Results 1 to 11 of 11

Thread: சைபர் க்ரைம் - ஒரு பார்வை

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3

    சைபர் க்ரைம் - ஒரு பார்வை

    சைபர் க்ரைம் - ஒரு பார்வை

    நன்றி : இணைய நண்பன்


    இணையம் ஒரு விசித்திரம். ஒரு பக்கம் எண்ணற்ற வசதிகள் மூலம் இனிய முகங்களை காட்டி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. இன்னொரு பக்கம் ஹேக்கிங், ஸ்பாம், ஆபாசம் போன்ற வக்கிர முகங்களை காட்டி நம்மை துன்பத்தில் ஆழ்த்துகின்றன. சைபர் க்ரைம் எனப்படும் இணைய குற்றங்களை பற்றியும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் சிறிதளவு இங்கு பார்ப்போம்.

    இணைய குற்றங்கள் (Cyber Crimes):


    1. ஸ்பாம்(Spam) எனப்படும் தேவையில்லாத மெயில்கள்.இவற்றை பற்றி ஈமெயில் ஐடியை பாதுகாக்க சில வழிகள் என்ற பதிவில் பார்த்தோம்.

    2. கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலம் இணையத்தில் பணபரிமாற்றங்கள் நடக்கும்பொழுது, கடவுச்சொல் உள்பட கணக்கு விவரங்களை திருடுவது.

    3. பாலியல் ரீதியான தொல்லைகள் . சாட்டிங்கில் ஆரம்பித்து டேட்டிங்கில் முடிகிறது இன்றைக்கு சில இணைய நட்புகள். அதுமட்டுமின்றி காதலன் என்ற பெயரில் வக்கிர வெறிபிடித்த கயவர்கள் பெண்களை ஆபாசமாக படம்பிடித்து அதனை இணையத்தில் வெளியிடுகிறார்கள். மேலும் அதனைக் கொண்டே பெண்களை மிரட்டி வருகிறார்கள்.

    4. போதை பொருள் விற்பனை. தடைசெய்யப்பட்ட போதை பொருள்களை விற்பனை செய்வதற்கும் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

    5. இணையதளங்களை ஹேக் செய்வது. ஹேக்கர்களிடமிருந்து அமெரிக்காவின் சி.ஐ.ஏ-வும் தப்பவில்லை, மின்னணு சாதனங்களில் ஜாம்பவனாக திகழும் சோனி(Sony)யும் தப்பவில்லை. சமீப காலமாக பல தளங்கள் ஹேக் செய்யப்படுகின்றது.

    6. இருபது வயதுக்குட்பட்டவர்களுக்கு அல்லது இருபது வயதுக்குட்பட்டவர்களின் ஆபாச புகைப்படங்கள், படங்கள் இன்னும் சிலவற்றை இணையத்தில் பதிவது. [ஒன்றுமட்டும் புரியவில்லை. அது போன்ற ஆபாச தளங்களுக்கு சென்றால் கேள்வி கேட்கும். நீங்கள் இருபது வயதுக்குட்பட்டவரா? இல்லையா? என்று. சிறுவர்களும் "ஆம்" என்பதை க்ளிக் செய்தால் எளிதாக அந்த தளங்களை பார்க்கலாம். இது எப்படி இருக்கிறது என்றால், சிகரெட் பாக்கெட்டில் மண்டை ஓடு படத்தை போடுவது போல தான். ஆபாச தளங்களை முழுமையாக தடை செய்வதே இதற்கு சரியான தீர்வாகும்.]

    7. இவற்றைவிட கொடியது, குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள். மனித உருவில் பல மிருகங்களும் நம்முடன் வாழத்தான் செய்கின்றன. இவர்கள் சிறுவர், சிறுமிகள் உரையாடும் அரட்டை அறைகளுக்கு(Chatting) சென்று தங்களை குழந்தைகளாகவே அறிமுகம் செய்கின்றனர். பிறகு அவர்களின் புகைப்படங்கள், வீட்டு முகவரி, பள்ளி முகவரி என தகவல்களை பகிர்கின்றனர். இது போன்ற கேடு கெட்டவர்கள் ஒரு அமைப்பாகவே செயல்படுகின்றனர். தங்களுக்குள் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்களையும், தகவல்களையும் பகிர்ந்துக் கொள்கின்றனர்.

    பாதுகாப்பு வழிகள்:

    1. எந்த நிலையிலும் முகம் தெரியாத நபர்களிடம் உங்கள் தொலைபேசி எண், வீட்டு முகவரி, பள்ளி முகவரி போன்றவற்றை பகிர வேண்டாம்.

    2. ஃபேஸ்புக் போன்ற சமூக தளங்களில் அறிமுகம் அல்லாதவர்களை நண்பர்களாக சேர்க்க வேண்டாம்.

    3. குழந்தைகள் தனி அறையில் இணையத்தில் உலவுவதை அனுமதிக்காதீர்கள். குழந்தைகள் பயன்படுத்தும் கணினிகளை பொதுவான இடத்தில் வைப்பது நலம்.

    4. இணையம் பற்றியும் பாதுகாப்பு வழிகள் பற்றியும் உங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுங்கள். கணினி பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? என்பதை கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். அவர்களுடன் இணையத்தில் சிறிது நேரம் செலவிடுங்கள். அதிகமான குழந்தைகள் வழிமாறி செல்வதற்கு சரியான அரவணைப்பு இல்லாதே காரணம் என நான் கருதுகிறேன்.

    5. உங்கள் குழந்தைகள் பார்வையிடும் வலைத்தளங்களை கண்காணியுங்கள். நீங்கள் செல்லும் போது குழந்தைகள்அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த வலைத்தளத்தை மூடினால், உடனே கவனிக்கவும்.

    6. அறிமுகம் இல்லாத நபர்கள் உங்களை நேரில் சந்திக்க அழைத்தால் மறுத்துவிடுங்கள்.

    7. நீங்கள் மற்றவர்களுடன் அரட்டை அடிப்பதை அவர்கள் பதிவு செய்யக் கூடும் என்பதை மறவாதீர்கள்.

    8. அறிமுகம் இல்லாதவர்களுடன் முகம் பார்த்து அரட்டை அடிக்கும் வீடியோ சாட்டிங்கை தவிர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் பதிவு செய்யப்பட்டு, உங்களுக்கு தெரியாமலே இணையத்தில் பரப்பப்படலாம்.

    9. இணையத்தில் உங்களை பற்றிய முழு விவரங்களையும் பகிர வேண்டாம். முக்கியமாக ஃபேஸ்புக்கில்.

    10. குழந்தைகள், பெண்கள் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதை தவிர்க்கவும். தற்போது உள்ள தொழில்நுட்பங்கள் மூலம் அந்த புகைப்படங்களை ஆபாசமாக மாற்றலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

    11. உங்கள் password-ஐ பெற்றோர்களை தவிர வேறு யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்.

    12. பணபரிமாற்றங்கள் செய்யும் பொழுது அந்த பக்கத்தின் முகவரியை பாருங்கள். http::// என இருந்தால் உங்கள் கார்ட் விவரங்களை கொடுக்காதீர்கள். https:// என்று இருந்தால் மட்டுமே பணப்பரிமாற்றம் செய்யுங்கள். https::// என்பது பாதுகாப்பான வழியாகும்.

    13. காதலன் என்றாலும் உங்களை படம்பிடிப்பதை அனுமதிக்காதீர்கள்.

    பிரச்சனை பெரிதாக ஆனால் ஃசைபர் க்ரைமில் புகார் செய்யலாம். புகார் செய்யும் முன் வக்கீல்களிடம் ஆலோசனை பெறவும்.

