Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast
Results 13 to 24 of 37

Thread: திருக்குறள் சிந்தனைகள்

                  
   
   
 1. #13
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  08 Sep 2010
  Location
  Karappakkam,Cennai-97
  Age
  73
  Posts
  4,215
  Post Thanks / Like
  iCash Credits
  77,616
  Downloads
  16
  Uploads
  0
  சிவா.ஜி அவர்களின் பாராட்டுக்கு நன்றி
  இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
  விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

 2. #14
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  08 Sep 2010
  Location
  Karappakkam,Cennai-97
  Age
  73
  Posts
  4,215
  Post Thanks / Like
  iCash Credits
  77,616
  Downloads
  16
  Uploads
  0
  8 . அன்புடைமை
  =================

  அன்புடைமையாவது, நம்முடன் தொடர்புடையார் மாட்டு ஏற்படும் உள்ள நெகிழ்ச்சியாகும்.ஒரு சலனமற்ற குளத்திலே எறிகின்ற கல்லினால் உண்டாகின்ற நீர் வளையங்கள் படிப்படியாக விரிந்து செல்வதைப் போல , இந்த அன்பின் வளையமானது விரிந்துகொண்டே செல்லவேண்டும். தன் குடும்பம், உற்றார், உறவினர் மாட்டு தொடங்கிய அன்பானது, ஊர், நாடு ஆகிய எல்லைகளைக் கடந்து , உலகளவில் விரிந்து ," யாதும் ஊரே! யாவரும் கேளிர் "என்ற நிலையை அடைய வேண்டும்.

  அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
  புன்கணீர் பூசல் தரும்.

  காணாமல் போய்விட்ட உறவுகளைப் பல ஆண்டுகள் கழித்து சந்திக்கும்போது , உள்ள நெகிழ்ச்சியால்,வரும் அழுகையைக் கட்டுப் படுத்த இயலாது.

  "பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது
  அழுதால் கொஞ்சம் நிம்மதி "

  என்ற கவிஞர் கண்ணதாசனின் வரிகள் ஈண்டு குறிப்பிடத் தக்கது.
  இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
  விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

 3. #15
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
  Join Date
  23 Dec 2008
  Location
  ஆஸ்திரேலியா
  Age
  49
  Posts
  7,283
  Post Thanks / Like
  iCash Credits
  97,876
  Downloads
  21
  Uploads
  1
  தேர்ந்த ஆய்வுத்திறனால் வெளிப்படும் அருமையானக் கருத்துகள் கண்டு மகிழ்கிறேன். நன்றி ஐயா.

 4. #16
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  08 Sep 2010
  Location
  Karappakkam,Cennai-97
  Age
  73
  Posts
  4,215
  Post Thanks / Like
  iCash Credits
  77,616
  Downloads
  16
  Uploads
  0
  கீதம் அவர்களின் பாராட்டுக்கு நன்றி.
  இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
  விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

 5. #17
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  08 Sep 2010
  Location
  Karappakkam,Cennai-97
  Age
  73
  Posts
  4,215
  Post Thanks / Like
  iCash Credits
  77,616
  Downloads
  16
  Uploads
  0
  அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
  என்பும் உரியர் பிறர்க்கு.

  இக்குறளில் சிலர் தவறு காண்பர்.

  " என்பும் " என்ற அக்ரினைச் சொல் ," உரியர் " என்ற சொல்லில் வந்துள்ள " அர் "என்ற உயர்திணை விகுதியை ஏற்காது என்பர். எனவே

  அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்பிலார்
  என்பும் உரிய பிறர்க்கு.

  என்பதே சரியான பாடம். உரையாசியர் பதின்மருள் நச்சர் கொண்ட பாடமும் இதுவேயாகும்.

  " என்பும் " என்ற சொல்லில் உள்ள "உம் " இழிவு சிறப்பு உம்மை.அன்புடையார் எழும்பினால் மட்டுமின்றி பிற உறுப்புகளைத் தானம் செய்தும் மற்றவர்களுக்கு உதவுவார்கள். இறைவரிடம் கொண்ட அன்பு , கண்ணப்பனைக் கண்ணைத் தானம் செய்யச் செய்தது. புறாவின் உயிரைக் காக்க , சிபி தன்னுடைய சதையை அறுத்துக் கொடுத்தான்.
  இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
  விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

 6. #18
  இனியவர் பண்பட்டவர் Dr.சுந்தரராஜ் தயாளன்'s Avatar
  Join Date
  17 Feb 2012
  Location
  Bangalore, Karnataka, India
  Age
  67
  Posts
  698
  Post Thanks / Like
  iCash Credits
  11,422
  Downloads
  0
  Uploads
  0
  என்பும் உரிய பிறர்க்கு என்ற தங்களின் விளக்கமே சரி எனத்தோன்றுகிறது. பதிவுக்கு நன்றி ஐயா

 7. #19
  இனியவர் பண்பட்டவர் Dr.சுந்தரராஜ் தயாளன்'s Avatar
  Join Date
  17 Feb 2012
  Location
  Bangalore, Karnataka, India
  Age
  67
  Posts
  698
  Post Thanks / Like
  iCash Credits
  11,422
  Downloads
  0
  Uploads
  0
  என்பும் உரிய பிறர்க்கு என்ற தங்களின் விளக்கமே சரி எனத்தோன்றுகிறது. பதிவுக்கு நன்றி ஐயா

 8. #20
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  08 Sep 2010
  Location
  Karappakkam,Cennai-97
  Age
  73
  Posts
  4,215
  Post Thanks / Like
  iCash Credits
  77,616
  Downloads
  16
  Uploads
  0
  அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
  என்போடு இயைந்த தொடர்பு.

  உயிரையும், உடலையும் இணைக்கின்ற கருவியாக அன்பு இருக்கின்றது. உடலுக்கு வரும் இன்ப துன்பங்களை உயிர் அனுபவிப்பதும், உயிருக்கு ஒரு துன்பம் வரும்போது, அதைக்கண்டு உடல் துடிப்பதும் அன்பினால் ஏற்பட்ட பிணைப்பாகும்.

  பழைய திரைப்படம் ஒன்றில் பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம் எழுதிய பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. நடிகர் சந்திரபாபு தன் காதலியின் புகைப்படத்தைக் கையில் வைத்துக் கொண்டு

  " இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக " என்று பாடுவார்.
  இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
  விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

 9. #21
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  08 Sep 2010
  Location
  Karappakkam,Cennai-97
  Age
  73
  Posts
  4,215
  Post Thanks / Like
  iCash Credits
  77,616
  Downloads
  16
  Uploads
  0
  அன்பீனும் ஆர்வ முடைமை அதுஈனும்
  நண்பென்னும் நாடாச் சிறப்பு.


  அன்பின் அடியாக ஆர்வம் பிறக்கும்.அந்த ஆர்வத்தின் பயனாக நட்பு அல்லது தொடர்பு உண்டாகும்.

  ஒருவன் ஒரு பெண்ணிடம் காதல் ( அன்பு ) கொள்வதாக வைத்துக் கொள்வோம். அந்தக் காதலானது அவளை அடையவேண்டும் என்ற ஆர்வத்தை அவனுள்ளே தூண்டுகிறது. பல வழிகளைக் கையாண்டு முடிவில் அப்பெண்ணோடு ஒரு தொடர்பை அவன் ஏற்படுத்திக் கொள்கிறான். எல்லாமே அன்பின் செயல்!
  இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
  விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

 10. #22
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  08 Sep 2010
  Location
  Karappakkam,Cennai-97
  Age
  73
  Posts
  4,215
  Post Thanks / Like
  iCash Credits
  77,616
  Downloads
  16
  Uploads
  0
  அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
  இன்புற்றார் எய்தும் சிறப்பு.

  இந்த உலகத்தில் பிறர்மீது அன்பு செலுத்தியவர்கள் மட்டுமே, இன்பமடைந்துள்ளனர். இந்த உலகமும் அவரையே கொண்டாடுகிறது.

  உலகத்து உயிர்கள் மீது அன்பு செலுத்திய காரணத்தால்தான் , புத்தன், இயேசு, காந்தி ஆகிய பெரியோரை ,உலகை உய்விக்க வந்த உத்தமர்களாகக் கருதி இவ்வுலகம் அவர்களை மறவாது கொண்டாடுகிறது.
  இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
  விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

 11. #23
  இளம் புயல் பண்பட்டவர் ராஜாராம்'s Avatar
  Join Date
  27 Jan 2011
  Location
  மயிலாடுதுறை
  Posts
  366
  Post Thanks / Like
  iCash Credits
  5,205
  Downloads
  0
  Uploads
  0
  அருமையான படைப்பு....
  ரயில்லு நின்னா காட்பாடி...
  உயிரு நின்னா டெட்பாடி...


  :மன்றம்வருதல் பெரிதன்று வந்தப்பின் மன்றமக்களை
  மொக்கை போட்டுக் கொல்வதே பெரிது....
  "

 12. #24
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  08 Sep 2010
  Location
  Karappakkam,Cennai-97
  Age
  73
  Posts
  4,215
  Post Thanks / Like
  iCash Credits
  77,616
  Downloads
  16
  Uploads
  0
  தங்களுடைய பாராட்டுக்கு நன்றி ராஜாராம்!
  இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
  விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •