குரோம் உலாவியில் அடோப் வேலை செய்யுதில்லை.
அடோப்பை மீள நிறுவிப் பார்த்தேன். குரோமை மீள நிறுவிப் பார்த்தேன். இயங்குதளத்தைப் புதுப்பித்துப் பார்த்தேன். பலனேதும் இல்லை.
கூகிளில் தேடினேன். யாகூவில் தேடினேன். யூ ட்யூப்பில் தேடினேன். இறுதியில் மன்றத்தில் கேட்கின்றேன்.
முயற்சித்து முயற்சித்துக் களைத்துப் போய்விட்டேன்...

உதாரணமாக, யூ ட்யூப் இற்குச் சென்றால், 'Missing plug-in' என வருகின்றது. அடோப் பிளேயர் இயங்க வேண்டிய அனைத்துப் பக்கங்களிலும் இதே பிரச்சினை. எப்படித்தான் run பண்ணினாலும், run ஆகுதில்லை.

ஆனால், IE இல் வேலை செய்கின்றது.

அடோப் கணினியில் இருக்கு. ஆனால் குரோமில் இல்லை.
என்ன கொடுமை சார் இது...

என்ன செய்யணும் மக்களே...