Results 1 to 5 of 5

Thread: கவனம்..சப்தம் .

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் கலாசுரன்'s Avatar
    Join Date
    31 Jan 2011
    Posts
    115
    Post Thanks / Like
    iCash Credits
    9,960
    Downloads
    0
    Uploads
    0

    கவனம்..சப்தம் .

    *
    கொடிய அழுத்தம் நிறைந்த
    பகல்களால்
    நசுக்கப்பட்ட இரவு இது

    நீங்களும் நானும்
    மௌனத்தை தரையில் விரித்தபடி
    உட்கார்திருக்கிறோம்

    இங்கு எங்காவது
    பதுங்கியிருக்கக் கூடுமொரு சப்தம் ..
    கவனம்..

    ஒலியின் அதிர்வலைகளில்
    மோதிப் பிளவுறக்கூடுமிந்த
    இரவின் கவசம்

    வெடித்துச் சிதற காத்திருக்கும்
    அடர்த்தி மிகுந்த இந்த இருள்
    சிதறுமாயின்

    பல பகல்களை
    பாரபட்சமின்றி
    மூழ்கடித்துவிடும் நிச்சயம்

    உங்கள் கழுத்தில் பொதிந்து வைத்திருக்கும்
    ஓசையின் யாழினை
    உங்கள் மூச்சுக் காற்றால் கூட
    தீண்டாதிருங்கள்

    ஒரு முறை கூட எச்சரிக்கிறேன்
    கொடிய அழுத்தம் நிறைந்த
    பகல்களால்
    நசுக்கப்பட்ட இரவு இது..
    ***

    கலாசுரன்

  2. #2
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    26 Jul 2008
    Location
    sri lanka
    Posts
    53
    Post Thanks / Like
    iCash Credits
    24,562
    Downloads
    6
    Uploads
    0
    நல்ல கவிதையின் அம்சம் ஒரு விடயத்தை வாசகனின் சிந்தையில் ஊரச்செய்யும் திறனே,
    நல்ல வாசகனின் அம்சம் எழுத்தாளன் எதை சொல்ல வருகிரார் என்பதை புரிந்து கொள்வதே ஆனால்
    இதில்
    யார் செய்த குற்றமோ ?
    எனக்கு கவிதையின் உள்ளர்த்தம் புரியவில்லை (ஏகப்பட்ட அர்த்தம் தெரிகிறது)

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    பகலின் அழுத்தங்களைக் குறைக்கத்தானே
    இரவின் நிசப்தம்???

    இரவுக்குள் புகும் மாலை வாசலோடு
    அழுத்தக் காலணிகளையும் கழற்றிப் புகு.

    இரவின் நிசப்தத்திற்குள்
    மனதின் சப்தங்கள் எழாதிருந்தாலே,
    அடுத்த பகலின் அழுத்தங்கள்
    தொடர்ச்சி ஆகாமல், ஆரம்பமாகும்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by matheen View Post
    (ஏகப்பட்ட அர்த்தம் தெரிகிறது)
    எல்லாமே அர்த்தம் தான்
    அன்புடன் ஆதி



  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by matheen View Post
    நல்ல வாசகனின் அம்சம் எழுத்தாளன் எதை சொல்ல வருகிரார் என்பதை புரிந்து கொள்வதே
    நல்ல வாசகனின் அம்சம் படைப்பை உணர்வது!
    புரிந்து கொள்ளுதல் எனும் நிலைதாண்டி, நீங்கள் கவிதையில் என்ன உணர்கிறீர்களோ அதுவே கவிதையின் அர்த்தம்!! வான்காவின் Starry Night ஓவியத்தைப் பாருங்கள்... ஒன்றும் இல்லை அல்லது புரியாது முதலில்.. ஆனால் நன்கு பாருங்கள், அது எவ்வளவு தூரம் இழுக்கிறது என்பதை உணரமுடியும்!

    @ கலாசுரன்...

    முதல் வரியிலேயே (முத்தெடுக்க) மூழ்கச் செய்துவிட்டீர்கள் என்னை. எவ்வளவு அழுத்தமான வரி அது!! எதனெதனோடோ பொருத்திப் பார்க்கத் தோணுகிறது. அழுத்தங்கள் நிறைந்த எனது மதிய வேளை திரையில் செயற்கையாக ஓடுவதை உணர முடிகிறது!! கவிதை முழுவதுமே கவனமாகவே வார்த்தைகளைக் கையாண்டிருக்கிறீர்கள்..

    நேரம் கிடைத்தால் உங்களது மற்ற கவிதைகளையும் படித்துவிடுகிறேன்!!
    வாழ்த்துக்கள்!!!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •