Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 18

Thread: 20/10

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    14 Oct 2009
    Posts
    425
    Post Thanks / Like
    iCash Credits
    12,815
    Downloads
    16
    Uploads
    0

    20/10

    சிறுகதை

    20/10

    அம்மா சிரிப்பு.....அது அண்டர்கிரவுண்ட் (Underground ) சிரிப்பு.

    அதென்ன அண்டர்கிரவுண்ட் ?

    தெரியல. அது என்னவோ அப்படிதான் வாயில வருது. மனசுல பதிஞ்சிருக்கு.

    அப்படி என்ன சிரிப்பு?

    மூடின கையைத் திறந்து சோழியைக் கீழே போட்ட மாதிரியா?

    இல்ல.

    தாயக்கட்டையை உருட்டி போட்ட மாதிரி?

    ம்…இல்ல.

    தேங்கா சில்லு சிதறின மாதிரி?

    ம்...ஹூம்.

    பக்கெட் தண்ணியை கீழே சாய்ச்சு கொட்டினாப்போல?

    நோ

    குழந்தையோட கொலுசு சத்தம்...?

    இல்லடீ..

    ஜலதரங்கம்?

    பூஜை மணி?

    ச...இல்ல.

    கை நிறைய அடுக்கி குலுக்கின கண்ணாடி வளையல் சத்தம்?

    அய்ய..

    கை தவறி கீழ விழுந்த கிண்ணம்?

    போடீ...

    சைக்கிள் பெல் மாதிரி தானே?

    போதும் நிறுத்து. அம்மாவோட சிரிப்பு ஒண்ணும் அத்தனை முரடு இல்ல.

    சைக்கிள் பெல் முரடா? ஜலதரங்கம், சோழி, தாயம் முரடா?

    எங்கம்மா நிறைய சிரிப்பா. அதிலும் ஜோக் அடிச்சா சிரிப்பு உறுதி. சுமார் ரகமானாலும் சிரிச்சுடுவா. அவ சிரிச்சா எப்படி சத்தம் வரும்னு என்னை நானே கேட்டுக் கொண்ட கேள்வியும் பதிலும்தான் மேலே சொன்னதெல்லாம் !

    சிரிச்சா தொடர்ந்து ஒரு நிமிஷம் சிரிப்பா. அதுக்கேது சத்தம்? அவ சிரிப்பு....சத்தம் கேட்காமல் குலுங்கிச் சிரிக்கும் சிரிப்பு. ஆனந்தமான சிரிப்பு. ஆயாசமான சிரிப்பு. வெட்கம் ரொம்பி வழியும் சிரிப்பு.

    சத்தமில்லாமல் வரும் சிரிப்புச்சத்தம் நினைவில் இருக்கிறது. அதை எதுக்கு இது மாதிரி, அது மாதிரின்னு கம்பேர் பண்ணனும்?

    அம்மா சிரிப்பு அம்மா சிரிப்புதான்..

    வெள்ளை வெளேர்னு அரிசி மாதிரி மேல் வரிசை, கீழ் வரிசை ரெண்டும் தெரியும் சிரிக்கும் போது.

    முத்துப்பல்செட்டுச் சிரிப்பு.

    நெனவு தெரிஞ்சு அம்மாவை பல்செட்டில் தான் பார்த்திருக்கேன். என்னிக்காவது அதைக் கழட்டினா அவளோட அம்மா மாதிரி இருப்பா.

    மண்ணுக்கு அடியில மாணிக்கம், வைரம், வைடூரியம் முத்து, பவளம் புதையல் கண்ட மாதிரி ஒரு சிரிப்பு...

    எத்தனையோ காரணத்துக்கு அவ சிரிச்சிருந்தாலும்.....ஒரு தடவை அவ சிரிச்ச அந்த சைலண்ட் கொல் சிரிப்பு மட்டும் நான் செத்தபின்னும் எனக்கு மறக்காது..

    அவரும் நானும் அவசரமா டாக்டர் செக்கப்புக்கு கிளம்பிட்டிருந்தோம்....அது மூணாவது சிட்டிங். இன்னும் ஏழு சிட்டிங் பாக்கி...அப்படி போகும்போதெல்லாம் அம்மாதான் என் ரெண்டு பசங்களையும் பாத்துக்குவா. நாங்க டாக்டர் கிட்ட போக காரணம் எதுவும் சொல்லாததால அவளுக்கு ஒரே கவலை...

    எத்தனை க்ளோசா இருந்தாலும், சில விவரங்களை அம்மா கிட்ட சொல்ல முடியாது. அவ விடறதா இல்ல. அவருக்குத்தான் ஏதோ உடம்புன்னு பயந்து போனா. இல்லவே இல்லைன்னேன். அப்படின்னா எனக்குத்தான் உடம்புன்னு பதறிட்டா. குழந்தைகளை அவ கிட்ட விடாம இருந்திருந்தா சொல்லாம தப்பிச்சிருக்கலாம். வேறவழியில்லாம சொன்னேன்...

    அம்மா.....ரொம்ப நாளா மனசே சரியில்ல. இப்பெல்லாம் அவருக்கும் எனக்கும் நடுவுல ரொம்ப கம்மிமா.

    ‘நேரத்தைச் சொல்றியா?’

    பாத்தியா ஒனக்கு புரியாது...

    ‘புரியறாப்பல சொல்லேன்’

    விடேன்

    ‘சொல்லு’

    இதப்பாரு கல்யாணம் ஆகி அஞ்சு வருஷந்தான் ஆச்சு... அதுக்குள்ள கொறஞ்சு போச்சு..

    ‘என்னது?’

    ஏன் இப்படி சொல்றதைக் கேக்காம முழிக்கற..?

    ‘கேட்டுட்டுதாண்டி இருக்கேன் சொல்லு’

    அய்யோ எங்களோட பெட்ரூம் உறவச் சொன்னேம்மா... எப்பவோ ஒரு தடவைன்னு கொறஞ்சு போச்சு.

    ‘கையக் கோத்துக்கறது, மடில படுத்துட்டு டீ.வி பாக்கறது, உன் தோள் மேல கை போட்டு ரகசியம் பேசறது இதெல்லாம் நான் அடிக்கடி கவனிச்சுருக்கேன். உன் கிட்ட அன்பாத்தானே இருக்கார்? ’

    ம்...ம்...இருக்கார்.

    ‘அப்பறம் என்ன?’

    இல்ல... பத்து நாளைக்கு ஒரு தடவைதான். ...சில சமயம் அதுவும் இல்ல.( அதைத் தவிர இருக்கும் சில சின்னக் குறைகளை, நல்ல வேளை அம்மா கிட்ட சொல்லல. டாக்டர் கிட்டயும் போகல)

    ‘அதுக்கென்ன?’

    எதேச்சையா அனிதா கிட்ட பேசினேன். அதைக் கேட்டதும் அவ என்னைத்திட்டி டாக்டர் கிட்ட அனுப்பினா...அவரை என் கூட வரவழைக்க நான் பட்ட பாடு இருக்கே!

    நான் சொல்லி முடிச்சதுதான் தாமதம்...எங்கம்மா உடனே சிரிச்சா. தொடர்ந்து ஒரு நிமிஷம் அந்த சிரிப்பை சிரிச்சா சத்தமே இல்லாம.

    அண்டர்கிரவுண்ட் சிரிப்பு...

    எனக்கு அப்ப பிடிக்கல அந்த சிரிப்பை...அம்மா சிரிப்பை மொத மொதல்ல பிடிக்காததும் அப்பதான்...

    ‘மாசத்துக்கு மூணு, நாலு தடவை போலிருக்கு. விட்டுத் தள்ளு. சந்தோஷமாதான இருக்க...’

    நீ சொன்னா ஆச்சா? உனக்கு தெரியாது.

    மறுபடியும் அதே சிரிப்பு. ஆத்திரமாய் வந்தது எனக்கு.

    இதுக்குத்தான் உன் கிட்ட சொல்லக்கூடாதுன்னு நெனச்சேன்...சொன்னா பாரு கேலி பண்ற. சிரிக்கற. ஒனக்கு புரியாது. இங்கிதமும் இல்ல.

    மறுபடியும் ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு சொன்னா....

    ‘நான் ஒண்ணு சொல்லவா? ஒனக்கு அதெல்லாம் தெரிய வாய்ப்பே இல்ல. உன் அப்பாக்கும் எனக்கும் எப்படி இருந்ததுன்னு நெனைக்கற?’ அதைக் கேக்கும்போது அநியாயத்துக்கு வெட்கம் வேற.

    அவ கேட்டது ஒரு நிமிஷம் ஒண்ணும் புரியல. நான் அதைப்பத்தி இன்னிவரை நெனச்சு பார்த்தது இல்லை....

    அம்மாவுக்கா!? அப்பாவுக்கா!?.....அவங்களுக்கு அது தேவைன்னு எனக்கு தோணினது இல்லை. இதுவரை யோசிக்காத அந்த விஷயம். திடுமென என்னவோ மாதிரி இருந்தது.

    ‘கிட்டத்தட்ட 20 வருஷத்துக்கு மேல ஆச்சுடீ அப்பாக்கும் எனக்கும்.....உன்ன மாதிரி நாள் கணக்கு இல்ல......அதான் எங்களுக்குள்ள அதெல்லாம் எப்பவோ முடிஞ்சு போச்சு...பின்ன என்ன? எனக்கு நீ சொல்றதைப் பாக்கும் போது சிரிப்புதான் வருது..’

    அம்மா சிரிச்சா...

    அதுதான்.. யாருமே புரிஞ்சுக்க முடியாத கவலை, சிரிப்பு எல்லாத்தையும் அண்டர்கிரவுண்டில் போட்டு மறைத்துவிட்டு ஆனந்தமாய், மெய்யாய் சிரிக்கும் சிரிப்பா...? அதுக்கேது சத்தம்? சத்தமே கேக்காம சிரிக்கும் சிரிப்பு.

    எப்படி முடிஞ்சது அவளால மட்டும் சிரிக்க.? அதுவும் இப்படிப்பட்ட ஒரு விஷயத்துக்குக்கூட? அப்பா மேல ஆத்திரமாய் வந்தது. ஏன் இப்படி மத்தவங்களை பத்தி, அதுவும் அம்மாவைப் பத்தி எனக்கு எதுவுமே தெரியல? அவதான் சிரிப்பால போத்தி மறைச்சுட்டாளா?
    இல்ல அவ சிரிப்புக்குள்ள நான் பாக்கலையா?

    நாலு வயசுல நாங்க குழந்தைகளெல்லாம் சேர்ந்து அம்மா அப்பா விளையாட்டு விளையாடும் போது கூட, ஏதோ புரிஞ்சுத் தொலச்சமாதிரி அப்பா அம்மா பெட்ரூம்னு சொல்லி சொல்லி விளையாடுவோம். அந்த வயசுல புரிஞ்ச எனக்கு, இப்ப என் பசங்க அதேபோல விளையாடறதைப் பாத்தும் புரிஞ்ச எனக்கு, என்னப்பத்தி மட்டுந்தான் எண்ணமே தவிர, அம்மாவைப் பத்தி எதுவும் தோணல!

    இப்ப பெரிசா புரிஞ்சதும் வெக்கமா இருந்தது. அடுத்தடுத்து இருந்த டாக்டர் சிட்டிங்கெல்லாம் உடனே கேன்சல் பண்ணினேன்.
    நான் சொன்ன என் விஷயத்தைக் கேட்டு அம்மா சிரிச்ச சிரிப்பு எனக்கு பிடிக்கவேயில்ல. ஆனா அம்மா என் கிட்ட அவ விஷயத்தை சொல்லிட்டு சிரித்த சிரிப்பு இருக்கே... ஸ்பரிஸம் மறந்த அவ காலம் மாதிரி...சத்தம் கேக்காத அந்த சிரிப்புச்சத்தம், அது என் நினைவிலேயே இருக்கிறது. அது என் அம்மாவின் உயிர்....அம்மாவின் ஆவி.


    முற்றும்

    எழுத்து - காமாக்ஷி
    Last edited by KAMAKSHE; 13-05-2012 at 08:04 AM.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    சிரிப்பைப் பற்றி எழுதி அழவைத்துவிட்டீர்களே ?

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    படித்தேன். கலங்கினேன்.
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    14 Oct 2009
    Posts
    425
    Post Thanks / Like
    iCash Credits
    12,815
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by ஜானகி View Post
    சிரிப்பைப் பற்றி எழுதி அழவைத்துவிட்டீர்களே ?

    இந்தக் கதையை எழுதி சுடச்சுட தமிழ் மன்றத்தில் பதித்தவுடன் வந்த முதல் விமர்சனம் உங்களுடயதே!

    நெகிழ்ந்தேன் !.

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் இராஜேஸ்வரன்'s Avatar
    Join Date
    07 Feb 2012
    Location
    Chennai, India
    Posts
    158
    Post Thanks / Like
    iCash Credits
    14,317
    Downloads
    1
    Uploads
    0
    ஆனா அம்மா என் கிட்ட அவ விஷயத்தை சொல்லிட்டு சிரித்த சிரிப்பு இருக்கே... ஸ்பரிஸம் மறந்த அவ காலம் மாதிரி...சத்தம் கேக்காத அந்த சிரிப்புச்சத்தம், அது என் நினைவிலேயே இருக்கிறது. அது என் அம்மாவின் உயிர்....அம்மாவின் ஆவி.
    அருமையான கதைக்கு ஏற்ற அற்புதமான முடிவு. பாராட்டுக்கள்.

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    14 Oct 2009
    Posts
    425
    Post Thanks / Like
    iCash Credits
    12,815
    Downloads
    16
    Uploads
    0
    ..........

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    14 Oct 2009
    Posts
    425
    Post Thanks / Like
    iCash Credits
    12,815
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by KAMAKSHE View Post
    ..........
    மிக்க நன்றி. பதிவை படித்ததற்கும், பாராட்டியதற்கும்.

  8. #8
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    "ப்ச்" என்று சொல்லத்தான் முடியுது. ஆதங்கங்களை கொட்டும் கதை. வாழ்த்துக்கள்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    14 Oct 2009
    Posts
    425
    Post Thanks / Like
    iCash Credits
    12,815
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by இராஜேஸ்வரன் View Post
    அருமையான கதைக்கு ஏற்ற அற்புதமான முடிவு. பாராட்டுக்கள்.
    ரொம்ப நன்றி இராஜேஸ்வரன்

  10. #10
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    அம்மாவின் சிரிப்போடு ஒப்பிட எத்தனை விதமான ஒப்புமைகள்! எல்லாவற்றையும் தோற்கடித்த அம்மாவின் அண்டர்கிரவுண்ட் சிரிப்பு அபாரச் சிறப்பு.

    பிள்ளைகள் சற்று வளர்ந்துவிட்டாலே பெற்றோருக்கிடையில் நிகழும் அந்தரங்கப் பரிமாற்றங்கள் நிறுத்தப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பு நம் சமுதாயத்தில் எப்போதுமே உண்டு. சேர்ந்து உட்காருவதையும் விமர்சிப்போர் உண்டு.

    எப்போது ஒருவருக்கொருவர் ஆதரவாயும் ஆறுதலாயும் துணை தேவைப்படுகிறதோ அப்போது தனிமைப்படுத்தல் மிகவும் வருத்தமான ஒரு விஷயம்.

    பழங்கதை பேசவும், உடல், மன வேதனைகளைப் பகிர்ந்துகொள்ளவும் அவர்களுக்குத் தனிமை தேவை. அப்படிப் பெற்றோருக்குத் தனியறை ஒதுக்கி, ஆதரவு அளிக்கப் பிள்ளைகளுக்கு மனமிருந்தாலும் பல வீடுகளில் பொருளாதாரம் இடங்கொடுப்பதில்லை.

    பொருளாதாரம் இடங்கொடுத்தால் சில மனங்கள் இடங்கொடுப்பதில்லை. இரண்டும் அமைந்தால் சமுதாயத்தின் பார்வையில் கேலிப்பொருளாவதை எண்ணி, பெற்றோர் மனம் உடன்படுவதில்லை.

    பேசாப்பொருளாகிவிட்டத் தன் அந்தரங்கத்தைப் பேசாமல் சிரிப்பால் உணர்த்திய பெண்மை மனம் நெகிழ்த்துகிறது.

    மிகவும் உணர்வுபூர்வமான கருவைக் கையிலெடுத்துக் கதையாக்கியதற்கு மனம் நிறைந்த பாராட்டுகள் காமாக்ஷி.

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    14 Oct 2009
    Posts
    425
    Post Thanks / Like
    iCash Credits
    12,815
    Downloads
    16
    Uploads
    0
    அன்பு கீதம்

    உங்களோட விமர்சனத்துக்காத்தான் காத்துகிட்டிருந்தேன்...

    நீங்கள் சொன்னதெல்லாம் உண்மை.. மேலும் பல வீடுகளில் சிறு சண்டையினால ஏற்பட்ட சாதாரண பிரிவு நிரந்தரமாக தங்கி விடவும் செய்கிறது...

    ஆண்களால் ஒதுக்கப் படவும் செய்கின்றனர் பெண்கள் . அவர்களுக்கு இறுதிவரை காரணம் புரிந்தும் புரியாமல் இருக்கும். ஆண்கள் சொல்லும் காரணம் ’பொண்ணு இன்னும் கொஞ்சம் அழகா இருந்திருக்கலாம்’னு. 50+ லயும் சொல்லிட்டே இருப்பாங்க... ஆனா பசங்க கிளி மாதிரி அம்மா சாயல்ல இருந்தாலும் யோசிக்காமாட்டாங்க..

    மிக்க மகிழ்ச்சி கீதம்... தங்கள் வலையிலும்...தமிழ் மன்றத்திலும் நிறைய பங்கு கொள்வேன் வரும் நாட்களில்.....

  12. #12
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    14 Oct 2009
    Posts
    425
    Post Thanks / Like
    iCash Credits
    12,815
    Downloads
    16
    Uploads
    0
    நன்றிகள் அன்புரசிகன்!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •