Results 1 to 7 of 7

Thread: என் மகிழகம் நீயடி!

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் lenram80's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    நாடோடி
    Posts
    627
    Post Thanks / Like
    iCash Credits
    67,206
    Downloads
    85
    Uploads
    0

    என் மகிழகம் நீயடி!

    பாடும் பறவைக்கெல்லாம்
    உன் குரலால் வெட்கம் தந்தாய்!
    எழுதிய கவிதைக்கெல்லாம்
    உன் விழியால் பதில் கவி தந்தாய்! பதிலடி தந்தாய்!

    அழுத்த மாற்றம் புயல் வர வைக்கும்!
    குளிர்காற்று மழை வர வைக்கும்!
    முகிழ் உரசல் இடி வர வைக்கும்!
    உன்னைக் கண்டால் இம்மூன்றும் எனக்கும்!

    அகநானூறும் புறநானூறும்
    கொண்ட பாறை நீ தானடி!
    பய பக்தியும் தொழில் புத்தியும்
    கொண்ட சிற்பி தான் நானடி!

    நிலவதும் அந்த சூரியரும்
    சேர்ந்து பெற்ற பிள்ளை நீ தானடி!
    குலமகள் உன்னை கொத்தோடு
    கொள்ளை அடிப்பவன் இங்கு நானடி!

    நீயன்றி அணுவும் இல்லை!
    நீயன்றி அகிலம் இல்லை!
    நீயன்றி அந்தம்(அண்டம்) இல்லை!
    சிவமும் இல்லை! பார்வதியும் இல்லை!

    இனி தனிமை சிறை வாழ்க்கை இல்லை!
    இனிமை குறை நாழிகை இல்லை!
    அவளை பார்த்த நாள் முதலாய் தூங்கவில்லை நான்!

    அறியாத வள்ளுவன் சொன்னான்!
    கல்லாத கண் புண் என்றான்!
    உன்னைக் கண்டால் போதும் புண்கள் கண்கள் ஆகுமே!

    இதுவரை கருபொருள் இன்றி எழுதாமல் இருந்தேன் நான்!
    இன்றுமுதல் காதல் காப்பியங்கள் மூச்சு உள்ளவரை படைப்பேனே நான்!

    தமிழே நீ ஒளிந்ததும் போதும்!
    என் கவியே நீ காத்ததும் போதும்!
    என் சொல்லே ஓய்வெடுத்ததும் போதும்
    அவளுக்கான இந்தப் பாவில் வந்து அழகு கொள்ளும்!

    அவளைப் நான் மில்லி கணம் பார்த்ததும்
    விழியே நீ இமைக்க மறந்தால்
    இதயம் நீ துடிக்க மறந்தால்
    என் இதழே அவளை கொஞ்சம் தள்ளி போகச் சொல்லும்!

    எல்லைகள் கடந்த தீவிரம்
    நடக்கும் காஷ்மீரம் நீயடி!
    தொல்லைகள் பல ஆயினும்
    விடா காக்கும் இந்தியன் நானடி!

    நாடுகள் பல வாகினும்
    நல் தமிழகம் நம் தாயடி!
    பேடுகள் பலராகினும்
    என் மகிழகம் நீ தானடி!
    உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
    "கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
    எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
    -லெனின்-
    என் முக நூல் பதிவுகள்

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    காதல் போதை தலைக்கேறிவிட்டதைத் தடுமாற்றமில்லாமல் பறைசாற்றும் கவிதை அருமை.

    கவிஞரின் அகம் மகிழ்ந்து வரிக்கும் வரிகளில் மகிழகம் அவளே என்பதில் என்ன சந்தேகம்.

    பாராட்டுகள் லென்ராம்.

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    ஒரு காதலி..,
    ஒருவனுக்குளிருந்து எத்தனைபேரை
    வெளிக்கொணர்கின்றாள்...

    சிற்பியாய்க், கள்ளனாய்க், காவலனாய், ஆராய்ச்சியாளனாய்க், கவிஞனாய்...

    கவி ஊற்றுக்கண் காதலி(யி)ற் திறக்கும் என்பது மீண்டும் நிரூபணமாய்...

    பாராட்டுக்கள்...
    Last edited by அக்னி; 05-01-2012 at 10:54 AM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர் பிரேம்'s Avatar
    Join Date
    23 Jul 2010
    Location
    Malaysia
    Age
    34
    Posts
    462
    Post Thanks / Like
    iCash Credits
    10,236
    Downloads
    2
    Uploads
    0
    நீயடி..தானடி-ன்னு எத்தன அடிதான் அடிப்பீங்க தல...பாவம் அந்த பொண்ணு..
    கவிதை அருமை..வாழ்த்துக்கள்..

  5. #5
    இனியவர் பண்பட்டவர் lenram80's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    நாடோடி
    Posts
    627
    Post Thanks / Like
    iCash Credits
    67,206
    Downloads
    85
    Uploads
    0
    எப்போதும் ஆதரிக்கும் அக்னிக்கும், காதலை கிறுக்கோடு ஒப்பிட்ட கீதத்திற்கும், நாவால் கூட "அடி" சொன்னால் துடிக்கும் தம்பி மலரவன் பிரெம்-க்கும் நன்றி
    உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
    "கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
    எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
    -லெனின்-
    என் முக நூல் பதிவுகள்

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    காதல் கவிதைன்னாலே ஒரு அழகு வந்திடுது...
    வார்த்தைகள் துள்ளி விளையாடுது...

    அகநானூறும் புறநானூறும்
    கொண்ட பாறை நீ தானடி!
    பய பக்தியும் தொழில் புத்தியும்
    கொண்ட சிற்பி தான் நானடி
    கவிதைகளை வாசிக்கும் போது தாளத்தோடு வாசித்துப் பார்ப்பது என் பழக்கம்.
    அதனால் மேற்கண்ட வரிகளை வாசிக்கும் போது
    நீ தானடி , தான் நானடி யை
    நீயடி - நானடி என்று வாசிக்கும் போது...
    தாளம் நன்றாக இருப்பது போல் எனக்குத் தோன்றியது...

    இதே போன்றி இன்னும் சில பத்திகளிலும் இருக்கிறது.

    வாழ்த்துக்கள் அண்ணா...!
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  7. #7
    இனியவர் பண்பட்டவர் lenram80's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    நாடோடி
    Posts
    627
    Post Thanks / Like
    iCash Credits
    67,206
    Downloads
    85
    Uploads
    0
    நன்றி செல்வா. இந்த கவிதையின் குரல் வடிவம் இந்தத் திரியில்.

    http://www.tamilmantram.com/vb/showt...915#post539915



    கொடுக்கப்பட்ட தாளத்திற்கு ஏற்றபடி எழுதியால் வார்த்தை அமைப்பில் கொஞ்சம் கவனம் செலுத்த முடியவில்லை. சுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள் செல்வா
    உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
    "கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
    எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
    -லெனின்-
    என் முக நூல் பதிவுகள்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •