Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 21 of 21

Thread: தூமகேது - பகுதி ஏழு.( நிறைவுப்பகுதி )

                  
   
   
  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    தூம கேது... பகுதி ஏழு..! ( நிறைவுப் பகுதி )

    ]ண்டனில் இருந்து திரும்பியநாள் முதல் மனோஜ் தத்தா சர் ஜானுடன் அடிக்கடி தொடர்புகொள்ளத்தவறவில்லை.இருவரும் மிக நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். ஒருவரை ஒருவர் திறமைகலை வியந்துகொண்டனர். அவர்களின் தொடர்பில் ப்ராஜக்ட் லைட் பிரிகேடின் முன்னேற்றம் குறித்த பரிமாற்றங்களும் இடம்பெறத் தவறவில்லை.

    ஆனால் கடிதத்தைப் பிறர் எவர் படித்தாலும் விளங்கிக்கொள்ளாதவாறு சங்கேதங்களில் பரிமாறிக்கொண்டார்கள்.

    தத்தா தனது திவ்யாவியின் உதவியுடன் அந்த வால் நட்சத்திரத்தைத் தினமும் கவனித்து தினம் தினம் அதன் தொலைவைக் கணக்கிடத்தவறவில்லை.

    இப்போது வாலும் முளைத்துவிட்டிருந்தது.. தத்தாவுக்கு.. காமெட் தத்தாவுக்கு. ..

    எதிர்பார்த்த மாதிரி அல்லாமல் அந்த வால் நட்சத்திரம் ஆவியாகாமல் சூரியனைச் சுற்றிவந்த வண்ணம் பூமியை நெருங்கிக் கொண்டிருந்தது.

    லைட் ப்ரிகேட் ப்ராஜக்டில் தொடர்புகொண்ட அனைவருக்கும் காமெட் தத்தா பூமியுடன் மோதப்போவது திண்ணமாகத் தெரியவந்தது.

    அக்டோபர் மாத நடுவில் சர் ஜானுக்கு தத்தாவிடமிருந்து வந்திருந்த கடிதத்தில் லண்டனைப்பற்றிய விவரங்களும் வானிலை அறிக்கையும் கால் பந்தாட்ட விவரங்களும் சமீபத்திய இடைத்தேர்தலைப்பற்றியும் எழுதப்பட்டு இருந்தாலும் லைட் பிரிகேடின் துவக்கம் பற்றியும் குறிப்பைக் கொடுத்திருந்தார்.

    சரியான நேரத்தில் அணு ஆபத்துகளுடன் விண்கலம் வானில் ஏவப்பட்டது.

    ஆனால் சரியான நேரத்தில் சரியான திசையில் சென்று வால் நட்சத்திரத்தை எதிர்கொள்ளுமா..?

    சரியான சமயத்தில் ரிமோட் கண்ட்ரோல் சொதப்பாமல் வேலை செய்யுமா..?

    முக்கியமான நேரத்தில் அணுப்பிளவு அங்கே நடவாமல் போய்விட்டால் என்ன ஆகும்..?

    இவை எல்லாம் ஒரு குழுவினரின் தினசரி கவலைகள் ஆயின.

    தத்தாவுக்கு தனது நிலைகொள்ளா தவிபை எவரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூட இயலாதது சிரமமாக இருந்தது.

    வெளிப்படையாக தமது தவிப்பைக் காட்டிக்கொள்ளாமல் துர்கா பூஜை தீபாவளி ஆகிய அனைத்திலும் அமைதியாகக் கலந்துகொண்டார்.

    இரவில் திவ்யாவுடன் தனது மனக்கலக்கங்களை மானசீகமாகப்பகிர்ந்து கொண்டார்.

    இப்போது வெறும் கண்களுக்கும் கூட தத்தா வால் நட்சத்திரம் தெரியத் தொடங்கியது.

    நவம்பர் 18 ஆம் தேதி தத்தாவுக்கு சிறப்புத்தந்தி வந்து சேர்ந்தது. மிகவும் அவசரம் என்பதால் தந்தி உயர் அதிகாரியே நேரில் வந்து . தத்தாவிடம் அந்த தந்தியைச் சேர்த்தார். தத்தா இப்போது உலகப்புகழ் பெற்றவர் இல்லையா..?

    அந்தத் தந்தி சர் ஜானிடம் இருந்து வந்திருந்தது. நடுங்கும் கைகளால் அதைப்பிரித்துப் படித்தார் தத்தா.


    ‘’ இனி நான் கிறிஸ்துமஸுக்காக டிசம்பர் 15 ஆம் தேதி பரிசு வாங்கலாம் என நம்புகிறேன் - ஜான் மேக்பெர்சன்.’’


    அடுத்து எல்லாமே சுமுகமாக நடந்தது. டிசம்பர் 15 ஆம் தேதி காமெட் தத்தா பூமிக்கு மிக அருகில் வந்து சென்றது. மிகப்பெரிய கோளமாக சுமார் 80000 கிலோமீட்டர் தொலைவில் வந்து சென்ற காமெட் தத்தாவை கோடிக்கணக்கானோர் கண்டு வியந்தனர்.

    மிகவும் குறைந்த எண்ணிக்கையில் சிலரே அந்த வால் நட்சத்திரம் எத்தனை அருகில் வரவேண்டியது என்பதும் வராமல் போயிற்று என்பதையும் அறிவர்.

    த்தாவின் அருகில் வந்து அவரது கையைப்பற்றிய இந்திராணி கேட்ட கேள்வி தத்தாவை திடுக்கிடச் செய்தது.

    ‘’ அந்த வால் நட்சத்திரம் பூமிக்கு எந்த தீங்கும் செய்யாமல் காப்பாற்றியது எப்படின்னு தெரியுமா உங்களுக்கு..? ‘’

    தத்தா அதிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தார். ‘ இவளுக்கு ஒரு வேளை உண்மை தெரிந்துவிட்டதோ ? நாம் யாரிடமும் சொல்லாமல் தானே காப்பாத்தி வந்தோம்..? எப்படி இவளுக்கு உண்மை தெரியவந்தது..? ‘

    ஆனால் அதைக் காட்டிக்கொள்ளாமல் இயல்பாகக் கேட்டார். ‘’ எப்படி..? ‘’

    ‘’ நான் ஏற்பாடு செய்த அந்த சாந்தியாகத்தால் தான்.. இப்ப புரியுதா ? ’’என்றாள்.இந்திராணி

    ‘’ குருஜி சொன்னபடி யாகம் மட்டும் செய்யாமல் இருந்திருந்தால் என்னென்ன அனர்த்தங்கள் நடந்திருக்குமோ..’’ இந்திராணி கூறிக்கொண்டே சென்றது அவர் காதில் சன்னமாக மறைந்து அங்கே லண்டனில் ஒரு வாரம் தூக்கம் தொலைத்து வல்லுனர்கள் அனைவரும் அலசி ஆராய்ந்த அந்த காட்சி மனத்திரையில் ஓடியது.

    தத்தா புன்னகைத்துக்கொண்டார்.

    முற்றும்.

    இக்கதை ஜயந்த் நார்லிகர் என்பவரால் எழுதப்பட்ட தி காமெட் என்னும் ஆங்கிலக் கதையின் மொழியாக்கம்.

  2. Likes ந.க liked this post
  3. #14
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    இக்கதை உங்களைக் கவரவில்லை என்றால் அந்த குற்றம் முழுக்க என்னுடையதாகத்தான் இருக்கவேண்டும். கதையில் குற்றமில்லை. அதை எழுதியவர் மிகப்பெரிய எழுத்தாளர்.

    கருவிலும் குற்றமில்லை.

    அதைத்தமிழாக்கம் செய்த என் மேல் தான் பிழை போலிருக்கிறது. இருப்பினும் வாசித்தவர்களுக்கு எனது நன்றி. வணக்கம்.

    எழுதுபவனை நல்லா இருக்கு அல்லது இக்குறை களையலாம் என்று ஏதாவது கருத்து சொன்னால் தான் அவனது ஊக்கம் அதிகமாகும் என்பது என் எளிய கருத்து. :(

  4. #15
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    மாறுபட்ட கதை ..அதேநேரம் சில வருடங்களுக்கு முன் நாவலாசிரியர் திரு ராஜேஷ் குமார் அவர்கள் எழுதிய என்னில் இன்றும் நினைவில் இருக்கும் ஓர் புதினம் நெருப்பு நிமிஷங்கள் என்ற கதையினை ஒத்திருக்கிறது ....
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  5. #16
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    மிக்க நன்றி ஜெய். நீங்கள் குறிப்பிட்ட கதையை நான் வாசித்ததில்லை. கிடைத்தால் எனக்கு வாசிக்கத்தாருங்கள்.

  6. #17
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    2012 ஆம் ஆண்டும், அதனை மையமாகக் கொண்ட செய்திகளும், அனுமானித்த முடிவுமாக கதைப் பயணம் அமைந்திருக்கிறது.

    உலக அழிவு என்ற செய்தியால் தாக்குண்டோருக்கு ஆறுதல் அளிப்பதாக இருக்கும்.

    வான் விஞ்ஞானம் என்றதும் எழுந்த எதிர்பார்ப்பு, தூமகேது ஆன உணர்வு..

  7. #18
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    முழுக்கதையையும் வாசித்தேன். மிகவும் எளிமையான வார்த்தைகளால் அருமையான அறிவியல் கதையை அழகாய் மொழிபெயர்த்து வெளியிட்டமை சிறப்பு. அறிவியலை மட்டும் மையமாகக் கொண்டிராமல், அரசியல், ஆன்மீகம், உளவியல், நகைச்சுவை போன்றவற்றையும் சரியான விகிதத்தில் தன்னுள் அடக்கிய சுவாரசியமிக்க கதைப் பகிர்வுக்கு நன்றி கலைவேந்தன். மூலக்கதையின் ஆசிரியருக்கும், அதை சிரத்தையுடன் அழகாய் மொழிபெயர்த்து வழங்கிய தங்களுக்கும் பாராட்டுகள்.

  8. #19
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    கதையை அருமையாக மொழிபெயர்த்துள்ளீர்கள். இன்னும் நிறைய மொழிபெயர்த்து எங்களுக்கும் சிறந்த கதைகளைப் படிக்க வகை செய்யுங்கள். உங்கள் முயற்சிக்கு என் நன்றிகள்.

  9. #20
    இளம் புயல் பண்பட்டவர் இராஜேஸ்வரன்'s Avatar
    Join Date
    07 Feb 2012
    Location
    Chennai, India
    Posts
    158
    Post Thanks / Like
    iCash Credits
    14,317
    Downloads
    1
    Uploads
    0
    அதைத்தமிழாக்கம் செய்த என் மேல் தான் பிழை போலிருக்கிறது.
    அப்படி ஒன்றும் குறை தெரியவில்லை. மிகவும் அழகாக தமிழாக்கம் பண்ணியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

  10. #21
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    பாராட்டிய நண்பர்கள் அமரன் கீதம் ஆரென் மற்றும் ராஜேஸ்வரன் அனைவருக்கும் நன்றி.

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •