Results 1 to 4 of 4

Thread: வண்டி... வண்டி... ரயில் வண்டி

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் ஆளுங்க's Avatar
    Join Date
    05 Jul 2010
    Location
    திருச்சிராப்பள்ளி/ திருநெல்வேலி
    Age
    37
    Posts
    648
    Post Thanks / Like
    iCash Credits
    15,137
    Downloads
    136
    Uploads
    0

    Lightbulb வண்டி... வண்டி... ரயில் வண்டி

    என்ன தான் சொந்தமாக கார், பைக் என்று வைத்திருந்தாலும், ரயிலில் செல்லும் பயணமே அலாதியானது.

    ரயிலில் பயணம் செய்தால், அதிக கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். மேலும், உடலுக்கு அதிக சோர்வு இல்லாது பயணம் செய்யலாம். எனவே தான், தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறனர்.



    சென்னை போன்ற மாநகரங்களைப் பொறுத்தவரை, புறநகர் ரயிலில் சென்றால், வாகன நெரிசலில் மாட்டாமல் தப்பிச் செல்லலாம். விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். எனவே, புறநகர் பயணங்களுக்கும் மக்கள் இயன்ற அளவு ரயிலைப் பயன்படுத்துகிறனர்.

    சரி, ரயிலைப் பற்றிய இந்த பதிவில் என்ன சொல்லப் போறேன்?

    "ரயில் இஞ்சின்" என்பதற்குத் தமிழாக்கம் தொடர் வண்டி இழுபொறி. அனைவரும் எளிதில் படிப்பதற்காக ரயில் இஞ்சின் என்றே எழுதுகிறேன்.

    ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?

    ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்படி என்றால் என்ன அர்த்தம்?



    முதல் எழுத்து:
    முதல் எழுத்து ரயில் எந்த வகைப் பாதைக்கானது என்பதைக் குறிக்கும்

    W - அகன்ற இருப்பு பாதை (Broad Gauge / Wide Gauge - 1,676 மில்லி மீட்டர்)
    Y - மீட்டர் இருப்புப் பாதை (Metre Gauge - 1000 மில்லி மீட்டர் )
    Z - குறுகிய இருப்புப் பாதை (Narrow Gauge - 762 மில்லி மீட்டர்)
    N - குறுகிய இருப்புப் பாதை (Narrow Gauge - 610 மில்லி மீட்டர்)

    இரண்டாம் எழுத்து:
    இரண்டாம் எழுத்து ரயில் எந்த வகை சக்தியால் இயங்குகிறது என்பதைக் குறிக்கும்.

    D - டீசல் இஞ்சின்
    A - மின்சக்தி - மாறுதிசை மின்னோட்டம் (AC traction)
    C - மின்சக்தி - நேர் மின்னாட்டம் (DC traction)
    CA - மின்சக்தி - எந்த மின்னோட்டத்திலும் ஓடும் (AC & DC traction)
    B - பேட்டரி சக்தி

    இவற்றில் எதுவும் இல்லாமல் கீழ்காணும் மூன்றாம் எழுத்தில் உள்ள எழுத்துகள் இருந்தால், அது நீராவி இஞ்சின்.



    மூன்றாம் எழுத்து:
    மூன்றாம் எழுத்து ரயிலின் பயன்பாட்டைக் குறிக்கிறது. (நீராவி இஞ்சினில் இரண்டாம் எழுத்து)

    G - சரக்கு ரயில் (Goods)
    P - பயணிகள் ரயில் (Passenger)
    M- சரக்கு & பயணிகள் ரயில்
    U - புறநகர் ரயில்

    சில டீசல் இஞ்சின்கள் தவிர்த்து எல்லா இஞ்சின்களிலும் மூன்று எழுத்துகளுக்குப் பிறகு, நான்காவதாய் ஒரு எண் மட்டும் இருக்கும். அந்த எண் இஞ்சினின் மாடல் எண்ணைக் குறிக்கிறது
    ( WAP5 என்றால் அந்த இஞ்சினின் மாடல் எண் ஐந்து!)



    மேலே "சில டீசல் இஞ்சின்கள் தவிர்த்து" என்று சொன்னேன் அல்லவா? அந்த சில இஞ்சின்களில் மட்டும் நான்காவதாய் ஒரு எண்ணும், அதன் பிறகு ஒரு எழுத்தும் இருக்கும்.
    இவை இரண்டும் அந்த இஞ்சினின் சக்தியைக் குறிக்கின்றன. இவை அனைத்தும் 2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு உருவாக்கப்பட்ட இஞ்சின்களாகும். WDM1 மற்றும் WDM2 ஆகிய இஞ்சின்கள் மட்டும் இதில் வராது!!


    நான்காம் எண்ணை ஆயிரத்தால் பெருக்கிக் கொள்ளுங்கள். ஐந்தாவதாய் இருக்கும் எழுத்திற்கு இணையான எண்ணை (A - 1; B - 2; C - 3; D - 4; E - 5; F - 6) எழுதி அதை நூறால் பெருக்கிக் கொள்ளுங்கள். இரண்டையும் சேர்த்தால் கிடைப்பது தான் அதன் சக்தி (குதிரைச்சக்தியில்).

    எடுத்துக்காட்டாக, WDM3E இஞ்சினின் சக்தி = 3*1000+ 5*100 = 3500 hp ஆகும்.

    அதன் பிறகு எதுவும் குறியீடுகள் இருந்தால் அவை அந்த ரயில் இஞ்சினின் சிறப்பம்சங்களைக் (Technical Features) குறிக்கும். பெரும்பாலும் சரக்கு ரயில்களில் தான் அவை இருக்கும்.

    என்ன இனி உங்கள் முன் ஒரு ரயில் இஞ்சின் போனால், அது எந்த வகை என்று எளிதில் கண்டுபிடித்து விடுவீர்கள் தானே?
    நன்றி: இந்திய ரயில்வே ரசிகர் குழு (Indian Railways Fan Club) , விக்கிபீடியா

    எனது வலைப்பூவில் இருந்து மறுபதிப்பு செய்யப்பட்டது!

    வானை அளப்போம்!! கடல் மீனை அளப்போம்!!
    சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர் பிரேம்'s Avatar
    Join Date
    23 Jul 2010
    Location
    Malaysia
    Age
    34
    Posts
    462
    Post Thanks / Like
    iCash Credits
    10,236
    Downloads
    2
    Uploads
    0
    மிக சுவாரசியமான தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

  3. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    இரயில் எஞ்சின் பற்றிய தகவல் புதிது. பகிர்வுக்கு நன்றி ஆளுங்க.

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர் ravikrishnan's Avatar
    Join Date
    07 Sep 2011
    Location
    Antarctica
    Posts
    336
    Post Thanks / Like
    iCash Credits
    19,778
    Downloads
    1
    Uploads
    0
    இனிமேல் ரயில் நிலையத்திற்கு சென்றால் முதலில் எழுத்துகளை பார்த்து புரிந்துகொள்ளலாம், நல்ல பதிற்விற்க்கு நன்றி!!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •