Results 1 to 3 of 3

Thread: தோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Mar 2008
    Location
    Srilanka
    Posts
    407
    Post Thanks / Like
    iCash Credits
    12,176
    Downloads
    0
    Uploads
    0

    தோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன்



    தோட்டத்துக் காவல்காரன்
    நித்திரையிலயர்ந்த கணமொன்றில்
    தனித்துவிழும் ஒற்றை இலை
    விருட்சத்தின் செய்தியொன்றை
    வேருக்கு எடுத்துவரும்

    மௌனத்திலும் தனிமையிலும்
    மூழ்கிச் சிதைந்த உயிரின் தோள்களில்
    வந்தமர்ந்து காத்திருக்கிறான்
    இறப்பைக் கொண்டுவரும்
    கடவுளின் கூற்றுவன்

    நிலவுருகி நிலத்தில்
    விழட்டுமெனச் சபித்து
    விருட்சத்தை எரித்துவிடுகிறேன்

    மழை நனைத்த
    எல்லாச் சுவர்களின் பின்னிருந்தும்
    இருளுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கிறது
    ஈரத்தில் தோய்ந்த
    ஏதோவொரு அழைப்பின் குரல்

    - எம்.ரிஷான் ஷெரீப்

  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நல்லவேளை...இந்தக்கவிதை....இன்ன தளத்தில்....இன்ன பரிசைப்பெற்றதென சொல்லி இங்கே பதிக்காமல், முதல் பதிப்பாய் பதிந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.

    எப்போதும்போல் புரியாத வரிகளுடன்....கனத்தக் கவிதையான தோற்றத்துடன்......வந்த கவிதைக்கு வாழ்த்துக்கள்(வேறென்ன சொல்ல)
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    ரிஷான்,
    கவிதை அருமை.

    சிவாண்ணா உங்களை இனிமேல் கவிதை எழுத்த கூடாது என்று சொல்லுகிறார் பாருங்க...

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •