Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 32

Thread: கலைவேந்தனின் நல்வழி வெண்பாக்கள்..!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0

    கலைவேந்தனின் நல்வழி வெண்பாக்கள்..!

    கலைவேந்தனின் நல்வழி வெண்பாக்கள்...!

    1.இறைப் பெருமை

    வாழ்வும் வளமும் தெளிமனமும் இன்னுறவும்
    தாழ்வும் தரித்திரமும் நோயதுவும் - ஏழ்மையும்
    யாரார்க் கெதுவென வாய்பார்த் ததனையும்
    தீரா தளிப்ப திறை!!


    பொருள் : நல்லோர்க்கு நல்வாழ்வும் வளமையும் தெளிவான மனமும் தீயோர்க்கு தரித்திரமும் தாழ்மையும் பிணிகளும் அவரவர் வழிப்படி(வாய்=வழி) எவர்க்கு எது தகுமென இந்த உலகத்துக்கு (குவலயம்=பூவுலகம்)தருகிற இறைவன் பெருமை மிக்கவன்!

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    2.தாய்ப் பெருமை

    தன்னுயிரை ஈந்துபின் தன்னுதரம் தானீந்து
    மன்னுபுகழ் நாம்பெறவே ஏங்கிநிதம் - சின்னதொரு
    கட்டெறும்பு ஊர்ந்தாலும் ஓடிவந் தேயெம்மை
    சிட்டுபோல் காப்பவள் தாய்!


    பொருள் : மகவுக்கென் தனது உயிரையே அளித்து தனதுவயிறாகிய கோயிலலயும் வழங்கி (தன்உதரம்=தன்வயிறு) நிலையான புகழ் நாம் பெற வேண்டி (மன்னு=நிலையான)ஏங்கித்துடித்து சிறிய கட்டெறும்பு நமை நோக்கி நகர்ந்து வந்தாலும் துடிதுடித்து ஓடிவந்து நம்மை சிட்டுக்குருவி தன் குஞ்சைக்காப்பதுபோல் காக்கும் நடமாடும் தெய்வம் தாய்!

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    3.தந்தை பெருமை

    நமைபெற்ற தாயையும் நம்மையுந்தான் தாங்கி
    இமைமணியைக் காப்பதுபோல் நாளும் - சுமையெனவே
    என்றுமே எண்ணாது நற்கடமை ஆற்றியே
    நன்றி கருதா உளம்!


    பொருள் : நம்மையும் நம்மைஈன்ற தாயையும் காத்து போற்றி இமையானது தன் கண்மணியைக்காப்பதுபோல் எப்போதும் காத்து ஒரு நாளும் நம்மை ஒரு சுமைஎன நினைக்காமல் தம் கடமைகளை ஆற்றி அதற்காக நன்றியையும் எதிர்பாராத இன்னொரு தெய்வம் தந்தை!

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    4.ஆசிரியர் பெருமை

    குற்றங் களைந்து உறுதுணையாய் தானின்று
    உற்றதோர் வாழ்வுநெறி ஈந்துபின் - கற்றது
    தெள்ளிநிதம் பூவுலகில் யாவரும் போற்றிடவே
    உள்ளது ரைக்கும் குரு!



    பொருள் : மாணவர்களின் குற்றங்குறைகளைக் களைந்து அவருக்கு உற்ற வழித்துணையாய் இருந்து வாழ்வு நெறிகளைக் கற்பித்து கற்றுத்தந்தவைகளை வாழ்க்கையில் கடைபிடிக்க அறிவுரைகள் கூறி
    இவ்வுலகில் பெரும் மதிப்புபெற்று விளங்கும் நல்லாசிரியர் இன்னுமொரு தெய்வம் போன்றவர்!

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    5.தமிழின் பெருமை

    ஈர்வரியால் வாழ்வுமுறை ஈந்துமொரு மூதுரையும்
    சார்மறையாம் நாலடியும் கம்பனுடன் - ஏழ்மையிலா
    சொல்வளமும் மாளாப் பொருள்வளமும் கொண்டுலகில்
    பல்கலையும் ஆண்ட தமிழ்!


    பொருள் : இரண்டு வரிகளில் வாழ்க்கை வழிமுறைகளைத் தந்த திருக்குறளையும் மூதுரை நாலடியார் கம்பராமாயணம் ஆகிய மாபெரும் இலக்கியங்களைத் தம்மில் கொண்டு குறைவே இல்லாத சொல்வளங்களும் அழியாத பொருள்வளங்களும் கொண்டு பல கலைகளையும் ஆண்டுகொண்டு இருக்கும் தமிழ் மேன்மையானது.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    6.தமிழகப்பெருமை

    இன்னல்செய் தேமகிழும் கீழ்க்குணமும் போருளமும்
    தன்னலமும் இன்றியே இவ்வுலகில் - அன்னதொரு
    நாடொன் றருமையே என்றிடும் பேர்பெற்று
    ஈடிலா செந்தமிழ் நாடு!


    பொருள் : பிறருக்கு தீங்கு செய்து மகிழும் கீழான குணங்களும் சண்டையிடும் போர்க்குணங்களும் தன்னலமும் இல்லாமல் இப்படி ஒரு நாடு இருக்கிறதே என்று உலகமே போற்றும் வகையில் புகழ் பெற்று விளங்குவது இணையற்ற நம் தமிழ்நாடு..!

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    7.தலைவன் பெருமை

    தாயவள்தம் மக்களைத் தாங்குதல் அன்னவே
    சேயது பெற்றவரைப் போற்றுதலும் - நோய்தனைப்
    போக்கும் மருத்துவர் காட்டிடுமவ் வ*க்கறையும்
    வாக்குநலம் கொண்டதலை வன்!


    பொருள் : ஒரு தாய் தனது குழந்தைகளைத் தாங்கிக் காப்பது போலவும் குழந்தைகள் தமது பெற்றோரைப் போற்றி மகிழ்வது போலவும் ஒரு நோயைப்போக்கிட மருத்துவர் காட்டுகின்ற அக்கறையையும் கொண்டு நன்கு பேச்சுத் திறன் படைத்தவனாக ஒரு தலைவன் அமைய வேண்டும்..!

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    8.தொண்டன் பெருமை

    தலைவன்சொல் வேதமென் றென்றுமே எண்ணார்
    குலைத்தெங்கு போன்றே உதவி - மலைபோல்
    சகமனிதத் தொண்டுடன் நல்நோக்கம் கொண்டு
    இகம்மகிழ வாழ்வார் இவன்!


    பொருள் : தலைவனின் சொற்களை அனைத்துமே வேதம் போல் மதித்து வழிபடாமல் நல்லவைகளை மட்டுமே எடுத்துக்கொண்டு தென்னையைப்போல மக்களுக்கு உதவி செய்து தன்னலம் பார்க்காமல் மலை போல மனிதத்தொண்டுகள் செய்து நல்ல நோக்கங்களைக்கொண்டு இந்த உலகம் மகிழும்படி வாழ்ப்வர்களே சிறந்த தொண்டர் ஆவார்கள்.

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    9.நட்பின் பெருமை

    குன்றின்மேல் வீழ்ந்துபடும் நீர்த்துளி போலன்றி
    ஒன்றே கருத்தாகி யோரெண்ண மென்றெனத்
    தீயதணைக் கும்போ தணைத்தா றுத*லீந்தோர்
    தாயெனக் காக்குமாம் நட்பு.


    பொருள் : குன்றின் மேல் விழும் மழைத்துளிகள் குன்றினால் ஈர்க்கபப்டுவதில்லை. பட்டும் படாமல் வழுக்கிச்சென்றுவிடும். அதுபோன்று இருக்காமல் ஒத்த கருத்துகளை உடையவர்களாக இருந்து ஒரே நல்லெண்ணங்களைக்கொண்டு நண்பருக்கு தீங்கு வந்த போது அவரை அணைத்து ஆறுதல் கூறி ஒரு தாயைப்போல காபப்தே சிறந்த நட்பாகும்.

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    10. காதல் பெருமை

    ஓருயிரென் றென்றும் ஒருமித்தே எண்ணமுமாய்
    ஆருயிரை ஈந்தும் நலங்காக்கும் கார்குழ*லாள்
    வேர்வையும் ப*ன்னீராம் காதலில் காதலுந்தான்
    கோர்வையாய் பொய்யுரைக்கும் பார்.


    பொருள் : ஓர் உயிராய் ஒருமித்து பழகுவதும் ஒரே கருத்துக்களைக் கொண்டு இருப்பதும் தன் உயிரைத் தந்தாவது தனது இணையைக் காக்கும் தியாக மனமும் கொண்டும் இருக்கும் காதலில் பொய்யும் மிக அதிகமாக நிறைந்திருக்கும் என்பதும் உண்மையாகும். எவ்வாறெனில் காதலன் காதலிக்கும் காலத்தில் காதலியின் வியர்வை கூட பன்னீராய் மணக்கும் என்றெல்லாம் பொய் சொல்லும் அளவுக்கு காதல் வேகம் நிறைந்ததாகும்.

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    11. பணத்தின் பெருமை


    பத்துமே செய்திடும் அத்துடன் நில்லாதே
    எத்துணை ஏலுமோ அவ்வாறே - அத்துடன்
    நற்றுணை யாவதும் நாசங்கள் சேர்ப்பதும்
    பற்றினை மாய்ப்பதும் காசு.


    பொருள்: பணமானது பத்துவிதமான செயல்களைச் செய்வதோடு அதற்கும் மேலும் செயல்களைச் செய்ய வல்லமை மிக்கதாகும். பணமானது நல்ல நட்பையும் நாசங்களையும் செய்து மகிழும். சிறந்த மேலோர் பணத்தினைக் கொண்டு பற்றினை ஒழிப்பதும் உண்டு.

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    12. உறவுப் பெருமை


    இல்லாமை வாருங்கால் இன்முகம் காட்டியே
    இல்லாமை இல்லாமல் போக்கிடும் - வல்லாராய்
    பொல்லாமை வாருங்கால் போர்வாளாய்க் காத்திடும்
    வல்லாண்மை வாய்த்ததாம் கேள்.


    பொருள் : உறவானது ஏழ்மை வருங்காலத்தில் இன்முகத்தோடு அந்த ஏழ்மையைப் போக்க வேண்டும். தம் உறவினருக்கு எந்த வித தீமைகள் வந்த போதும் போர்வாள் போல அவர்களைக் காத்து நிற்கும். மிக்க வல்லமை மிக்கது உறவு என்பதாகும்.

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •