ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு எதிராக சிறிலங்கா மீண்டும் போர்க்கோடி தூக்கியுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கடந்தமார்ச் மாதம் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வருவதில் நவநீதம்பிள்ளையும் அவரது செயலக அதிகாரிகளும் பங்காற்றியுள்ளதாக குற்றம்சாட்டி, அவருக்கு அதிகாரபூர்வமான எதிர்ப்பை தெரிவிக்க சிறிலங்கா முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று, இது தொடர்பான பணிகளை ஜெனிவாவில் உள்ள சிறிலங்காவின் நிரந்தரப் பிரதிநிதி தாமரா குணநாயகம் மேற்கொண்டு வருவதாக அறியக் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளது.

அதேவேளை, ஐ.நா சாசனம் மற்றும் ஐ.நா பொதுச்சபை வழங்கியுள்ள ஆணையை மீறும் வகையில் நவநீதம்பிள்ளை செயற்பட்டுள்ளதாக சிறிலங்கா அரச வட்டாரங்கள் கூறியுள்ளன. இதையடுத்து ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளருக்கு முறைப்படியான எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், சிறிலங்கா அரசினால் கடிதம் ஒன்று அனுப்பப்படவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. இந்தக் கடிதத்தை வரையும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் சிறிலங்கா அரச வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நன்றி,
ஈழதேசம்.