    சைபர் க்ரைமில் ஏற்றுக்கொள்ளப்படும் புகார்கள்:

    1. இண்டர்நெட் கடவுச்சொல் திருட்டு

    2. அச்சுறுத்தும் மின்னஞ்சல்கள்

    3. இணைய பின்தொடர்தல் (Cyber Stalking) [பாலியல் ரீதியிலான தொல்லைகள், வேறொருவர் உங்களை போல இணையத்தில் உலவுவது, மிரட்டல்கள் ஆகியவைகளும் அடங்கும்].

    4. குழந்தைகள் வன்கொடுமை / ஆபாச தளங்கள்

    5. கடன் அட்டை எண் திருட்டு

    6. வலைத்தள ஹேக்கிங்

    தமிழ்நாட்டில் புகார் கொடுக்க:

    சென்னை தவிர பிற மாவட்டங்கள்:
    Tmt.Sonal V.Misra, IPS,
    SCB, Cyber Cell
    SIDCO Electronics Complex,
    Block No. 3, First Floor,
    Guindy Industrial Estate,
    Chennai -32

    மின்னஞ்சல் முகவரி: spcybercbcid.tnpol(at)nic.in

    சென்னை:
    Tr.S.Aravind,
    DSP, CBCID, Cyber Crime Cell
    SIDCO Electronics Complex,
    Block No. 3, First Floor,
    Guindy Industrial Estate,
    Chennai -32

    தொலை பேசி எண்: 044-22502512
    மின்னஞ்சல் முகவரி: cbcyber (at) nic.in

    கவனிக்க: இந்த பதிவை எழுதுவதற்கு என்னை தூண்டியதே 3,6,7 ஆகிய குற்றங்கள் தான். அவைகள் என்னை அதிகம் கவலைப்பட வைத்தது. நாளைய தலைமுறையினர் வழிமாறி செல்லக்கூடாது என்பதே எனது ஆசை.

    நன்றி: இந்த பதிவு டெர்ரர் கும்மி விருதுகள் 2011-ல் விழிப்புணர்வு பகுதியில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளது. டெர்ரர் கும்மி நண்பர்களுக்கும், தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர் ravikrishnan's Avatar
    Join Date
    07 Sep 2011
    Location
    Antarctica
    Posts
    336
    Post Thanks / Like
    iCash Credits
    19,778
    Downloads
    1
    Uploads
    0
    உங்களின் பதிவு எங்களுக்கு ஒரு வழிகாட்டி,அருமையான கருத்துகள்
    அனைவரும் இதைதெரிந்துகொள்ளவேண்டும்,இதைபோல் இன்னும் சமுதாயத்திற்கு தேவையான உங்கள் பதிவுகளை வரவேற்கிறோம்.

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    மிகவும் பயனுள்ள கட்டுரை. இதை இங்கே பதிந்தமைக்கு மிக்க நன்றி.
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    இன்றைய காலத்துக்குத் தேவையான முக்கியமான விழிப்புணர்வுக் கட்டுரை. இதை அப்படியே என் மகனிடம் படித்துக்காட்டி, இணையத்தில் வரக்கூடியப் பிரச்சனைகளைப் பற்றி புரியவைத்துவிட்டேன். பகிர்ந்துகொண்டதற்கு நன்றி ஜெய்.

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Aug 2009
    Location
    மலேசியா
    Posts
    105
    Post Thanks / Like
    iCash Credits
    33,728
    Downloads
    1
    Uploads
    0
    மிகவும், அருமையான தகவல். நன்றி.

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    சைபர் கிரைம் - 3


    சமீபத்தில் என் ஆர்குட் உள்ளே சென்று பார்த்தபோது அதில் புதியதாய் நான் ஆர்க்குட்டில் சேர்க்காத ஒரு பெண்ணின் படம் மின்னியது. அது ஒரு பெண்ணின் படம் அரைகுறை ஆடையில். அவளுக்கு எதிரே அவள் பெயராகக் குறிப்பிட்டிருந்ததை நான் இங்கு எழுத முடியாது. அங்கு மினுமினுத்த ஒரு scrap அவள் சகோதரியின் அந்தரங்கம் குறித்துப் பேசியது. உடனே எனக்கு எங்கோ மணியடித்தது. ஆஹா...! நம் ஆர்க்குட்டினுள் யாரோ நுழைந்துவிட்டார்களோ என்று. அப்படியே அவளைக் கிளிக்கினேன், கண்ணை மூடிக்கொண்டு அந்தப் பெண்ணை என் ஆர்க்குட் அக்கவுண்டில் இருந்து புறம் தள்ளினேன்.

    மறுநாள் காலை என் கைப்பேசியில் என் நண்பர் ஒருவரிடமிருந்து தன் ஆர்க்குட் அக்கவுன்ட் யாராலோ கடத்தப்பட்டிருப்பதாக ஒரு குறுந்தகவல். ஓ! அவரா நீர்? என நினைத்துக் கொண்டேன். ஆர்க்குட்டுடன் இணைந்த கூகுல் பாஸ்வேர்டும் சேர்ந்து போயிற்று. அதைத் திரும்பப் பெற முயற்சித்த அவரது பிரயத்தனங்கள் உடனடிப் பலனைத் தரவில்லை. இதுவரை என்னாயிற்று எனத் தெரியவில்லை.

    என்னைத் தொலைபேசியில் அழைத்து "எனக்கு பயமாயிருக்கு கிரி", என அவர் சொன்னது மட்டும் என் காதுகளில் ஒலித்த வண்ணம் உள்ளது. நிஜம்தானே? ஒரு பாஸ்வேர்டுக்குள் கூகுல், ஆர்குட், பிளாக்கர், feedburner, பிகாஸா என என்னைப்போன்ற சாமானியர்களுக்கே இத்தனை விஷயங்கள் இருக்கின்றன.

    ஏதோ ஒரு படத்தில் படம் முடியும் முன் நடிகர் விஷால் ஒரு வசனம் சொல்லி படத்தை முடித்து வைப்பார்.... "ஏதாவது செய்யணும் சார்!" என்று.

    சில நேரங்களில் இவைகளில் இருந்து தப்பிக்க "எதாவது செய்யணும்", சில நேரங்களில் "எதாவது செய்யாம இருக்கணும்".

    பார்த்து நடந்துக்கங்க.

    நன்றி : பேசுகிறேன் இணையம்
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர் மஸாகி's Avatar
    Join Date
    05 Apr 2006
    Location
    இலங்கை
    Posts
    183
    Post Thanks / Like
    iCash Credits
    21,915
    Downloads
    45
    Uploads
    1
    நல்லதொரு கட்டுரை - நாஞ்சில் த.க.ஜெய் க்கு நன்றிகள்..
    ஆளுக்கொரு திறமையல்ல - எல்லோருக்கும் எல்லாத் திறமைகளும் உண்டு..

  8. #8
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    சைபர் க்ரைமைப் பற்றி தெரிந்துகொள்ள நினைத்திருந்தேன். எளிமையாய் அதே சமயம், விவரமாய் அவற்றைக் கொடுத்தமைக்கு நன்றிகள் ஜெய்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    விழிப்புணர்வு ஏற்படுத்தும் உன்னதமான பகிர்வுக்கு மிக்க நன்றி ஜெய்.

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர் அமீனுதீன்'s Avatar
    Join Date
    19 Dec 2009
    Location
    துபாய்
    Age
    56
    Posts
    181
    Post Thanks / Like
    iCash Credits
    16,346
    Downloads
    137
    Uploads
    6
    சைபர் க்ரைம் பற்றி விளக்கமான பதிவு, நன்றி நண்பரே...
    Last edited by அமீனுதீன்; 05-07-2012 at 11:51 AM.
    முயற்சி உடையார் இகழ்சி அடையார்...

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Aug 2009
    Location
    மலேசியா
    Posts
    105
    Post Thanks / Like
    iCash Credits
    33,728
    Downloads
    1
    Uploads
    0
    பகிர்வுக்கு நன்றி.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •