Page 3 of 3 FirstFirst 1 2 3
Results 25 to 36 of 36

Thread: திருக்குறள் சிந்தனைகள்

                  
   
   
  1. #25
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    எளிமையாகவும் தெளிவாகவும் அனைவரும் அறியும் வகையில் குறள் விளக்கம் தருவதற்குப் பாராட்டுகள்.

    திருக்குறள் சிந்தனைகளைத் தொடர்வதில் மிகவும் மகிழ்கிறேன். நன்றி ஐயா.

  2. #26
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    கீதம் அவர்களின் பாராட்டுக்கு நன்றி!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  3. #27
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார்
    மறத்திற்கும் அஃதே துணை.

    தெரியாதவர்கள் அறம் செய்வதற்கு மட்டும்தான் அன்பு துணையாக நிற்கும் என்று கூறுவார்கள். ஆனால் வீரத்திற்கும் அது துணையாக நிற்கிறது.

    " மறம் " என்ற சொல்லுக்கு " பாவம் " , " வீரம் " என்ற இரு பொருள் உண்டு. இக்குறளுக்கு " வீரம் " என்ற சொல்லே பொருந்தி வருகிறது. வீரனுக்கும் கருணை தேவை. அது " மறக்கருணை " எனப்படும்.கலிங்கப்போரில் ஆயிரக் கணக்கான உயிர்களைக் கொன்று குவித்த மாமன்னன் அசோகனின் உள்ளத்தில் கருணை இருந்தது. அந்தக் கருணையே போரைத் தவிர்த்து புத்த மதத்தைத் தழுவும்படி செய்தது. போர்க்களத்தில் நிராயுதபாணியாக நின்ற இராவணனைக் கொல்ல இராமனுக்கு மனம் வரவில்லை. அவனிடம் கொண்ட கருணையே ," இன்றுபோய் போருக்கு நாளை வா " என்று கூறும்படி செய்தது. எனவே விளக்குக்கு எண்ணெய் போல , வீரத்திற்குக் கருணை வேண்டும்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  4. #28
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    என்பி லதனை வெயில்போலக் காயுமே
    அன்பி லதனை அறம்.

    எலும்பு இல்லாத புழு மற்றும் பூச்சிகளை வெயில் அழித்துவிடுவதைப் போல , அன்பில்லாத உயிர்களை அறம் கொல்லும்.

    " என்பு " என்ற சொல்வழக்கு தற்போது " எலும்பு " என்று மாறி வழங்குகிறது. காசநோயை " என்புருக்கி நோய் " என்றும் அழைப்பர்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  5. #29
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
    வற்றல் மரம்தளிர்த் தற்று.

    கொடிய பாலைவனத்தில் , காய்ந்துபோன மரம் , துளிர் விடுவது அரிது; அதுபோல நெஞ்சிலே அன்பில்லாதவனுடைய வாழ்க்கையும் இன்பமாக அமையாது.மரம் வளர்வதற்கு மண்ணிலே ஈரம் வேண்டும்; வாழ்க்கை இன்பமாக அமைவதற்கு நெஞ்சிலே ஈரம் வேண்டும்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  6. #30
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
    அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.

    அகத்திலே அன்பில்லாதவர்கள் , பெற்றிருக்கின்ற புறத்து உறுப்புகளால் எந்த பயனும் இல்லை என்பதாகும்.

    அன்பு கொண்டவரின் கண்கள் பிறர்படும் துன்பங்களைக் கண்டு இரக்கம் கொள்ளும்; அன்பு கொண்டவரின் கால்கள் அவ்விடத்தே விரைந்து செல்லும்; அன்பு கொண்டவரின் கைகள் அவர்க்கு உதவி செய்யும். அகத்திலே அன்பு இல்லாதவர்க்கு இவ்வுறுப்புகளால், பிறர்க்கு எந்தப் பயனும் இல்லை. அவர்க்கு மட்டுமே பயன்படும்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  7. #31
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    நல்ல திரி எனக்கிருக்கும் சந்தேகங்களையும் கேட்கலாமா ஐயா?
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  8. #32
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    கேளுங்கள் ! எனக்குத் தெரிந்த அளவில் பதில் சொல்கிறேன். நன்றி!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  9. #33
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
    என்புதோல் போர்த்த உடம்பு.

    அன்பின் வழியாகத்தான் உயிர் உடம்பில் நிலைத்திருக்கிறது. அந்த அன்பில்லா வாழ்க்கை , எலும்பும் தோலும் போர்த்திய வெறும் பிண வாழ்க்கையே அன்றி உயிர் நின்ற வாழ்க்கையாகாது.

    எப்படிப்பட்ட கொலைகாரனாக இருந்தாலும் , ஏதாவது ஓர் உயிரிடத்தில் அன்பு செலுத்துவான். அன்பில்லாத மனிதன் வெறும் மின்சாரத்தினால் இயங்குகின்ற ஓர் இயந்திரத்திற்குச் சமமாவான். இயந்திரத்திற்கு உறுப்புகள் உண்டு; ஆனால் உணர்ச்சி கிடையாது. அன்பில்லாதவனை மனிதன் என்று சொல்வதைக் காட்டிலும் எலும்பைத் தோல்போர்த்திய உடம்பு என்று சொல்வதே சிறந்தது என்கிறார் வள்ளுவர்.
    Last edited by M.Jagadeesan; 13-06-2012 at 04:29 PM.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  10. #34
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    விருந்தோம்பல்

    " விருந்து " என்ற சொல்லுக்குப் " புதியது " என்று பொருள். " விருந்தே புதுமை " என்று கூறும் தொல்காப்பியம்.தற்போது ," விருந்து " என்ற சொல் தன் உண்மைப் பொருளை இழந்து " சுவையான உணவு " என்று மக்களால் பொருள் கொள்ளப்பட்டு வருகிறது. " விருந்தினர் " என்ற சொல்லுக்குப், "புதியவர் " என்று பொருள். விருந்தினர்களை உபசரிப்பதில் , ஆண்களைவிட பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானது. சிலப்பதிகாரத்தில், கண்ணகி , கோவலனைப் பிரிந்திருந்த காலத்தில் , தான் இழந்த கடமைகளாக


    அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஓம்பலும்
    துறவோர்க்கு எதிர்தலும், தொல்லோர் சிறப்பின்
    விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை....

    என்று குறிப்பிட்டு வருந்துகிறாள்.

    இராமனைப் பிரிந்து , அசோகவனத்தில் , சீதை இருந்தபோது , விருந்தினர் வந்தால் இராமன் என்ன செய்வானோ என்று எண்ணி வருந்துவதாகக் கம்பர் குறிப்பிடுகிறார்.

    " விருந்து வந்தபோது எண்ணுறுமோ என விம்மும்...."

    என்று சீதை எண்ணிக் கலங்குகிறாள்.

    81. இருந்தோம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்தோம்பி
    வேளாண்மை செய்தற் பொருட்டு.


    இல்லறத்தில் இருந்து மனைவி மக்களோடு வாழ்கின்ற எல்லா வாழ்வும், தம்மிடம் வந்த விருந்தினரைப் போற்றி உதவி செய்வதற்குத்தான் என்பதாகும்.

    முற்காலத்தில் வீடுகளின் முன்னே பெரிய திண்ணைகளை வைத்து வீட்டைக் கட்டினார்கள். வருகின்ற விருந்தாளிகள் தங்கி, இளைப்பாறிச் செல்வதற்கு அவை பயன் பட்டன. தற்போது வீடுகளின் முன்னே திண்ணைகள் காண்பது அரிது.விருந்தோம்பல் பண்பு தற்போது அருகிவிட்டதே இதற்குக் காரணம்.



    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  11. Likes கீதம் liked this post
  12. #35
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    82. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
    மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

    தானுண்ணும் உணவு , இறவாத பெருமை தரும் அரிய மருந்தே ஆயினும் , வந்த விருந்தினர் வீட்டிற்கு வெளியே உணவின்றிக் காத்திருக்கத் தனித்துண்பது, இல்லறத்தானுக்குத் தகாத செயலாகும்.

    வீட்டிற்கு வந்த விருந்தினரோடு அமர்ந்து உண்பதே நாகரிகமான செயலாகும்.சுவையான உணவைத் தான் மட்டும் உண்டு, சுவையற்ற உணவை விருந்தினருக்கு ஈதல் , தகாத செயலாகும் . சாவாமைக்குக் காரணமான மருந்தாக இருந்தாலும், விருந்தினரோடு பகிர்ந்து உண்ணுதல் வேண்டும்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  13. #36
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    83 . வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
    பருவந்து பாழ்படுதல் இன்று.


    தம்மிடம் வருகின்ற விருந்தினரை நாள்தோறும் பாதுகாத்து உபசரிப்பவனது இல்லற வாழ்வானது , வறுமையால் துன்பமடைந்து பாழடைவது என்பது ஒருகாலும் இல்லை.


    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

Page 3 of 3 FirstFirst 1 2 3

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •