தினத்தந்தியின் கன்னித்தீவை படித்துக் கொண்டிருக்கும் போது சிறுவர்மலரின் அதிமேதாவி அங்குராசு கதைக்கு தாவியாரா? ஹாய் மதனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அரசு பதிலுக்கு சிரித்ததுண்டா? தினமணியின் தலையங்கத்தைப் படிக்கையில் தினமலரின் டீ கடை பெஞ்சுக்கு போனதுண்டா? அடுத்தவர் அந்த பேப்பரை படித்து முடிக்கும் வரை இந்த பேப்பரில் உள்ள கண்ணீர் அஞ்சலில் படத்தையே மீண்டும் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களை படிப்பகங்களின் பார்த்திருக்கலாம். ஒரே நேரத்தில் உலகமே உங்களுக்கு லெட்டர் போட்ட பிரமையை உருவாக்குவது படிப்பகங்கள். திருவிழாக்காலத்திலும் திருகு குழாய் பிரச்சனை காலத்திலும் எல்லா பத்திரிகை செய்திகளையும் ஒரே இடத்திலிருந்தவாறு படிக்கும் சுகமே தனி. பெரும்பாலோர் நூலகங்களில் அனுபவித்திருக்கலாம், சிலர் மரத்தடி பதிப்பகங்களில் அனுபவித்திருக்கலாம். அத்தகைய ஒரு அனுபவத்தை இணையத்தில் தரமுடியாது இருப்பினும் ஓரளவு அதன் பயனை விரும்புகிறவர்களுக்காக இணைய பத்திரிகைகள் பலவற்றை ஒரே இடத்தில் தொகுக்கப் பட்டுள்ளது.


தமிழ்ப்புள்ளி படிப்பகம்


11000 தமிழ்த் தளங்களிலிருந்து இணையத்தில் இலவசமாகவுள்ள தமிழ் பத்திரிகைகள் மட்டும் பிரித்தெடுக்கப்பட்டு ஒரு பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கிருந்தவாறே செய்தி ஊடகங்கள் மற்றும் சஞ்சிகைகள் படிக்கலாம். தெரியாத புதிய தமிழ் செய்தித் தளங்களை அறிந்து கொள்ளலாம்.

எதிர்நீச்சல் தளத்தின் வெளியீடான தமிழ் செய்திகளுக்கான க்ரோம் நீட்சி. செய்திப் பிரியர்கள் இதையும் பயன்படுத்தலாம். கூகிள் இணைய அங்காடி

Source:எதிர்நீச்சல்