Results 1 to 5 of 5

Thread: விலைக்கழிவு வழங்கும் இணைய தளங்கள்..

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் அகத்தியன்'s Avatar
    Join Date
    25 May 2006
    Location
    அமீரகம் (அபுதாபி)
    Age
    41
    Posts
    546
    Post Thanks / Like
    iCash Credits
    10,709
    Downloads
    148
    Uploads
    1

    விலைக்கழிவு வழங்கும் இணைய தளங்கள்..

    சந்தை விலையினை விட குறைந்த விலையில் பொருட்கள் சேவைகள் கிடைக்கின்ற போது யாராவது வேண்டாம் என்பார்களா? அதைத்தானே மக்கள் நாள்தோறும் தேடிக் கொண்டிருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் நுகர்வோரின் இந்த மனநிலையினை வைத்துக் கொண்டுதானே நிறுவனங்கள் “ விலக்கழிவு” “ “தள்ளுபடி விற்பனை” “இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் “என்றெல்லாம் கூறிக்கொண்டு நுகர்வோரை கவர்ந்திழுக்கின்றன.

    இவ்வாறான நடவடிக்கைகள் நுகர்வோரின் மனநிலையுடன் தொடர்புடையதாகவே இருக்கின்றது. குறைந்த விலையில் கிடைக்கின்றதே என்ற காரணம் ஒன்றே நுகர்வோரினை தேவை இல்லாத சந்தர்ப்பங்களைக் கூட தேவைக்குரியதாக மாற்றிவிடுகின்றது. இதுவே நிறுவனங்களின் வெற்றி என்றே கூறலாம்.

    அமீரகத்திலும் மற்றைய மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளவர்களும் இவ்வகையான சந்தர்ப்பங்களை நிச்சயம் சந்தித்தே இருப்பார்கள். அதுவும் ஆசிய நாட்டவர்களுக்கு நாட்டுக்கு போகின்ற போது பொருட்கள் கொள்வனவென்பது எழுதப்படாத விதி. அவ்வாறான வேளைகளில் இது வெற்றியளிக்கும். இது பெரும்பாலும் பண்டங்கள் சார் விலைக் கழிவோ தள்ளுபடியோ வாகவே இருக்கும்.

    அதே வேளை, சேவை சார்ந்த விலைக் கழிவுகளை பெறுகின்றதற்கான வழிவகைகள் ஏதாவது இருக்கின்றதா என்பதை பார்த்தால். இருக்கின்றது. அதற்கான வழிமுறைகளை தர , பெற, இப்போது இணையத் தளங்கள் பல வந்துவிட்டன. இதில் சேவைகள் மட்டுமன்றி பொருட்களுக்கான விலைக்கழிவு கூப்பன்களும் கிடைக்கப் பெறுகின்றன.

    அமீரகத்தினை பொறுத்தவரையில் இவ்வாறான விலைக் கழிவுக் கூப்பன்களை விற்கும் பிரபலமான இணையத்தளங்கள் பல உள்ளன. அவை நிறுவனங்களிடமிருந்து அவர்களின் பொருட்கள் சேவைகளுக்கான விலைக் கழிவினை பெற்று தமது பயனர்களுக்கு அளிக்கின்றது.

    இதன் மூலம், நிறுவனம் புதிய நுகர்வாளர்களைப் பெறுவதோடு, அவர்களை நிரந்தர வாடிக்கையாளராக்குவதற்கான வாய்ப்பினையும் பெற்றுக் கொள்கின்றது.

    இது போன்ற விலைக்கழிவு கூப்பன்கள் பெரும்பாலும் உணவகங்களுக்கான விலைக்கழிவாகவோ அல்லது ஒன்றிற்கு ஒன்று இலவசம் என்பது போலவோ இருக்கும். அது மட்டுமன்றி, ஒப்பனைபடுத்தல், மஸாஜ் சேவைகள் என்பவற்றிற்கும் இவ்வாறான விலைக் கழிவினை இவை வழங்குகின்றன. இதில் உள்ள தந்திரம் என்னவென்றால், ஏனைய நுகர்வுப் பண்டங்களுக்கு விலை குறிப்பது போல, சேவைகளுக்கு விலை இட முடியாது என்பதே!.

    இதன் நம்பகத் தன்மை மற்றும் பண பரிவர்த்தனைகள் தொடர்பில் எந்த ஒரு மோசடியோ, வழ்க்களோ இது வரைக்கும் இங்கு நான் கேள்விப் படவில்லை. கடனட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதிகள் இருப்பதால் இது போன்ற கேள்விகள் எழ வாய்ப்பிருக்கின்றது. அதை உறுதி செய்ய, இந்த வகையான சேவையினைத் தரும் இணைய தளம் ஒன்றில் இருந்து,

    AED9.00 க்கான கரும்பு ஜூஸ் கேன் ஒன்றினை AED 3.00 ற்கு கொள்வனவு செய்தேன். ( காசு போனாலும் மூணு திர்ஹம்தானே!!)

    அதிலிருந்து இன்றுவரைக்கும் பல உணவகங்களுக்கான விலைக்கழிவு கூப்பன்கள், கையடக்க தொலைபேசி, போன்ற இலத்திரனியல் சாதனங்களுக்கான கூப்பன்களும் கொள்வனவு செய்து உபயோகித்திருக்கின்றேன்.

    அனுபவத்தில் சொல்வதென்றால், உணவகங்களுக்கான் கூப்பன்களை பெறுவதில் மிக்க நன்மையும் லாபமும் உண்டு. சில உயர்தட்டு உணவகங்களுக்கு நாம் செல்ல இது போன்ற விலைக்கழிவு கூப்பங்களும் ஓரளவுக்கு உதவி செய்யத்தான் செய்கின்றது.

    அதே போல், இது ஐக்கிய அரபு ராச்சியத்தில் மட்டுமன்றி பல்வேறு நகரங்களிலும் இச்சேவை உள்ளது.

    விரும்புபவர்கள் இணைய தளங்களில் தேடி இச்சேவையினை தரும் தளங்களை கண்டு அதன் நம்பகத்தன்மைகளை நன்றாக விசாரணை செய்து அதன் சேவைகளை அனுபவியுங்கள்.

  2. #2
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    உண்மையில் நல்லதொரு அனுபவ பகிர்வு... இங்கு அவுஸில் http://www.ozbargain.com.au/ எனும் இணையம் உள்ளது. அநேக விலை கழிவுகள் சம்பந்தமான விடையங்கள் வரும். *நான் அதிகமாய் பார்ப்பது apple iphone apps கள் சிலநேரங்களில் காசுக்கு கிடைப்பவை இலவசமாக வரும். அவற்றை இலகுவாக தெரிந்திடலாம்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    நல்ல தகவல் மிக்க நன்றி
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  4. #4
    இனியவர் பண்பட்டவர் அகத்தியன்'s Avatar
    Join Date
    25 May 2006
    Location
    அமீரகம் (அபுதாபி)
    Age
    41
    Posts
    546
    Post Thanks / Like
    iCash Credits
    10,709
    Downloads
    148
    Uploads
    1
    இந்த இணையத் தளம் எனக்கு புதிது. அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி அன்பு..

    http://www.groupon.ae/ இங்கு இந்த இணையம் பிரபல்யமானது

    நன்றிகள் நிவாஸ்

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    இதில் எனக்கு தோன்றும் சில சந்தேகங்கள் இது போன்று சலுகைகள் அளிக்கும் போது அரசுக்கு செலுத்தப்படும் வரிகள் செலுத்தபடுகின்றதா? இது போன்ற சலுகைகள் எவ்வாறு சாத்திய படுகின்றது ? அது போன்று வாங்கும் மின்னணு பொருட்களுக்கு பிணையம் அளிக்கபடுகின்றதா? இதனை அறிந்த தோழர்கள் யாரேனும் தெளிவுற கூறினால் மிகவும் உதவியாக இருக்கும் ...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •