Results 1 to 3 of 3

Thread: சொஃபுக்ளீசின் எலெக்த்ரா - 2

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0

    சொஃபுக்ளீசின் எலெக்த்ரா - 2

    -------------------------------------------------------------


    ( க்ளித்தெம்நேஸ்த்ராவின் நண்பர் அனுப்பிய தூதர் எனத் தம்மை

    அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவர் , தேர்ப் பந்தய விபத்தில் ஒரேஸ்த்தஸ் மாண்டுவிட்டதாய்த் தெரிவித்தார் .)

    க்ளித்தெம்நேஸ்த்ரா --

    அன்றுமுதல்
    அவனென் முகத்தைப் பார்த்தறியான் என்றாலும்
    தந்தையின் சாவுக்கு என்மீது பழிசுமத்தி
    சூளுரைத் திருந்தான் என்னைத் தண்டிக்க.
    இங்கே யதனால் இரவும் பகலும்
    கிடந்தேன் உறங்காமல் காலத்தின் கைதியாய்
    மெல்ல நெருங்கும் இறப்பை எதிர்நோக்கி .
    விடுதலை என்றனுக்கு இப்போது ; விடுதலை
    அவனைப் பற்றிய அச்சத்தில் இருந்து .
    என்னமைதியை அதிகமாய்க் கெடுக்கின் றவள்,
    என்னித யத்தின் செம்மதுவை உறிஞ்சும்
    பாம்பாம் இவளிடம் இருந்து மேதான் .
    இவளது மிரட்டலுக் கிடமின்றிப் போயிற்று .
    இனிநான் வாழலாம் அமைதியாய்.

    எலெக்த்ரா - நீதி யாகுமா இது ?

    க்ளி -நீதி , வழங்கி யாயிற்று அவனுக்கு .
    இன்னம் இல்லை உனக்கு .

    எலெக் - பழிக்கான தேவதையே ! கேள்.
    பேசு மடிந்தவனுக்காக .

    க்ளி --அதுமிக விஸ்வாசமாய்க் கேட்டுவிட்டது ;
    நன்றாயும் பேசிவிட்டது .

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    சுயநலம் பிரவாகிக்கும் தாயின் பேச்சைக் கேட்க மலைப்பாக உள்ளது.

    மகனின் இறப்பைக் கேள்விப்பட்டு மனம் நிம்மதியடைகிறாள்.

    மகளின் இறப்பையும் எதிர்பார்த்திருக்கிறாள். என்ன ஒரு கொடூரம்!

    காவியமென்றாலும் மனம் கனக்கிறது க்ளித்தெம்நேஸ்த்திராவின் கல்மனம் கண்டு.

    பழிக்கான தேவதையையும் பக்கம் இருத்திக்கொண்டவளை எப்படி இனி எதிர்கொள்வாள் எலக்த்ரா?

    அழகான மொழிபெயர்ப்பு. குருதியை செம்மது எனல் குறிப்பிடத்தக்கது. பாராட்டுகள். இன்னும் தொடருங்கள்.

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    ஆழமாய் சுவைத்திருப்பது தெரிகிறது . நன்றி பின்னூட்டத்துக்கு.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •