Page 1 of 5 1 2 3 4 5 LastLast
Results 1 to 12 of 59

Thread: நிலாமகளால் முகிழ்ந்தவை

                  
   
   
  1. #1
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1

    நிலாமகளால் முகிழ்ந்தவை

    சின்ன நிலாவின் சேட்டைகள் (1)

    அன்றாடங்களை வரவேற்கும்
    அப்பனே… முருகா… என்னும்
    அதிகாலை விளிப்புகள்,

    உட்காரவும் எழவும் உதவும்
    முனீஸ்வரா… ஐயனாரப்பா…
    என்னும் முன்மொழிதல்கள்,

    படுக்கப்போகுமுன் பாவக்கணக்கு சரிபார்க்கும்
    பகவானே… பரந்தாமா என்னும் பற்றுதல்கள்,

    தவிர…
    ராமா… கிருஷ்ணா…
    பிள்ளையாரப்பா… விநாயகா…
    ஆஞ்சனேயா… அனுமந்தேயா…
    நமச்சிவாயா… கைலாசமூர்த்தீ…
    மகமாயீ… மாரியாத்தா…

    எவருக்கும் குறை வையாது,
    இச்சைக் கடவுளர் அனைவருக்கும் விடப்படும்
    அனிச்சை அழைப்புகளுக்கிடையில்
    நாட்களைக் கடத்தும் அம்மாச்சிக்கு
    கோயில்கள் இன்னொரு தாய்வீடு.

    அதிசயமாய் சர்ச்சைக்குள் சிக்காத
    அதிர்ஷ்டக்காரக் கடவுளரைப்போல
    சுதந்திரச் சிறகடிக்கும் சின்ன நிலாவுக்கு
    கோயில்கள் எல்லாமே அம்மாச்சி வீடு.
    Last edited by கீதம்; 05-08-2012 at 01:45 AM.

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1

    (2)

    அம்மாச்சியின் கன்னம் கிள்ளி
    முத்தமிட்டுக் கொஞ்சுவதும்,
    சத்தமின்றி அவள் தலைமயிரில்
    சரம்சரமாய் துணி கவ்விகளைக்
    கவ்வ விட்டுக் கைகொட்டிக் களிப்பதும்,
    என் சொப்புச் சோறுதான்
    உன்னிலும் சுவையென்று சாதிப்பதும்,
    சட்டென்று துள்ளி அவள் மடிமேல்குதித்து
    பக்கத்திலிருக்கும் ஜிம்மியை மிரண்டோடவைப்பதும்
    நித்தமும் நடக்கும் கூத்துக்கள்.

    கூட்டுக்காரிகளென குதூகலிக்கும்
    அம்மாச்சிக்கும் பேத்திக்கும் இடையில்
    எப்போதாவது உள்நுழையும்
    பிணக்குகளின் இடுக்கில் உற்றுக் கவனியுங்கள்!
    கட்டாயம் ஏதேனுமொரு கடவுள் ஒளிந்திருப்பார்.

  3. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1

    (3)

    நவக்கிரகம் சுத்தும் அம்மாச்சியுடன்
    நடைப்போட்டி வைத்துக்கொள்கிறாள் நிலா.
    முந்திச் செல்லும்போதெல்லாம்
    முறுவல் இறைத்துச் செல்கிறாள்.

    முடித்ததும் கேட்கிறாள்,
    எத்தனைச் சுற்றுகள் சுற்றினீர்கள்? என்று.

    ஒன்பது என்றதும்
    எள்ளிச் சிரிக்கிறாள்.

    ‘நான் உங்களைவிடவும் ஐந்து சுற்றுகள்
    அதிகமாய் சுற்றினேனே…’

    ‘நவக்கிரகத்துக்கு ஒன்பதுதானம்மா கணக்கு.’

    சற்றே யோசித்த நிலா
    சட்டென்று ஓடி எதிர்வரிசையில்
    சுற்றத் தொடங்குகிறாள்.

    எதுவும் புரியாமல் விழித்த அம்மாச்சியிடம்
    கண்கள் இடுங்கிப் புன்னகைத்தபடியே சொல்கிறாள்,

    ‘கூடுதலாய் சுற்றியதை
    கணக்கிலிருந்து கழிக்கிறேன்.’

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    ‘கூடுதலாய் சுற்றியதை
    கணக்கிலிருந்து கழிக்கிறேன்.’

    சின்ன நிலா ரொம்பவும் குறும்பு தான்

  5. #5
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by மதி View Post
    ‘கூடுதலாய் சுற்றியதை
    கணக்கிலிருந்து கழிக்கிறேன்.’

    சின்ன நிலா ரொம்பவும் குறும்பு தான்

    நன்றி மதி. இன்னும் நிறைய இருக்கு. எழுதுவதற்கு முன் அவளிடம் அனுமதி வாங்கிட்டுதான் எழுதறேன்.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    அருமை! அருமை!!
    குழந்தைகளின் நடவடிக்கைகள் எதிர்பாராது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துபவை.
    மகிழ வைப்பவை. தொடர்ந்து படையுங்கள் ப்ரசாதங்களை..!
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  7. #7
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by செல்வா View Post
    அருமை! அருமை!!
    குழந்தைகளின் நடவடிக்கைகள் எதிர்பாராது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துபவை.
    மகிழ வைப்பவை. தொடர்ந்து படையுங்கள் ப்ரசாதங்களை..!
    நன்றி செல்வா... நீங்களும் விரைவில் துவங்கநேரிடும் இதுபோன்ற திரியினை.

  8. #8
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1

    (4)


    மதியவேளையொன்றில் பொம்மைகளுடன்
    விளையாடிக்கொண்டிருக்கிறாள் நிலா.

    நேற்றைய கோயில் பயணம்
    நினைவில் இன்னும் பயணம்.

    டெடிபேருக்குப் பூக்கள் தூவி
    புது வஸ்திரமும் சாத்தி
    அவதரிக்கச் செய்துவிட்டாள்
    ஆதிக்கடவுளரில் ஒன்றாய்.

    மதிய உணவுக்காய் வீடுவந்த மாமனிடம்
    சாமி கும்பிட்டுக்கொள் மாமா என்கிறாள்.

    கரடியெல்லாம் சாமியாகுமா?

    கேலியை அலட்சியம் செய்து கேட்கிறாள்,

    யானையும் குரங்கும் சாமியாகுமென்றால்
    கரடி ஏன் சாமியாகாது?

    வாயடைத்து நிற்கிறான் மாமன்,
    மருமகளின் வாய்சாலம் கண்டு.

  9. #9
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1

    (5)

    எல்கேஜி படிக்கும் நிலாவிடம்
    தன் பெயரை எழுதச் சொல்லி
    ஆசையுடன் கேட்கிறார் தாத்தா.

    ரொம்பச் சுலபம் என்றபடியே சொல்கிறாள்,

    J போட்டு ஒரு ball வரைந்துவிடவேண்டும்.

    திகைத்து நிற்கும் தாத்தாவிடம் கேட்கிறாள்,

    ஜேபால்தானே உங்க பெயர்?

    சுதாரிப்புக்குப் பின் மெச்சுகிறார் தாத்தா,
    பேத்தியின் பேச்சுவன்மையை!

    பெயர் சொல்லத்தானே பேரப்பிள்ளைகள்?

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    ஹா....ஹா....அபாரம்.....
    சுற்றிப் போடுங்கள் உங்கள் குட்டி நிலாவுக்கு.
    குட்டித் "தாமரை" ஒன்று உருவாகிறதோ?

    சீக்கிரம் மன்றத்துக்கு கூட்டிட்டு வாங்க..
    குட்டுப்பட நாங்க காத்துக்கிட்டுருக்கோம்

    J அருமை.

    கரடிக் கடவுள் மட்டும் சளைத்ததா என்ன?
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  11. #11
    இனியவர் பண்பட்டவர் Dr.சுந்தரராஜ் தயாளன்'s Avatar
    Join Date
    17 Feb 2012
    Location
    Bangalore, Karnataka, India
    Age
    71
    Posts
    698
    Post Thanks / Like
    iCash Credits
    15,892
    Downloads
    0
    Uploads
    0
    மிகவும் அருமையாய் இருக்கிறது உங்கள் சின்ன நிலவின் சேட்டைகள்...தொடருங்கள் கீதம் அவர்களே

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    நிலா..நிலா ஓடிவா
    நில்லாமல் ஓடிவா
    கடலதைக் கடந்து வா
    கவிதைகளைக் கொண்டு வா


    சின்ன நிலாவின் சேட்டையா
    பெரிய நிலாவின் வேட்டையா (சும்மா ஒரு ரைமிங்ஙா இருக்கட்டுமேன்னு...)
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

Page 1 of 5 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •