்ளது.

  12. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    தங்களின் பாராட்டுக்கு நன்றி தயாளன்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  13. #11
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    24 Jun 2011
    Location
    A, A
    Posts
    334
    Post Thanks / Like
    iCash Credits
    20,697
    Downloads
    0
    Uploads
    0
    சிலேடை
    சொல் ஆடை
    பொருளில்
    ஒரு ஓடை !

    சிலேடை
    தமிழ் தாய்
    மட்டுமே
    அணியும்
    ஆடை !

    கவிதை நன்று ..
    வசிகரன்

  14. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    வசிகரன் அவர்களின் பாராட்டுக்கு நன்றி.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •